Drupal/C2/Creating-Basic-Content/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம், அடிப்படை contentஐ உருவாக்குதல் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: Content typeகள், ஒரு article உருவாக்குதல் மற்றும் ஒரு basic page–ஐ உருவாக்குதல்.
00:15 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox வெப் ப்ரௌசர்.
00:25 நீங்கள் விரும்பிய வெப் ப்ரௌசரை பயன்படுத்தி கொள்ளலாம்.
00:29 முதலில் Content type பற்றி தெரிந்துகொள்வோம். Drupal இல் , Content type தான் content management system த்தின் மையமாகும்.
00:39 இதுதான் ஒரு siteன் முதுகெலும்பு போன்றது.
00:42 மற்ற CMS களிலிருந்து Drupal ஐ வேறுபடுத்தி காட்டுவதில் இது ஒரு முக்கிய அம்சமாகும்.
00:48 பல CMS களில் title ம் bodyம் மட்டுமே உள்ளன. இவை நம் தேவையைப் பூர்த்திசெய்வதாக இல்லை..
00:57 Drupal லில், ஒவ்வொரு content item மும் node என்றழைக்கபடும்.. ஒவ்வொரு node உம் ஒரு Content type ஐ சார்ந்தது.
01:06 அடுத்து நாம் Content type இன் முக்கியதுவத்தை அறிவோம். Content type nodes இன் பல்வேறு default settingsஐ வரையறுக்கிறது உதாரணமாக
01:17 Node தானாகவே வெளியிடப்பட்டதா, Commentsஐ தெரிவிப்பதற்க்கு அனுமதி உள்ளதா
01:23 நம் site-ல் content சேர்க்கப்படும் விதம். ஒவ்வொரு Content type -லும் பல fieldகள் உள்ளன
01:30 உள்ளே உள்ள Content ஐ பொருத்து, நமக்கு தேவையான தகவல்கள் கொண்ட fieldகள் உள்ளன.
01:38 உதாரணமாக இது IMDb.Com. இது ஒரு Drupal site ஆக இருக்கலாம். இது படம் Red பற்றியது.
01:49 திரையில், நீங்கள் பார்ப்பது, ஒரு poster, title, release date,
01:55 parental rating, run time, movie genre,
01:59 body அல்லது description.
02:04 people fieldகள், மற்ற சில linkகள் buttonகள் மற்றும் சில தகவல்களும் இருக்கும் .
02:09 வேறு பல CMS களில் Dreamweaver போன்றவற்றை CSS வேலைக்கு பயன்படுத்துவர்.
02:16 நமக்கு பின்வருமாறு தகவல் வேண்டுமெனில் என்ன செய்வது: 2010 இல் வெளிவந்த Bruce Willis நடித்த parental rating PG 13 கொண்ட அனைத்து திரைப்படங்கள்
02:28 Drupal லை தவிர வேறு CMS களில், இது செய்வது கடினம்.
02:37 இது தான் Content types ன் சிறப்பம்சம். இப்போது, நாம் சில உள்ளமைக்கப்பட்ட Content types களை ஆராய்ந்து பார்ப்போம்
02:46 பின்னர் நாம் புது Content typeஐ உருவக்குதல் பற்றி கற்ப்போம் நாம் முன்பே உருவாக்கிய Drupal site க்கு செல்வோம்.
02:54 முதலில் Article Content type பற்றி கற்ப்போம். Content ஐ கிளிக் செய்து Add content ஐ கிளிக் செய்யவும்.
03:04 முன்பே நம் ஒரு article ஐ உருவாக்கியுள்ளோம், அனைத்து elementகளையும் கொண்ட மற்றொரு article ஐ உருவாக்குவோம்.
03:13 Article ஐ கிளிக் செய்யவும். ஒரு Article ளில் ஒரே ஒரு முக்கிய field இருக்கும் அது Title.
03:21 நாம் Body ல் text ஏதும் கொடுக்கவில்லையெனில், ஒன்றும் இருக்காது. Article Content type , Summary யுடன் தான் வரும்.
03:28 Summary ல் நாம் எதும் கொடுக்கவில்லையெனில், அதை உருவாக்க, Drupal தன்னிச்சையாக முதல் சில எழுத்துகளை எடுத்துகொள்ளும். இதற்க்கு பெயர் தான் Teaser mode.
03:38 இப்பொழுது நாம் சில வரிகளை எழுதுவோம்.
03:43 நீங்கள் விரும்பியவற்றை எழுதலாம்.
03:45 இது என்னுடைய text
03:50 HTML லில் அனுமதிக்கபட்ட elements அனைத்தும் text format ல் தான் இருக்கும்.
03:56 நாம் super user என்பதால் , Basic, Restricted மற்றும் Full HTML , ஆகிய அனைத்தையும் பார்க்க முடியும்.
04:05 user, editor அல்லது publisher mode ல் login செய்திருந்தால் , ஒரே ஒரு Text format மட்டுமே பயன்படுத்த முடியும்.
04:17 மேலும் தகவல்களுக்கு, About text formats link ஐ கிளிக் செய்யவும்.
04:22 தற்ப்போதைக்கு, நாம் Basic HTML ஐ தேர்வு செய்வோம்.
04:26 Basic HTML நம்மை source code ஐ பார்ப்பதற்க்கும் கீழே கொடுக்கப்படும் சில basic HTML elements ஐ பயன்படுத்துவோம் அனுமதிக்கும்.
04:33 ஒரு paragraph tag, strong italic,
04:36 unordered list, ordered list மற்றும் சில.
04:41 Full TML நம்மை, JavaScript மற்றும் iframes போன்ற எந்தவொரு HTML-ஐயும் அதனுடன் embed செய்ய அனுமதிக்கும்.
04:48 Restricted HTML லில், paragraph tag அல்லது line breaks போன்ற ஒரு சிலவற்றை மட்டுமே பயன் படுத்த முடியும்.
04:57 WYSIWYG editor என்பது CKEditor. அது பற்றி பின்னர் கற்போம்.
05:03 இங்கு நாம் காண்பது: bold, italics, linking, unordered மற்றும் ordered lists, block quote மற்றும் image.
05:11 பல்வேறு விதமான H tags ஐ பயன்படுத்துவதற்க்கு formatting drop downஐ க்ளிக் செய்து View Sourceஐ காண்க.
05:18 Text format ஐ மாற்றுவதனால் எனக்கு நிறைய button கள் கிடைக்கும். அவை பற்றி பின்னர் கற்போம்.
05:25 தற்போது Basic HTML லில் வைத்து Continue button ஐ கிளிக் செய்க
05:32 நமது article ஐ முடிப்போம். மீண்டும் "introduction" மற்றும் "drupal" tags ஐ பயன்படுத்துவோம்.
05:40 தற்போது Imageஐ காலியாக விடுவோம். அது எப்படி வேலை செய்யும் என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
05:47 இங்கே வலப்பக்கம், நாம் காட்சித்தன்மை மற்றும் வெளியீடு அமைப்புகள் கிடைக்கும்.
05:52 இந்த குறிப்பிட்ட article லில் version control ஐ செயல்படுத்த Create new revision check-boxஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.
05:59 menu link ல் ஒரு article ஐ சேர்க்க, Provide a menu link check-boxஐ கிளிக் செய்க. Main navigation ல் ஒரு menu itemஐ Drupal சேர்க்கும்.
06:11 அப்படி செய்தால், நமக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் கிடைக்கும். எனவே, இந்த checkmarkஐ நீக்க வேண்டும்.
06:17 ஒரு குறிப்பிட்ட node ல் comments ஐ ON அல்லது OFF செய்ய முடியும்.
06:22 இங்கே நாம் URL alias கொடுக்கலாம்
06:26 இதை காலியாக விட்டால், Drupal தானே இதை நமக்காக உருவாக்கும்.
06:30 AUTHORING INFORMATIONன் கீழ், node ஐ உருவாக்கியவர் மற்றும், உருவாக்கப்பட்ட நேரம் ஆகியவற்றை காணலாம்.
06:37 PROMOTION OPTIONSன் கீழ், நாம் பின்வருமாறு காட்சி அமைப்புகளை அமைக்கலாம். இந்த node முன் பக்கம் விளம்பரப்படுத்தப்பட வேண்டுமா, அது பட்டியலில் முதல் இடத்தில் STICKY யாக இருக்க வேண்டுமா
06:50 Content type ஐ உருவாக்கும்போது இது தானாகவே வரும். editor இவற்றை மாற்ற வேண்டியதில்லை.
06:56 ஆனால் நமது விருப்பத்திற்க்கு ஏற்ப மாற்றங்களை செய்ய முடியும்.
07:00 கடைசியாக node ஐ சேமிக்க Save and publish ஐ கிளிக் செய்க
07:04 உடனே நமது தளத்தில் node இயங்க ஆரம்பித்துவிடும்.
07:10 Homeஐ கிளிக் செய்யவும்.
07:12 இங்கு நம் Welcome to Drupalville மற்றும் Drupalville's Second Article இருக்கும்.
07:17 Teaser mode ல், வெளியீட்டு தேதி வரிசையில் அவை காட்டப்படும்.
07:23 Read more மற்றும் Add new comment linkகள் உள்ளன.
07:28 Drupal என tag இடப்பட்ட அனைத்து node களையும் காண, Drupal linkஐ கிளிக் செய்க.
07:35 மீண்டும் nodes வெளியீட்டு தேதி வரிசையில் காட்டப்படும்.
07:40 அது Article Content type.
07:43 நாம் Edit link ஐ கிளிக் செய்வோம்.
07:45 இங்கே நாம் விரும்பும் எதையும் நுழைக்க முடியும்.
07:48 Drupal இயல்பாகவே, நிறைய options ஐ கொடுக்கிறது.
07:52 Save and keep published ஐ கிளிக் செய்வோம்.
07:56 நாம் எதற்கு வேண்டுமானாலும் Content typesஐ பயன்படுத்தமுடியும்.
07:58 மற்றொரு item ஐ சேர்க்க, Shortcuts பின் Add content ஐ கிளிக் செய்க.
08:04 Basic page ஐ தேர்வு செய்யவும். Basic page ல் Title மற்றும் Body இருக்கும்.
08:10 tagகள் மற்றும் imageகள் இல்லை. இயல்பாகவே முதல் பக்கத்தில் காட்ட செய்யபடமாட்டாது.
08:17 Home page க்கு promote செய்யபடாததால் கருத்து தெரிவிப்பதற்கு எந்த அனுமதியும் இல்லை. இதற்கு ஒரு புதிய menuஐ உருவாக்குவது எளிது.
08:27 டைப் செய்க: "About Drupalville".
08:30 உங்கள் விருப்பப்படி சில உரையை டைப் செய்யலாம்.
08:33 இங்கே MENU SETTINGSன் கீழே Provide a menu linkல் checkmarkஐ இடவும்.
08:38 Title என்பது Menu Title என மாறுவதை பார்ப்பீர்கள்.
08:43 நாம் விரும்பினால் இதை சுருக்கவும் முடியும். Main navigation ல் Weight ஐ 0 என மாற்றுவோம்.
08:51 இது Menu பட்டியலில் எந்த இடத்தில் தோன்றும் என்பதை Weight தான் நிர்னயிக்கும். ஒரு குறைந்த எண் அல்லது எதிர்மறை எண்ணை கொடுத்தால், அது Menu பட்டியலில் முதலில் தோன்றும்.
09:03 மற்றவற்றை அப்படியே விடவும். Provide a menu linkல் checkmark இருப்பதை உறுதிசெய்து பின் save and publish கிளிக் செய்க.
09:11 About Drupalville linkஐ பெறுகிறோம் . இது நம்மை About Drupalville என்ற Basic page Content type ற்கு அழைத்து செல்லும்.
09:22 node ID 3 என காட்டுகிறது. நீங்கள் வேறு பல nodes ஐ சேர்த்திருந்தால் node ID வேறுபடும்.
09:32 கீழே இடதுபக்கம், node ID 3 என்பதை காணலாம். இருப்பினும், இது அடிக்கடி தேவைப்படாது.
09:41 இது தான் article மற்றும் menu link உடன் கூடிய Basic page Content type . இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:50 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Content typeகள், ஒரு articleஐ உருவாக்குதல் மற்றும் ஒரு basic pageஐ உருவாக்குதல்.
10:05 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
10:15 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
10:22 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:30 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
10:44 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்தது வைரவன் குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst