C-and-C++/C2/Arithmetic-Operators/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 C மற்றும் C++ ல் Arithmetic operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு
00:08 இந்த tutorialலில், நாம் கற்கப்போவது
00:10 Arithmetic operatorகளான + கூட்டல்: உதாரணமாக a+b. - கழித்தல்: உதாரணமாக a-b. / வகுத்தல்: உதாரணமாக a/b. * பெருக்கல்: உதாரணமாக a*b. % Modulus: உதாரணமாக a%b.
00:28 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:Ubuntu 11.10
00:33 gcc மற்றும் g++ Compiler version 4.6.1 .
00:39 இப்போது ஒரு C program ன் உதவியுடன் இந்த arithmetic operationகளின் பயனைக் காட்டப்போகிறேன்.
00:45 அந்த programஐ ஏற்கனவே எழுதியுள்ளேன்.
00:47 எனவே editor ஐ திறந்து அந்த codeஐ விளக்குகிறேன்.
00:50 இதுதான் arithmetic operatorகளுக்கான C program.
00:57 முதல் இரு statementகளில் variables... declare மற்றும் define செய்யப்படுகிறது.
01:03 அடுத்த இரு statementகளில்,
01:05 a... மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது.
01:07 b... மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது.
01:11 இப்போது கூட்டல் operator வேலைசெய்வதைப் பார்க்கலாம்.
01:15 c... a மற்றும் bன் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்கிறது.
01:19 இந்த printf statement a மற்றும் bன் கூட்டுத்தொயைத் திரையில் காட்டுகிறது.
01:29 இங்கே %.2f... தசம புள்ளிக்கு பின் இரு இலக்க துல்லியத்தைத் தருகிறது.
01:37 அடுத்த statementல், c... a மற்றும் bன் பெருக்குத்தொகையை வைத்துக்கொள்கிறது.
01:43 இந்த printf statement a மற்றும் b ன் பெருக்குத்தொகையைத் திரையில் காட்டுகிறது.
01:49 இந்த இரு Operatorகளும் வேலைசெய்வதைக் காணலாம்.
01:53 பின்வரும் வரிகளை comment செய்வோம்
01:56 எழுதுக /* */
02:05 'Save ல் சொடுக்கவும்
02:08 .c extension உடன் file ஐ சேமிப்போம்
02:11 file ஐ arithmetic.c என சேமித்துள்ளேன்
02:15 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்
02:23 code ஐ compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக.
02:27 gcc space arithmetic.c space -o space arith
02:38 Enter ஐ அழுத்துக
02:41 codeஐ இயக்க எழுதுக, ./arith
02:48 Enter செய்க
02:50 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது.
02:54 இது காட்டுவது, Sum of 5 and 2 is 7.00 மற்றும்
02:59 Product of 5 and 2 is 10.00
03:05 இப்போது நீங்களே கழித்தல் operator ஐ முயற்சிசெய்யுங்கள்
03:09 கூட்டல் operator ஐ கழித்தல் operator ஆக மாற்றி முயற்சிக்கவும்.
03:14 விடை 3 என பெறவேண்டும்.
03:19 programக்கு திரும்பி வந்து கடைசி statementகளைக் காணவும்.
03:23 இப்போது வகுத்தலுக்கான code ஐ விளக்குகிறேன்.
03:26 multi line commentகளை இங்கிருந்தும் இங்கிருந்தும் நீக்குக.
03:35 இந்த statementகளில், c... a மற்றும் b ஆகியவற்றின் வகுத்தலின் integer மதிப்பை வைத்துக்கொள்கிறது.
03:41 integer வகுத்தலில் பின்ன பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் கவனிக்கவும்.
03:47 printf statement வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது.
03:58 இந்த statementல் உண்மை வகுத்தலை செயல்படுத்துகிறோம்.
04:02 இங்கே float போல ஒரு operand ஐ போட வேண்டும்
04:10 type-cast variable a ஐ வைத்துள்ளோம்.
04:14 இப்போது ஒரு operation க்கு a... float varible ஆக செயல்படும்.
04:22 printf statement உண்மை வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது.
04:31 return 0 என எழுதி பின் curly bracket ஐ மூடவும்
04:37 Save ல் சொடுக்கவும்
04:40 code ஐ compile செய்யவும் இயக்கவும் terminal க்கு வரவும்.
04:45 compile செய்ய எழுதுகgcc space arithmetic.c space -o space arith. Enter செய்க
04:59 code ஐ இயக்க எழுதுக ./arith Enter செய்க
05:05 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:
05:08 கூடுதல் மற்றும் பெருக்கலின் முன் வெளியீடுகள் உள்ளன.
05:17 integer Division of 5 by 2 is 2 உள்ளது.
05:22 integer வகுத்தலில் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் காணலாம்.
05:29 பின் real division of 5 by 2 is 2.50 உள்ளது.
05:35 உண்மை வகுத்தலின் வெளியீடு நாம் எதிர்பார்த்ததே.
05:38 இந்த வெளியீடுகளைப் பெற type-casting ஐ பயன்படுத்தினோம்.
05:45 இப்போது அதே program ஐ C++ ல் எழுத விரும்புகிறேன் எனில்.
05:50 C++க்கும் அதே code ஐ பயன்படுத்தலாம் எனில் வருவதைக் காண்போம்.
05:56 அதை அறிவோம். editorக்கு வருகிறேன்.
06:01 இது C++ code.
06:05 இந்த header... C file headerலிருந்து வேறுபடுகிறது.
06:13 namespace உம் இங்கு பயன்படுகிறது.
06:19 C++ ல் வெளியீட்டு statement... cout என்பதையும் கவனிக்க.
06:25 இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் மிக ஒத்தவை.
06:32 Saveல் சொடுக்கவும்.
06:33 .cpp extension உடன் file சேமிக்கப்படுவதை உறுதிசெய்க
06:37 என் file ஐ arithmetic.cpp என சேமித்துள்ளேன்
06:42 code ஐ இயக்கி பெறும் முடிவைக் காண்போம்.
06:49 terminal ஐ திறந்து எழுதுக g++ space arithmetic.cpp space -o space arith .' Enter செய்க
07:09 code ஐ இயக்க எழுதுக ./ arith Enter செய்க
07:17 வெளியீடு காட்டப்படுகிறது:
07:19 எனவே முடிவு C program ல் கிடைத்ததைப் போல காண்கிறோம்.
07:23 ஒரே வித்தியாசம் வெளியீடுகளின் துல்லியங்கள் மட்டுமே.
07:30 சுருங்க சொல்ல.
07:32 இந்த tutorialலில் arithmetic operatorகளை பயன்படுத்துவதைக் கற்றோம்.
07:38 பயிற்சியாக: modulus operatorன் பயனைக் காட்ட ஒரு program எழுதுக.
07:43 Modulus operator வகுத்தலின் மீதியை கண்டறியும் என்பதைக் கவனிக்கவும். உதாரணமாக c = a % b;
07:51 நாம் பெற வேண்டிய விடை 1.
07:55 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
08:01 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
08:05 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08:14 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
08:21 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:31 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:41 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst