Blender/C2/Types-of-Windows-Properties-Part-1/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:05 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:09 இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
00:16 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00:29 இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
00:35 Properties window ல் Render panel என்றால் என்ன;
00:39 Properties window ன் Render panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை
00:45 உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
00:50 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.
00:58 Properties window பல panelகளை கொண்டுள்ளது. இது திரையின் வலப்பக்கம் உள்ளது
01:08 Properties window ன் மேலே icon களின் ஒரு வரிசை உள்ளது
01:14 Properties section க்கு கீழே வரும் பல panel களை இந்த icon கள் குறிக்கின்றன.
01:21 Render, Scene, World, Object, போன்ற பல
01:30 Blender ல் வேலைசெய்யும்போது பயனாகும் பல setting களை இந்த panel கள் கொண்டுள்ளன
01:37 நன்கு தெரியவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
01:43 Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்
01:52 Properties window ன் option களை இன்னும் துல்லியமாக இப்போது காணலாம்
01:59 Blender window களை மறுஅளவாக்குதல் பற்றி மேலும் அறிய Blender ல் Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ காணவும்
02:12 Properties Window ல் முதல் panel... Render ஆகும்.
02:16 Blender ஐ எங்கு திறந்தாலும் முன்னிருப்பாக இது Blender Interface ல் காட்டுகிறது.
02:23 இந்த panel ன் settings... animation ன் இறுதி output ஐ உருவாக்க பயன்படுகிறது.
02:31 active camera view ன் single frame image ஐ render செய்ய Image பயன்படுகிறது.
02:39 image ஐ சொடுக்கவும். keyboard shortcut ஆக F12 ஐ அழுத்துக.
02:48 active camera view... ஒரு single frame image ஆக render செய்யப்படுகிறது
02:55 3D view க்கு திரும்ப keyboard ல் Esc ஐ அழுத்துக.
03:03 frameகளின் முழு range அல்லது ஓர் image sequence ஐ render செய்து ஒரு movie file ஐ உருவாக்க Animation பயன்படுகிறது
03:13 முன்னிருப்பாக frame ன் range timeline ல் 1 to 250 ஆகும்
03:22 Animation ஐ சொடுக்கவும். முழு frame range... frame 1 லிருந்து frame 250 வரை render செய்யப்படுகிறது
03:39 render செயலை நிறுத்த Esc ஐ அழுத்துக
03:43 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக.
03:48 Render panel ல் Display வுக்கு செல்க.
03:52 திரையில் render progress ஐ எவ்வாறு பார்ப்பது என தேர்ந்தெடுக்க Display உதவுகிறது
03:58 முன்னிருப்பாக, display... Image Editor mode உள்ளது. அதை செய்துகாட்டுகிறேன்
04:05 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
04:09 UV/Image Editor ஆக Render Display தோன்றுகிறது.
04:15 active camera view ஐ ஒவ்வொருமுறை render செய்யும் போதும் 3D view... UV/Image Editor க்கு மாறுகிறது.
04:22 UV/Image Editor பற்றி மேலும் அறிய Types of windows - UV/Image Editor tutorial ஐ காணவும்
04:31 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக.
04:36 Render panel ல் Display க்கு செல்க. image editor ஐ சொடுக்கவும்.
04:44 render display optionகளின் பட்டியலை drop-down menu காட்டுகிறது.
04:51 Full Screen ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும்.
04:55 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
05:01 இப்போது, Blender ன் முழுத்திரையும் UV/Image editor ஆல் மாற்றப்படுகிறது
05:09 முழுத்திரை render பாங்கை மூடி Blender workspace க்கு திரும்ப Esc ஐ அழுத்துக.
05:16 Render panel ல் Display க்கு செல்க. Full screen ஐ சொடுக்கவும். பட்டியலில் New window ஐ தேர்க
05:28 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
05:31 இப்போது, Blender Workspace ன் மீது புது window ஆக Render Display தோன்றுகிறது.
05:39 இது உங்கள் animation ல் previews ஐ render செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும்.
05:44 இதை எவ்வாறு செய்வதென பின்வரும் tutorialகளில் காண்போம்.
05:50 Render Display window ஐ மூடவும்.
05:55 Render panel ல் Display க்கு செல்க. New Window ஐ சொடுக்கவும்.
06:01 Image editor mode ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும். display... Image Editor mode ல் உள்ளது.
06:08 அடுத்த setting... Dimensions ஆகும். இங்கே தேவையான output க்கு ஏற்ப பல render preset களை customize செய்து கொள்ளலாம்.
06:20 Render Presets ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது.
06:27 இங்கே அனைத்து முக்கிய render preset களின் பட்டியல் உள்ளது. DVCPRO, HDTV, NTSC, PAL போன்ற பல
06:41 இப்போதைக்கு இதை விடுத்து Render Dimension settings ஐ தொடர்வோம்
06:49 Render Display மற்றும் active Camera view ன் அகலம் மற்றும் உயரம்... resolution எனப்படும்
06:56 முன்னிருப்பாக, Blender 2.59 ல், resolution... 1920 by 1080 pixels ஆகும்.
07:09 Render resolution ன் சதவீத அளவு 50% ஆகும்.
07:14 அதாவது உண்மையான resolution ன் 50% மட்டுமே render செய்யப்படும். அதை விளக்குகிறேன்
07:22 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. இதுதான் முன்னிருப்பு render resolution.
07:29 உண்மை resolution ல் இது பாதி அல்லது 50% மட்டுமே
07:35 render display windows ஐ மூடவும்.
07:40 Render Panel ல் Resolution ன் கீழே 50% ஐ சொடுக்கி பிடித்து வலப்பக்கம் இழுக்கவும்
07:50 சதவீதம் 100% ஆக மாறுகிறது. சதவீதத்தை மாற்ற மற்றொரு வழி-
08:00 100% ஐ சொடுக்கவும். இப்போது 100 என எழுதி Enter ஐ அழுத்துக
08:12 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
08:18 இங்கே 1920 by 1080 pixels ன் 100% resolution render உள்ளது
08:27 render display windows ஐ மூடவும். இப்போது, 720 by 576 pixels ஆக resolution ஐ மாற்ற விரும்புகிறேன்
08:38 1920 ஐ சொடுக்கவும். 720 என எழுதி enter ஐ அழுத்துக
08:49 மீண்டும் 1080 ஐ சொடுக்கவும். 576 என எழுதி enter ஐ அழுத்துக.
09:00 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
09:07 இங்கே 720 by 576 pixels ன் 100% resolution render உள்ளது
09:16 render display window ஐ மூடவும்.
09:21 Render Panel ல் Dimensions க்கு கீழே Frame range க்கு செல்க.
09:26 Frame Range... உங்கள் movie க்கான render செய்யக்கூடிய animation நீளத்தை தீர்மானிக்கிறது.
09:33 ஏற்கனவே சொன்னது போல, முன்னிருப்பு frame range 1 லிருந்து 250 ஆகும்.
09:39 Start 1 ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ அழுத்துக.
09:51 இதுதான் உங்கள் animation நீளத்தின் தொடக்க frame அல்லது முதல் frame ஆகும்
09:57 End 250 ஐ சொடுக்கவும். 100 என எழுதி enter ஐ அழுத்துக.
10:08 இதுதான் உங்கள் animation நீளத்தின் முடிவு frame அல்லது கடைசி frame ஆகும்
10:16 ஆகவே இப்போது உங்கள் animation க்கு புது frame வீச்சை வைத்துள்ளோம்
10:22 3D view க்கு கீழே Timeline க்கு செல்க.
10:26 Render panel ல் Frame range ஐ நாம் மாற்றியதனால் timeline display எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும்.
10:35 Timeline window பற்றி மேலும் அறிய, Types of Windows - Timeline tutorial ஐ பார்க்கவும்.
10:45 Render Panel ல் Dimensions ன் கீழே Aspect Ratio க்கு செல்க.
10:53 resolution ஐ மாற்றியபோது aspect ratio வும் அதற்கேற்றவாறு மாறியதை கவனிக்கவும்
11:01 Frame rate நம் movie ல் ஒரு வினாடிக்கு எத்தனை frames animate ஆகவேண்டும என தீர்மானிக்கிறது
11:09 முன்னிருப்பாக, இது 24 fps அல்லது frames per second.
11:16 24 fps ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது
11:25 animation movie ஐ உருவாக்கும்போது பயன்படுத்தப்படும் அனைத்து முக்கிய frame rateகளின் பட்டியல் இது.
11:31 உங்கள் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்
11:37 FPS 24 ஐ சொடுக்கவும். 15 என எழுதி enter ஐ அழுத்தக.
11:48 இப்போது நம் frame rate... 15 frames per second ஆக மாறியுள்ளது.
11:55 அடுத்தது Output. இடப்பக்கம் tmp என எழுதி வலப்பக்கம் ஒரு file browser icon உள்ள கிடைமட்ட பட்டையை காண்கிறீர்களா?
12:07 இங்கே நம் Render fileகளுக்கு output folder ஐ குறிப்பிட முடியும்.
12:13 file browser icon ஐ சொடுக்கவும்.
12:18 File Browser பற்றி மேலும் அறிய, Types of Windows - File Browser மற்றும் Info Panel tutorial ஐ காணவும்.
12:28 output folder ஐ தேர்க. நான் My Documents ஐ தேர்கிறேன்.
12:35 Create new directory ஐ சொடுக்குக. OUTPUT என எழுதி enter செய்க.
12:46 folder ஐ திறக்க Output ஐ சொடுக்கவும்.
12:51 Accept ஐ சொடுக்குக. இப்போது My Documents ல் Output Folder ல் நம் அனைத்து Render file களும் சேமிக்கப்படுகிறது.
13:03 Output Folder bar க்கு கீழே Image format menu உள்ளது.
13:08 இங்கே நம் Render images மற்றும் movie file களுக்கு Output format ஐ தேர்ந்தெடுக்கலாம்
13:13 PNG ஐ சொடுக்கவும். இங்கே Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து format களின் பட்டியல் உள்ளது.
13:20 நாம் image formats மற்றும் movie formatகளை வைத்துள்ளோம்.
13:25 நம் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்
13:30 PNG க்கு கீழ் Blender ல் பயன்படுத்தும் மூன்று color modes உள்ளன. BW என்பது grayscale mode.
13:38 முன்னிருப்பாக RGB தேர்வாகிறது. RGB என்பது Render fileகளை RGB data உடன் சேமிக்கும் color mode ஆகும்.
13:48 RGBA என்பது render file களை Alpha channel என்னும் கூடுதல் data உடன் சேமிக்கிறது.
13:54 Alpha channel rendering ஐ ஆதரிக்கும் குறிப்பிட்ட image format களுடன் மட்டுமே இது வேலைசெய்கிறது.
14:01 இதுதான் render panel.
14:05 எனவே இந்த tutorial லில் Properties window ல் render panel பற்றி பார்த்தோம்
14:11 மீதமுள்ள panelகள் அடுத்துவரும் tutorial களில் விளக்கப்படும்.
14:17 இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்கவும். Render Display ஐ புது window க்கு மாற்றவும்.
14:25 resolution ஐ 720 by 576 100% ஆக மாற்றவும். frame range ஐ 0 லிருந்து 100 ஆக மாற்றவும்.
14:38 frame rate ஐ 15 fps க்கு மாற்றவும். render file களுக்கு ஒரு Output folder ஐ உருவாக்கவும்.
14:47 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
14:57 மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
15:17 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
15:28 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
15:34 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana