Advance-C/C2/Union-and-Typedef/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 C ல் Typedef மற்றும் Union குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் கற்கபோவது: 'typedef' keyword 'union' keyword மற்றும் இவற்றை விளக்க சில உதாரணங்கள்.
00:17 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu இயங்குதளம் பதிப்பு 11.10 மற்றும் gcc Compiler பதிப்பு 4.6.1.
00:29 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு 'C' பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:36 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களை காண எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும்.
00:43 typedef keywordக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:49 Typedef keyword ஏற்கனவே உள்ள type அல்லது user-defined datatypeகளுக்கு ஒரு symbolic name கொடுக்க பயன்படுகிறது .
00:58 இது commandகளுக்கு aliasஐ define செய்யவதற்கான ஒரு வழி.
01:03 இது தெளிவான codeஐ கொடுக்க உதவுகிறது.
01:07 இது code ஐ சுலபமாக புரிந்துகொள்ளவும் மாற்றவும் உதவுகிறது.
01:12 அதற்கான Syntax: typedef existing_name alias_name. உதாரணம்: typedef unsigned int uint;
01:24 ஒரு உதாரண codeஐ காண்போம்.
01:28 நம் filename 'pallindrome.c' என்பதை கவனிக்கவும்.
01:34 இந்த ப்ரோகிராமில், கொடுக்கப்படும் எண் ஒரு palindromeஆ இல்லையா என காண்போம்.
01:41 typedef keywordஐ பயன்படுத்தி unsigned int datatype க்கு alias name ஐ 'uint' என கொடுத்துள்ளோம்.
01:52 இங்கே variableகளை declare செய்ய uint ஐ பயன்படுத்துகிறோம்
01:59 இது palindromeக்கான logic.
02:03 இப்போது இந்த ப்ரோகிராமை இயக்குவோம்.
02:06 Ctrl+Alt+T keyகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறப்போம்.
02:16 டைப் செய்க: gcc space pallindrome dot c space hyphen o space pallindrome. Enterஐ அழுத்துக.
02:29 டைப் செய்க: dot slash pallindrome
02:34 நாம் காண்பது: "Enter any three digit number".
02:38 121ஐ கொடுக்கிறேன்.
02:42 வெளியீடு: "Given number is a palindrome number".
02:47 இப்போது union datatype பற்றி கற்போம்
02:52 வெவ்வேறு datatypeகளை கொண்ட ஒரு தொகுப்பு Union ஆகும்.
02:57 Union ஒரு பொதுவான சேமிப்பு இடத்தை அதன் அனைத்து memberகளுக்கும் ஒதுக்குகிறது.
03:03 ஒரு நேரத்தில் ஒரு union memberஐ மட்டும்தான் அனுகமுடியும்.
03:08 Syntax1: union union_name curly bracketகளினுள் members; curly bracketகளுக்கு பின் union_variable ஒரு semicolon.
03:21 இது மற்றொரு syntaxம் உள்ளது. Syntax 2: union union_name curly bracketகளினுள் members; curly bracketகளுக்கு பின் semicolon union union_name union_variable;
03:39 ஒரு உதாரணத்தைக் காண்போம்.
03:41 என்னிடம் ஒரு code file உள்ளது; அதை காண்போம்.
03:47 நம் filename "union dot c" என்பதைக் காண்க.
03:52 student என்ற unionஐ declare செய்துள்ளோம்
03:56 இங்கே மூன்று variableகள் உள்ளன- english, maths மற்றும் science.
04:02 main() functionல், stud என union variable ஐ declare செய்துள்ளோம்
04:09 இங்கு ஒரு union variable ஐ பயன்படுத்தி union memberகளை அனுகலாம்: stud dot english stud dot maths stud dot science
04:21 பின் மொத்த மதிப்பெண்களை கூட்டி அதை காட்டுகிறோம்.
04:26 இதை இயக்குவோம். terminalல் டைப் செய்க: gcc space union dot c space hyphen o space union பின்: dot slash union
04:44 காட்டப்படும் வெளியீடு: "Total is 228".
04:50 structure மற்றும் unionக்கு இடையேயான வித்தியாசத்தைக் காண்போம்.
04:55 Union ஒரு பொதுவான சேமிப்பு இடத்தை அதன் அனைத்து memberகளுக்கும் ஒதுக்குகிறது.
05:01 Structure தனித்தனி சேமிப்பு இடத்தை அதன் அனைத்து memberகளுக்கும் ஒதுக்குகிறது.
05:07 Union குறைந்த memory space ஆக்கிரமிக்கிறது.
05:11 Structure அதிக memory space ஐ ஆக்கிரமிக்கிறது.
05:14 unionக்கான உதாரணம் union student{int marks;char name[6];double average;};
05:27 union variableக்கான Memory ஒதுக்கீடு 8 bytes. இது double datatype என்பதால் அதிக memory spaceஐ ஆக்கிரமிக்கிறது.
05:39 structureக்கான உதாரணம் struct student{int mark;char name[6];double average;};
05:48 structure variableக்கான Memory ஒதுக்கீடு: 2bytes+6bytes+8bytes =16bytes.
06:00 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:04 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது.
06:06 typedef union union மற்றும் structureக்கு இடையேயான வித்தியாசம்
06:14 பயிற்சியாக,
06:17 name, address, salary போல ஊழியரின் பதிவுகளைக் காட்டும் ஒரு ப்ரோக்ராம் எழுதவும்.
06:25 employee என்ற unionஐ define செய்யவும்.
06:29 typedef மூலம் emp என ஒரு alias nameஐ கொடுக்கவும்
06:35 இந்த இணைப்பில் உள்ள video ஐ காணவும்
06:39 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
06:42 உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
06:47 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:53 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org
07:04 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்
07:08 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:16 மேலும் விவரங்களுக்கு : http://spoken-tutorial.org\NMEICT-Intro.
07:22 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst