BASH/C3/More-on-Redirection/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 redirection பற்றி மேலும் பலவற்றை குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது standard error மற்றும் output இரண்டின் Redirection
00:13 redirected output ஐ append ஐ செய்தல்
00:15 இவற்றை விளக்க சில உதாரணங்கள்
00:19 இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:25 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
00:30 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04
00:35 GNU BASH பதிப்பு 4.2
00:39 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:46 முன் டுடோரியலில் standard output மற்றும் standard errorகள் பற்றி கற்றோம்.
00:52 stderr மற்றும் stdout இரண்டையும் ஒரே fileக்கு redirect செய்யலாம்.
00:58 இதை பல வழிகளில் செய்யலாம்.
01:01 redirection ன் இரு முக்கியமான வழிகளை இந்த டுடோரியலில் காண்போம்.
01:08 standard output மற்றும் error இரண்டையும் redirect செய்ய &>(ampersand) மற்றும் greater-than குறியைப் பயன்படுத்துவது முதல் வழி
01:18 அதற்கான syntax Command space ampersand greater than space fileபெயர்
01:25 redirect.sh என்ற file ஐ திறக்கிறேன்
01:30 இந்த file ல் சில code ஐ டைப் செய்துள்ளேன்.
01:32 இது shebang line.
01:36 ls... /usr மற்றும் /user directoryகளின் உள்ளடக்கத்தை காட்டுகிறது
01:44 /user என்ற directory இல்லை என்பதைக் காண்க.
01:48 எனவே command ls ஒரு error ஐ காட்டும்.
01:52 &(ampersand) மற்றும் greater than ... stdout மற்றும் stderrout_(underscore)file.txtக்கு redirect செய்யும்
02:03 இப்போது file ஐ சேமிப்போம்.
02:05 file redirect.sh ஐ இயக்குவோம்
02:07 CTRL+ALT+T keyகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறப்போம்
02:15 டைப் செய்க chmod space plus x space redirect dot sh
02:23 எண்டரை அழுத்துக
02:25 டைப் செய்க dot slash redirect dot sh
02:28 எண்டரை அழுத்துக
02:30 out_(underscore)file.(dot)txt ஐ திறந்து output ஐ காண்போம்
02:36 டைப் செய்க cat space out_(underscore)file.(dot)txt
02:42 error மற்றும் output இரண்டையும் காணலாம்
02:48 directory /user க்கான error இந்த file ல் பதிவாகியுள்ளது.
02:51 '/user' என ஒரு directory இல்லை என சொல்கிறது.
02:56 directory /usr ன் உள்ளடக்கம் காட்டப்படுகிறது.
03:00 '/usr' directory ன் உள்ளடக்கம் உங்கள் கணினிக்கேற்ப வேறுபடும் என்பதைக் காண்க.
03:06 இப்போது இந்த file ஐ நீக்குவோம். டெர்மினலில் டைப் செய்க rm space out_(underscore)file. (dot)txt
03:15 மற்றொரு வழி file பெயருக்கு பின் 2 greater than ampersand 1 ஐ பயன்படுத்துவது
03:24 அதற்கான syntax command space greater than fileபெயர் space 2 greater than ampersand 1
03:33 இதை slash dev slash null (/dev/null) file க்கும் redirect செய்யலாம்.
03:39 slash dev slash null (/dev/null) file பற்றி மேலும் அறிவோம்.
03:45 இது ஒரு சிறப்பு வகை file
03:48 இது நாம் எதையும் திணிக்ககூடிய ஒரு null file அல்லது இடம் ஆகும்.
03:52 இதில் output மற்றும் error செய்திகளையும் திணிக்கலாம்
03:57 இது bit bucket எனவும் அழைக்கப்படுகிறது
04:00 gedit ல் நம் code க்கு வருவோம்.
04:04 standard output மற்றும் error இரண்டையும் null file க்கு redirect செய்வோம்
04:11 இந்த code வரியை பிரதி எடுத்து இங்கே கீழே ஒட்டுகிறேன்.
04:16 எனக்கு output மற்றும் error செய்திகள் இரண்டும் புறக்கணிக்கப்பட வேண்டும்.
04:21 எனவே பிரதி எடுக்கப்பட்ட code ன் இப்பகுதியை மாற்றுகிறேன்.> (greater than) என்றால் truncate அல்லது write செய்வது.
04:30 slash dev slash null ஆனது null file ... 2>&1 (2 greater than ampersand 1)
04:37 எண் “2” .... standard error ஐ எண் “1” ஆல் குறிக்கப்படும் standard output க்கு redirect செய்யும்.
04:45 Save மீது க்ளிக் செய்து code ஐ சேமிப்போம்.
04:48 file redirect.sh ஐ இயக்குவோம்
04:52 டெர்மினலுக்கு வருவோம்
04:54 up-arrow key ஐ அழுத்தி முன் command dot slash redirect.sh க்கு சென்று எண்டரை அழுத்துக
05:03 output ஐ காண டைப் செய்க cat out_(underscore)file.(dot)txt
05:11 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
05:15 standard output அல்லது error ஐ பெற்று அதை file ல் append செய்யலாம்.
05:21 output அல்லது error... file ன் கடைசியில் append செய்யப்படும்.
05:26 file இல்லையெனில், இது ஒரு புது file ஐ உருவாக்கும்.
05:31 அதற்கான syntax command space greater than greater than space பின் fileபெயர்
05:41 இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம்.
05:45 file redirect.(dot)sh ஐ திறக்கிறேன்
05:49 இப்போது, இங்கே டைப் செய்க date space greater than greater than space out_(underscore)file.(dot)txt
06:00 'date' command ஆனது system date ஐ output ஆக காட்டும்.
06:06 டெர்மினலில் 'date' என டைப் செய்து இந்த command ஐ சோதிக்கலாம்
06:11 டெர்மினலுக்கு வருவோம். டைப் செய்க date system date அதாவது current date காட்டப்படுவதைக் காணலாம்.
06:23 date command ன் output... out_(underscore)file.(dot)txt file ல் append செய்யப்படும்.
06:31 ls command ன் standard output மற்றும் error ஐ சேமிக்க இந்த file ஐ பயன்படுத்துகிறோம்.
06:40 Save மீது க்ளிக் செய்க. டெர்மினலுக்கு வருவோம்
06:43 இப்போது uparrow key ஐ அழுத்தி முன் command dot slash redirect dot shக்கு வருவோம்
06:50 எண்டரை அழுத்துக
06:52 out_(underscore) file.(dot)txt ஐ திறந்து output ஐ சோதிப்போம்
06:59 டைப் செய்க cat space out_(underscore)file.(dot)txt
07:05 'date' command ன் output ஆனது file ன் கடைசியில் append ஆகியிருப்பதைக் காண்க.
07:12 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
07:15 சுருங்கசொல்ல.
07:17 இந்த டுடோரியலில் நாம் கற்றது
07:19 standard error மற்றும் output ன் redirection மற்றும் redirect செய்யப்பட்ட output ஐ append செய்தல்
07:27 பயிற்சியாக,
07:29 உள்ளடக்கத்துடன் X_(underscore)file.(dot)txt fileஐ உருவாக்கவும்.
07:34 out_(underscore)file.(dot)txt மற்றும் X_(underscore)file.(dot)txt ன் உள்ளடக்கங்களை ஒரு fileக்கு redirect செய்க.
07:44 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
07:47 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
07:51 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
07:56 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:06 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:13 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:17 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro

08:30 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst