Advance-C/C2/Command-line-arguments-in-C/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Command Line Argumentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் ஒரு உதாரணத்தை கொண்டு argumentகளுடன் main() function பற்றி கற்போம்.
00:15 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu இயங்குதளம் பதிப்பு 11.10 மற்றும் gcc Compiler பதிப்பு 4.6.1.
00:27 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு 'C' பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:33 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களை காண எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும்.
00:39 நம் ப்ரோகிராமுடன் துவங்குவோம். என்னிடம் உள்ள ஒரு code fileஐ திறக்கிறேன்.
00:45 File பெயர் 'main hyphen with hyphen args.c'.
00:50 இப்போது ப்ரோகிராமை விளக்குகிறேன்.
00:53 இவை header fileகள். core input மற்றும் output functionகளை stdio.h define செய்கிறது.
01:01 stdlib.h header file ஆனது - Numeric conversion function, Pseudo-random numbers, Generation function, Memory allocation மற்றும் Process control functionகளை define செய்கிறது.
01:16 இது நம் main() function. இதனுள், இரு argumentகள்- int argc, char asterisk asterisk argv (**argv)ஐ pass செய்துள்ளோம்.
01:28 “argc”... ப்ரோகிராம்க்கு pass செய்யப்படும் command line argumentகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.
01:34 அது ப்ரோகிராமின் பெயரையும் சேர்த்துதான்.
01:38 "argv"... index 0ல் இருந்து ஆரம்பிக்கும் actual argumentகளை கொண்டுள்ளது.
01:44 Index 0 என்பது ப்ரோகிராமின் பெயர்.
01:48 Index 1... ப்ரோகிராம்க்கு pass செய்யப்படும் முதல் argument ஆக இருக்கும்.
01:53 Index 2... ப்ரோகிராம்க்கு pass செய்யப்படும் இரண்டாம் argument ஆக இருக்கும். இதேபோல மற்றவை தொடரும்
01:59 இந்த statement... ப்ரோகிராம்க்கு pass செய்யப்பட்ட argumentகளின் மொத்த எண்ணிக்கையை காட்டும்.
02:05 இது ப்ரோகிராம்க்கு pass செய்யப்பட்ட முதல் argumentஐ காட்டும்.
02:09 1... index 1ல் உள்ள argumentஐ குறிக்கிறது.
02:13 'while' condition... argumentகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்.
02:18 இந்த statement... ப்ரோகிராம்க்கு pass செய்யப்பட்ட அனைத்து argumentகளையும் அச்சடிக்கும்.
02:23 கடைசியில் return 0 statement உள்ளது.
02:27 கீபோர்டில் Ctrl+Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறப்போம்.
02:35 டைப் செய்க: gcc space main hyphen with hyphen args.c space hyphen o space args. Enterஐ அழுத்துக.
02:49 டைப் செய்க: dot slash args. Enterஐ அழுத்துக.
02:54 நாம் காணும் வெளியீடு: "Total number of arguments are 1" "The first argument is null" "arguments are ./args"
03:06 இயக்கத்தின் போது Command line argument கள் கொடுக்கப்படுகின்றன.
03:11 zeroth argument ஆனது அந்த executable filename என்பதால் Total number of arguments are 1.
03:19 ப்ரோக்ராம்க்கு argument ஏதும் pass செய்யவில்லை என்பதால் The first argument is null .
03:26 ஒரே ஒரு Argument அதாவது dot slash args.
03:31 இப்போது மீண்டும் இயக்குவோம்.
03:34 up-arrow keyஐ அழுத்தி space டைப் செய்க : Sunday space Monday space Tuesday. Enterஐ அழுத்துக.
03:47 இப்போது வெளியீட்டைக் காணலாம்: Total number of arguments are 4 The first argument is Sunday Arguments are ./args Sunday Monday மற்றும் Tuesday .
04:04 வெளியீட்டை விளக்குகிறேன்.
04:06 argumentகளின் மொத்த எண்ணிக்கை 4 அவை- ./args, Sunday, Monday மற்றும் Tuesday.
04:14 முதல் argument "Sunday".
04:17 zeroth argument எப்போதும் executable file-nameஐ கொடுக்கிறது.
04:22 "Sunday" முதல் argumentக்கு assign செய்யப்படுகிறது.
04:25 "Monday" இரண்டாம் argumentக்கு assign செய்யப்படுகிறது.
04:28 "Tuesday" மூன்றாம் argumentக்கு assign செய்யப்படுகிறது.
04:31 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்கசொல் இந்த டுடோரியலில் நாம் கற்றது.
04:37 Command line argumentகள் argc argv.
04:45 பயிற்சியாக, வெவ்வேறு argumentகளுடன் ப்ரோகிராமை இயக்கவும்.
04:51 இந்த இணைப்பில் உள்ள video ஐ காணவும்
04:54 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
04:57 உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
05:02 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
05:08 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org
05:18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்
05:22 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
05:30 மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro.
05:36 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst