PHP-and-MySQL/C2/XAMPP-in-Windows/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:23, 17 May 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 PHP tutorial களுக்கு நல்வரவு!
0:03 இந்த அடிப்படை டுடோரியலில், நாம் பயன்படுத்தப்போகும் பேக்கேஜ் மூலம், Webserver, PHP, MySQl முதலியவற்றை நிறுவும் வழிமுறைகளை கற்போம்.
0:22 XAMPP என்றழைக்கப்படுவதை பயன்படுத்துவோம். "ZAMP" என்றும் அழைக்கலாம். அப்படித்தான் உச்சரிக்க வேண்டும் – நான் அதை XAMPP என்றே குறிப்பிடுவேன்.
0:34 PHP நிறுவப்பெற்று, MYSQL டேடாபேஸுடன் உங்களுடைய சர்வர் பணிபுரியத் தொடங்க, நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
0:46 "apachefriends.org" இணையதளத்தை அணுகவும் அல்லது "XAMPP" என்று கூகிளில் தேடவும்.
0:51 X-A-M, double P என்று இதனை எழுத வேண்டும்.
0:56 விண்டோஸில் இதை நிறுவுவது குறித்தும், அனைத்தையும் இயங்கச் செய்வது குறித்தும் செய்து காட்டுகிறேன்.
1:06 லினக்ஸ் உள்ளிட்ட இயக்குதளங்களில் வேறு வகையான உதவிகள் தேவைப்பட்டால், தெரியப்படுத்துங்கள். அதற்கென டுடோரியல் செய்யவும் ஆர்வமாய் உள்ளோம்
1:14 இணையதளத்தில் Installer ஐ இப்போது தேர்வு செய்ய வேண்டும்.
1:19 அது இப்பக்கத்தை திறக்கும். முடிவாக வெர்ஷன் நம்பரோடு கூடிய இது போன்ற ஒரு file ஐ இறக்கிக் கொள்வீர்கள்.
1:29 முதலில் அதற்குரிய Installer ஐ தேர்வு செய்யவும்
1:32 நிறுவ டபுள் கிளிக் செய்து மொழியைத் தேர்வு செய்க.
1:37 இத்தகைய செய்தி ஒன்றை பெறலாம் - விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துவதால் "Windows Vista Account is deactivated on your system" என்று சொல்லியது.
1:47 இது நமக்கு தேவையில்லை. எனவே புறக்கணிக்கவும்
1:52 நிறுவலைத் தொடந்து மேற்கொள்ளலாம். .
1:56 எளிமையாக லோகல் டிரைவிலேயே ஒரு போல்டரை தேர்வு செய்க. Program Files இல் அதை போடவும் தேவையில்லை.
2:04 இவை உங்களுடைய விருப்பம் சார்ந்தவை. "Create a XAMPP desktop option" என்பதை குறி இடுகிறேன். ஆயினும் இதனை தேர்வு செய்யவில்லை.
2:15 "Install Apache as a service" மற்றும் "Install MySQL as a service" ஐ தேர்வு செய்ய வேண்டும்.
2:23 இதன் மூலம் அவை சிஸ்டம் சர்வீசாக சேர்க்கப்பட்டு ஒவ்வொரு முறை கணினியை இயக்கும் போதும் அவை தொடங்கப்பெறும்.
2:30 அவற்றை தேர்வு செய்யாமல் விட்டுவிடலாம். எளிமைக் கருதி தேர்வு செய்கிறேன்.
2:35 இப்போது இது நிறுவப்படப் போகிறது. இந்நிலையிலயே வீடியோவை இடைநிறுத்தி, நிறுவிய பின் தொடர்வோம்
2:46 தொடர்ந்து PHP installation ன் மீதி set up ஐ பார்க்கலாம்
2:53 அதனைச் செய்வதற்கு முன், வெறும் பிரவுசரில் localhost ஐ அணுக முயற்சி செய்வோம்
3:00 இது லோக்கல் வெப்சர்வரின் ஹோஸ்ட் எனப்படும்.
3:05 பொதுவாக "google dot com" போன்ற web address ஐ பார்த்திருப்பீர்கள். ஆனால் இதை "localhost" என்கிறோம்
3:12 "Failed to connect" என்ற error message ஐ காணலாம்.
3:16 Xampp நிறுவப்பட்ட பின்னர் இதே localhost ஐ மீண்டும் தேர்வு செய்தால், நம் சர்வரோடு நேரடியாக இணையப்பெறுவோம்.
3:25 http webserver ஆன அபாச்சி நிறுவப்படுவதை எளிமைப்படுத்தி அதன் மீது PHP யையும் நிறுவி, கூடவே mysql database ஐயும் சர்வரில் நிறுவுவதை Xampp சுலபப்படுத்துகிறது.
3:39 நிறுவி முடித்த பின் திரும்பி வந்து பார்த்தால், localhost வேலை செய்யும்.
3:46 localhost folderக்குள் fileகளை எப்படி போடுவது என பார்க்கலாம்
3:51 இது localhost என அழைக்கப்படவில்லை. மாறாக நம் வெப் சர்வரில் இருக்கக்கூடிய ரூட் போல்டரையே இவ்வாறு அழைக்கிறோம்.
4:00 பின் மீண்டும் வீடியோவிற்கு வருவோம். மற்றவற்றை தொடரலாம்.
3:56 நல்லது, நிறுவி முடித்து விட்டோம். சில செய்திகள் வந்துள்ளன.
4:11 "Finish" ஐ சொடுக்கவும்.
4:13 தேவைப்படும் ports இப்போது சரிபார்க்கப்படுவதை காணலாம்.
4:22 இதன் பொருள் port 80 சரிபார்க்கப்படுவதாகும். mysql என்று நினைக்கிறேன்....
4:15 பிழை எதுவும் ஏற்படாத வரை, எல்லாம் நல்லதே!
4:32 Apache 2.2 இங்கே அமைக்கப்படுவதை காணலாம்.
4:36 சர்வீஸ் தொடங்கப்படுகிறதென்று தெரிகிறது. mysql சர்வீஸ் கூட தொடங்குகிறது.
4:42 நம் நிறுவல் முடிந்து விட்டதாக தெரிவிக்கும் செய்தி கிடைக்கிறது.
4:45 இப்போது XAMP கன்ட்ரோல் பேனலைத் தொடங்கலாம். "Yes" ஐ சொடுக்கி அதை இங்கே கொண்டு வரலாம்.
4:52 நம் Apache சர்வரும் MySQl சர்வரும் இயங்குவதை நீங்கள் பார்க்கலாம்.
4:58 இங்கே PHP நம்முடைய Webserver இன் பாகமாக இருப்பதால் அபாச்சியின் பாகமாக உள்ளது. எனவேதான் இங்கே அதனைப் பார்க்க முடியவில்லை. அது நம் வெப் சர்வருக்கான புதிய பாகம் போன்றது.
5:14 ஆக, திரும்பப் போய் நம் பக்கத்தை மறுபடியும் தொடங்கலாம்.
5:17 எதிர்பார்ப்பதவாறே "localhost" இல் Enter மூலம், "XAMPP" உடன் இணைக்கப்பெற்றதைக் காணலாம்.
5:25 எப்போதும் போல், webserver ன் குறிப்பிட்ட ஒரு folder ஐ ஆழமாகப் பார்க்கலாம்.
5:31 தற்போதைக்கு English ஐ சொடுக்கவும்.
5:33 "XAMPP" அங்கே அமைக்கப்பட்டிருப்பதைக் நீங்கள் காணலாம்.
5:37 இப்போது என் 'C' டிரைவை திறக்கப் போகிறேன். அதை இதற்குள் காணலாம்.
5:44 நிறுவப்பட்ட folderஆன "XAMPP" மீது இப்போது டபுள் கிளிக் செய்கிறேன்,
5:49 இங்கே பல fileகள் இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியது "htdocs". இங்குதான் , வெப்சர்வரால் இயக்கப்பட்டு PHP யால் ஆக்கப்பெறும் உங்களது fileகளை இடுவீர்கள்.
6:01 ஆக, இதை டபுள் கிளிக் செய்யும் போது, பலவகையான fileகளைப் பெற்றிருப்பதை காணலாம்.
6:06 "index.html" file தான் இங்கே பார்ப்பது. இப்போதைக்கு இது "index.php". அதுவும் இங்கிருக்கிறது.
6:15 index புள்ளி எதுவும், என்றிருக்கும் எந்த file உம் தானாகவே தொடங்கப் பெறும்.
6:20 இதை மாற்றலாம் ஆனாலும் இப்போதைக்கு அப்படியே விடவும்.
6:25 கூடவே "phpacademy" என்று ஒரு folderஐயும் நான் பெற்றிருக்கிறேன்.
6:29 ஒரு புது text document ஐ உருவாக்குவோம். எளிமைக்காக இதை என் கன்டெக்ஸ்ட் எடிட்டரில் செய்கிறேன்.
6:37 சரி இதை நகர்த்துவோம். புதிய file ஐ உருவாக்குவோம்
6:43 அதை நான் "htdocs" folderக்குள் சேமிக்கப் போகிறேன். "phpinfo" dot php என அதை சேமிக்கிறேன்
6:53 இதனுள் சில PHP code களை எழுதுகிறேன்
6:59 "php underscore info" என்பதே அது. இறுதியில் 2 brackets பின் line terminator உம் வேண்டும்.
7:05 இதன் அர்த்தம் புரியவில்லையென்றால் இதை கற்க வேண்டாம். அன்றாட பணிகளுக்கு தெரிய வேண்டிய விஷயமல்ல இது.
7:14 இது PHP Server பற்றிய அதாவது வெப் சர்வரின் PHP நிறுவல் பற்றிய தகவல்களை நமக்குத் தரும்.
7:20 இதற்கு திரும்பிவருவதற்கு முன் இதை அழைக்க நமக்கு "localhost" தேவை.
7:26 "htdocs" என்றோ அதைப்போல வேறெதுவுமோ, கொடுக்க வேண்டாம்.
7:29 தேவையெல்லாம் "localhost" உடன் நம் fileன் பெயரான phpinfo.php சேர்த்து Enter தட்ட வேண்டியதுதான்.
7:41 கீழ்கோடு தேவையில்லை. எனவே அதை நீக்கி ரெப்ரஷ் செய்யவும்.
7:50 பல data களுடன் இங்கே PHP information file கிடைக்கப்பெறுவதை காணலாம்.
7:55 இங்கு என்ன நடக்கிறது என்றால் நம் htdocs fileனுள் php code ஐ இயக்குகிறோம்.
8:01 முகவரியோடு "favicon dot ico" என்று கொடுத்தால் என்ன கிடைக்கிறது என்பதை காண்கிறீர்கள்.
8:10 "htdocs" க்குள் நீங்கள் போடும் எதுவும் Webserver ஆல் PHP மூலம் ஆக்கம்பெறப்படும்.
8:18 இங்கே இந்த டுடோரியல் படி நீங்கள் எழுதும் எந்த file ஐயும் "c : \ xampp and htdocs" இல் உள்ள "htdocs" folderல் போடவும். அங்கிருக்கும் எதுவும் process ஆகும்..
8:34 அதை localhost அல்லது 127.0.0.1 மூலம் அழைக்கலாம். என்டர் தட்டுவதால் எந்த மாற்றத்தையும் காணவில்லை. இதுவும் ஒன்றுதான். இதுவே உங்களது லோக்கல் வெப் சர்வர்.
8:50 நாம் "XAMPP" ஐ நிறுவினோம். "Apache" சர்வீஸ் ஐ நிறுவி, பின்னர் பயன்படுத்தப் போகும் டேடாபேஸ் சர்வீஸான "MySQL" சர்வீஸ் ஐ நிறுவி, php fileகளை ஆக்கப்பயன்படும் "Apache" க்கான "php module" உம் நிறுவிட பயன்படும் எளிமையான வழி இது.
9:10 நாம் "XAMPP" ஐ தரவிறக்கி நிறுவியுள்ளோம். ஒரு file ஐ உருவாக்கி வெப் சர்வர் மூலம் இயக்குவதை செய்து காட்டினேன்.
9:16 டுடோரியல்களைத் தொடங்க இது பயன்படும். சிக்கல்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
9:23 இத்துடன் இந்த tutorial முடிகிறது
9:26 தமிழாக்கம் ம. ஸ்ரீ ராமதாஸ். நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst