Blender/C2/How-to-Change-Window-types-in-Blender/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:03 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:07 | இந்த tutorial.. Blender 2.59 ல் Window வகைகளை மாற்றுவது குறித்தது |
00:16 | இதற்கு script : Bhanu Prakash மற்றும் editing : Monisha Banerjee |
00:26 | இந்த tutorial ல் கற்கபோவது, Blender interface ல் எந்த window ஐயும் அளவுமாற்றுதல்; |
00:36 | வெவ்வேறு window களுக்கு இடையே மாறுதல் ; |
00:40 | window களை பிரித்தல்... மீண்டும் ஒன்றுசேர்த்தல்; |
00:46 | எந்த window ஐயும் முழு திரை பாங்கிற்கு பெரிதாக்குதல். |
00:55 | Blender interface ன் அடிப்படை கூறுகள் உங்களுக்கு தெரியும் என கொள்கிறேன் . |
01:01 | இல்லையெனில்.... |
01:05 | Blender Interface ன் அடிப்படை விளக்கம் குறித்த முன் tutorial ஐ காணவும். |
01:10 | Blender interface ல் உள்ள பலவகை window களை ஏற்கனவே பார்த்திருக்கிறோம் |
01:17 | இந்த windowகளை அளவு மாற்றமுடியும் |
01:21 | mouse cursor ஐ Outliner window ன் இடப்பக்க முனைக்கு நகர்த்தவும் |
01:28 | ஒரு இருதலை அம்புக்குறியை பார்க்கிறோம் |
01:32 | இப்போது mouse ஐ சொடுக்கி இழுக்கவும் |
01:37 | mouse நகர்விற்கு ஏற்ப Outliner window அளவுமாறுகிறது |
01:45 | இப்போது, mouse cursor ஐ Outliner window ன் கீழ் முனைக்கு நகர்த்தவும் |
01:51 | மீண்டும், இருதலை அம்புக்குறியைக் பார்க்கிறோம் |
01:55 | இப்போது mouse ஐ சொடுக்கி இழுக்கவும் |
01:59 | mouse நகர்விற்கு ஏற்ப Outliner window அளவுமாறுகிறது |
02:07 | இப்படிதான் Blender interface ல் எந்த window ஐயும் அளவுமாற்றமுடியும் |
02:14 | இப்போது Blender interface ல் வெவ்வேறு window களுக்கு இடையே எப்படி மாறுவது என பார்க்கலாம் |
02:22 | 3D view ன் இடப்பக்க மூலைக்கு செல்லவும் |
02:27 | இங்கே நடப்பு editor வகையைக் காட்டும் மேல் கீழ் அம்புடன் ஒரு button உள்ளது |
02:35 | button ஐ சொடுக்கவும் |
02:38 | பல window options களுடன் ஒரு menu திறக்கிறது |
02:42 | இதுதான் editor type menu. |
02:46 | Blender interface ல் ஒவ்வொரு window ன் இடப்பக்க மூலையிலும் இந்த menu காணப்படும் |
02:52 | வெவ்வேறு window களுக்கு இடையே மாறவும் இது பயன்படுகிறது |
02:59 | menu options க்கு mouse ஐ நகர்ததவும் |
03:04 | shortcut ஆக, keyboard ல் மேல் கீழ் அம்புக்குறிகளையும் பயன்படுத்தலாம் |
03:12 | UV/Image Editor ல் சொடுக்கவும் |
03:16 | 3D view... UV/Image editor ஆக மாறியிருக்கிறது |
03:25 | editor type menu ல் மீண்டும் சொடுக்கி 3D view ஐ தேர்க |
03:31 | இப்போது 3D view ல் உள்ளோம் |
03:36 | இவ்வாறு தான் editor type menu ஐ பயன்படுத்தி வெவ்வேறு window களுக்கிடையே மாற முடியும் |
03:47 | முன்னிருப்பு 3D view ஐ 4 பகுதிகளாக பிரிக்க முடியும் |
03:53 | 3D view ஐ பிரிக்க 2 வழிகள் உள்ளன |
03:57 | முதலில், editor type menu க்கு அடுத்த 3D view ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள View ஐ சொடுக்குக |
04:07 | மேலே ‘Toggle Quad view’ எனும் இரண்டாவது Option ஐ தேர்க |
04:13 | shortcut ஆக Ctrl, Alt & Q ஐ அழுத்துக |
04:20 | 3D view... 4 view களாக பிரிக்கப்படுகிறது |
04:26 | Top view, Front view, Right view மற்றும் Camera view. |
04:38 | Blender ல் modeling மற்றும் animation ன் போது இது பயனுள்ளதாக இருக்கும் |
04:47 | Quad view ஐ disable செய்ய Ctrl, Alt & Q ஐ அழுத்துக |
04:55 | space bar ஐ அழுத்தி search area ல் ‘Toggle’ என எழுதுக |
05:05 | பட்டியலில் இருந்து Toggle Quad view option ஐ தேர்க |
05:11 | Quad view ஐ enable செய்ய இதுதான் இரண்டாவது முறை |
05:19 | மீண்டும் Quad view ஐ disable செய்ய Ctrl, Alt & Q ஐ அழுத்துக |
05:27 | Blender ன் முன்னிருப்பு Camera view க்கு திரும்பிவிட்டோம் |
05:33 | Blender interface ல் முன்னிருப்பாக இருக்கும் 5 வெவ்வேறு window களை தவிர, |
05:39 | area ஐ பிரிப்பதன் மூலம் Blender interface க்கு புது window களையும் சேர்க்க முடியும் |
05:46 | மீண்டும், அதை செய்ய 2 வழிகள் உள்ளன |
05:50 | Outliner window ல் அதை செய்து காட்டுகிறேன் |
05:55 | Outliner window ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள மூன்று சாய்ந்த கோடுகளுக்கு mouse cursor ஐ கூட்டல் குறி தோன்றும் வரை நகர்த்துக |
06:07 | சொடுக்கியை பிடித்து Mouse ஐ வலப்பக்கம் இழுக்கவும் |
06:12 | Outliner window இப்போது இரு புது panel களாக பிரிக்கப்படுகிறது |
06:19 | ஒவ்வொரு புது panel லும் அதற்கான tool களை வைத்துள்ளன |
06:26 | இரு புது panel களை மீண்டும் ஒன்றுசேர்க்க அதே முறையைப் பயன்படுத்துவோம் |
06:33 | வலப்பக்க panel மீண்டும் இடப்பக்க panel உடன் சேர வேண்டும் |
06:39 | வலப்பக்க Outliner window ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள மூன்று சாய்ந்த கோடுகளுக்கு mouse cursor ஐ கூட்டல் குறி தோன்றும் வரை நகர்த்துக |
06:50 | சொடுக்கியை பிடித்து mouse ஐ இடப்பக்க panel வழியாக இழுக்கவும் |
06:56 | panel... shade செய்யப்பட்டு ஒரு தெளிவான அம்புக்குறி அதன் மீது தோன்றுகிறது |
07:02 | சொடுக்கியை விடுவிக்கவும் |
07:05 | இரண்டு window களும் ஒன்று சேர்க்கப்படுகிறது |
07:10 | இப்போது, window area ஐ பிரிக்க இரண்டாம் வழியைப் பார்க்கலாம் |
07:15 | முதலில் Outliner window ஐ கிடைமட்டமாக பிரிக்கலாம் |
07:21 | இருதலை அம்புகுறி தோன்றும் வரை Outliner window ன் இடப்பக்க முனைக்கு mouse cursor ஐ நகர்த்துக |
07:29 | அம்புக்குறியை Right click செய்க |
07:32 | ‘Split area’ ஐ சொடுக்குக |
07:37 | Outliner window ன் நடுப்பகுதிக்கு mouse ஐ இழுக்கவும் |
07:43 | இருதலை அம்புக்குறியுடன் கிடைமட்ட கோடு தோன்றுகிறது |
07:48 | நிலையை lock செய்ய சொடுக்கவும் |
07:54 | Outliner window இரு புது கிடைமட்ட panel களாக பிரிக்கப்படுகிறது |
08:01 | முன் போலவே, ஒவ்வொரு panel லும் அதன் tool களை கொண்டுள்ளன |
08:07 | இப்போது, அதே வழியில் புது panel களை மீண்டும் ஒன்றுசேர்க்கலாம் |
08:14 | இருதலை அம்புக்குறி தோன்றும் வரை இருபுது panel களுக்கு இடையேஉள்ள கிடைமட்ட முனைக்கு mouse cursor ஐ நகர்த்துக |
08:26 | Right click செய்து Join area ஐ தேர்க |
08:31 | மேலே அல்லது கீழே எதாவதொரு panel ன் மேல் mouse ஐ நகர்த்துக |
08:35 | கீழ் panel ஐ நான் தேர்கிறேன் |
08:40 | தேர்ந்தெடுக்கப்பட்ட panel... shade செய்யப்பட்டு அதன்மீது தெளிவான அம்புக்குறி தோன்றுகிறது |
08:47 | shade செய்யப்பட்ட panel ஐ சொடுக்குக |
08:50 | இரண்டு panelகளும் ஒன்றுசேர்க்கப்படுகிறது |
08:54 | இப்போது, Outliner window ஐ செங்குத்தாக பிரிக்க முயற்சிக்கவும் பின் மீண்டும் புது panel களை ஒன்று சேர்க்கவும் |
09:03 | இருதலை அம்புக்குறி தோன்றும் வரை Outliner window ன் கீழ் முனைக்கு mouse cursor ஐ நகர்த்துக |
09:12 | அம்புக்குறியை Right click செய்க |
09:16 | ‘Split area’ ல் சொடுக்குக |
09:21 | Outliner window ன் நடுப்பகுதிக்கு mouse ஐ இழுக்கவும் |
09:26 | இருதலை அம்புக்குறியுடன் ஒரு செங்குத்துகோடு தோன்றுகிறது |
09:33 | நிலையை lock செய்ய சொடுக்கவும் |
09:36 | Outliner window இப்போது இருபுது செங்குத்து panel களாக பிரிக்கப்படுகிறது |
09:45 | இருதலை அம்புக்குறி தோன்றும் வரை இருபுது panel களுக்கு இடையேஉள்ள செங்குத்து முனைக்கு mouse cursor ஐ நகர்த்துக |
09:55 | Right click செய்து Join area ஐ தேர்வுசெய்க |
10:01 | இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் ஏதேனும் ஒரு panel மீது mouse ஐ நகர்த்துக |
10:05 | வலப்பக்க panel ஐ நான் தேர்கிறேன் |
10:10 | தேர்ந்தெடுக்கப்பட்ட panel... shade செய்யப்பட்டு ஒரு அம்புக்குறி அதன்மீது தோன்றுகிறது |
10:16 | shade செய்யப்பட்ட panel மீது சொடுக்கவும் |
10:19 | இரு panel களும் ஒன்றுசேர்க்கப்படுகிறது |
10:24 | இப்போது properties window ல் வெவ்வேறு panel களின் இடத்தை மறுஒழுங்கு செய்வதை பார்க்கலாம் |
10:32 | உதாரணமாக, render panel ன் மேலே layers panel வேண்டும் எனலாம். |
10:40 | layers panel ன் மேல் வலப்பக்க மூலையில் உள்ள மூன்று சாய்ந்த கோடுகளுக்கு mouse cursor ஐ நகர்த்துக |
10:50 | சொடுக்கியை அழுத்தி பிடித்து mouse ஐ மேல்நோக்கி இழுக்கவும் |
11:00 | layers panel... render panel க்கு மேலே நகர்கிறது. |
11:07 | இப்போது, Blender ல் எவ்வாறு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட window ஐ பெரிதாக்குவது அல்லது முழு திரை பாங்கிற்கு மாற்றுவது என பார்க்கலாம் |
11:20 | ஏதேனும் window க்கு mouse cursor ஐ நகர்த்துக. |
11:23 | நான் 3D view ஐ தேர்கிறேன் |
11:28 | keyboard ல் Ctrl மேல் அம்பு button ஐ அழுத்துக |
11:33 | 3D view இப்போது முழு திரை பாங்கிற்கு பெரிதாக்கப்படுகிறது |
11:40 | முழு திரை பாங்கை மூட, keyboard ல் Ctrl கீழ் அம்பு button ஐ அழுத்துக |
11:48 | Blender ன் முன்னிருப்பு view க்கு திரும்பினோம் |
11:51 | எந்த window விற்கும் இதை செய்யலாம் |
11:59 | இவ்வாறுதான் Blender ல் ஏதேனும் window ஐ மறுஅளவாக்குவது, வெவ்வேறு window களுக்கிடையே மாறுவது, window களை பிரிப்பது பின் மீண்டும் ஒன்றுசேர்ப்பது |
12:11 | இப்போது, ஒரு புது file ஐ உருவாக்கி 3D view ல் இருந்து Quad view க்கு மாற முயற்சிக்கவும்; |
12:19 | Outliner window ஐ பிரித்து மீண்டும் புது panel களை ஒன்றுசேர்க்கவும்; |
12:27 | Properties window ல், Render Panel க்கு மேலே Output panel ஐ நகர்த்தவும்; |
12:35 | 3D view ஐ முழு திரை பாங்கிற்கு பெரிதாக்கவும். |
12:44 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:52 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
13:10 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
13:21 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
13:29 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |