BASH/C2/Logical-Operators/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:01 | Bash ல் Logical Operatorகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:10 | சில உதாரணங்களைப் பயன்படுத்தி Logical AND Logical OR Logical NOT ன் பயன்கள் |
00:19 | இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை |
00:22 | if-else statement, command line argumentகள் மற்றும் BASH ல் மேற்கோளிடுதல் |
00:30 | அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
00:36 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:38 | Ubuntu Linux 12.04 மற்றும் |
00:43 | GNU Bash பதிப்பு 4.1.10 |
00:47 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:53 | Logical operatorகளின் பயனை அறிவோம் |
00:57 | Logical operatorகள் முக்கியமாக ப்ரோகிராமின் ஓட்டத்தைக் கட்டப்படுத்த பயன்படுகிறது |
01:02 | இரு expressionகள் அல்லது conditionகளை இணைக்க Logical operatorகள் உதவுகின்றன. |
01:09 | இவை if, while, அல்லது மற்ற சில control statementகளின் பகுதியாக இருக்கலாம். |
01:15 | logical ANDன் syntax ஐ காண்போம் |
01:19 | square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space square bracket ஐ மூடி space ampersand ampersand space square bracket ஐ திறந்து space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும் |
01:38 | அல்லது இந்த syntax ஐ பயன்படுத்தவும் |
01:41 | square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space hyphen a space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும் |
01:53 | condition1 மற்றும் condition2 இரண்டும் உண்மையாகும் போது Logical AND true ஐ திருப்புகிறது |
02:00 | Logical OR ன் syntax ஐ காண்போம் |
02:04 | square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space square bracket ஐ மூடி space இரு செங்குத்து கோடுகள் space square bracket ஐ திறந்து space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும் |
02:22 | அல்லது இந்த syntax |
02:24 | square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space hyphen o space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும் |
02:36 | condition1 மற்றும் condition2 ல் ஏதேனும் ஒன்று உண்மையாகும் போது Logical OR true ஐ திறப்புகிறது. |
02:43 | ஒரு உதாரணத்தைப் பயன்படுத்தி Logical OR மற்றும் Logical AND ன் பயனைக் காண்போம். |
02:50 | File logical.shல் ஏற்கனவே code ஐ டைப் செய்துள்ளேன். |
02:55 | ctrl+alt மற்றும் t விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
03:04 | டைப் செய்க: gedit space logical.sh space & குறி Enterஐ அழுத்துக |
03:12 | இப்போது உங்கள் logical.sh file ல் காட்டப்படும் code ஐ டைப் செய்க. |
03:18 | code ஐ விளக்குகிறேன். |
03:21 | இது shebang வரி. |
03:25 | standard input ல் இருந்து ஒரு வரி data ஐ read command read செய்கிறது |
03:29 | - (hyphen) p promptஐ காட்டுகிறது |
03:33 | இயக்கத்தின் போது பயனரால் உள்ளிடப்படும் உரையை சேமிக்கும் ஒரு variable string ஆகும். |
03:39 | உள்ளிடப்பட்ட string காலியா என if statement சோதிக்கிறது |
03:45 | string ன் நீளம் பூஜ்ஜியமா என - (hyphen) z சோதிக்கிறது |
03:50 | மற்ற string comparisonகள் பற்றி அறிய டெர்மினலில் man space test என டைப் செய்க. |
03:57 | எதுவும் உள்ளிடப்படவில்லை எனில் echo statement ஒரு செய்தியை அச்சடிக்கும். |
04:02 | string காலியில்லை எனில், ப்ரோகிராம் முதல் elif statement க்கு நகரும் |
04:08 | உள்ளிடப்பட்ட string ல் raj மற்றும் jit வார்த்தைகள் உள்ளதா என இது சோதிக்கிறது. |
04:16 | ஆம் எனில், இது ஒரு செய்தியை echo செய்கிறது. |
04:20 | இங்கு logical AND பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
04:24 | எனவே, இரு conditionகளும் உண்மையாகும் போது மட்டும்தான் செய்தி காட்டப்படும். |
04:31 | இல்லையெனில், ப்ரோகிராம் இரண்டாம் elif statementக்கு நகரும் |
04:37 | இங்கே உள்ளிடப்பட்ட string ஆனது raj அல்லது jit ஐ கொண்டுள்ளதா என சோதிக்கிறது |
04:43 | ஆம் எனில், இது செய்தியைக் காட்டுகிறது. |
04:47 | இங்கு logical OR பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
04:52 | இரு conditionகளில் ஏதேனும் ஒன்று உண்மையாகும்போது மட்டுமே செய்தி காட்டப்படும். |
04:59 | கடைசியாக, முன்னிருப்பு else statement உள்ளது |
05:02 | மேற்சொன்ன அனைத்து statementகளும் பொய்யாகும் போது, இந்த statement இயக்கப்படும். |
05:08 | multilevel if-else loop ன் முடிவு fi. |
05:12 | ப்ரோகிராமை இயக்குவோம் |
05:15 | டெர்மினலுக்கு வருவோம் |
05:17 | முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க - chmod space plus x space logical dot sh எண்டரை அழுத்துக. |
05:30 | டைப் செய்க dot slash logical.sh எண்டரை அழுத்துக |
05:36 | prompt காட்டுவது Enter a word: |
05:38 | நான் உள்ளிடுவது jitinraj |
05:42 | வெளியீடு: jitinraj contains both the words raj and jit |
05:48 | அதாவது கட்டுப்பாடானது இரண்டாம் statementக்கு அனுப்பப்பட்டது. |
05:52 | இரு conditionகளும் உண்மையென்பதால், செய்தியைக் காட்டுகிறது. |
05:57 | இப்போது மீண்டும் script ஐ இயக்குவோம். |
06:00 | மேல் அம்பு விசையை அழுத்துக |
06:02 | ./logical.sh க்கு சென்று எண்டரை அழுத்துக |
06:07 | prompt காட்டுவது Enter a word: |
06:09 | இம்முறை நான் கொடுப்பது abhijit. |
06:13 | காட்டப்படும் வெளியீடு: abhijit contains word 'raj' or 'jit'. |
06:19 | வெவ்வேறு உள்ளீடுகளைக் கொடுத்து வெளியீடுகளைக் கவனிக்கவும். |
06:25 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
06:27 | logical NOT operator பற்றி காண்போம். |
06:31 | ஒரு expression ன் boolean மதிப்பை இது தலைகீழாக மாற்றுகிறது. |
06:35 | அதாவது ஒரு expression false எனில் இது true ஐ திருப்புகிறது |
06:40 | அதேபோல expression true எனில் false ஐ திருப்புகிறது |
06:44 | logical NOT operator க்கான syntax |
06:48 | ஆச்சரியக்குறி space expression |
06:52 | அல்லது square bracket ஐ திறந்து space ஆச்சரியக்குறி space expression space square bracketஐ மூடவும் |
07:00 | ஒரு உதாரணத்தைக் காண்போம். |
07:03 | file ல் ஏற்கனவே code ஐ டைப் செய்து வைத்துள்ளேன். |
07:05 | எனவே, டெர்னலுக்கு சென்று டைப் செய்கிறேன் gedit space logicalNOT dot sh space ampersand குறி எண்டரை அழுத்துகிறேன் |
07:18 | இப்போது காட்டப்படும் code ஐ உங்கள் logicalNOT dot sh file ல் டைப் செய்யவும். |
07:24 | இது shebang வரி, என நமக்கு தெரியும். |
07:28 | script க்கு அனுப்பபடும் முதல் command line argument $1 ஆகும். |
07:33 | argument ஆக அனுப்பப்பட்ட file ன் பெயரில் ஏற்கனவே file உள்ளதா என - (hyphen) f சோதிக்கிறது |
07:41 | எனவே, இது file இருந்தால் true ஐயும் இல்லையெனில் false ஐயும் திருப்பும். |
07:48 | இங்கே இந்த NOT operator, திருப்பப்படும் மதிப்பை தலைகீழாக்கும். |
07:52 | அதாவது, அந்த file பெயர் இருந்தால், conditon true ஆகும் |
07:58 | ஆனால் NOT operator இதன் மதிப்பை false என மாற்றும். |
08:02 | எனவே இது FILE does not exist என்ற செய்தியைக் காட்டும். |
08:07 | இங்கே else statement ல் இது FILE exists என காட்டும். |
08:13 | if loop ன் முடிவை fi காட்டுகிறது |
08:16 | டெர்மினலுக்கு வருவோம். |
08:18 | prompt ஐ துடைக்கிறேன். |
08:20 | test.txt என்ற பெயரில் ஒரு காலி file ஐ உருவாக்குகிறேன் |
08:25 | டைப் செய்க : touch space test dot txt எண்டரை அழுத்துக |
08:32 | அடுத்து, script ஐ executable ஆக மாற்ற டைப் செய்க: chmod space plus x space logicalNOT dot sh எண்டரை அழுத்துக |
08:45 | டைப் செய்க dot slash logicalNOT dot sh space test dot txt எண்டரை அழுத்துக |
08:55 | file உள்ளதா என நம் shell script சோதிக்கும். |
09:00 | நம் file test dot txt உள்ளது எனவே மதிப்பு true என வரும் |
09:07 | பின் logical NOT அந்த மதிப்பை தலைகீழாக்கி false ஐ திருப்பும் |
09:12 | மதிப்பீடு false என்பதால், else statement மதிப்பிடப்பட்டு. |
09:18 | காட்டப்படும் செய்தி -File 'test.txt' exists |
09:23 | argument test1.txt உடன் ப்ரோகிராமை இயக்கிப்பார்க்கவும் |
09:29 | மேற்சொன்னவாறு கட்டுப்பாட்டின் ஓட்டத்தைக் கவனிக்கவும். |
09:33 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
09:37 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, logical AND logical OR மற்றும் logical NOT ன் பயன்கள் |
09:45 | பயிற்சியாக, |
09:47 | டுடோரியலில் விளக்கப்பட்ட logical operatorகளை பயன்படுத்தி file உள்ளதா எனவும் executable ஆக உள்ளதா எனவும் சோதிக்கவும் |
09:56 | (குறிப்பு: man space test) |
09:59 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:02 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:05 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:09 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:15 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
10:19 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:26 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:30 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:37 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
10:42 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |