BASH/C2/More-on-Arrays/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 BASH ல் Arrayகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:10 Array ல் இருந்து ஒரு element ஐ எடுத்தல்
00:13 Array ல் ஒரு element ஐ மாற்றுதல்
00:16 Array ல் ஒரு element ஐ சேர்த்தல் மற்றும்
00:19 Array ல் இருந்து ஒரு element ஐ நீக்குதல்.
00:22 இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும்
00:28 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்
00:34 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 மற்றும்
00:41 GNU Bash பதிப்பு 4.1.10.
00:45 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:50 “Array ல் இருந்து ஒரு element ஐ எவ்வாறு எடுப்பது ” என காண்போம்.
00:55 ஒரு Array ல் உள்ள elementகளை எந்த இடத்தில் இருந்தும் எடுக்க முடியும்.
01:00 இங்கே, இடம் என்பது index எண்.
01:04 index எண் எப்போதும் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும் என்பதை நினைவுகொள்க
01:09 இதற்கான syntax:
01:12 Arrayபெயர் square bracket களினுள் At குறி colon இடம் colon குறிப்பிட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட வேண்டிய elementகளின் எண்ணிக்கை.
01:25 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் புரிந்துகொள்வோம்.
01:29 Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal விண்டோவை திறக்கவும்.
01:37 டைப் செய்க: gedit space array2.sh space & (ampersand) குறி. Enterஐ அழுத்துக
01:47 இப்போது காட்டப்படும் code ஐ உங்கள் array2.sh file ல் டைப் செய்க
01:54 ப்ரோகிராமை விளக்குகிறேன்.
01:56 இது Shebang வரி
01:59 இந்த declare command Linux என்ற array ஐ elementகள்....
02:06 Debian, Redhat,
02:08 Ubuntu மற்றும் Fedora உடன் declare செய்கிறது
02:11 இந்த echo command array ன் அனைத்து element களையும் அச்சடிக்கும்.
02:16 அடுத்த echo command எடுக்கப்பட்ட elementகளை அச்சடிக்கும்.
02:21 இந்த command... $ Linux at குறி colon 1 colon 2.... index ஒன்று ல் உள்ள Redhat ல் ஆரம்பித்து இரு elementகளை அச்சடிக்கும்
02:34 Terminalக்கு வருவோம்
02:36 முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்வோம் chmod space plus x space array2.sh .Enter ஐ அழுத்துக
02:50 டைப் செய்க: dot slash array2.sh Enterஐ அழுத்துக
02:56 பெறும் வெளியீடு - Original elements in an array Linux: Debian Redhat Ubuntu Fedora.
03:06 The two elements starting from index one(Redhat): Redhat Ubuntu
03:12 ஸ்லைடுகளுக்கு வருவோம்
03:15 Array ல் ஒரு element ஐ எவ்வாறு மாற்றுவது என காண்போம் .
03:19 Array ல் உள்ள ஒரு element ஐ பின்வரும் syntax மூலம் மாற்ற முடியும்.
03:25 Arrayபெயர் square bracketகளினுள் n equals to ஒற்றை மேற்கோள்களில் புதிய வார்த்தை.
03:34 இங்கே n என்பது index எண் அல்லது element எண்.
03:38 நம் text editor க்கு வருவோம்.
03:41 Linux[2]='Mandriva' .
03:45 இந்த command மூன்றாம் element UbuntuMandriva என மாற்றும்
03:51 elementஐ மாற்றியபின் இந்த echo command array Linux ன் அனைத்து elementகளையும் அச்சடிக்கும்.
03:58 நம் Terminalக்கு வருவோம்.
04:01 மீண்டும் இயக்குவோம்.
04:04 இது அனைத்து elementகளையும் காட்டும் : Debian Redhat Mandriva Fedora .
04:12 இப்போது ஸ்லைடுகளுக்கு வருவோம்.
04:14 array க்கு ஒரு element ஐ எவ்வாறு சேர்ப்பது என காண்போம்
04:18 Arrayபெயர் equal to bracketஐ திறந்து இரட்டை மேற்கோள்களில் dollar குறி curly bracket ஐ திறந்து Arrayபெயர் square bracket களினுள் At குறி curly bracket ஐ மூடவும் space இரட்டை மேற்கோள்களில் புது_வார்த்தை_1 space இரட்டை மேற்கோள்களில் புது_வார்த்தை_2 bracket ஐ மூடவும்.
04:45 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் புரிந்துகொள்வோம்.
04:50 code file க்கு வருவோம்.
04:52 சுட்டிக்காட்டப்படும் command புது element Susearray Linux க்கு சேர்க்கும்.
04:59 Suse ஐ சேர்த்தபின் அனைத்து elementகளையும் echo செய்வோம்.
05:05 டெர்மினலுக்கு வருவோம்
05:07 prompt ஐ துடைக்கிறேன்.
05:09 ப்ரோகிராமை மீண்டும் இயக்குவோம்.
05:12 காட்டப்படும் வெளியீடு all elements after appending Suse : Debian Redhat Mandriva Fedora Suse.
05:22 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
05:24 array ல் இருந்து ஒரு element ஐ நீக்க கற்போம்
05:29 array ல் இருந்து ஒரு element ஐ நீக்க பின்வரும் syntax ஐ பயன்படுத்தலாம் -
05:35 Unset space Arrayபெயர் square bracketகளினுள் index எண்.
05:44 code file க்கு வருவோம்.
05:46 இங்கே unset command ஐ பயன்படுத்தி
05:50 array Linux ல் இருந்து மூன்றாம் element Mandriva ஐ நீக்குவோம்
05:56 Mandriva ஐ நீக்கிபின் அனைத்து elementகளையும் echo செய்வோம்.
06:02 டெர்மினலுக்கு வருவோம்
06:04 ப்ரோகிராமை இயக்குவோம்.
06:07 Mandriva ஐ நீக்கப்பின் உள்ள element களின் பட்டியல் இது
06:12 Debian Redhat Fedora Suse
06:16 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:19 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
06:21 சுருங்க சொல்ல.
06:23 இந்த டுடோரியலில் நாம் கற்றது
06:25 Array ல் இருந்து ஒரு element ஐ எடுப்பது
06:28 Array ல் ஒரு element ஐ மாற்றுவது
06:30 Array க்கு ஒரு element ஐ சேர்ப்பது மற்றும்
06:32 Array ல் இருந்து element ஐ நீக்குவது.
06:37 பயிற்சியாக, நீளம் 7 கொண்ட ஒரு array names2 ஐ declare செய்து பின்வரும் செயல்பாடுகளை செய்யவும்.
06:44 index இரண்டில் ஆரம்பித்து மூன்று elementகளை எடுக்கவும்
06:48 மூன்றாம் element ஐ Debian என மாற்றி அதை காட்டவும்
06:55 Array ன் முடிவில் ஏதேனும் ஒரு புது பெயரை சேர்க்கவும்.
06:58 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:01 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:04 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:09 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:15 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
07:19 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:27 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:31 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:38 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07:50 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst