BASH/C2/Introduction-to-BASH-Shell-Scripting/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 BASH shell scripting குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:10 வெவ்வேறு வகை Shellகள்
00:13 ஒரு Bash Shell script ஐ எழுதுதல்
00:16 மற்றும் அதை இயக்குதல்.
00:18 இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு லினக்ஸ் இயங்குதளம் பற்றி தெரிந்திருக்கவேண்டும்
00:25 இல்லையெனில், அதற்கான Linux டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை காணவும்.
00:32 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது
00:35 உபுண்டு லினக்ஸ் 12.04
00:39 GNU Bash பதிப்பு 4.1.10.
00:43 பயிற்சிக்கு GNU bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:50 அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:53 ஒரு Bash Shell பற்றி காண்போம்.
00:56 Bash Shell என்பது command களை இயக்கும் ஒரு Command language interpreter ஆகும்.
01:02 இந்த commandகள் standard input device ஆல் read செய்யப்படுகின்றன.
01:07 input device ஆனது
01:09 உங்கள் keyboard
01:11 அல்லது ஒரு எளிய text file ஆக இருக்கலாம்.
01:14 ஒரு Bash Shell ஐ காட்டுகிறேன்.
01:16 Ctrl+Alt+T விசைகளை ஒன்றாக அழுத்தி terminal விண்டோவை திறக்கவும் .
01:24 இது Gnome terminal ஐ திறக்கும்.
01:27 எந்த வகை shell ஐ நாம் பயன்படுத்துகிறோம் என்பதை சோதிக்க டைப் செய்க echo space dollar sign SHELL (capital ல்)
01:38 Enter ஐ அழுத்துக.
01:40 அடுத்த வரியில் அச்சடிக்கப்பட்ட வெளியீடு slash bin slash bash ஐ காணலாம்
01:47 இது நாம் Bash Shell ஐ பயன்படுத்துகிறோம் என்பதை காட்டுகிறது.
01:51 இப்போது வெவ்வேறு வகை Shell கள் பற்றி காண்போம்
01:56 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். Bourne Shell
02:00 இது Stephen Bourne ஆல் உருவாக்கப்பட்ட உண்மையான UNIX shell ஆகும் .
02:06 இன்றைய நவீன shellகளால் அளிக்கப்படும் தொடர்புதிறனை விட இதில் குறைவாக உள்ளது
02:12 C Shell, Bourne Shell ல் குறைந்த அம்சங்களை இது அளிக்கிறது
02:17 K Shell, இது David Korn ஆல் உருவாக்கப்பட்டது
02:20 இது சில கூடுதல் அம்சங்களுடன் B Shell மற்றும் C Shell ன் அம்சங்களையும் கொண்டுள்ளது.
02:27 Bash Shell
02:30 GNU Project ஆல் Bash Shell உருவாக்கப்பட்டது
02:32 இது B Shell language ஐ சார்ந்தது.
02:35 இது C மற்றும் K Shellகளின் அம்சங்களைக் கொண்டுள்ளது
02:41 TC Shell, இது FreeBSD மற்றும் அதன் வழித்தோன்றல்களின் முன்னிருப்பு Shell ஆகும்.
02:46 Z shell
02:49 இது இடைமுக பயனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு Shell.
02:52 இது ksh,bash மற்றும் tcsh ன் பல பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது
02:58 இப்போது ஒரு Bash Shell script பற்றி காண்போம்.
03:02 Bash Shell script எளிய text file ல் Bash commandகளின் தொடரைக் கொண்டுள்ளது.
03:08 command ஐ டைப் செய்வதற்கு பதிலாக இந்த text file ஐ இயக்கும்படி Shell இடம் சொல்கிறது.
03:15 ஒரு எளிய Bash script ஐ எழுத கற்போம்
03:20 terminal ல் Hello World என அச்சடிக்கும் echo command ஐ சோதிப்போம்
03:25 terminal க்கு வருவோம்
03:29 இப்போது டைப் செய்வோம் echo space இரட்டை மேற்கோள்களில் Hello world
03:35 Enter ஐ அழுத்தவும்.
03:37 இது Hello Worldterminal ல் அச்சடிக்கும்
03:40 command எதிர்பார்த்தபடி வேலை செய்தது.
03:43 இப்போது, இந்த command ஐ ஒரு file ல் எவ்வாறு பயன்படுத்துவது?
03:47 இந்த command ஐ ஒரு file ல் டைப் செய்து அந்த file ஐ இயக்கவும்.
03:52 இதற்கு gedit text-editor ஐ பயன்படுத்துகிறேன்.
03:57 உங்களுக்கு விருப்பமான எந்த text-editor ஐயும் பயன்படுத்தலாம்.
04:00 Desktop ல் file ஐ உருவாக்க விரும்புகிறேன்.
04:03 எனவே டைப் செய்க cd space Desktop
04:07 Enter ஐ அழுத்துக
04:09 இப்போது டைப் செய்க gedit space hello underscore world dot sh space &'(ampersand)
04:20 Gedit ஒரு text editor. Hello underscore world dot sh என்பது file பெயர்
04:27 prompt ல் இருந்து விடுபட & (ampersand) ஐ பயன்படுத்துகிறோம். இப்போது Enter ஐ அழுத்துக
04:33 gedit ஐ பயன்படுத்தி hello_world.sh என்ற ஒரு புதிய file ஐ திறந்துள்ளோம்
04:40 இப்போது டைப் செய்க hash ஆச்சரிய குறி front slash bin front slash bash
04:47 இது ஒவ்வொரு bash script க்கான முதல் வரி.
04:51 இது shebang அல்லது bang வரி எனப்படுகிறது.
04:55 Enter ஐ அழுத்துக
04:57 இப்போது, ஒரு comment ஐ சேர்க்க டைப் செய்வோம்
05:00 hash space my first Bash script
05:06 hashக்கு பின் வரும் ஒவ்வொரு வரியும் comment ஆக கருதப்படும் என்பதை நினைவுகொள்க
05:11 commentகளை Bash interpreter தவிர்த்துவிடும்.
05:15 இப்போது நாம் ஏற்கனவே பயன்படுத்திய command ஐ சேர்க்கலாம். Enter ஐ அழுத்துக
05:20 டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் Hello world Enter ஐ அழுத்துக.
05:28 டைப் செய்க echo space dollar குறி SHELL (Capital ல்) Enter ஐ அழுத்துக
05:35 டைப் செய்க echo space backtick date backtick
05:41 tilde character உள்ள விசையில் backtick குறி உள்ளது.
05:47 இப்போது, file ஐ சேமிக்க Save மீது க்ளிக் செய்க.
05:50 இயக்குவோம் நம் terminalக்கு வருவோம்
05:55 முதலில் இந்த file ஐ executable ஆக மாற்ற வேண்டும்.
05:58 அதற்கு டைப் செய்க chmod space plus x space hello underscore world dot sh
06:09 Enter ஐ அழுத்துக.
06:12 இப்போது டைப் செய்க
06:14 dot slash hello underscore world dot sh
06:19 Enter ஐ அழுத்துக
06:22 terminal ல் Hello World காட்டப்படுவதைக் காணலாம்.
06:27 அடுத்த வரியில் shell வகை அதாவது slash bin slash bash காட்டப்படுகிறது
06:32 மற்றும் நாள், மாதம், நேரம், நேர மண்டலம் மற்றும் வருடம் காட்டப்படுகிறது.
06:38 வெளியீடு உங்களின் கணினிக்கு ஏற்ப மாறுபடலாம்.
06:43 நம் ஸ்லைடுகளுக்கு திரும்ப வருவோம்
06:46 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
06:48 வெவ்வேறு வகை Shellகள், Bash Shell
06:52 Bash Shell script, ஒரு எளிய Shell script ஐ எழுதி அந்த script ஐ இயக்குதல்.
06:57 பயிற்சியாக “Welcome to Bash learning” என்ற செய்தியையும் அடுத்த வரியில்
07:03 “” சில நட்சத்திரங்களையும் காட்ட ஒரு எளிய script ஐ எழுதுக.
07:06 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:10 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:13 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:17 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:22 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:26 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:34 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:39 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:45 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
07:56 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst