FreeCAD/C2/Basic-Orthographic-Drawing/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search


Time Narration
0:00 Basic Orthographic Drawing குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு
0:07 இந்த டுட்டோரியலில் நாம் கற்க போவது
0:10 user preferenceஐ அமைத்தல்
0:12 Draft workbench மூலம் 2D objectகளை வரைதல்
0:17 ஒரு கோடு வரைதல்
0:19 snap toolகளை பயன்படுத்துதல்
0:22 ஒரு வரியின் இறுதிப் புள்ளியில் மற்றொரு வரியை ஒட்டுதல்
0:27 Draft modification toolகள் பற்றி மற்றும்
0:31 ஒரு objectஐ நகர்த்துதல் மற்றும் copy செய்தல்
0:34 இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது
0:36 Windows 11 OS மற்றும் FreeCAD பதிப்பு 0.21.1
0:46 இந்த டுடோரியலை கற்க,
0:48 நீங்கள் FreeCAD இடைமுகத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
0:53 முன்தேவையான பயிற்சிகளுக்கு, இந்த தளத்தைப் பார்வையிடவும்.
0:57 நான் FreeCAD இடைமுகத்தைத் திறந்துள்ளேன்.
01:01 புதிய பயிற்சியை தொடங்க, File , பின் Newவை கிளிக் செய்யவும்.
01:06 மேலே உள்ள Workbenchஇல் start என்பதை காட்டுகிறது
01:11 மேலே உள்ள மெனுவில், Draft workbenchஐ தேர்ந்தெடுக்கவும்.
01:16 இடைமுக மெனு விருப்பங்கள் மாறுகின்றன.
01:20 மெனுவில் Viewக்கு சென்று பின் Toolbarsக்கு செல்லவும்.
01:24 பட்டியலில் அனைத்து tool bar விருப்பங்களும் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
01:30 ஏதேனும் இயக்கப்படவில்லை என்றால், அதை இயக்க இடது பக்கத்தில் கிளிக் செய்யவும்.
01:37 மேக்ரோ, பயனரின் சொந்த அம்சங்களை எழுதி நிறுவ அனுமதிக்கிறது.
01:43 வீடியோவில் உள்ளதைப் போல அனைத்து மெனு பட்டங்களும், மேலே காணப்படாமல் இருக்கலாம்.
01:49 அப்படி இருந்தால், அவற்றை எடுத்து மறுசீரமைத்து, பின் பயன்பாட்டிற்காக தெரியும்படி செய்யவும்.
01:56 Edit, பின் Preferencesல் கிளிக் செய்யவும்.
02:01 Preferences பக்கம் திருக்கிறது.
02:04 General tabக்கு செல்லவும்.
02:06 Styleகள் சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தவும்.
02:11 Units tabஐ தேர்வு செய்யவும்.
02:14 இங்கிருந்து நீங்கள் விரும்பும் யூனிட் system மை மாற்றலாம்.
02:20 Unit systemத்துக்கு, நான் Standardஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:24 Number of decimalsஐ 2ஆக வைக்கிறேன்
02:28 இதை நீங்கள் பின்னர் மாற்றலாம்.
02:31 அடுத்து, இடது பக்க பேனலில் உள்ள Draft கிளிக் செய்யவும்.
02:36 General setting tabல், default working plane தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
02:43 நான் XY top ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:46 இடைமுகத்தில் உள்ள கிஸ்மோவைப் பயன்படுத்தியும் இதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
02:53 Internal precision level பயனர் விருப்பத்தின் அடிப்படையில் மாற்றப்படலாம்.
02:59 இப்போதைக்கு இதை அப்படியே விட்டுவிடுகிறேன்.
03:02 இப்போது Grid and snapping tabக்குச் செல்லவும்.
03:06 பின்னர் வரைவதை எளிதாக்குவதற்காக, இங்கே காணப்படும் Grid விருப்பங்களைத் தேர்வு நீக்கம் செய்கிறேன்.
03:13 மாற்றங்களை ஏற்க, Apply யில் கிளிக் செய்து, பின் OKவில் கிளிக் செய்து, பக்கத்தை மூடவும்.
03:20 இப்பொழுது View அடுத்து Panels லில் கிளிக் செய்யவும்
03:24 Report View மற்றும் Combo view தேர்ந்தெடுக்கப்பபட்டிருக்க வேண்டும் .
03:30 படிப்படியான செயல்முறை மற்றும் ஏதேனும் பிழைகள் இங்கே FreeCAD ஆல் காண்பிக்கப்படும்.
03:36 வரையும் போது பயன்படுத்தப்படும் toolகளை Model காட்டுகிறது.
03:41 Property View பக்கம் objectன் மாற்றக்கூடிய பண்புகளைக் காட்டுகிறது.
03:48 கியூப் அல்லது கிஸ்மோ ஐகானைக் கிளிக் செய்யவும்.
03:53 டிராப் டவுன்ஆனது, 2D, 3D அல்லது வேறு தேர்வை செய்ய தூண்டுகிறது.
04:00 Orthographic அல்லது isometric ஐ தேர்வு செய்யவும்.
04:05 ஆர்த்தோகிராஃபிக் என்பது 2டி வரைபடம், மற்றும் ஐசோமெட்ரிக் என்பது 3டி வரைபடத்தின் ப்ரொஜெக்ஷன் ஆகும்.
04:12 தற்சமயம் நான் ஆர்த்தோகிராஃபிக்கைத் தேர்ந்தெடுக்கிறேன்.
04:16 நான் top viewயையும் தேர்ந்தெடுக்கிறேன்.
04:20 மேலே உள்ள View menuவிலும் இவற்றை காணலாம்.
04:25 முதலில் Snap ortho toolலில் கிளிக் செய்யவும்
04:29 Snap tool இயக்கப்பட்வுடன், ஐகானின் பின்னணி cyan நிறத்திற்கு மாறும்.
04:35 இப்போது கேன்வாஸில் ஒரு கோடு வரைவோம்.
04:39 Snap toolகள் ஒரு objectன் குறிப்பிட்ட புள்ளிகளைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றன.
04:45 அவை தொடக்கப் புள்ளி, இறுதிப் புள்ளி, நடுப்புள்ளி, குறுக்குவெட்டு அல்லது செங்குத்தாக இருக்கலாம்.
04:52 Lock icon disableஆக இருக்க வேண்டும்.
04:56 இப்போது Report view panel, முதல் புள்ளியைத் தேர்ந்தெடுக்க தூண்டுகிறது.
05:02 Draft creation toolsகளில் உள்ள விருப்பங்களால் Line தேர்வுசெய்யப் பயன்படுத்தப்படலாம்.
05:08 Line டூலில் கிளிக் செய்யும் போது, இடது பக்கத்தில் உள்ள பேனல்களில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்கவும்.
05:15 கேன்வாஸில் விரும்பியபடி ஒரு வரியை வரைய, இடது கிளிக் செய்து, பிடித்து இழுக்கவும்.
05:21 வரியை முடிக்க மீண்டும் கிளிக் செய்யவும்.
05:24 Combo View பேனலில் உள்ள டாஸ்க் டேபில் இருந்து வரியின் நீளத்தை மாற்றலாம்.
05:32 இந்த நேரத்தில் Combo Viewவில் மாறப்படும் ஒருங்கிணைப்புகளை கவனிக்கவும்.
05:38 இது கிடைமட்டக் கோடு என்பதால், x ஒருங்கிணைப்பு மட்டுமே மாறுகிறது.
05:43 கோட்டின் சரியான பரிமாணத்தையும் இங்கே குறிப்பிடலாம்.
05:49 நீங்கள் வீடியோவை இடைநிறுத்தி பின்வருவனவற்றைச் செய்யலாம்.
05:53 x ஒருங்கிணைப்பு பரிமாணத்தை, 100 மிமீ என கொடுத்து மற்றொரு வரியைச் சேர்க்கவும்.
06:00 snap ortho, on செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும் நீல நிற சிறிய + அடையாளத்தைக் கவனிக்கவும்.
06:08 இது ஒரு கிடைமட்ட அல்லது செங்குத்து கோட்டை வரைவதற்கு உதவுகிறது.
06:12 முதல் வரியின் இறுதியில் ஒட்டக்கூடிய மற்றொரு கோட்டை வரைவோம்.
06:18 அடுத்து ஸ்னாப் toolகளில், எண்ட்பாயிண்ட் மற்றும் மிட்பாயிண்ட் ஐகான்களை இயக்கவும்.
06:24 இப்போது கர்சரை முதல் வரியின் முடிவில் வைக்கவும்.
06:28 வரியின் முடிவில் உள்ள வெள்ளைப் புள்ளியைக் கவனிக்க்வும்.
06:33 இப்போது ஸ்னாப் tool, இந்த புள்ளியில் புதிய வரியை snap செய்யும்.
06:39 Fileஐ save செய்வதற்கு, File, பின் Saveஐ கிளிக் செய்யவும்.
06:44 இப்போது இரண்டு வரிகளையும் பட்டியலில் காணலாம்.
06:48 ஒரு objectஐ தேர்ந்தெடுக்க, அதைக் கிளிக் செய்து, பச்சை நிற அவுட்லைனைக் கவனிக்கவும்.
06:53 Combo Viewலிருந்தும் ஒரு object தேர்ந்தெடுக்கலாம்.
06:58 அடுத்து Draft modification toolகளை பயன்படுத்துவோம்.
07:02 objectஐ நகர்த்த, முதலில் 4 திசை அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.
07:07 Combo view பேனலில் நகரும் போது பல அளவுருக்களைக் கண்காணிக்க முடியும்.
07:13 முதலில் objectன் மீது கிளிக் செய்து, mouseஐ புதிய இடத்திற்கு நகர்த்தவும்.
07:19 Objectஐ நகர்த்த, விரும்பிய இடத்தில் மீண்டும் இடது கிளிக் செய்யவும்.
07:24 ஒரு Objectஐ copy செய்வதற்கு, முதலில் அதைத் தேர்ந்தெடுக்கவும்.
07:30 Copy தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும்.
07:33 காம்போ வியூ பேனலில் duplicate செய்த objectன் பெயர் தோன்றுவதைக் கவனிக்கவும்.
07:39 புதிய object parent மீது வைக்கப்பட்டு அதனுடன் சேர்ந்துள்ளது.
07:45 இப்போது அதைத் தேர்ந்தெடுத்து, Move toolஐ கிளிக் செய்யவும்.
07:48 பின்னர், objectன் மீது கர்சரை வைத்து, விரும்பிய இடத்திற்கு நகர்த்தவும்.
07:54 அவ்வப்பொழுது save செய்யவும்.
07:57 FreeCADஐ மூடுவதற்கு File, பின் Exit ஐப் பயன்படுத்தவும்.
08:01 நாம் கற்றவற்றை பார்ப்போம்.
08:03 இந்த டுட்டோரியலில்
08:04 வரைவதற்கு முன்பாக user preferenceஐ அமைத்தோம்
08:09 Draft workbench மூலம் ஒரு வரியை வரைந்தோம்
08:13 snap toolகள் மூலம் அதன் இறுதிப் புள்ளியில் மற்றொரு வரியை snap செய்தோம்
08:19 ஒரு objectஐ நகர்த்தி copy செய்தோம்
08:22 பயிற்சியாக, பின்வருவனவற்றை செய்யவும்
08:26 ஒரு செவ்வகத்தை வரையவும்
08:28 30 மிமீ பக்க அளவுடன் ஒரு சதுரத்தை வரையவும்
08:32 அடுத்து பின்வரும் படிகளுடன் செறிவு வட்டங்களை உருவாக்குவோம்.
08:38 ஒரு வட்டம் வரையவும்
08:39 Snap Center (ON) மீது கிளிக் செய்யவும்.
08:42 Draft creation toolsல் உள்ள Point icon மீது கிளிக் செய்யவும்.
08:47 கர்சரை வட்டத்திற்கு அருகில் நகர்த்தி மையப் புள்ளி தோன்றுவதைக் கவனிக்கவும்.
08:52 அடுத்த வட்டத்தை உருவாக்க இடது கிளிக் செய்யவும்.
08:56 வட்டம் ஐகானை மீண்டும் தேர்வு செய்யவும்.
9:00 கர்சரை கேன்வாஸில் நகர்த்தி, 2வது வட்டத்தின் அளவை மாற்றவும்.
09:05 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. 
09:09 இதை நீங்கள் தரவிறக்கி காணவும்.
09:12 ஸ்போக்கன் டுடோரியல் திட்டம்,
09:14 செய்முறை வகுப்புகள் நடத்தி,
09:16 சான்றிதழ்களை வழங்குகிறது.
09:18 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்
09:21 இந்த மன்றத்தில் உங்களின் நேரமிடப்பட்ட கேள்விகளை பதிவு செய்யவும்.
09:26 ஸ்போகன் டுடோரியல் திட்டம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
09:35 இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து ஆர்த்தி. நன்றி.

Contributors and Content Editors

Arthi