Drupal/C2/Content-Management-in-Admin-Interface/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம், Admin Interfaceல் Content Management குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் Drupal interface பற்றி கற்போம்.
00:13 மேலும் நாம் கற்கபோவது menu itemகளான Content, Structure மற்றும் Appearance.
00:23 இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser.
00:34 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:39 நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம்.
00:44 Drupal interface பற்றி விரிவாக காணும் முன், சில முக்கிய சொற்களை காண்போம்.
00:53 Drupal siteஐ setupசெய்தவரே, user number one அல்லது super user என்பதை நினைவுகொள்க. எனவே இந்த siteக்கு நாம்தான் super user.
01:02 Super user என்பவர் Drupalல் உள்ள மற்ற userகளை விட மேலானவர். அனைத்து permissionகளையும் கொண்ட மேலும் சில administratorகளை பின்னர் சேர்க்கலாம்.
01:13 ஆனால், அந்த permissionகளை திரும்பபெறவும் நிர்வகிக்கவும் Super userஆல் முடியும்
01:20 Super userன் permissionஐ யாராலும் ஏதும் செய்ய முடியாது.
01:24 Drupal siteன் அனைத்து அனுமதிகளையும் உடையவர் Super user.
01:30 அனைத்து Drupal siteலும் user number one என்பது Super user என்பதை நினைவுகொள்க.
01:36 இதுதான் administrative toolbar.
01:40 Manageஐ க்ளிக் செய்து ஒரு submenuஐ காண்கிறோம். இங்கே காண்பது Content, Structure, Appearance, போன்றவை. இவை பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம்.
01:55 Shortcutsஐ க்ளிக் செய்தால் ஒரு Shortcuts tool bar வரும். இது பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம்.
02:06 adminஐ க்ளிக் செய்யும்போது நம் profile அல்லது Log outக்கு linkகளைக் காணலாம்
02:13 இங்கு இது admin என காட்டப்படுகிறது. இந்த usernameஐ தான் நான் பயன்படுத்தினேன். உங்களுக்கு வேறுபெயர் தெரியலாம்.
02:23 இதுதான் administration toolbar. நம் Drupal administrationல் மிக முக்கிய பகுதி இது.
02:33 Shortcuts barல் shortcutஐ சேர்ப்பது மிக சுலபம்.
02:38 உதாரணமாக- நான் இருப்பது Manage, Content >> Add Contentல்.
02:45 என் website ல் ஒரு Articleஐ சேர்க்கவேண்டும். இங்கு ஒரு காலியான starஐ காணலாம்.
02:55 starஐ க்ளிக் செய்து அதை Shortcutsக்கு சேர்க்கலாம்
03:01 இப்போது Shortcutsல் க்ளிக் செய்தால் Create Article menu itemஐ காணலாம்
03:10 Articleகளை உருவாக்கி முடித்தபின் shortcutஐ சுலபமாக நீக்கலாம்.
03:15 Drupal siteல் கிட்டத்தட்ட அனைத்து administration screenலும் இதை செய்யலாம். Shortcuts நம் வேலையை சுலபமாக்குகிறது.
03:25 இப்போது Appearanceல் க்ளிக் செய்க. இங்கே tabகளை காணலாம். இவ்வகை tabகளை site முழுதும் காணலாம்.
03:36 இந்த tabகள் மிக முக்கியமானவை. இவை section tabs எனப்படும்
03:41 நாம் இருக்கும் screenன் sectionsஐ பொருத்து இவை வேறுபடும்.
03:47 சிலசமயம் இந்த sectionகள் இங்கு நாம் பார்ப்பது போன்ற sub-section buttonகளைக் கொண்டிக்கும்.
03:54 Global settings, Bartik, Classy மற்றும் Seven ஆகியவை Settings tab ன் sub-section buttonகள்.
04:02 கடைசியாக காண்பது node. ஒவ்வொரு Drupal Content itemம் ஒரு node எனப்படும்
04:08 இதுவரை நம் siteல் nodeகள் அல்லது content ஏதும் இல்லை
04:13 அவற்றை பின்வரும் டுடோரியல்களில் உருவாக்குவோம்.
04:17 இப்போதைக்கு இந்த Drupal interfaceல் நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை Administration toolbar, sub-menu, section tabகள் மற்றும் sub-section buttonகள்.
04:30 அடுத்து நம் toolbarல் Contentஐ காண்போம்.
04:35 Contentஐ க்ளிக் செய்யும்போது நாம் ஒரு dashboardக்கு செல்கிறோம். இந்த dashboard நம் siteன் அனைத்து contentஐயும் கொண்டுள்ளது.
04:45 இதை Published அல்லது Unpublished status மூலம் filter செய்யலாம். Content Type கொண்டும் filter செய்யலாம் அல்லது Title மற்றும் Language கொண்டும் filter செய்யலாம்.
04:57 நம்மிடம் content ஏதும் இல்லை என்பதால் இவற்றை இப்போது செய்ய முடியாது.
05:03 comments subtab ஐ க்ளிக் செய்து, இதுவரை comments ஏதும் இல்லை என காணலாம்.
05:10 Filesஐ க்ளிக் செய்து இதுவரை நாம் upload செய்த fileகளின் பட்டியலைக் காணலாம்.
05:18 image அல்லது மற்றவகை fileகளையும் இங்கு காணலாம். இவை பற்றி பின்னர் கற்போம்.
05:25 Add contentஐ க்ளிக் செய்து நம் Homepageக்கு ஒரு welcome articleஐ எழுதுவோம்.
05:32 Articleஐ க்ளிக் செய்து டைப் செய்க “Welcome to Drupalville.”
05:40 நம் siteன் பெயர் “Drupalville”. இதில் Drupal பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுப்போம்
05:49 bodyல் டைப் செய்க - “Welcome to our site! We are so glad you stopped by!”.
05:57 இப்போதைக்கு மற்ற fieldகளை விட்டுவிடுவோம். அவைபற்றி பின்வரும் டுடோரியல்களில் கற்போம்.
06:06 Tagsல், டைப் செய்க welcome, Drupal.
06:11 இந்த tagகள் பயன்படுத்தப்படும் articleகளுக்கு இவை linkகளை உருவாக்கும்.
06:18 இங்கே ஒரு imageஐயும் upload செய்யலாம்.
06:22 என் கணினியில் Drupal 8 logoஐ ஏற்கனவே download செய்துவைத்துள்ளேன்.
06:29 உங்கள் வசதிக்காக இந்த டுடோரியல் பக்கத்தில் code files linkல் Drupal 8 logo கொடுக்கப்பட்டுள்ளது.
06:39 அதை download செய்து பயன்படுத்தவும்.
06:41 Browseஐ க்ளிக் செய்து அந்த imageஐ தேர்ந்தெடுப்போம். நாம் upload செய்தவுடனே ஒரு Alternative text கொடுக்கசொல்லி Drupal கேட்கிறது.
06:54 இந்த சிவப்பு நட்சத்திரம் இதை கட்டாயம் நிரப்ப வேண்டும் என்பதை காட்டுகிறது.
07:00 Alternative text என்பது கண் தெரியாதவர்கள் கேட்பதற்கும் google search engineக்கும் பயன்படுகிறது. மேலும் image load ஆகாக சமயத்தில் இந்த text காட்டப்படும்
07:09 டைப் செய்க: "this is the Drupal 8 logo". க்ளிக் செய்க Save and publish.
07:17 நம் Drupal siteல் முதல் nodeஐ உருவாக்கியுள்ளோம்
07:23 Contentஐ க்ளிக் செய்தால் இந்த nodeஐ காணலாம். Title, Content Type, உருவாக்கியவர், nodeன் Status , கடைசியாக update செய்யப்பட்ட நேரம்.
07:37 Edit, Delete போன்ற மேலும் சில operations. இவை பற்றி பின்னர் காண்போம்.
07:47 இதுதான் administrative toolbarன் content
07:52 நம் Administrative toolbar ல் அடுத்தது Structure. அதை க்ளிக் செய்வோம்.
07:58 Structureல்தான் நாம் siteஐ கட்டமைப்போம். இதை site building எனவும் சொல்கிறோம்.
08:07 இங்கே பல உள்ளன -Block layout, Comment types, Contact forms, Content types, Display modes, Menus, Taxonomy, Views.
08:21 Structure மற்றும் Content menu itemஐ பயன்படுத்திதான் நம் site building ல் பலவற்றை நாம் செய்கிறோம் என்பதை இவை காட்டுகின்றன.
08:30 இப்போதைக்கு Block layoutஐ க்ளிக் செய்க
08:34 நம் siteல் Themeஐ பொருத்து blockகளை வெவ்வேறு இடங்களில் வைக்கலாம். அவை பற்றி பின்வரும் டுடோரியல்களில் கற்போம்.
08:45 Custom block libraryஐ க்ளிக் செய்து ஒரு welcome blockஐ சேர்ப்போம்
08:50 Add Custom blockஐ க்ளிக் செய்க. அதை Welcome to Drupalville என்போம்.
08:57 Bodyல் டைப் செய்க "Welcome to Drupalville. This is where you’ll learn all about Drupal!".
09:06 இது content இல்லை என்பதை குறித்துக்கொள்க. Blockகள் என்பவை sidebarகள் போன்றவை.
09:15 Saveஐ க்ளிக் செய்க.
09:18 நம் block தயார். இப்போது அதை வைக்க ஒரு இடத்தை தேர்வு செய்யவேண்டும்.
09:22 Block layout ஐ க்ளிக் செய்க. கீழே வந்து Sidebar firstல் Place blockஐ க்ளிக் செய்க.
09:33 நம் Drupal siteக்கான அனைத்து block களையும் கொண்ட ஒரு pop-up window தோன்றுகிறது.
09:41 நாம் உருவாக்கிய Custom block - "Welcome to Drupalville"க்கு சென்று Place blockல் க்ளிக் செய்க
09:49 இங்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவை பற்றி பின்வரும் டுடோரியல்களில் காண்போம். இப்போதைக்கு Save blockல் க்ளிக் செய்க.
09:59 Homepageக்கு செல்வோம். இங்கு "Welcome to Drupalville"ஐ காண்கிறோம்.
10:04 இது இருக்கும் இடத்தைப்பற்றி கவலை வேண்டாம். இப்போதைக்கு இது பரவாயில்லை.
10:13 இதுதான் Structure menu itemன் site building process.
10:19 Administration toolbarல் அடுத்தது Appearance.
10:26 இது நம் Drupal siteல் உள்ள அனைத்து Themeகளையும் காட்டும். இங்கு updatesஐ பார்க்கலாம் global settingsஐயும் செய்யலாம்.
10:38 இப்போதைக்கு Bartikன் Settingsஐ க்ளிக் செய்க
10:44 இங்குதான் நாம் தேர்ந்தெடுத்த themeஐ பொருத்து நம் websiteன் தோற்றத்தை மாற்ற முடியும்.
10:52 இங்கே Bartikக்கு colour schemeஐ update செய்யலாம். இங்கு இருக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கலாம் அல்லது நாமாக ஒரு நிறத்தைக் கொடுக்கலாம்.
11:03 இது அதன் preview. இங்கே சில settingகளையும் மாற்றலாம்
11:12 மேலே சென்று Global settingsஐ க்ளிக் செய்க. இங்கு நம் siteன் logoஐ மாற்றலாம், ஒரு custom Pathஐ கொடுக்கலாம் அல்லது ஒரு புதிய logoஐ upload செய்யலாம்.
11:26 எதையும் upload செய்யாமல் Saveஐ க்ளிக் செய்தால் என்ன நடக்கும்?
11:31 நம் siteக்கு செல்வோம். logo காணவில்லை.
11:36 அதை மீண்டும் கொண்டுவர, க்ளிக் செய்க Appearance, Settings பின் Global settings. Use the default logoஐ தேர்ந்தெடுத்து Save configurationல் க்ளிக் செய்க.
11:50 இப்போது நம் siteல் உள்ள அனைத்து pageலும் இந்த logo காட்டப்படும்.
11:58 நம் Drupal siteக்கான Themes' Appearance tabல் கட்டுப்படுத்தலாம். இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
12:08 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது Drupal interface.
12:15 மேலும் menu itemகளான- Content, Structure மற்றும் Appearance.
12:33 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
12:44 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:52 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
13:02 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
13:17 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst