Difference between revisions of "STEMI-2017/C2/Search,-select-and-edit-a-patient-file/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | <center>'''Time'''</center> | <center>'''''NARRATION'''''</center> |- | 00:00 | வணக்கம். ஒரு நோயாளியின் fileஐ எ...")
 
 
Line 252: Line 252:
 
| 06:42  
 
| 06:42  
 
| இதேபோல,  '''Hospital Type search criteria''' ல் உள்ள optionகளாவன-  
 
| இதேபோல,  '''Hospital Type search criteria''' ல் உள்ள optionகளாவன-  
'''ALL'''  
+
 
'''EMRI'''  
+
'''ALL''' , '''EMRI''', '''A Hospital''' ,'''C Hospital''' , '''D Hospital'''  
'''A Hospital'''  
+
'''C Hospital'''  
+
'''D Hospital'''  
+
  
 
|-  
 
|-  

Latest revision as of 18:13, 23 July 2020

Time
NARRATION
00:00 வணக்கம். ஒரு நோயாளியின் fileஐ எவ்வாறு தேடுவது, தேர்ந்தெடுத்து மாற்றுவது என்பது குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது- ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு நோயாளியின் fileஐ deviceல் தேடி தேர்ந்தெடுப்பது
00:17 ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு நோயாளியின் தகவல்களை மாற்றுவது.
00:22 இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு
00:34 இப்போது நாம் STEMI Homepage ல் உள்ளோம்
00:38 இங்கு இது D Hospital user என சொல்கிறது.
00:43 நீங்கள் இருக்கும் மருத்துவமனையைப் பொருத்து உங்கள் login user ID வேறுபடலாம்.
00:50 Search Page க்கு செல்ல Search tab ஐ தேர்ந்தெடுக்கவும்
00:54 Search Page ன் மேல் வலது பக்கத்தில் ஒரு Menu tab உள்ளது.
01:00 இதில் ஆறு Search Criteria உள்ளது- Patient ID, Patient Name, Admission From to End Date, STEMI Status, Type of Hospital, Hospital Cluster.
01:17 இவை மேலே பக்கம் முழுதும் தெரியும்.
01:22 இங்கு கீழே 14 சமீபத்திய உள்ளீடுகளும் காட்டப்படுகின்றன.
01:27 இது ஏனெனில் என் STEMI deviceல் ஏற்கனவே 14 உள்ளீடுகளை கொடுத்துள்ளேன்.
01:33 உங்கள் STEMI device ல் 14க்கும் குறைவான உள்ளீடுகள் இருந்தால் நீங்கள் ஒரு சிறிய பட்டியலைக் காணலாம்
01:41 ஆனால் 14க்கும் மேற்பட்ட உள்ளீடுகள் இருந்தால், மிக சமீபத்திய 14 உள்ளீடுகள் காட்டப்படும்
01:49 பக்கத்தின் அடியில் வலது பக்கம் ஒரு Search button உள்ளது.
01:54 ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு நோயாளியின் fileஐ தேட அதற்கான search criteriaஐ கொடுக்க வேண்டும்.
02:03 பிறகு பக்கத்தின் அடியில் உள்ள Search button ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:08 ஒரு நோயாளின் பல search criteriaஐ ஒரே நேரத்தில் கொடுப்பதன் மூலமும் தேடமுடியும். இது தேடுதலை துரிதப்படுத்தும்.
02:19 Search tabன் கீழ், நாம் ஏற்கனவே சேமித்த fileகளை மட்டும்தான் காணலாம் என்பதை குறித்துக்கொள்ளவும்.
02:26 அதாவது- ஒரு நோயாளியின் தகவல்களை கொடுத்த பின் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவில்லை எனில் அந்த பக்கம் சேமிக்கப்பட்டிருக்காது அந்த பக்கத்தை பின்னர் நீங்கள் பார்க்கவும் முடியாது.
02:40 சில criteriaஐ எடுத்துக்கொண்டு சில சேமித்த fileகளை தேடுவோம்.
02:46 முதலில் ஒரு குறிப்பிட்ட Patient ID கொண்ட நோயாளியின் file ஐ தேடுவோம்
02:51 இந்த பட்டியிலில் இருந்து ஏதேனும் நோயாளியின் file ஐ தேர்ந்தெடுப்போம்.
02:56 அந்த file நம் deviceல் திறந்துவிட்டது.
02:59 பக்கத்தின் மேலே இருக்கும் Patient Id ஐ குறித்துக்கொள்ளவும்.
03:05 என் deviceல் காட்டப்படுவது, நான் தேர்ந்தெடுத்த நோயாளிக்கான எண்.
03:12 உங்கள் device ல் நீங்கள் தேர்ந்தெடுத்த நோயாளியைப் பொருத்து எண் வேறுபடலாம்.
03:17 இந்த எண்ணை குறித்துக்கொள்ளவும். இதை பின்னர் பயன்படுத்துவோம்.
03:22 நோயாளி வைத்திருக்கும் fileன் மேல் அட்டையிலிருந்தும் Patient Id ஐ பெறலாம்.
03:28 இது STEMI device ல் data-entryன் போது தானாக உருவாக்கப்பட்ட எண் ஆகும்.
03:35 இப்போது பக்கத்தின் மேல் இடது மூலையில் உள்ள Menu tabஐ தேர்ந்தெடுக்கவும்.
03:42 பின் Home tabஐ தேர்ந்தெடுக்கவும்.
03:44 இப்போது மீண்டும் Homepage ல் Search tabஐ தேர்ந்தெடுக்கவும்
03:49 மீண்டும் நாம் Search Page க்கு வந்துவிட்டோம்
03:52 இங்கு, Patient Id Patient Id search criteriaல் கொடுக்க வேண்டும்.
03:59 இந்த எண்ணை Patient Id search criteria ல் கொடுக்கிறேன். இதுதான் நான் முன்னர் fileல் இருந்து குறிந்த எண்.
04:09 நீங்கள் உங்கள் deviceல் குறித்த எண்ணை கொடுக்கவும்.
04:14 இப்போது பக்கத்தின் அடியில் வலப்பக்கமுள்ள Search button ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:19 நாம் கொடுத்த Patient Idஉடன் நோயாளியின் file திரையில் காட்டப்படும்.
04:26 fileன் உள்ளடக்கதைக் காண அதை தேர்ந்தெடுக்கவும்.
04:30 அடுத்து Patient name Ramesh என உள்ள நோயாளியின் file ஐ தேர்ந்தெடுக்கலாம்.
04:35 நோயாளியின் பெயர் Ramesh என உள்ள நோயாளியின் file காட்டப்படுகிறது.
04:40 இப்போது அந்த file ன் உள்ளடக்கத்தை திறந்து பார்க்க தேர்ந்தெடுக்கவும்
04:45 பக்கத்தின் மேல் வலது பக்கத்தில் EDIT iconஐ காணவும்.
04:50 நோயாளியின் தகவல்களை மாற்ற இந்த iconஐ தேர்ந்தெடுக்கவும்.
04:55 அனைத்து மாற்றங்களையும் சேமிக்க நினைவுகொள்ளவும்.
04:59 ஒரு குறிப்பிட்ட தேதிகளில் சேமிக்கப்பட்ட நோயாளியின் fileகளை இப்போது தேடுவோம்.
05:05 From Dateல் 1 January 2016 எனவும் End Date ல் 9 February 2016 எனவும் தேர்ந்தெடுக்கிறேன்
05:14 உங்கள் device ல் நீங்கள் data entry செய்த தேதிகளின் அடிப்படையில் தேதிகளை தேர்ந்தெடுக்கவும்.
05:22 பிறகு, பக்கத்தின் அடியில் வலப்பக்கம் Search button ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:27 January 1 2016 முதல் February 9 2016 வரை சேமித்த அனைத்து நோயாளியின் fileகளும் காட்டப்படுகின்றன.
05:38 உங்கள் device ல் நீங்கள் கொடுத்த தேதிகளில் உள்ள நோயாளிகளின் fileகளை காணலாம்.
05:44 இப்போது ஏதேனும் fileஐ திறந்து உள்ளடக்கத்தைக் காண தேர்ந்தெடுக்கவும்.
05:50 அடுத்து STEMI status, confirmed என உள்ள fileகளை தேடுவோம்
05:55 STEMI status search criteria ன் கீழ் உள்ள optionகளாவன-

ALL , STEMI Confirmed ,STEMI Inconclusive , STEMI not Confirmed , Non STEMI

06:11 STEMI Confirmedஐ தேர்ந்தெடுத்து பக்கத்தின் அடியில் வலப்பக்கமுள்ள Search button ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
06:18 STEMI Confirmed என status சேமிக்கப்பட்ட அனைத்து நோயாளி fileகளும் காட்டப்படுகிறது
06:24 என் STEMI deviceல், 14 நோயாளிகளைக் காணலாம்
06:28 உங்கள் STEMI device ல் இந்த பட்டியல் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம்
06:33 இது STEMI status ஆனது Confirmed என எவ்வளவு நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை பொருத்தது
06:42 இதேபோல, Hospital Type search criteria ல் உள்ள optionகளாவன-

ALL , EMRI, A Hospital ,C Hospital , D Hospital

06:55 இந்த தேடுதலானது device ல் அந்த குறிப்பிட்ட நோயாளியின் file எங்கு முதலில் உருவாக்கப்பட்டது என்பதை பொருத்தது.
07:02 D Hospital என தேர்ந்தெடுத்து பின் Search button ஐ தேர்ந்தெடுக்கிறேன்
07:07 நீங்கள் தேடும் நோயாளியின் fileஐ பொருத்து hospital typeஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
07:14 என் device ல் காட்டப்படும் பக்கமானது D Hospital ன் அனைத்து நோயாளியின் fileகளையும் காட்டுகிறது
07:21 உங்கள் மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்ட நோயாளியின் fileகளையும் காண இந்த search criteria ஐ பயன்படுத்தலாம்.
07:29 உங்கள் device ன் user idஐ பொருத்து இது காட்டப்படும்.
07:34 இதேபோல, Type of Hospital Cluster ன் கீழ் நம் விருப்பத்திற்கேற்ப clusterஐ தேர்ந்தெடுக்கலாம்.
07:41 நான் Kovai Medical Centre and Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன்
07:45 நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்பclusterஐ தேர்ந்தெடுக்கலாம்.
07:49 ஒரு குறிப்பிட்ட clusterல் Hub Hospital (அதாவது. A B Hospital)ன் பெயருக்கு பின் Clusterகள் பெயரிடப்படுகின்றன.
07:58 பக்கத்தின் அடியில் வலது பக்கம் Search button ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:02 இப்போது அந்த குறிப்பிட்ட clusterல் சேமிக்கப்பட்ட fileகளை நாம் பார்க்க முடிகிறது.
08:08 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது- பல்வேறு search criteriaஐ பயன்படுத்தி ஒரு நோயாளியின் file ஐ தேடி தேர்ந்தெடுத்தல்
08:17 ஏற்கனவே சேமிக்கப்பட்ட நோயாளியின் தகவல்களை மாற்றுதல்.
08:21 STEMI INDIA லாப நோக்கில்லாத' ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
08:34 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.orgஐ பார்க்கவும்
08:48 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya