Drupal/C3/People-Management/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம், Drupal ல் People Management குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: People Management மற்றும் குறிப்பிட்ட வேலைகளுக்கு roleகளை அமைத்தல்.
00:14 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox Web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:29 முதலில் People management பற்றி கற்போம்.
00:31 ZIRCON themeஐ மீண்டும் அமைத்து இந்த themeஐயே மீதமுள்ள டுடோரியல்களுக்கும் பயன்படுத்துகிறேன்.
00:39 People management மிகவும் முக்கியமானது.
00:42 இதை சரியாக செய்வது சிரமமானது.
00:46 இதை ஒருமுறை மட்டும் செய்யவேண்டும் ஆனால் சரியாக சரியாக இருக்கவேண்டும்.
00:50 Peopleஐ க்ளிக் செய்க
00:53 Drupalல் People என்பது permissionsஐ கொண்ட roleகள்.
00:58 permission structure மூலம், people என்ன பார்க்கலாம் என்ன செய்யலாம் என்பதை கட்டுப்படுத்த Drupal நம்மை அனுமதிக்கிறது.
01:06 இப்போது சிலவற்றை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
01:10 நீங்கள் தான் user no.1 - அதாவது super user.
01:15 உங்கள் permissionsஐ யாராலும் மாற்ற முடியாது.
01:18 உங்களுக்கு கீழே உள்ள ஒரு user ADMINISTRATOR.
01:23 பொதுவாக Administratorகளுக்கு முழு siteஐயும் நிர்வகிக்க permissions கொடுக்கப்படுகிறது.
01:29 இருந்தாலும் அவர்கள் super user போல அதிகாரமுள்ளவர்கள் அல்ல.
01:33 Authenticated Userகள் குறிப்பிட்ட அனுமதிகளை கொண்ட Site ல் login செய்த people.
01:39 கடைசியாக, Anonymous Users, அவர்கள் login செய்யாத பார்வையாளர்கள்.
01:45 வழக்கமாக, Anonymous Users அனைத்து contentஐயும் பார்க்கலாம், அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது.
01:53 நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், siteல் குறிப்பிட்ட வேலைகளை செய்ய roleகளை அமைப்பது.
02:01 உதாரணமாக ஒரு summer intern, அவர் Eventsஐ மட்டும் update செய்ய அனுமதிக்கலாம். ஆனால் அவர் Articles, Pages அல்லது User Groupsஐ update செய்ய கூடாது.
02:11 அந்த summer internக்கு ஒரு role இருக்க வேண்டும் அதன்மூலம் நாம் permissionsஐ கொடுக்கலாம்.
02:19 அதை சற்று நேரத்தில் செய்வோம்.
02:22 இப்போதைக்கு Permissions tabஐ க்ளிக் செய்க.
02:26 கொஞ்சம் கொஞ்சமாக கீழே வந்து இங்கு இருப்பதைக் காண்க.
02:30 இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது- இது நாம் சேர்க்கும் ஒவ்வொரு Content typeக்கும் சேர்க்கும் ஒவ்வொரு Moduleகளுக்கும்
02:39 கட்டமைக்கும் ஒவ்வொரு Viewக்கும் உள்ளது.
02:42 Drupalல் People management என்பது people என்ன செய்யலாம் என்பதற்கு.
02:46 அடுத்து ஒரு roleஐ சேர்த்து அதற்கு சில permissionsஐ கொடுத்து சோதிப்போம்.
02:52 Rolesஐ க்ளிக் செய்க.
02:54 இங்கு ஒரு புது roleஐ சேர்த்து அதை "Summer Intern" என்போம்.
02:59 Drupal எப்போதும் ஒரு machine nameஐ கொடுக்கிறது.
03:03 Saveஐ க்ளிக் செய்க.
03:05 இப்போது ஒரு role Summer Intern உள்ளது அதற்கு இன்னும் permissionsஐ கொடுக்கவில்லை.
03:12 permissionsஐ பொருத்து என் roleகளை மாற்றி வைக்கிறேன்.
03:17 இது roleகளை, யாருக்கு என்ன permissions உண்டு என்பதை logical order காண எனக்கு உதவும்.
03:24 Save orderஐ க்ளிக் செய்க.
03:27 நம் புது roleக்கு சில permissionsஐ கொடுப்போம்.
03:31 Permissions tabஐ க்ளிக் செய்க.
03:34 இந்த பக்கத்தில் மேலோட்டமாக எல்லோருடைய permissionsஐயும் காணலாம்.
03:39 Roles tabஐ க்ளிக் செய்க.
03:44 Summer Internஐ க்ளிக் செய்து Edit permissionsஐ தேர்க.
03:51 இப்போது Summer Internக்கான permissionsஐ மட்டும் காணலாம். இது சற்று சுலபமானது.
03:58 கீழே வந்து Events என்ற Content typeக்கு செல்வோம்.
04:06 Summer Intern- ஒரு eventsஐ உருவாக்கலாம், அவர் உருவாக்கிய eventsஐ மட்டும் நீக்கலாம், அவர் உருவாக்கிய eventsஐ மட்டும் மாற்றலாம் என்போம்.
04:18 ஆனால் அந்த Summer Intern - மற்றவர்கள் உருவாக்கிய contentஐ நீக்க முடியாது, revisionsஐ நீக்க முடியாது, மற்றவர்கள் உருவாக்கிய eventsஐ மாற்ற முடியாது என்போம்.
04:30 பழைய versionக்கு திரும்ப வரவும் அவர்களுக்கு அனுமதி இல்லை.
04:37 அம்மாதியான அனுமதிகளை editorகளுக்கு கொடுப்போம்.
04:41 இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட role.
04:44 இப்போது அடியில் Save permissionsஐ க்ளிக் செய்க.
04:50 மீண்டும் குறித்துக்கொள்க அவர்களால் viewகளை மாற்ற முடியாது,
04:54 booksஐ மாற்ற முடியது, அனுமதியின்றி அவர்களின் commentகள் வெளியிடப்படாது.
04:58 எனவே இது ஒரு கட்டுபடுத்தப்பட்ட role. அடுத்து இந்த role க்கு ஒரு நபரை சேர்க்க வேண்டும்.
05:06 roleகளை சேர்த்து permissionsஐ கொடுத்துள்ளோம்.
05:11 இப்போது ஒரு userஐ சேர்ப்போம். இங்கு போலியான email address கொடுப்போம்.
05:18 ஆனால் அது சரியான formatல் இருக்க வேண்டும்.
05:22 intern@email.com என்போம் ஏனெனில் அவர்களுக்கு email ஏதும் அனுப்பபோவதில்லை.
05:31 Usernameல், டைப் செய்க "Sam" passwordல் 'sam' என்போம்.
05:38 இந்த password பாதுகாப்பானது அல்ல. இது local machine என்பதால் இப்போதைக்கு இது போதும்.
05:47 Status Active என மாற்றுவோம்
05:51 Summer Intern என்ற roleஐ கொடுப்போம்.
05:53 ஒரு picture வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம்.
05:56 இப்போதைக்கு, Personal contact formல் checkmarkஐ நீக்குவோம் ஏனெனில் summer internகளை யாரும் தொடர்புகொள்ளவேண்டியதில்லை.
06:06 கடைசியாக Create new accountஐ க்ளிக் செய்க.
06:10 Samக்கு ஒரு account உருவாக்கப்பட்டது என்றும் email அனுப்படவில்லை என்றும் ஒரு செய்தி காட்டப்படுகிறது.
06:17 இப்போது user பட்டியலில் Samஐ காணலாம்.
06:21 இம்மாதிரியான புது userகளை அமைக்கும்போது அவற்றை சோதிப்பது மிக முக்கியமானது.
06:29 logout செய்து Sam என login செய்து சோதிப்போம்.
06:33 ஆனால் இதில் ஒரு பிரச்சனை உள்ளது. Sam என்பது உண்மையான user ஆக இருந்து அவர் தன் passwordஐ மாற்ற நினைத்தால்.
06:41 நாம் மற்றவர்களின் accountகளை சோதிக்கும்போது அவர்களின் passwordஐ மாற்ற முடியாது. அது முறையானதும் அல்ல.
06:49 அதற்கு drupal.org/project/masqueradeல் ஒரு அற்புதமான module உள்ளது.
06:55 Masquerade module ஆனது மற்றவர்போல login செய்து சோதிக்க பயன்படுகிறது.
07:03 இதன் மூலம் நாமே Summer Intern ஆக மாறி அனைத்து permissionsஉம் சரியாக உள்ளதா என சோதிக்கலாம்.
07:10 நான் ஏற்கனவே Masquerade module ஐ நிறுவியுள்ளேன்.
07:14 நீங்களும் உங்கள் கணினியில் அதை நிறுவவும்.
07:18 புது moduleகளை நிறுவ “Adding functionalities using Modules” டுடோரியலை காணவும்.
07:26 உங்கள் வசதிக்காக Masquerade module இந்த டுடோரியல் பக்கத்தில் Code Files linkல் கொடுக்கப்பட்டுள்ளது.
07:34 அதை download செய்து நிறுவவும்.
07:37 அதை நிறுவியப்பின் login பகுதியில் Unmasquerade என்ற ஒரு link ஐ காணலாம்.
07:43 Masqueradeஐ பயன்படுத்த, People pageக்கு சென்று.
07:48 user Samன் Edit drop-downல் Masquerade asஐ க்ளிக் செய்க.
07:55 Sam ஆக நாம் Masquerade செய்தவுடனே toolbars போய்விட்டது.
08:01 ஏனெனில் user Sam க்கு administrator toolbarsஐ பயன்படுத்த அனுமதி இல்லை.
08:08 Add contentஐ க்ளிக் செய்தால், eventஐ மட்டும் உருவாக்க முடிகிறது. இதுவரை இது நன்றாக வேலைசெய்கிறது.
08:17 Our Drupal Manual பின் Installing Drupalஐ க்ளிக் செய்தால் அதை edit செய்ய முடியவில்லை.
08:23 அதற்கான tabகள் அங்கு இல்லை.
08:25 Forumsக்கு சென்றாலும் அதே நிலை தான்
08:29 இங்கும் edit செய்ய முடியில்லை.
08:32 ஒரு commentஐ இடலாம். ஆனால் அது தானாக அனுமதிக்கபடவில்லை.
08:38 இப்போது, ஒரு event ஐ க்ளிக் செய்க. அதை மாற்றவோ நீக்கவோ முடியவில்லை.
08:45 அனைத்து permissionsஐயும் சரியாகவே அமைத்துள்ளோம்.
08:47 இப்போது administrator roleக்கு திரும்ப செல்ல Unmasquerade linkஐ க்ளிக் செய்க.
08:54 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
08:57 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது People Management மற்றும் ஒரு புது userஐ சேர்த்தல்.
09:15 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
09:25 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
09:32 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:40 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
09:52 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst