BOSS-Linux/C2/Basics-of-System-Administration/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 லினக்ஸ் அடிப்படை "சிஸ்டம் அட்மிணிஸ்டரேஸன்" குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம் சில அடிப்படை கமாண்ட்களை காணலாம்.
00:13 adduser, su
00:16 usermod, userdel
00:18 id, du
00:20 df
00:22 நான் லினக்ஸ்’ஐ பயன்படுத்துகிறேன்.
00:27 இந்த டுடோரியலை பார்பதற்கு முன்பு, “லீனக்ஸில் பொதுவான அப்ளிகேஷன்" டுடோரியலை கற்றுக்கெள்ளுங்கள்.
00:35 அதை இந்த இணையதளத்தில் பெறலாம்.
00:39 இந்த டுடோரியலில் உள்ள சில கமாண்ட்களை பயன்படுத்த நமக்கு அட்மிண் அணுகல் தேவைப்படும்.
00:47 முதலில் ஒரு புதிய பயனர் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை கற்று கொள்வோம்.
00:53 "Adduser" கமாண்ட் ஒரு புதிய பயனரையும் அதற்கான அணுகலையும் உருவாக்க உதவுகிறது.
01:01 நாம் "sudo" கமாண்ட் உதவியுடன் பயனர் கணக்குகளை சேர்க்க முடியும்.
01:06 நாம் தற்ப்போது "sudo" கமாண்ட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.
01:11 "sudo" கமாண்ட், கணிணியின் முக்கிய பயனரை, அட்மிண் அணுகலைக்கொண்டு சில கமாண்ட்களை பயன்படுத்த உதவுகிறது.
01:21 "sudo" கமாண்ட், பல தேர்வுகளைக் கொண்டது. அவைகளை இந்த டுட்டோரியலில் நாம் காண்போம்.
01:27 நாம் இப்போது ஒரு புதுய பயனரை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
01:32 நான், எனது "Terminal” ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன்.
01:36 இப்போது கமாண்டை உள்ளிடுவோம், “sudo space adduser” பின் "Enter” கீயை அழுத்தவும்.
01:45 இப்போது நமது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டிய நேரம்.
01:48 இங்கே, அட்மிணுக்கான கடவுச்சொல்லை உள்ளீட்டு, பின் "Enter” கீயை அழுத்தவும்.
01:54 “Terminal”ல் கடவுச்சொல்லை உள்ளிடும் பொழுது, அதை பார்க இயலாது.
01:58 எனவே, நாம் கடவுச்சொல்லை கவனமாக உள்ளிட வேண்டும்.
02:03 பின்னர் "adduser: ஒன்று அல்லது இரண்டு பெயர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்" என்ற செய்தி தோன்றும.
02:14 இப்பொழுது "duck" என்ற பெயரில். ஒரு புதிய பயனர் கணக்கை உருவாக்குவோம்.
02:21 இப்போது கமாண்டை உள்ளீடுவோம்.
02:23 “sudo space adduser” பின் "Enter” கீயை அழுத்தவும்.
02:33 “duck” என்ற ஒரு புதிய பயனரை உருவாக்கிவிட்டோம்.
02:36 ஒரு புதிய பயனரை உருவாக்கும் நிகழ்முறையில், பயனருக்கான ஒரு தனி "home"டைரக்டரியும் உருவாக்கப்பட்டுவிட்டது.
02:46 இங்கே கவனித்து பார்த்தால், புதிய பயனருக்கான கடவுச்சொல்லை உள்ளீட வேண்டியிருக்கும்.
02:52 உங்கள் விருப்பத்திற்கேற்ப கடவுச்சொல்லை தரலாம். இங்கே நான் "duck” என்றே கொடுத்து "Enter” கீயை அழுத்துகிறேன்.
03:04 மீண்டும் ஒரு முறை புதிய கடவுச்சொல்லை உள்ளீடவும்.
03:07 பாதுகாப்பிற்க்காகவும், உறுதி செய்துகெள்ளவும், கடவுச்சொல் இரு முறை கேட்கப்படுகிறது.
03:13 இப்பொழுது, புதிய பயனருக்கான கடவுச்சொல் புதுப்பிக்கப்பட்டது.
03:18 பின் பயனரின் மற்ற விவரங்களுக்கு கேட்கப்படும்.
03:22 தற்போதைக்கு, பயனரின். முழுப்பெயர் "duck” என்று கூறி பிற தகவல்களை தராமல், "Enter” கீயை அழுத்துகிறேன்.
03:34 இதை உறுதி செய்ய "y” கீயை அழுத்துகிறேன்.
03:39 இது அனைத்து தகவல்களும் சரியானதா என்று உறுதி செய்வதற்காகும்.
03:43 இப்பொழுது, புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுவிட்டதா என்று பார்ப்போம்.
03:48 இப்போது கமாண்டை உள்ளீடுவோம்.
03:51 “ls space /(slash) home”
03:56 "Enter" கீயை அழுத்துகிறேன்.
03:58 “home folder”ல் உள்ள பயனர்களின் பட்டியலை பெற இங்கு "ls” கமாண்டை பயன்படுத்துகிறேன்.
04:05 இதோ நாம் புதியதாக உருவாக்கிய பயனர் "duck”.
04:10 ஸ்லைடுகளுக்கு செல்வோம்.
04:13 “su” என்பது “Switch User”ஐ குறிக்கிறது.
04:18 su stands for Switch User.
04:21 தற்போதைய பயனரில் இருந்து மற்றொரு பயனருக்கு மாறுவதற்கு இந்த கமாண்ட் உதவுகிறது.
04:26 Terminal க்கு செல்வோம்.
04:30 கமாண்டை உள்ளிடுவோம். “su space hyphen space duck” பிறகு "Enter” கீயை அழுத்துகிறேன்.
04:41 இப்போது நமது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டிய நேரம்.
04:44 “duck” பயனரின் கடவுச்சொல்லை உள்ளிடுகிறேன். கடவுச்சொல்லும் “duck” என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
04:51 இதோ, Terminal முந்தய பயனரில் இருந்து புதிய பயனரான duckன் வேலை தளத்திற்கு மாற்றப்பட்டது.
05:02 இந்த பயனரை விட்டு வெளியேற “logout” என்று டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும்.
05:10 இப்போது Terminal duckன் வேலை தளத்தில் இருந்து முந்தய பயனரான vinhai’ன் வேலை தளத்திற்கு மாற்றப்பட்டது.
05:18 அடுத்தபடியாக “usermod” ஐ பற்றி கற்ப்போம்.
05:24 “usermod” கமாண்ட். super பயனர் அல்லது root பயனர்க்கு, மற்ற பயனர்களின் கணக்கு அமைப்பை மாற்ற உதவுகிறது.
05:33 மேலும் பயனரின் கடவுச்சொல்லை மாற்ற உதவுகிறது.
05:37 மேலும் பயனரின் கணக்கு என்றுடன் முடிய வேண்டும் என்று தீர்மானிக்க உதவுகிறது.
05:42 இந்த கமாண்ட்களை செய்துபார்க்கலாம்.
05:44 Terminalக்கு செல்வோம்.
05:46 இங்கே ஒரு பயனரின் கணக்கு என்றுடன் முடிய வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.
05:52 இங்கே கமண்ட்டை டைப் செய்வோம்.
05:56 sudo space usermod space -(hyphen)e space 2012-(hyphen)12-(hyphen)27 space duck
06:21 பின் "Enter” கீயை அழுத்தவும்.
06:25 பயனரின் கணக்கின் கடைசி நாள் “-e”ன் உதவியுடன் மாற்றப்படுகிறது.
06:34 இதோ, duck பயனர் கணக்கின் கடைசி நாள் மாற்றப்பட்டது.
06:39 அடுத்தபடியாக “uid” மற்றும் “gid” கமாண்ட்களை பார்க்கலாம்.
06:45 id கமாண்ட் பயனர் id மற்றும் குழு id கள் பற்றிய தகவல்களை காண உதவுகிறது.
06:51 பயனரின் idஐ தெரிந்திகொள்ள, “id space -(hyphen)u”ஐ பயன்படுத்துகிறேம்.
07:00 குழு idஐ தெரிந்துகெள்ள, “id space -(hyphen)g”ஐ பயன்படுத்துகிறேம்.
07:08 இதை செய்துபார்க்கலாம்.
07:10 Terminalக்கு செல்லுங்கள். “id” பின் "Enter” கீயை அழுத்தவும்.
07:17 இதோ, நாம் பயன்படுத்தும் கணினியின் பயனர் id மற்றும் குழு id கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
07:25 பயனரின் idஐ மட்டும் தெரிந்துகொள்ள, “id space -(hyphen)u”ஐ பயன்படுத்துகிறோம்.
07:30 கமாண்டை டைப் செய்வோம். “id space -(hyphen)u”
07:36 பின் "Enter” கீயை அழுத்தவும்.
07:38 இங்கே பயனர்களின் id மட்டுமே தெரிகின்றன.
07:42 idக்கு பதிலாக அவர்களின் பெயர்கள் வேண்டுமா?
07:47 அதை தெரிந்துகெள்ள இதை டைப் செய்யவும்.
07:50 “id space -(hyphen)n space -(hyphen)u” பின் "Enter” கீயை அழுத்தவும்.
08:00 இப்பொழுது, பயனர்களின் idக்கு பதிலாக அவர்களின் பெயர்களை காணலாம்.
08:08 அடுத்தபடியாக group id கமாண்ட்களை கற்ப்போம்.
08:12 கமாண்டை டைப் செய்யலாம், “ id space -(hyphen)g”.
08:17 இங்கே, நாம் group idக்களை பார்க்களாம்.
08:20 அனைத்து பயனர்களின் க்ருப் idக்களை காண,
08:26 “id space -(hyphen) (capital)G” பின் "Enter” கீயை அழுத்தவும்.
08:32 இங்கே, G capital letterல் உள்ளதை கவனியுங்கள்.
08:38 இதன் விடையை நீங்களே பார்த்துக்கொள்ளவும்.
08:40 அடுத்தபடியாக ஒரு பயனர் கணக்கை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.
08:44 அதற்க்கு “userdel” கமாண்டை பயன்படுத்துகிறோம்.
08:48 இதன் மூலம் பயனரின் கணக்கு கணினியில் இருந்து முழுமையாக நீக்கப்படுகிறது.
08:54 இதை செய்துபார்க்கலாம்.
08:56 “sudo space userdel space -(hyphen)r space duck” என டைப் செய்யவும்.
09:09 இங்கே, -(hyphen)r தேர்வை பயன்படுத்தியுள்ளேன்.
09:12 இது பயனருக்கான home directoryஐயும் சேர்த்து நீக்கிவிடும்.
09:17 "Enter” கீயை அழுத்தி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
09:21 இப்பொழுது, பயனர் duck முழுமையாக நீக்கப்பட்டது.
09:25 இதை உறுதி செய்ய
09:28 “ls space /(slash)home” டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும்.
09:35 இங்கே, பார்த்தால், பயனர் duck நீக்கப்பட்டுள்ளதை காணலாம்.
09:40 ஸ்லைடுகளுக்கு செல்வோம்.
09:43 லினக்ஸ் அடிப்படை "சிஸ்டம் அட்மிணிஸ்டரேஸன்" கமான்டனளில் சில, df மற்றும் du கமான்ட்.
09:50 “df” கமாண்ட் மூலம் கணினி hard diskல் உள்ள வெற்றிடத்தின் அளவை தெரிந்துகொள்ளலாம்.
09:55 "du" கமாண்ட் ஒரு கோப்பு எடுத்துக்கெண்ட அளவை தெரியப்படுத்துகிறது.
10:00 இந்த இரண்டு கமாண்ட்களையும் நீங்களே முயற்சிக்கவும்.
10:06 Terminalக்கு செல்வோம். மேலும் df கமாண்டுடன் சில தேர்வுகளை பயன்படுத்தி பார்க்களாம்.
10:13 df space -(hyphen)h டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும்.
10:20 இது file systemதின் தற்ப்போதைய மற்றும் முழு அளவையும் தெரியப்படுத்துகிறது.
10:25 மேலும் இது திறக்கப்பட்டுள்ள discன் அளவை மனிதர்களால் படிக்கக்கூடிய வடிவில் காண்பிக்கின்றது.
10:34 அடுத்து du கமாண்டுடன் சில தேர்வுகளை பயன்படுத்தி பார்க்கலாம்.
10:37 இதை செய்வதற்கு முன், உங்கள் home folderல் சில text fileகளை உருவாக்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
10:44 இல்லை என்றால், text fileஐ உருவாக “General Purpose Utilities in Linux” tutorialஐ கானவும்.
10:51 நான் ஏற்கனவே, எனது home directoryல் சில text file களை உருவாக்கியுள்ளேன்.
10:58 home directoryக்கு செல்ல, terminalல் டைப் செய்வோம்.
11:03 “cd space /(slash) home” பின் "Enter” கீயை அழுத்தவும்.
11:07 பிறகு, du space -(hyphen)s space *. (astrix dot) txt டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும்.
11:21 இந்த கமாண்ட், ஒரு directoryல் உள்ள txt fileகளையும் அதன் அளைவயும் தெரியப்படுத்துகிறது.
11:30 இது உங்கள் பயிற்சிக்கான நேரம்.
11:35 “du space -(hyphen)ch space *.(astrix dot)txt” பின் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
11:46 ஸ்லைடுகளுக்கு செல்வோம்.
11:48 இப்போது கற்றவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
11:51 “adduser” கமாண்ட் முலம் புதிய பயனரை உருவாக்குதல்.
11:53 “su” வை பயன்படுத்தி ஒரு பயனரில் இருந்து மற்ற பயனருக்கு செல்லுதல்.
11:56 “usermod” கமாண்ட் முலம் பயனரின் அமைப்பை மாற்றுதல்.
12:00 “userdel” ஐ பயன்படுத்தி பயனரை நீக்குதல்.
12:03 id கமாண்ட் user id மற்றும் group id கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கிறது.
12:07 “df” கமாண்ட் file system ன் தற்போதைய மற்றும் மீதம் உள்ள அளவை தெரியப்படுகிறது.
12:11 "du" கமாண்ட் ஒரு கோப்பு எடுத்துக்கொண்ட அளவை தெரியப்படுகிறது.
12:15 இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம்.
12.20 இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ,
12:24 Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.
12:27 உங்கள் இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், வீடியோக்களை தரவிறக்கி செய்து பார்த்துக்கொள்ளவும்.
12:31 spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம். இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
12:41 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:50 மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது.
12:55 உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.

Contributors and Content Editors

Pravin1389, Priyacst