Difference between revisions of "PERL/C2/Overview-and-Installation-of-PERL/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
 
!Time
 
!Time
 
!Narration
 
!Narration
 
 
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01

Latest revision as of 10:49, 7 April 2017

Time Narration
00:01 PERL மீதான கண்ணோட்டம் மற்றும் Perl ஐ நிறுவுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது
00:10 உபுண்டு-லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் PERL க்கான நிறுவுதல் படிகளுடன் PERL மீதான கண்ணோட்டம்
00:20 இந்த டுடோரியலுக்காக,
00:21 இணைய இணைப்பு வைத்திருக்க வேண்டும்.
00:25 உபுண்டு லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளம் வைத்திருக்க வேண்டும்.
00:30 செயல் விளக்கத்திற்காக, நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 மற்றும் விண்டோஸ 7 இயங்குதளம்.
00:39 'உபுண்டு லினக்ஸில் நிறுவுவதற்கு, உங்கள் கணினியில் சினேப்டிக் பேக்கேஜ் மேனேஜர் (Synaptic Package Manager) ஐ நிறுவியிருத்தல் வேண்டும்.
00:47 நீங்கள் administrative உரிமைகளை வைத்திருக்க வேண்டும்.
00:50 உபுண்டு வில் டெர்மினல் மற்றும் சினேப்டிக் பேக்கேஜ் மேனேஜர் (Synaptic Package Manager) ஐ பயன்படுத்துவது குறித்த அறிவும் இருக்க வேண்டும்.
00:57 இல்லையெனில், ஸ்போகன் டுடோரியல் வலைத்தளத்தில் கிடைக்கும் லினக்ஸ் டுடோரியல்களைக் காணவும்.
01:03 PERL க்கான ஒரு கண்ணோட்டத்தைக் காண்போம்.
01:07 Practical Extraction and Reporting Language என்பதன் சுருக்கமே PERL
01:14 இது ஒரு பொது பயன்பாட்டு கணினி மொழி.
01:18 இது ஆரம்பத்தில் உரையைக் கையாளுவதற்காக உருவாக்கப்பட்டது.
01:23 இப்போது, இது web development, network programming, GUI development பொன்றவற்றிற்காகவும் பயன்படுகிறது
01:31 இது புரிந்துகொள்ள வெகுஎளிதும் சுலபமானதும்.
01:35 C அல்லது JAVA ல் உள்ளதுபோல சிக்கலான data structureகள் இதில் இல்லை
01:41 இது pattern matching க்கு பிரபலமானது.
01:45 மேலும் மிக முக்கியமாக, PERL ஒரு திறந்த மூல மென்பொருள் (open source language).
01:49 PERL உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளத்தில் முன்னிருப்பாக வருகிறது.
01:56 எனவே, நிறுவ பின்பற்ற வேண்டிய செயல்முறை ஏதும் இல்லை
02:01 உபுண்டு 12.04. ல் நிறுவப்பட்டுள்ள PERL ன் பதிப்பை காண்போம்
02:07 விசைப்பலகையில் ctrl + alt + t ஐ ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறக்கவும்.
02:15 பின் டைப் செய்க perl hyphen v
02:18 எண்டரை அழுத்துக
02:21 இங்கே டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீட்டை பெறுவீர்கள்.
02:26 இந்த வெளியீடு நிறுவப்பட்டுள்ள PERL ன் நடப்பு பதிப்பைக் காட்டுகிறது
02:31 என் கணினியில் இது PERL 5.14.2
02:36 உபுண்டு 12.04 ல் கிடைக்கும் முன்னிருப்பு PERL packageகளை ஐ காண்போம்
02:43 launcher bar க்கு சென்று Dash Home ல் சொடுக்குக
02:48 search barல் டைப் செய்க, Synaptic.
02:51 Synaptic Package Manager ஐகன் தோன்றும்.
02:55 அதன் மீது சொடுக்குக.
02:57 (Authentication purpose) அங்கீகாரத்திற்காக உங்கள் admin password கேட்கப்படும்.
03:03 உங்கள் admin password ஐ கொடுத்து Authenticate ல் சொடுக்குக
03:08 உடனடியாக, Synaptic Package Manager .... package பட்டியலை Load செய்யும்.
03:13 உங்கள் இணைய இணைப்பு மற்றும் கணினியின் வேகத்தைப் பொருத்து இது சிறிது நேரம் எடுக்கலாம்.
03:18 load ஆன பிறகு, Quick Filter ல் டைப் செய்க Perl.
03:22 packageகளின் ஒரு பட்டியலை காணலாம்.
03:25 இது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது என்பதை PERL package க்கு முன்னால் உள்ள பச்சை நிற பெட்டி காட்டுகிறது.
03:33 அதேசமயம் நட்சத்திற குறி உள்ள பெட்டிகள் உங்களுக்கு இந்த packageகளும் தேவைப்படலாம் என காட்டுகின்றன.
03:41 இவை ஒரு ஆவணத்தை உருவாக்க அல்லது ஒரு PERL script ஐ திருத்தவும் உதவும்.
03:47 PERL ன் எதிர்கால பயனுக்கேற்ப விடுபட்ட packageகளை நிறுவவும்
03:54 இப்போது விண்டோஸ் இயங்குதளத்தில் PERLஐ நிறுவுவதற்கான படிகளை காண்போம்
04:00 Perl டுடோரியல்களை பதிவுசெய்த நேரத்தில், பதிப்பு 5.14.2 விண்டோஸில் கிடைத்தது
04:08 இப்போது புதிய PERL பதிப்பு கிடைக்கிறது.
04:12 PERL ன் புதிய பதிப்பு 5.16.3 ஐ பயன்படுத்தி நிறுவுதலை செய்துகாட்டுகிறேன்
04:19 டுடோரியல்களில் காட்டப்பட்ட அனைத்து PERL commandகளும் புதிய பதிப்பிலும் சரியாக வேலை செய்யும்.
04:26 விண்டோஸ் இயங்குதளத்தில் browser ஐ திறக்கவும்,
04:30 காட்டப்படும் URL address bar ல் டைப் செய்க.
04:35 PERL ன் தரவிறக்க பக்கத்திற்கு செல்வீர்கள்
04:39 உங்கள் கணினி தேவைக்கேற்க தரவிறக்க பதிப்பை தேர்ந்தெடுக்கவும்
04:44 என் கணினிக்கு PERL ன் 32 bit பதிப்பு தேவை
04:49 Perl msi file ஐ உங்கள் கணினியில் எங்கேனும் சேமிக்கவும்.
04:56 இதை நான் ஏற்கனவே என் கணினியில் சேமித்துள்ளேன்.
05:00 PERL msi file ஐ நீங்கள் தரவிறக்கியுள்ள folder ஐ திறந்து அதன் மீது இரட்டை சொடுக்கு சொடுக்குக.
05:07 பின் pop-up விண்டோவில் Run ஐ சொடுக்குக.
05:11 setup wizard விண்டோவில் Next ஐ சொடுக்குக.
05:15 கேட்கப்படும் License Aggrement ஐ ஏற்று Next ல் சொடுக்குக.
05:21 இப்போது, Custom Setup விண்டோ தோன்றும்.
05:25 இந்த விண்டோ நிறுவப்படும் அனைத்து PERL சிறப்பம்சங்களையும் பட்டியலிடுகிறது.
05:31 அவை, Perl,
05:33 PPM utilty இது விண்டோஸில் Perl Moduleகளை தரவிறக்கி நிறுவப் பயன்படுகிறது
05:39 Documentation இது Perl Moduleகளுக்கு ஆவணங்களைத் தருகிறது
05:44 examples Perl க்கான உதாரணங்கள்
05:47 இந்த முன்னிருப்பு சிறப்பம்சங்களை வைத்துக்கொண்டு Next ல் சொடுக்குக.
05:52 environmental variable மற்றும் file extension ஐ அமைப்பதற்கான ஒரு popup விண்டோ தோன்றும்.
05:59 இங்கே காட்டப்படுவது போல அவை குறியிடப்பட்டே இருக்கட்டும்.
06:03 Next ல் சொடுக்கி பின் Install ல் சொடுக்குக.
06:07 இது PERL க்கான நிறுவுதலை ஆரம்பிக்கும்
06:11 உங்கள் இணைய இணைப்பைப் பொருத்து இது சற்று நேரம் எடுக்கலாம்.
06:16 முடிந்தவுடன், Display the Release Note ஐ குறிநீக்கிவிட்டு Finish ல் சொடுக்குகிறேன்.
06:23 இது விண்டோஸில் PERL நிறுவலை முடிக்கிறது
06:26 இப்போது நிறுவலை சரிபார்ப்போம்.
06:32 Start menu க்கு சென்று command prompt ஐ திறக்க cmd என டைப் செய்க
06:39 command prompt ல் டைப் செய்க perl space hyphen v
06:44 எண்டரை அழுத்துக
06:46 நிறுவப்பட்டுள்ள PERL ன் பதிப்பைக் காணலாம்
06:50 அது பதிப்பைக் காட்டவில்லை எனில், மேற்சொன்ன நிறுவல் படிகளை மீண்டும் செய்க.
06:57 இப்போது ஒரு எளிய Hello Perl ப்ரோகிராமை இயக்குவோம்.
07:02 இந்த டுடோரியலுடன் ப்ளேயருக்கு கீழே Code Files என்ற இணைப்பில் இந்த file கொடுக்கப்பட்டுள்ளது
07:11 இந்த file ஐ தரவிறக்கி பயன்படுத்தவும்.
07:14 இந்த file ஐ என் கணினியில் users\Amol directory ல் சேமித்துள்ளேன்.
07:21 எனவே அங்கு செல்வோம்.
07:23 பின் டைப் செய்க perl sampleProgram.pl
07:28 எண்டரை அழுத்துக
07:30 காட்டப்படுவது போல command prompt ல் Hello Perl அச்சடிக்கப்படுகிறது.
07:35 சுருங்கசொல்ல.
07:37 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
07:40 PERL மீதான கண்ணோட்டம் மற்றும்,
07:43 உபுண்டு லினக்ஸ் 12.04 மற்றும் விண்டோஸ் 7 ல் PERL ஐ நிறுவுவதற்கான வழிமுறைகள்
07:50 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:54 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:58 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:03 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:10 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:15 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:23 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:29 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:38 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:50 இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
08:53 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst