FreeCAD/C2/Hatch-and-Array/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
0:00 | Hatch and Array பற்றிய டுட்டோரியலுக்கு நல்வரவு. |
0:05 | இந்த டுட்டோரியலில் நாம் கற்க போவது, |
0:07 | object ஐ Clone செய்தல் |
0:09 | Hatching செய்வதை பற்றி |
0:11 | cadhatch.com லிருந்து hatches ஐ தரவிறக்குதல். |
0:17 | hatch lines செய்வது பற்றி |
0:19 | arrays பற்றி மற்றும் |
0:20 | arrays ன் வகைகள். |
0:24 | இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான் Windows 11 OS மற்றும் FreeCAD பதிப்பு 0.21.1ஐ பயன்படுத்துகிறேன். |
0:35 | இந்த டுடோரியலை கற்க, |
0:37 | நீங்கள் FreeCAD இடைமுகத்தை அறிந்திருக்க வேண்டும். |
0:42 | முன்தேவையான பயிற்சிகளுக்கு, இந்த தளத்தைப் பார்வையிடவும். |
0:47 | FreeCAD ஐ திறக்கவும். |
0:49 | புதிய வரைபடத்தைத் தொடங்க, Create new மீது கிளிக் செய்யவும். |
0:54 | Draft workbenchக்கு செல்லவும் |
0:57 | orthographic மற்றும் top view தேர்ந்தெடுக்க பட்டிருக்க வேண்டும். |
01:03 | Rectangle tool மீது கிளிக் செய்து, canvasன் மீது ஒரு செவ்வகத்தை வரையவும். |
01:10 | செவ்வகத்தை தேர்ந்தெடுத்து clone tool மீது கிளிக் செய்யவும். |
01:15 | ஒரு clone உருவாகிறது, ஆனால் அது தென்படாது. |
01:20 | இருப்பினும் object பட்டியலில், ஒரு புதிய object ஐ நாம் பார்க்கலாம். |
01:25 | இந்த புதிய objectஐ தேர்ந்தெடுத்து விரும்பியபடி நகர்த்தவும் |
01:30 | ஒரு objectஐ copy செய்து நகர்த்த, இது மற்றொரு வழி. |
01:35 | அடுத்து செவ்வகத்தில், hatchகளை சேர்ப்போம். |
01:39 | ஒரு வரைபடத்தின் குறுக்குவெட்டுகள், மெல்லிய இணையான சம இடைவெளி கோடுகளால் நிரப்பப்படுகின்றன. |
01:46 | இதனால் நீங்கள், ஒரு வரைபடத்தில் பல்வேறு பகுதிகளை எளிதாக வேறுபடுத்தி அறியலாம். |
01:52 | இணைய உலாவியைத் திறந்து cadhatch.com இணையதளத்திற்குச் செல்லவும். |
01:59 | நாம் இங்கே பல வடிவங்களைக் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். |
02:05 | கீழே, parallel hatch pattern ஐ கவனிக்கவும். |
02:10 | அதில் கிளிக் செய்யவும். பின் பல parallel styleகள் கொண்ட புதிய பக்கம் திறக்கும். |
02:16 | முதல் தேர்வை கிளிக் செய்து download செய்கிறேன் |
02:20 | உங்களில் சிலருக்கு, Download தானாகவே தொடங்கலாம் |
02:26 | hatch zip file ஐ computerல் save செய்யவும். |
02:32 | zip archiveலிருந்து fileகளை எடுக்கவும். |
02:38 | file managerஐ திறந்து downloadஆன zip fileஐ தேர்ந்தெடுக்கவும். |
02:43 | menuவில் வலது கிளிக் செய்து, extract allஐ தேர்ந்தெடுக்கவும். |
02:47 | extract மீது கிளிக் செய்யவும். |
02:50 | extract செய்த folderஐ திறக்கவும் |
02:54 | இதில் உள்ள 2 fileகளை கவனிக்கவும். |
02:56 | ஒன்று .pat extensionஐ கொண்டது, மற்றொன்று hatch பற்றிய விவரங்களை கொண்ட text file ஆகும். |
03:05 | இப்பொழுது text fileஐ திறப்போம் |
03:08 | 45 டிகிரி கோணத்தைக் கவனிக்கவும். |
03:12 | text fileஐ மூடவும். |
03:14 | Freecadக்கு செல்லவும் |
03:17 | செவ்வகத்தை தேர்ந்தெடுக்கவும். |
03:19 | edgesக்கு மாற்ற downgrade மீது ஒரு முறை கிளிக் செய்யவும். |
03:25 | அனைத்து edgeகளையும் தேர்ந்தெடுக்கவும். |
03:27 | upgrade tool மீது கிளிக் செய்து wireframeக்கு மாற்றவும். |
03:32 | upgrade tool மீது மீண்டும் கிளிக் செய்து face modeக்கு மாற்றவும். |
03:36 | faceஐ தேர்வு செய்து, styleஐ wireframeக்கு மாற்றவும் |
03:42 | faceஐ தேர்வு செய்து, hatch tool மீது கிளிக் செய்யவும். |
03:47 | இடது panelலில் மாற்றம் ஏற்படுகிறது. |
03:51 | hatch தேர்வில், ellipsis மீது கிளிக் செய்யவும். |
03:56 | dialog பெட்டியில், மேலே சென்று extract ஆன .pat file ஐ தேர்வு செய்யவும். |
04:03 | செவ்வகத்தில், hatch கோடுகள் அதிகம் இல்லை என்பதை கவனிக்கவும். |
04:09 | உங்களில் சிலருக்கு, scale ஆனது முன்னரே ஒன்றாக இருக்கலாம். |
04:13 | hatchன் scale மற்றும் rotation கோணத்தை நாம் விரும்பியபடி மாற்றலாம். |
04:19 | இப்போது செவ்வகத்தில் அதிக hatch கோடுகள் தோன்றுவதைக் கவனியுங்கள். |
04:25 | வீடியோவை இடைநிறுத்தி, இடைவெளி, வரியின் style கள் மற்றும் கோணத்தை மாற்றவும். |
04:31 | பல்வேறு hatching styleகளை உருவாக்க பயிற்சி செய்யுங்கள். |
04:37 | அடுத்து, array வைப் பற்றி அறிந்து கொள்வோம். |
04:39 | Array என்பது முன் வரையறுக்கப்பட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள objectன் குறிப்பிட்ட நகல்கள் ஆகும். |
04:48 | அவை ஒரு கோடாக, வரிசை வாரியாக, நெடுவரிசை வாரியாக, வட்டமாக மற்றும் பலவற்றில் வைக்கப்படலாம். |
04:56 | கேன்வாஸில் உள்ள அனைத்து objectகளையும் நீக்கிவிட்டேன். |
05:00 | arrays ஐ செயல்விளக்க, ஒரு செவ்வகத்தை வரைவோம். |
05:05 | hatch செய்யாத செவ்வகத்தை தேர்வு செய்யவும். |
05:10 | modification panelலில் உள்ள array toolல் கிளிக் செய்யவும் |
05:15 | பல்வேறு வகைகளை கவனிக்கவும். நான் array எனும் முதல் தேர்வை தேர்ந்தெடுக்கிறேன். |
05:20 | இடது பேனல் பண்புகள் மாறுகின்றன, அது ஒரு rectangular arrayக்கானது. |
05:27 | Number of elements ல் x, y மற்றும் zக்கு ஒவ்வொன்றிலும் 5 ஐ உள்ளிடுகிறேன். |
05:36 | X intervalக்கு 10 என type செய்து Enter keyஐ அழுத்துகிறேன். |
05:42 | y மற்றும் z intervalக்கும் இதை செய்யவும். |
05:48 | உருவாக்கப்பட்ட array வை பார்க்க, இடது பேனலின் மேல்புறமாகச் சென்று Ok வை கிளிக் செய்யவும். |
05:55 | கேன்வாஸில் தேவைக்கேற்ப சிறியதாக்கவும். |
05:58 | நீங்கள் வீடியோவை இடைநிறுத்தலாம். |
06:02 | Intervals மற்றும் number of elements ல் மதிப்புகளை மாற்றவும். |
06:07 | array ஆல் கிடைக்கும் பல்வேறு patternகளை தெரிந்து கொள்ளவும். |
06:13 | அடுத்து, polar arrayவை பற்றி பார்ப்போம் |
06:17 | முதலில் கேன்வாஸில் 25 மிமீ radius கொண்ட ஒரு வட்டத்தை வரையவும். |
06:24 | பின்னர், radius ஐ குறிக்க ஒரு கோட்டை வரையவும். |
06:29 | இது மையத்திலிருந்து சுற்றளவு வரை உள்ளது, இது இறுதிப்புள்ளி என்று அழைக்கப்படுகிறது. |
06:35 | வரியை தேர்ந்தேடுத்து, array toolக்கு செல்லவும் |
06:39 | இம்முறை Polar arrayவை தேர்ந்தெடுக்கவும் |
06:43 | மீண்டும், இடது பேனலில் தேர்வுகள் மாறுகின்றன. |
06:47 | Number of elementsக்கு 12 என டைப் செய்யவும். |
06:50 | Enter keyயை அழுத்த வேண்டாம். |
06:54 | வட்டத்தின் மையத்தைக் கண்டறிய, கர்சரை வட்டத்தின் சுற்றளவுக்கு நகர்த்தவும். |
07:02 | மையத்தில் ஒரு வெள்ளைப் புள்ளியைக் நாம் காணலாம். |
07:07 | அதைக் கிளிக் செய்து, வட்டம் சமமாக 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். |
07:14 | அடுத்து கேன்வாஸில் உள்ள வட்டம் மற்றும் circular array வை தேர்ந்தெடுக்கவும். |
07:20 | array tool மீது கிளிக் செய்து circular array வை தேர்ந்தெடுக்கவும். |
07:25 | இடது பேனலில் இந்த arrayக்கு பல பண்புகள் காணப்படுகின்றன. |
07:32 | Radial distance, tangential distance, Number of circular layers மற்றும் symmetry ஆகியவை மாற்றப்படலாம். |
07:40 | நான் அவற்றை 100, 50 மற்றும் 3 layersகளாக மாற்றுகிறேன். |
07:45 | symmetry ஐ 1 ஆக வைக்கிறேன் |
07:48 | OK மீது கிளிக் செய்யவும். |
07:51 | புதிய வடிவத்தைக் கவனிக்க, நீங்கள் கேன்வாஸில் சிறியதாக்க வேண்டும். |
07:57 | நீங்கள் வீடியோவை இடைநிறுத்தலாம். |
08:00 | இந்த மதிப்புகளை மாற்றி, நீங்கள் உருவாக்கக்கூடிய பல்வேறு வடிவங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். |
08:07 | அடுத்து, ஒரு path arrayவை உருவாக்குவோம். |
08:10 | canvasல் 2 objectகளை தேர்ந்தெடுக்கிறேன். |
08:15 | ஒரு செவ்வகத்தை வரையவும். |
08:19 | ஒன்றுக்கும் மேற்பட்ட objectஐ தேர்ந்தெடுக்கும் போது control keyஐ அழுத்தவும். |
08:25 | முதலில் நான் வட்டத்தை தேர்ந்தெடுத்து, பின் hatch செய்யாத செவ்வகத்தை தேர்ந்தெடுக்கிறேன். |
08:31 | பின் array toolக்கு சென்று, path arrayவை தேர்வு செய்யவும். |
08:36 | இயல்புநிலை தேர்வுகளை அப்படியே விட்டுவிடுகிறேன். |
08:41 | முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டம், செவ்வகத்தை நோக்கி நகர்ந்ததைக் கவனிக்கவும். |
08:47 | இடது பேனலில் உள்ள property tabல் countக்கு செல்லவும் |
08:54 | countஐ 10 ஆக மாற்றவும். |
08:57 | ஏற்படும் மாற்றங்களை கவனிக்கவும். |
09:00 | உங்கள் வேலையை save செய்து FreeCADலிருந்து வெளியேறவும். |
09:05 | நாம் கற்றவற்றை பார்ப்போம். |
09:07 | இந்த டுட்டோரியலில் நாம் கற்றது |
09:10 | Object Cloneஐ செய்தல் |
09:12 | Hatch செய்தல் |
09:13 | cadhatch.comலிருந்து hatcheகளை தரவிறக்கினோம். |
09:18 | hatch வரிகளை கற்றோம். |
09:21 | arrays பற்றி கற்றோம் |
09:22 | பல்வேறு array வகைகளை சேர்த்தோம். |
09:27 | பயிற்சியாக, பின்வருவனவற்றை செய்யவும். |
09:29 | இங்கே காண்பது போல், hatchகளை உருவாக்கவும். |
09:34 | இங்கே காண்பது போல், array வை உருவாக்கவும். |
09:37 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. |
09:42 | இதை நீங்கள் தரவிறக்கி காணவும். |
09:45 | ஸ்போக்கன் டுடோரியல் திட்டம், |
09:48 | செய்முறை வகுப்புகள் நடத்தி, |
09:49 | சான்றிதழ்களை வழங்குகிறது. |
09:51 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும் |
09:53 | உங்களின் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
09:57 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. |
10:05 | இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து ஆர்த்தி. நன்றி. |