BASH/C3/Here-document-and-Here-string/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 HERE document மற்றும் HERE stringகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:11 சிறப்பு-நோக்க redirection எனப்படும் Here documentகள் மற்றும் Here stringகள்
00:17 இவற்றை விளக்க சில உதாரணங்கள்
00:20 இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:26 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தைக் காணவும்
00:32 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:34 Ubuntu Linux 12.04
00:39 GNU BASH பதிப்பு 4.2
00:42 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:49 Here document பற்றி கற்போம்.
00:52 இது ஒரு சிறப்பு-நோக்க text அல்லது code ன் தொகுதியாகும்.
00:56 இது I/O redirect ன் ஒரு வடிவமாகும்.
01:00 ஒரு interactive program அல்லது command line க்கு command list ஐ கொடுக்கிறது.
01:06 இது ஒரு தனி file ஆக கருதப்படலாம்.
01:10 இது ஒரு shell scriptக்கு redirect செய்யப்பட்ட multiple line input ஆகவும் கருதப்படலாம்.
01:18 அதற்கான Syntax, command space less than less than space HERE.
01:24 அதன் பின் அடுத்த வரியில், text inputகளை கொடுக்கலாம்.
01:29 இதில் எத்தனை வரிகள் வேண்டுமானலும் இருக்கலாம்.
01:33 இங்கே, text1, text2, textN ஆகியவை text inputகள்.
01:40 text inputகளுக்கு பின், அடுத்த வரியில், மீண்டும் keyword HERE ஐ டைப் செய்வோம்.
01:46 இது HERE documentன் முடிவைக் குறிக்கிறது
01:50 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்.
01:53 here dot sh என்ற fileஐ திறக்கிறேன்
01:59 code ன் முதல் வரி shebang line.
02:04 இந்த வரிக்கு பின் code ன் ஒரு தொகுதியை சேர்க்கிறேன்.
02:09 wc என்பது word count
02:12 HERE document ல் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை wc hyphen w கணக்கிடுகிறது
02:20 மற்றொரு HERE வரும்வரை உள்ள code அல்லது text ன் தொகுதி ஒரு file ஆக கருதப்படுகிறது
02:28 HERE document ன் உள்ளடக்கம் command wc hyphen w க்கான ஒரு input ஆகும்
02:36 multi-line input ஐ read செய்யும் போது wc hyphen w command க்கான delimiter ஆக HERE செயல்படுகிறது.
02:47 இதே command ஐ டெர்மினலில் இயக்கினால், output ஆக '4' ஐ பெறுவோம்.
02:55 ஏனெனில் command 'wc hyphen w'க்கு நான்கு வார்த்தைகளை அனுப்பியுள்ளோம்.
03:03 இப்போது file ஐ சேமிக்க Save மீது க்ளிக் செய்க.
03:06 Ctrl, Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறப்போம்.
03:15 டைப் செய்க: chmod space plus x space here dot sh
03:22 எண்டரை அழுத்துக
03:24 டைப் செய்க dot slash here dot sh
03:27 எண்டரை அழுத்துக
03:30 output 4 என காணலாம்
03:33 அதாவது, Here document ல் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை 4.
03:38 ப்ரோகிராம்க்கு வருவோம்.
03:41 textன் ஆரம்பத்தில் மேலும் இரு வார்த்தைகளைச் சேர்ப்போம்.
03:47 Hello... and... welcome to Bash learning
03:52 Save மீது க்ளிக் செய்க
03:54 மீண்டும் ப்ரோகிராமை இயக்குவோம்.
03:57 டெர்மினலில் டைப் செய்க dot slash here dot sh
04:04 எண்டரை அழுத்துக
04:06 இப்போது output 6 ஏனெனில் நம் text ல் மேலும் இரு வார்த்தைகளைச் சேர்த்தோம்.
04:13 Here documentக்கு ஒரு argument ஐயும் அனுப்பலாம்
04:18 ஒரு உதாரணத்தின் மூலம் இதை கற்போம்.
04:22 hereoutput dot sh என்ற ஒரு file ஐ திறக்கிறேன்
04:28 command cat ஆனது fileகளை சேர்த்து standard output ஐ அச்சடிக்கும்.
04:35 HEREக்கு பதிலாக string thisஐ பயன்படுத்தியுள்ளதை கவனிக்கவும்
04:41 delimiter HERE ஐ எப்போதும் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை.
04:47 வேறொரு delimiter ஐயும் பயன்படுத்தலாம்.
04:51 இந்த வரி பூஜ்ஜியமாவது argument ஐ அச்சடிக்கும்.
04:55 பூஜ்ஜியமாவது argument, என்பது முன்னிருப்பாக fileபெயர்.
05:00 இந்த வரி ப்ரோக்ராம்க்கு அனுப்பப்பட்ட முதல் argument ஐ காட்டும்.
05:05 இந்த வரி ப்ரோக்ராம்க்கு அனுப்பப்பட்ட இரண்டாம் argument ஐ காட்டும்.
05:09 இங்கே அதே delimiter this ஐ கொண்டு document ஐ மூட வேண்டும்
05:18 file ஐ சேமிக்கவும். ப்ரோகிராமை இயக்குவோம்.
05:21 டெர்மினலில் டைப் செய்க: chmod space plus x space hereoutput dot sh
05:29 எண்டரை அழுத்துக
05:32 டைப் செய்க dot slash hereoutput dot sh space Sunday space Monday
05:40 காட்டப்படும் output:
05:43 0'th argument is: dot slash hereoutput dot sh அதாவது fileபெயர்.
05:49 1st argument is: Sunday
05:51 2nd argument is: Monday
05:55 இப்போது Here string பற்றி கற்போம்.
05:59 text அல்லது ஒரு variable ல் இருந்து input redirection க்கு Here string பயன்படுகிறது.
06:06 input அதேவரியில் ஒற்றை மேற்கோள்களில் குறிக்கப்படுகிறது.
06:12 அதற்கான syntax, command space மூன்று less than குறிகள் space ஒற்றை மேற்கோள்களில் string
06:22 இதை ஒரு உதாரணத்தில் புரிந்துகொள்வோம்.
06:25 அதே file here dot sh ஐ திறக்கிறேன்
06:30 இங்கே கடைசியில் டைப் செய்க: wc space hyphen w மூன்று less than குறிகள் space ஒற்றை மேற்கோள்களில் Welcome to Bash learning
06:44 இது ஒற்றை மேற்கோள்களில் உள்ள string ஐ command wc hyphen wக்கு redirect செய்யும்
06:52 மாற்றங்களை சேமிக்க Save மீது க்ளிக் செய்க.
06:55 டெர்மினலுக்கு வருவோம்
06:58 டைப் செய்க: dot slash here dot sh
07:03 காணும் output 6 மற்றும் 4
07:08 here document ன் வார்த்தை எண்ணிக்கை 6 மற்றும் here stringன் வார்த்தை எண்ணிக்கை 4.
07:15 இதேபோல, நீங்கள் உங்கள் Here stringகளை எழுதலாம்
07:20 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
07:23 சுருங்கசொல்ல.
07:25 இந்த டுடோரியலில் நாம் கற்றது
07:27 HERE document
07:29 HERE string
07:31 பயிற்சியாக, Here document மற்றும் Here stringஐ பயன்படுத்தி ஒரு string ஐ uppercase ல் மாற்றுக.
07:39 குறிப்பு: tr space a hyphen z space capital A hyphen capital Z.
07:47 characterகளை lowerல் இருந்து upper case ல் மாற்ற இதுதான் command.
07:54 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
07:57 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
08:01 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
08:06 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08:12 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:17 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:25 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:29 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:38 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
08:44 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst