PHP-and-MySQL/C2/Logical-Operators/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:17, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 "Logical Operators" பற்றிய tutorialக்கு நல்வரவு. இது மிக விரிவான tutorial.
0:09 மீண்டும் … ஏற்கனவே பார்த்த … "if" statement ஐ … உதாரணத்திற்காகப் பயன்படுத்துவேன்
0:18 logical operator என்றால் என்ன? சிறிது logicஉடன் கூடிய 'and' அல்லது 'or' operator எனக் கூறலாம்
0:27 இப்பொழுது "if" statementக்கான அடிப்படை அமைப்பை உருவாக்கும் பொழுதே, இதனால் என்ன செய்ய முடியும் என்பதை விளக்கப் போகிறேன்
0:43 முன்னதாகக் கூறிய 1என்பது 1ஐ விட பெரியது எனும் உதாரணம், logicன் படி பார்த்தால் தவறு
0:54 எங்கே இருக்கிறோம் என பார்ப்பதற்காக …. இதனை சரி பார்ப்போம்…… சரியா. அதாவது அது "false".
1:04 இப்பொழுது "if 1 is greater than 1 or equals 1" என சொன்னால்
1:18 இதனை 'or' என எழுதாமல், இரண்டு horizontal lines ஆகவோ, இரண்டு pipes ஆகவோ எழுத வேண்டும்.
1:26 அந்த இரண்டு horizontal lines ...அதாவது 'or' ஆனது … keyboardல் shift key க்குப் பக்கத்தில் இருக்கும்.
1:38 இப்போது இதை compile செய்து பார்த்தால் விடை என்னவாக இருக்கும்?
1:43 இப்போது இதை ஒருமுறை செய்து பார்க்கலாம் - 1 is greater than 1 என்றால் - "false" தவறு என எழுதினோம்... அல்லது 1 is equal to 1
1:54 1ன் சமானம்1 என்பது சரி என நமக்கு தெரிவதால், இங்கு 'or' என சொல்கிறோம். 1ன் சமானம்1 … அல்லது 'and' ஏனெனில் 'and' என சொல்வதற்கு இரண்டும் சரியாக இருக்க வேண்டும் "true".
2:09 அல்லது ஏதாவதொன்று "true" என இருக்க வேண்டும்
2:12 நம்பியவாரே நமக்கு output சரி எனக் கிடைத்துவிட்டது
2:16 இது தான் 'or' எனப்படுவது .
2:18 அடிப்படையில் … இது உங்களை … இரண்டு ஒப்பீடுகள் செய்ய … அனுமதிக்கும், "if"

statementல் உள்ளவற்றை வெளிப்படுத்தும் … மற்றும் இரண்டில் ஏதாவதொன்று சரியாக இருந்தால் - பின் அது "either" operator போல செயல்படும்.

2:30 இரண்டில் எதாவது ஒன்று சரி ஆகிவிட்டால், நீங்கள் " true " என்னுமிடத்திலேயே நின்று விடுவீர்கள்
2:34 "and" operator என்பது வேறு விதமாக செயல்பட வல்லது
2:39 conditionல் .. இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே … "and"ஆனது இதனை செயல்முறைப்படுத்தும்
2:46 இங்கு நமக்கு "false" என கிடைக்கும்... ஏனெனில் 1என்பது 1ஐ விட பெரியதல்ல
2:51 மீண்டும் comparison operators க்கே சென்று "if 1 is greater than 1 or equal to 1 'and' 1 equal 1", என சொல்வோமானால், இங்கு நமக்கு சரி என்பது கிடைக்கும்
3:04 இப்பொழுது இதே சோதனையை சில variableகளைப் பயன்படுத்தியும் செய்து பார்க்கலாம்
3:10 நீங்கள் மற்ற tutorialகளைப் பின்பற்றுவதன் மூலம் variableகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்
3:17 இவைதான் அந்த இரண்டு logical operators.
3:20 இதை மிகவும் பயனுள்ளதாக உணர்வீர்கள். ஏனெனில் முந்தைய projectகளில் இதைப் பற்றிய உதாரணங்களை காணலாம்
3:30 இது ஒரு "login" படிவம். user ஒரு websiteக்குள் login செய்ய விழைவதாக கொள்வோம்
3:35 இந்த websiteக்குள் நுழைவதற்கு முன்னர் அது உங்களுடைய "username"

மற்றும் "password"ஐ கொடுக்கும் படி கேட்கும்.

3:43 முதலில் பயனர்கள் இந்த "username" மற்றும் "password"ஐ கொடுத்து விட்டார்களா என சோதிக்க வேண்டும்.
3:48 கொடுக்கவில்லை எனில், "username" மற்றும் "password" ஐ சரிபார்ப்பதில் அர்த்தம் இல்லை.
3:52 உதாரணத்திற்குச் சொன்னால்,
3:54 உண்மையில் username ஆனது இவ்வாறு செயல் பட வைக்கும். "username" ஐ "alex" ஆகவும் password ஐ "abc" எனவும் வைக்கிறேன்.
4:04 இவற்றை மாற்றி "username" எனவும் "password" எனவும் சொல்கிறேன்.
4:11 இப்போது இது "true" அதாவது" சரி " என சொல்லும்
4:15 இதை 'ok' அல்லது 'you forgot to fill out a field' என சொல்லும் படி மாற்றப் போகிறேன்.
4:27 இங்கு இரண்டு மதிப்புகளும் கிடைத்துள்ளதால் 'ok' என சொல்ல வைக்கப் போகிறேன்
4:32 "ok"என சொல்வதை செய்து பார்க்கலாம்
4:37 இப்பொழுது password ஐ கொடுக்க மறந்து விட்டால் என்ன ஆகும் என பார்க்கலாம். password இடத்தில் ஒன்றுமே கொடுக்காமல் வெளிவாருங்கள்
4:48 'You forgot to fill out a field' என வரும்
4:50 இவை "username" மற்றும் "password" ஐ submit செய்யும் போதே அவை பயனரிடமிருந்து வருவதாக அமைகின்றன
5:00 "username" மற்றும் "password"என சொல்கிறோம். அடிப்படையில் "username" எனும்போதே "சரி" என்றாகும்.
5:07 உங்களிடம் அது இருக்கும்போது, ஏற்றுக்கொள்ளப்பட்டு சரி என்றாகி விடும்.
5:14 இதனை சரியா என பார்க்கலாம்.
5:18 இங்கு "username" and "password" என வருவதால் அது சரி
5:23 ஆனால் அதுவே 'or' என இருக்குமானால் அது எந்த அர்த்தமும் கொடுக்காது
5:29 இங்கு இரண்டு மதிப்புகளும் இருப்பதால் "true" என்பதே சரி
5:36 இப்போது இரண்டிலும் அதனை செய்து பார்த்தால்
5:41 இங்கு username என்பது இருப்பதால் அது சரி
5:45 அது அங்கு இல்லையெனில் பின் தவறு
5:48 அதேபோல் password என்பது இருந்தால் அது சரி, அது அங்கு இல்லையெனில் பின் தவறு
5:56 "You forgot to fill out a field” என சொல்லப்போகிறோம்
6:00 இங்கு எதுவும் இல்லாமல் அப்படியே விட்டு விடவும்
6:05 refresh பண்ணி பார்க்கவும்
6:08 இவை முன் கூறியது போல, அன்றாடம் பயன்படுத்தும் php application களில் மிக பயனுள்ளதாகும்
6:17 உதாரணத்துக்கு ..பல பயனர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்
6:22 அதையும் தாண்டி பல பயன்கள் உண்டு
6:24 இந்த இரண்டு operatorகள் தான் logical operators கள்.
6:27 இவற்றை பயன்படுத்தி இன்னும் என்ன செய்யலாம் என பாருங்கள்
6:31 பின்வரும் project களில் இதனை கண்டிப்பாக பயன்படுத்தவுள்ளேன்
6:37 இத்துடன் இந்த tutorial முடிகிறது. தமிழாக்கம் நித்யா. நன்றி

Contributors and Content Editors

Priyacst