Blender/C2/Types-of-Windows-Properties-Part-3/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:05 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:09 இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
00:16 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00:28 இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
00:35 Properties window ல் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel என்பவை யாவை ;
00:44 Properties window ன் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel ஆகியவற்றின் settings யாவை
00:57 உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
01:01 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.
01:10 Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது
01:16 Properties window ன் முதல் நான்கு panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
01:23 Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
01:33 Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
01:43 இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
01:47 Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும்
01:57 Properties window ன் மேல் வரிசைக்கு செல்க.
02:03 chain icon ஐ சொடுக்கவும். இதுதான் Object Constraints Panel.
02:12 Add constraint ஐ சொடுக்கவும். இந்த menu பல object constraintகளை பட்டியலிடுகிறது.
02:19 இங்கே முக்கியமான மூன்று வகை constraints உள்ளன – Transform, Tracking மற்றும் Relationship.
02:31 Copy location constraint... ஒரு object ன் இடத்தை copy செய்து மற்றொரு object க்கு அமைக்க பயன்படுகிறது
02:38 3D view க்கு செல்க. lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க
02:45 Object Constraints Panel க்கு திரும்பவும்
02:49 add constraint ஐ சொடுக்கவும்
02:52 Transform ன் கீழ் copy location ஐ தேர்க.
02:57 Add constraint menu bar க்கு கீழே புது panel தோன்றுகிறது.
03:01 இந்த panel... Copy location constraint க்கான settings ஐ கொண்டுள்ளது.
03:06 copy location panel ல்... இடப்பக்கம் orange cube உடன் வெள்ளை பட்டையை பார்க்கிறீர்களா?
03:12 இதுதான் Target bar. இங்கே நம் target object க்கு புது பெயரை சேர்க்கலாம்.
03:21 target bar ஐ சொடுக்குக.
03:24 பட்டியலில் இருந்து cube ஐ தேர்க.
03:29 copy location constraint... cube ன் ஆயத்தொலைவுகளை copy செய்து அதை lamp க்கு அமைக்கிறது.
03:37 இதன் விளைவாக, lamp... cube ன் இடத்திற்கு நகர்கிறது.
03:42 Copy location panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும்.
03:50 constraint நீக்கப்படுகிறது. lamp அதன் பழைய இடத்திற்கு திரும்புகிறது
03:58 இவ்வாறுதான் object constraint வேலைசெய்கிறது
04:02 பின்வரும் tutorial களில் object constraints ஐ பலமுறை பயன்படுத்துவோம்
04:07 இப்போதைக்கு, Properties window ல் அடுத்த panel க்கு செல்வோம். 3D view க்கு செல்க.
04:16 cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க
04:19 Properties window ன் மேல் வரிசையில் அடுத்த icon ஐ சொடுக்கவும்.
04:26 இது Modifiers panel.
04:29 Modifier... object ன் உண்மை properties ஐ மாற்றாமல் உருமாற்றுகிறது. அதை செய்துகாட்டுகிறேன்
04:36 Modifiers Panel க்கு செல்க.
04:40 ADD modifier ஐ சொடுக்குக. இங்கு மூன்று முக்கிய வகை modifiers உள்ளன - Generate, Deform மற்றும் Simulate
04:54 menu ன் கீழ் இடது மூலையில் Subdivision surface ஐ சொடுக்கவும்
05:02 cube ஒரு உருமாறிய பந்தாக மாறுகிறது. Add modifier menu bar க்கு கீழே புது panel தோன்றியுள்ளது
05:10 இந்த panel... Subdivision surface modifier க்கு settings ஐ காட்டுகிறது
05:16 View 1 ஐ சொடுக்குக. 3 என எழுதி enter ஐ அழுத்துக.
05:25 இப்போது cube.. பந்து அல்லது கோளம் போல உள்ளது
05:28 பின்வரும் tutorial களில் subdivision surface Modifiers குறித்து மேலும் கற்கலாம்
05:35 Subdivision surface panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும்.
05:43 modifier நீக்கப்படுகிறது. cube அதன் பழைய வடிவுக்கு திரும்புகிறது
05:49 எனவே modifier... cube ன் உண்மை properties ஐ மாற்றவில்லை
05:54 Modifiers குறித்து பின்வரும் tutorialகளில் மேலும் கற்கலாம்
05:59 Properties window ன் மேல் வரிசையில் தலைகீழ் முக்கோண iconஐ சொடுக்கவும்.
06:07 இது Object Data panel.
06:10 Vertex groups... தேர்ந்தெடுக்கப்பட் vertice களின் அமைப்பை குழுஅமைக்க பயன்படுகிறது.
06:15 Vertex groups ஐ பயன்படுத்துவது குறித்து advanced tutorialகளில் பார்ப்போம்
06:22 edit mode ல் object ஐ animate செய்ய Shape Keys பயன்படுகிறது.
06:28 shape keys box ன் வலது மூலையில் கூட்டல் குறியை பார்க்கிறீர்களா?
06:34 இது object க்கு புது shape key ஐ சேர்க்க பயன்படுகிறது
06:39 கூட்டல் குறியை சொடுக்கவும். முதல் key... Basis ஆகும்.
06:50 இந்த key... animate செய்யபோகும் object ன் உண்மை வடிவத்தை சேமிக்கிறது
06:55 எனவே, இந்த key ஐ மாற்றமுடியாது.
06:58 மற்றொரு key ஐ சேர்க்க மீண்டும் கூட்டல் குறியை சொடுக்கவும். Key 1 தான் மாற்றக்கூடிய முதல் key.
07:10 3D view க்கு செல்க.
07:13 Edit mode க்கு செல்ல keyboard ல் tab ஐ அழுத்துக.
07:18 cube ஐ அளவுமாற்ற S ஐ அழுத்துக. mouse ஐ இழுக்கவும். அளவை உறுதிபடுத்த சொடுக்கவும்
07:29 Object mode க்கு திரும் tab ஐ அழுத்துக.
07:33 cube அதன் பழைய அளவுக்கு திரும்புகிறது. edit mode ல் செய்த அளவிடுதலில் என்ன நடந்தது?
07:40 Object Data panel ல் Shape keys box க்கு திரும்பவும்
07:45 நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள Key 1 தான் active key.
07:50 shape key ன் மதிப்பு வலப்பக்கம் உள்ளது. இந்த மதிப்பை கீழே மாற்றலாம்
07:57 Value 0.000 ல் சொடுக்கவும்.
08:03 1 என எழுதி enter ஐ அழுத்துக. cube இப்போது அளவிடப்பட்டுள்ளது
08:12 மேலும் பல shape key களை சேர்த்து மாற்றவும் முடியும்
08:17 Blender tutorialகளில் animate செய்யும்போது அடிக்கடி shape key களை நான் பயன்படுத்துவதைக் காண்பீர்கள்
08:26 அடுத்த setting... UV texture. இது object க்கு சேர்க்கப்பட்ட texture ஐ மாற்ற உதவுகிறது
08:33 இதை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம்
08:38 இப்போது மேலும் சென்று புது file ஒன்றை உருவாக்குக;
08:42 Copy Location Constraint ஐ பயன்படுத்தி, lamp க்கு cube ன் இடத்தை copy செய்க;
08:49 Subdivision Surface modifier பயன்படுத்தி, cube ஐ கோளமாக மாற்றுக; shape keyகளை பயன்படுத்தி cube ஐ animate செய்க.
09:00 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:09 மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
09:30 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:40 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09:47 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana