Spoken-Tutorial-Technology/C2/Guidelines-for-recording-and-narration/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:59, 3 December 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00.00 Spoken Tutorial ஐ பதிவு செய்வதற்கும் பேசுவதற்க்குமான வழிமுறைகள் குறித்த tutorialக்கு நல்வரவு.
00.07 முன்னதாக http://www.spoken-tutorial.org தளத்தில் கிடைக்கும் Spoken Tutorial இன் அறிமுகத்தைக் கேட்கவும்.
00.17 tutorial உருவாக்கம் script எழுதுவதன் மூலம் ஆரம்பிக்கிறது
00.21 பதிவு செய்யும்முன் அந்த Script மதிப்பிடப்பட வேண்டும்.
00.24 Script மதிப்பிடப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னரே tutorial ஐ பதிவு செய்ய வேண்டும்
00.29 ஒரு tutorial ஐ பதிவுசெய்தல் ஒரே சமயம் இரு நடவடிக்கைகளைக் கொண்டது. ,
       Narration மற்றும்
       Screen casting
00.36 கீழ்க்கண்டவை பதிவு செய்யும் முன்னர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
00:43 ஒரு laptop பயன்படுத்துகையில் battery charge செய்து, power chord ஐ disconnect செய்யவும். இல்லை எனில் ரீங்காரங்கள் அல்லது எதிரொலிகள் கேட்கும்.
00:51 பதிவு செய்யும் முன் fan ஐ switch off செய்யவும்.
00:54 இது வெளியிலிருந்து வரும் இரைச்சலையும் நீக்க உதவும்.
00.57 வெளி இரைச்சலோடு ஒரு tutorial ஐப் பார்ப்போம்.
இதை செய்து காட்ட சில fileகளைச் சேமித்திருக்கிறேன்.  
01.16 நீங்கள் head phone ஐ பயன்படுத்தவில்லை எனில் முனுமுனுக்கும் இரைச்சல் தெளிவாக இருக்காது/கேட்காது .
01.22 mobile களை அணைக்கவும் .

Silent mode லும் தொந்தரவாக இருக்கும் .

01.28 உதாரணமாக ஒரு cell phone silent mode இல் இருக்கையில் பார்ப்போம்.
01.41 சிறந்த spoken tutorial ஐ உருவாக்க நிசப்தமான studio தேவையில்லை .
01.50 பறவைகள், போக்குவரத்து போன்ற வெளியிலிருந்து வரும் ஒலிகளைத் தடுக்க ஜன்னல்கள், கதவுகளை மூடினால் போதும்.
01.53 கார் ஒலி உதாரணத்தைப்பார்ப்போம்.

இந்த tutorial க்குச் சில வழிகாட்டுதல்களை முன் வைப்போம்.

Terminal font பெரிது என்பதை உறுதி செய்யவும்.குறைந்த பட்சம் 20 point பயன்படுத்தவும்.

02.15 சிறிய மற்றும் பெரிய fontகளுக்கு உதாரணங்களைப் பார்ப்போம்.

சிறிய font video வின் தரத்தை மோசமாக்கும்.

02.31 பெரிய fonts உடன் கூடிய ஒரு வீடியோவை இப்போது காணலாம்.

பதிவுசெய்யும்போது போது font இருக்கவேண்டிய முறையை இது காட்டுகிறது..

02.46 குறைந்த பட்சம் 24 point font அளவை slideகளில் பயன்படுத்தவும்.

17 pt. என்னும் beamer command மூலம் செயல்படுத்தப்படும் 32 point font அளவைப் பயன்படுத்துகிறேன்.

03.01 பெரிதாக்கப்படாத windowகள் –அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக வைக்கவும்.

இது ஒரு window விலிருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாற்ற அனுமதிக்கும்.

03.10 உங்களால் window selection ஐ எளிதாகக் காண முடியும்.
பெரிதாக்கப்பட்ட windowகளைப் பயன்படுத்தினால் இதைக் காண்பது கடினம்.  
03.18 நான் பதிவு செய்யும் நடப்பு tutorial க்கு windowகளை ஒன்றன்மீது ஒன்றாக வைக்கும் முறையில் வைத்துள்ளேன்.

இது windowகளுக்கிடையே மாறுவதற்கும், windowகளை தேர்வதற்க்கும் எளிதாக இருப்பதைக் காணலாம். இது PDF file, இது internet browser மேலும் இது உதாரண folder.

03.46 latex குறித்த இந்த tutorial இல் இப்போது பார்க்கிற மாதிரியான வித்தியாசமான முறையில் கூட நீங்கள் windowகளை மாற்றி வைக்கலாம் .

இது terminal, இது editor மற்றும் இது pdf file.

பதிவு செய்கையில் செய்யவேண்டியதைக் குறித்த வழிக்காட்டுதலை இப்போது முன் வைப்போம் .

04.05 உங்கள் வாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் மைக்கை நிலை நிறுத்தவும். .

இது ஒலி அளவை சீராக வைக்கும்.

04.11 இந்த விதியை நீங்கள் பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதைக் காணலாம். அதை அருகில் கொண்டு வருகிறேன்.

இப்போது நம்மால் சத்தமாய்க் கேட்க முடிகிறது. பதிவு செய்கையில் mic input உடன் உள்ள headset ஐ பயன்படுத்தவும். இல்லை எனில் குரலில் எதிரொலிகளோ சீரற்ற முனுமுனுப்புகளோக் கேட்கலாம்

04.51 இப்போது உச்சரிப்பு குறித்துக் கூற விரும்புகிறேன்.

தெளிவாகப் பேசவும்,

இயல்பாகவும் உச்சரிப்பில் எந்த அழுத்தத்தையும் வலியத் திணிக்காமலும் பேசவும்.

05.00 ஒரு செயற்கையான உச்சரிப்பு மாதிரியைப்பார்ப்போம்; of the basic function to create a new file go to the menu .

பதிவு முழுவதும் ஒரே தொனியில் பெற ஒரே முறையில் முழு tutorial ஐயும் பதிவு செய்யவும். .

சில செயல்பாடுகளினால் நீண்ட தாமதம் ஏற்பட்டால், screen casting software இல் உள்ள pause feature பயன்படுத்தவும்.

இது தேவையற்ற காட்சிகளைக் குறைக்கும்.

05.34 யாராலும் முதல்முறையிலேயே பதிவு செய்தலை சரியாகச் செய்ய முடியாது, ஆகவே இரு நிமிடங்கள் கொண்ட ஒரு உதாரணப் பதிவை செய்ய பரிந்துரைக்கிறேன்.

spoken tutorial குழுவிடம் கருத்துக்கு இதைச் சமர்ப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட பின்னரே கடைசி பதிவுசெய்தலைச் செய்யலாம்.

05.50 narrationக்கான வழிக்காட்டுதல் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு, இந்த wiki பக்கத்திற்குச்செல்லவும்.
05.56 screen castingக்கான வழிக்காட்டுதல் குறித்தும் கற்றதை உறுதி செய்யவும்.

பதிவு செய்ய நாம் பரிந்துரைப்பது இலவச திறந்த மென்பொருட்களான.

                *linux ல்  Record my desktop
                * windows ல்  Camstudio
06.15 record my desktop பயன்படுத்துவது குறித்து அறிய http://www.spoken-tutorial.org.

தளத்துக்குச் செல்லவும் record my desktop பயன் படுத்துவது குறித்த tutorial ஐ இங்கே காணலாம்.

06.33 windows ல் camstudio, குறித்து அறிய இங்கே செல்லவும்.

இது பல மொழிகளிலும் கிடைக்கிறது.

06.44 சுய சரிபார்த்தலுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள checklist ஐ காணவும்
06.51 ஒரு முழுமையான spoken tutorial தரப் பரிசோதனை ஒரு புதிதாய்க் கற்பவர்

Spoken Tutorial Admn. Team பின்னர்,

ஒரு வல்லுநர் மூலம் செய்யப்படுகிறது.

07.04 ஒரு புதிதாய்க் கற்பவர் குறிப்பிட்ட foss க்குப் புதியவராக இருப்பவர்.
புதிதாய் கற்பவர்  tutorial இல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் பயிற்சியைச் சோதனை செய்வார். .
 புதிதாய்க் கற்பவர் பிழைகளைச் சந்தித்தால் அவை tutorial ஐ உருவாக்கியவர் மூலம் சரி செய்யப்படும்.
07.22 spoken tutorial admin குழு

அளவுருக்களான

audio ன் தரம்,
video ன் தரம்  ஆகியன நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் உள்ளனவா என சோதிக்கிறது
07.34 Spoken Tutorial Admn. குழு checklistல் கொடுக்கப்பட்ட கட்டளை விதிகளைச்சோதிக்கும்.

வல்லுநரோ இந்தப் checklist ன்அடிப்படையில் சோதிப்பார்.

07.45 வல்லுநர் மாற்றங்களை அறிவுறுத்தினால் படைப்பாளி மாற்றங்களை ஒருங்கிணைத்து tutorial ஐக் கற்கச் சிறப்பானதாக மாற்றுகிறார். .
07.54 இந்த tutorial இல் பதிவு செய்யும் முன்னர், பதிவு செய்கையில்,மற்றும் பதிவு செய்த பின்னர் செய்ய வேண்டியதையும், tutorial உருவானதும் சோதிக்கும் முறையையும், மதிப்பீடு செய்வதையும் குறித்துப் பார்த்தோம்.
08.06 பதிவு செய்வதற்கும் பேசுவதற்க்குமான வழிமுறைகள் குறித்த இந்த tutorial இத்துடன் நிறைவடைந்தது .
08.12 IIT-Bombay ஆல் மேம்படுத்தப்பட்ட SPOKEN TUTORIAL PROJECT.... Talk to a Teacher projectஇன் ஓர் அங்கமாகும்.
08.19 http://spoken-tutorial.org இதை ஒருங்கிணைக்கிறது.
08.25 இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது. .
08.34 மேலதிகத் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro.
08.38 இந்த tutorialக்கு தமிழாக்கம் Geetha Sambasivam குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst