FreeCAD/C2/Draft-Modification-Tools/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search


Time Narration
0:00 Draft Modification Tools பற்றிய tutorialக்கு நல்வரவு.
0:07 இந்த டுட்டோரியலில்,
0:09 பின்வரும் objectன் செயல்பாடுகளை செய்வோம்
0:12 Mirror, Offset
0:15 நீக்குதல்
0:17 Trim செய்தல், நீட்டித்தல்
0:19 Downgrade, Upgrade செய்தல்
0:22 சுழற்றுதல் மற்றும் கோட்டுத்துண்டு
0:26 இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான்
0:29 Windows 11 OS
0:32 மற்றும் FreeCAD பதிப்பு 0.21.1ஐ பயன்படுத்துகிறேன்.
0:37 இந்த டுடோரியலை கற்க,
0:39 நீங்கள் FreeCAD இடைமுகத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
0:44 முன்தேவையான பயிற்சிகளுக்கு, இந்த தளத்தைப் பார்வையிடவும்.
0:49 இந்த டுடோரியலில் பயன்படுத்தப்படும் fileகள் code files இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன.
0:54 அதை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கவும்.
0:58 பயிற்சியின் போது அதை வேறொரு copy செய்து பயன்படுத்தவும்.
01:02 நான் FreeCAD ஐத் திறந்து, இந்த டுடோரியலுடன் வழங்கப்பட்ட fileஐத் திறந்துள்ளேன்.
01:09 முதலில் Draft Modification Toolsகளைப் பயன்படுத்தி, polygonஐ மிரர் செய்வோம்.
01:15 Pentagonஐ தேர்ந்தெடுத்து, மிரர் toolஐ கிளிக் செய்யவும்.
01:20 மிரரின் கோணம் மற்றும் திசையை வரைய, கர்சரை கேன்வாஸுக்கு நகர்த்தவும்.
01:26 முதல் புள்ளியை அமைக்க இடது கிளிக் செய்து, மிரர் கோட்டைப் பார்க்க கர்சரை நகர்த்தவும்.
01:34 2Dயில் இது ஒரு கோடாக இருக்கும்.
01:38 மிரர் கோட்டை அமைக்க கேன்வாஸில் செங்குத்து கோடு வரைகிறேன்.
01:43 ஒரு tool தேர்ந்தெடுக்கப்பட்டால், report view ஆனது அடுத்த செயலுக்கு பயனரைத் தூண்டும்.
01:50 இரண்டாவது புள்ளியைத் தேர்ந்தெடுத்து மீண்டும் இடது கிளிக் செய்யவும்.
01:55 பென்டகனின் பிரதிபலிப்பை கவனிக்கவும்.
01:57 பிரதிபலித்த objectம் parentம் mirrorலிருந்து சமமான தொலைவில் உள்ளன.
02:04 வீடியோவை இடைநிறுத்தி, objectன் வழியாக ஒரு மிரரை வரையவும்.
02:08 parent மற்றும் child ஒன்றுடன் ஒன்று இருப்பதைக் கவனிக்கவும்
02:13 இது அவை சமச்சீராக வைக்கப்ட்டதால் ஏற்பட்டது.
02:16 Mirror செய்த objectகளை நீக்குவோம்.
02:20 ஒன்றுக்கும் மேற்பட்ட objectகளை தேர்ந்தெடுக்க, control keyஐ அழுத்தி தேர்ந்தெடுக்கும்.
02:27 காம்போ வியூவில், mirror செய்த objectஐ தேர்ந்தெடுத்து Delete keyஐ அழுத்தவும்.
02:33 Downgrade tool ஆனது சிக்கலான objectகளை, பல எளிய objectகளாக மாற்றுகிறது.
02:40 polygonஐ தேர்ந்தெடுக்கவும்.
02:42 object இப்போது shade செய்யப்பட்டுள்ளது.
02:45 Downgrade டூலில் ஒருமுறை கிளிக் செய்யவும்.
02:49 object, wireஆக மாற்றப்பட்டு shade இல்லாமல் இருப்பதைக் கவனிக்கவும்.
02:55 மீண்டும் Downgrade toolல் கிளிக் செய்யவும்.
02:59 இப்போது object ஆனது, பல தனிப்பட்ட edge objectகளாக மாற்றப்படுகிறது.
03:05 அவற்றை தனி தனியே எடிட் செய்யலாம்.
03:10 வரையும்போது இது மிகவும் பயனுள்ள அம்சமாகும்.
03:13 எடிட் செய்த objectன் பண்பு மாற்றங்களைச் செயல்தவிர்க்க, control மற்றும் Zஐ அழுத்துகிறேன்.
03:20 அடுத்து, upgrade toolஐ பற்றி கற்போம்
03:24 அனைத்து விளிம்புகளையும் தேர்ந்தெடுக்க control மற்றும் A keyகளை ஒன்றாக அழுத்தவும்.
03:29 தேவைப்பட்டால் நீங்கள் அதை தனித்தனியாகவும் தேர்ந்தெடுக்கலாம்.
03:33 Upgrade toolல் ஒருமுறை கிளிக் செய்யவும்.
03:36 Objectகள் இப்போது ஒற்றை wire ஆக ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன.
03:41 மீண்டும் upgrade toolல் கிளிக் செய்யவும்.
03:45 இப்போது wireஆனது, face objectஆக மாற்றப்பட்டது.
03:49 வீடியோவை இடைநிறுத்தி, face objectஐ, மீண்டும் ஒற்றை விளிம்புகளுக்குத் downgrade செய்யவும்.
03:56 இப்போது 4 விளிம்புகளை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவற்றை wireற்கு upgrade செய்யவும்.
04:02 wire objectஐ சிறிது தூரம் நகர்த்தவும்.
04:07 பின்னர், wire objectஐ faceற்கு upgrade செய்யவும்.
04:12 முடிக்கப்பட்ட pentagon faceயும், upgrade செய்யாத விளிம்பையும் கவனிக்கவும்.
04:19 Objectஐ 5 விளிம்புகளுக்கு downgrade செய்வதன் மூலம், Trimex toolஐ பற்றி அறிந்து கொள்வோம்.
04:27 விளிம்புகளில் ஒன்றைக் கிளிக் செய்து, தேர்ந்தெடுக்கவும்.
04:32 வீடியோவில் தெளிவாக தெரிய, line widthஐ 5 ஆக அதிகரிக்கிறேன்.
04:38 விரும்பியபடி ஜூம் செய்யவும்.
04:41 Trimex tool மீது கிளிக் செய்யவும்
04:45 வரியை நீட்டிக்கவும் trim செய்யவும், இப்போது கற்றுக்கொள்வோம்.
04:49 தேர்ந்தெடுக்கப்பட்ட வரியின் முடிவில் இருந்து கர்சரை நகர்த்தவும்.
04:55 வரியை நீட்டிக்க, கேன்வாஸில் விரும்பிய இடத்தில் கிளிக் செய்யவும்.
05:01 நான் இந்த செயல்பாட்டை செயல்தவிர்த்து, டிரிம் செய்து காட்டுகிறேன்.
05:05 மீண்டும் lineஐ தேர்வு செய்து பின் Trimex toolஐ தேர்வு செய்யவும்
05:09 டிரிம் என்பது அதன் நிலை மற்றும் நீளத்தைப் பொறுத்தது.
05:15 இப்போது நாம் இங்கே காணும் வரியை ட்ரிம் செய்ய கர்சரை சிறிது நகர்த்துகிறோம்.
05:21 Trim செய்யப்படவேண்டிய பகுதியில் கருப்பு மேல்கோடு இல்லை.
05:25 வரியின் ஒரு பகுதியான பச்சை நிறத் தேர்வில், கருப்பு மேல்கோடு இருப்பதைக் கவனிக்கவும்.
05:33 ஒரு முறை இடது கிளிக் செய்து, ட்ரிம் செய்த பகுதியைக் கவனிக்கவும்.
05:37 control மற்றும் Z keyகளை ஒன்றாக அழுத்தி டிரிமை செயல்தவிர்க்கிறேன்.
05:43 இந்த செயல்முறையை மீண்டும் செய்வோம்.
05:46 lineஐ தேர்வு செய்து பின் Trimex, பின் trimஐ தேர்வு செய்யவும்
05:50 இப்போது கவனமாக, கோட்டின் பாதி நீளத்தை கடந்து செல்லவும்.
05:56 நீங்கள் பாதி வரியை கடந்த பிறகு கருப்பு மேல்கோடு மாறுவதை கவனிக்கலாம்.
06:02 கேன்வாஸ் மீது கிளிக் செய்யவும்.
06:05 இந்த முறை குறுகிய கோடு நீக்கப்பட்டது, தொடக்கப் கோடு நீக்கப்படவில்லை.
06:12 control மற்றும் A keyகளை ஒன்றாக அழுத்தி அனைத்து objectகளையும் தேர்ந்தெடுக்கிறேன்.
06:18 offset toolஐ கற்றுக்கொள்ள, நான் அவற்றை நீக்கிவிட்டு, ஒரு பென்டகனை மீண்டும் வரைகிறேன்.
06:24 தெளிவாக புரிய Wireframe styleஐ பயன்படுத்தவும்.
06:28 பென்டகனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் offset toolஐ தேர்ந்தெடுக்கவும்.
06:32 கேன்வாஸில் கர்சர் நகரும் போது, ஒரு பொது மைய objectஐ கவனிக்கவும்.
06:39 பொது மைய object, பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம்.
06:45 இதன் parentடமிருந்து தூரம் task tabல் காணப்படுகிறது.
06:50 கர்சரை நகர்த்தாமல், 5ஐ டைப் செய்து Enter keyயை அழுத்தவும்.
06:56 Object இப்போது பெரிதாகிறது.
07:00 வீடியோவை இடைநிறுத்தி, objectஐ தேர்ந்தெடுத்து offset toolஐ தேர்ந்தெடுக்கவும்.
07:06 இப்போது, ​​task tabல் உள்ள Copy பெட்டியை கிளிக் செய்யவும்.
07:10 சிறிய அல்லது பெரிய பரிமாணத்தை உருவாக்க, ஆஃப்செட்டை மீண்டும் செய்யவும்.
07:17 கேன்வாஸில் இடது கிளிக் செய்து, இப்போது இரண்டு objectகள் இருப்பதைக் கவனிக்கவும்.
07:23

OCC-style objectக்கான பெட்டியை கிளிக் செய்து, இந்த நடைமுறையை மீண்டும் செய்யவும்.

07:32 இப்போது சேர்க்கப்பட்டுள்ள vertexகளைச் சுற்றியுள்ள கூடுதல் விளிம்பைக் கவனியுங்கள்.
07:37 அடுத்து, rotate toolஐ பயன்படுத்தி objectஐ சுழற்றுவோம்.
07:44 polygon தேர்ந்தெடுத்து, rotate toolஐ கிளிக் செய்யவும்.
07:49 2D ல் சுழற்ற, நாம் இரண்டு அளவுருக்களை அமைக்க வேண்டும்.
07:55 அவை சுழற்சியின் அச்சு மற்றும் சுழற்சியின் கோணம்.
08:00 முதலில், சுழற்சிக்கான பைவோட் புள்ளியைத் தேர்ந்தெடுப்போம்.
08:05 கர்சரை கேன்வாஸில் நகர்த்தி, Δx மற்றும் Δy மாற்றங்களை மட்டும் கவனிக்கவும்.
08:13 கேன்வாஸில் விரும்பிய இடத்தில் இடது கிளிக் செய்யவும்.
08:17 இப்போது நீங்கள், அடிப்படை கோணத்தை உள்ளிட வேண்டும்
08:23 நான் கர்சரை நகர்த்தி மீண்டும் ஒருமுறை இடது கிளிக் செய்கிறேன்.
08:27 நீங்கள் கர்சரை நகர்த்தாமலும் சரியான அடிப்படை கோணத்தி type செய்யலாம்.
08:34 சுழற்சியின் அச்சு அமைக்கப்பட்டது.
08:39 இப்போது நீங்கள் சுழற்சி கோணத்தை உள்ளிட வேண்டும்.
08:44 நான் கர்சரை நகர்த்தாமல், 90 ஐ உள்ளிட்டு Enter keyயை அழுத்துவேன்.
08:50 சுழற்றப்பட்ட objectஐ கவனிக்கவும்
08:54 நீங்கள் பல்வேறு தேர்வுகளைப் பயிற்சி செய்யலாம்.
08:57 நீங்கள் செய்ததை save செய்து FreeCADலிருந்து வெளியேறவும்.
09:01 நாம் கற்றவற்றை பார்ப்போம்.
09:04 இந்த டுட்டோரியலில், நாம் பல Draft modification toolகளை கற்றோம்.
09:10 அவை:
09:11 Mirror, Upgrade மற்றும் downgrade
09:14 சுழற்றுதல்
09:16 Trimex மற்றும்
09:18 Offset
09:19 பயிற்சியாக, பின்வருவனவற்றை செய்யவும்.
09:23 ஒரு கோடு வரையவும்
09:24 கீழே காம்போ viewவில், value tabல் உள்ள subdivisionsகளுக்கு செல்லவும்.
09:30 அதை 5 ஆக மாற்றி Enter ஐ அழுத்தவும்.
09:34 வரிக்கு மேல் கர்சரை நகர்த்தவும்
09:37 6 சம பிரிவுகளைக் கவனிக்கவும்.
09:41 இந்த டுடோரியலில் கற்றுக்கொண்ட modification toolகளைப் பயிற்சி செய்யவும்.
09:46 Rotate, offset, downgrade, upgrade மற்றும் mirror toolகள்.
09:51 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. 
09:56 இதை நீங்கள் தரவிறக்கி காணவும்.
09:58 ஸ்போக்கன் டுடோரியல் திட்டம்,
10:01 செய்முறை வகுப்புகள் நடத்தி,
10:03 சான்றிதழ்களை வழங்குகிறது.
10:06 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்
10:08 உங்களின் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
10:12 ஸ்போகன் டுடோரியல் திட்டம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
10:19 இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து ஆர்த்தி. நன்றி.

Contributors and Content Editors

Arthi