BASH/C2/Conditional-Loops/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 BASH ல் loops குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, சில உதாரணங்களுடன்
00:09 for loop மற்றும்
00:11 while loop
00:15 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:18 Ubuntu Linux 12.04
00:22 GNU BASH பதிப்பு 4.1.10
00:26 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:34 loops க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:37 statementகளின் ஒரு தொகுப்பை மீண்டும் மீண்டும் இயக்க Loopகள் பயன்படுகின்றன.
00:43 syntax ஐ காண்போம்.
00:45 for expression 1, 2, 3
00:49 statement 1, 2, 3
00:51 இது for loop ன் முடிவு.
00:55 'for loop க்கான மற்றொரு syntax:
00:58 for variable in sequence/range
01:03 statement 1, 2, 3
01:06 for loop ன் முடிவு.
01:09 முதல் syntax ஐ பயன்படுத்தி for loopக்கான ஒரு உதாரணத்தைக் காண்போம்.
01:14 இந்த ப்ரோகிராமில், முதல் n எண்களின் கூடுதலைக் கணக்கிடுவோம்.
01:20 நம் file பெயர் for.sh என்பதைக் கவனிக்கவும்
01:25 இது நம் shebang line.
01:28 பயனரால் கொடுக்கப்படும் மதிப்பை variable number சேமிக்கும்.
01:34 இங்கே அந்த மதிப்பு ஒரு integer.
01:37 இப்போது, variable sum க்கு பூஜ்ஜியத்தை initialize செய்கிறோம்.
01:42 இங்குதான் for loop ஐ ஆரம்பிக்கிறோம்
01:45 முதலில், i க்கு 1 ஐ initialize செய்கிறோம்.
01:48 பின் i ஆனது number ஐ விட குறைவானதா அல்லது அதற்கு சமமானதா என சோதிக்கிறோம்.
01:54 இப்போது இங்கே, sumsum plus i என கணக்கிடுகிறோம்.
02:00 பின் அதை அச்சடிக்கிறோம்.
02:03 அதன் பின், i ன் மதிப்பில் ஒன்றை கூட்டுகிறோம்.
02:08 பின் இந்த condition false ஆகும்வரை condition ஐ சோதிக்கிறோம்.
02:14 for loop ஐ விட்டு வெளியேறும் போது இந்த செய்தி அச்சடிக்கப்படும்.
02:19 ப்ரோகிராமை இயக்கி நடப்பதை கவனிப்போம்.
02:24 டெர்மினலில் டைப் செய்க - chmod +x for.sh
02:31 பின் டைப் செய்க: ./for.sh
02:36 உள்ளீட்டு எண்ணாக 5 ஐ கொடுக்கிறேன்.
02:40 i ன் ஒவ்வொரு மதிப்பிற்கும் கணக்கிடப்பட்ட sum காட்டப்படுகிறது.
02:46 அதன் பின், வெளியீட்டின் கடைசி வரி காட்டப்படுகிறது:
02:50 Sum of first n numbers is 15
02:54 இப்போது ப்ரோகிராமின் ஓட்டத்தைக் காண்போம்.
02:57 விண்டோக்களை மறுவளவாக்குகிறேன்.
03:00 முதலில் i ன் மதிப்பு 1 என கொண்டுள்ளோம்.
03:04 பின் 1 ஆனது 5 க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிக்கிறோம்
03:10 condition true என்பதால் 0 + 1 என sum ஐ கணக்கிடுகிறோம்
03:16 இப்போது 1 என sum உள்ளது
03:20 பின் sum ஐ அதாவது 1 ஐ அச்சடிக்கிறோம்
03:24 அடுத்து, i ல் 1 அதிகரிக்கப்பட்டு i ன் புது மதிப்பு 2 ஆகிறது
03:31 பின் 2 ஆனது 5 க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிக்கிறோம்
03:36 condition true எனவே sum 1 + 2 அதாவது 3 ஆகும்
03:44 i ல் பின் ஒன்று சேர்க்கப்பட்டு பின் i ன் புது மதிப்பு 3 ஆகிறது
03:51 sum 6 என பெறுகிறோம்
03:55 sum ல் i ன் அடுத்த மதிப்புடன் முந்தைய மதிப்பை script தொடர்ந்து சேர்க்கும்
04:02 i<=5 ஆனது false ஆகும் வரை இது தொடரும்
04:09 for loop முடியும் போது கடைசி செய்தி அச்சடிக்கப்படும்.
04:14 இரண்டாம் syntax ஐ பயன்படுத்தி for loop க்கு ஒரு உதாரணத்தைக் காண்போம்.
04:20 for-loop.sh என்ற file ல் code ஐ எழுதிவைத்துள்ளேன்
04:27 இந்த எளிய ப்ரோகிராம் ஒரு directory ல் fileகளை பட்டியலிடும்.
04:32 இது shebang line.
04:35 பின் for loop உள்ளது.
04:37 ls command... directory ன் உள்ளடக்கத்தை பட்டியலிடும்.
04:41 -1 (hyphen one) ஒரு வரியில் ஒரு file ஐ பட்டியலிடுகிறது.
04:46 இது உங்கள் home directory ல் உள்ள அனைத்து fileகளையும் பட்டியலிடும்
04:51 இது for loop ன் முடிவு
04:53 டெர்மினலில் script ஐ இயக்க டைப் செய்க -
04:58 chmod +x for-loop.sh
05:04 ./for-loop.sh
05:09 இது Home directory ல் உள்ள அனைத்து fileகளையும் காட்டும்.
05:14 இப்போது, while loop பற்றி கற்போம்
05:18 முதலில் syntax ஐ புரிந்துகொள்வோம்.
05:21 while condition statement 1, 2, 3 while loop ன் முடிவு.
05:27 இதன் பொருள் condition true ஆக இருக்கும் வரை while loop இயக்கப்படும்
05:34 while loopக்கான ஒரு உதாரணத்தைக் காண்போம்
05:37 இங்கே அதற்கு while.sh என பெயரிட்டுள்ளேன்
05:42 இந்த ப்ரோகிராமில், கொடுக்கப்பட்ட வீச்சுக்குள் இரட்டை எண்களின் கூடுதலைக் கணக்கிடுவோம்.
05:49 code ஐ காண்போம்.
05:52 இங்கே, பயனரிடமிருந்து ஒரு எண்ணைப் பெற்று அதை variable number ல் சேமிக்கிறோம்.
05:59 அடுத்து, variableகள் i மற்றும் sum ஐ declare செய்து அவற்றிற்கு பூஜ்ஜியத்தை initialize செய்கிறோம்
06:06 இங்கே while condition.
06:08 இங்கே பயனரால் கொடுக்கப்படும் number ன் மதிப்பானது i க்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கிறதா என சோதிக்கிறோம்.
06:17 பின் i ன் மதிப்பை sumன் மதிப்புடன் சேர்ப்பதன் மூலம் sum ஐ கணக்கிடுகிறோம்.
06:24 அடுத்து, i ன் மதிப்பில் 2 ஐ சேர்ப்போம்.
06:28 இரட்டை எண்களை மட்டும் சேர்க்கிறோம் என்பதை இது உறுதிப்படுத்தும்.
06:33 number ன் மதிப்பை விட i ன் மதிப்பு அதிகமாகும் வரை இந்த while loop மீண்டும் மீண்டும் இயக்கப்படுகிறது
06:40 while loop ஐ முடிக்கும் போது கொடுக்கப்பட்ட வீச்சுக்குள் உள்ள இரட்டை எண்களின் கூடுதலை அச்சடிக்கிறோம்.
06:47 ப்ரோகிராமை இயக்குவோம்.
06:50 டெர்மினலில் டைப் செய்க:
06:52 chmod +x while.sh
06:56 ./while.sh
07:00 என் உள்ளீடாக 15 ஐ கொடுக்கிறேன்.
07:04 வெளியீட்டின் கடைசி வரி:
07:06 Sum of even numbers within the given range is 56.
07:11 விண்டோவின் அளவை மாற்றி வெளியீட்டை விளக்குகிறேன்.
07:14 முதலில் i அதாவது 0, ஆனது number அதாவது 15 க்கு அதிகமாவோ அல்லது சமமாகவோ உள்ளதா என சோதிக்கிறோம்.
07:24 condition true, எனவே sum ஆனது 0+0 அதாவது 0
07:31 இப்போது i ல் 2 சேர்க்கப்பட்டு i ன் புது மதிப்பு 2 ஆகிறது
07:37 பின் 2 ஆனது 15 க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிக்கிறோம்.
07:43 condition மீணடும் true; எனவே சேர்கிறோம் 0+2
07:49 இப்போது sum கொண்டுள்ள மதிப்பு 2.
07:52 மீண்டும் i ன் மதிப்பில் 2 கூட்டப்படுகிறது.
07:56 எனவே இப்போது i ன் மதிப்பு 2+2 அதாவது 4 ஆக இருக்கும்
08:03 sum ன் அடுத்த மதிப்பு 4+2 அதாவது 6 ஆக இருக்கும்
08:09 இவ்வாறு, அது 15 ஐ தாண்டும் வரை script i ன் முந்தைய மதிப்புடன் 2 ஐ சேர்த்துக்கொண்டே இருக்கும் .
08:18 sum ல் நாம் பெறும் மொத்த மதிப்பு 56.
08:24 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
08:27 சுருங்கசொல்ல
08:28 இந்த டுடோரியலில் நாம் கற்றது for loop ன் இரு syntax மற்றும் while loop பற்றியும் கற்றோம்
08:37 பயிற்சியாக - முதல் "n" முதன்மை எண்களின் கூடுதலைக் கண்டுபிடுக்கவும்.
08:43 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
08:46 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:50 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:54 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:00 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
09:04 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:11 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:14 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:22 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
09:28 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst