Ngspice/C2/Operating-point-analysis-in-NGspice/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:54, 15 March 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Ngspiceல் “Operating point analysis" குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
00:10 operating point analysisஐ செய்வது
00:13 பின்வருவனவற்றில், ngspiceஐ பயன்படுத்தி, Kirchoff's voltage lawஐ சரி பார்ப்பது interactive mode command-line interface மற்றும் netlist fileலில் சேர்க்கப்பட்டுள்ளcommandscript.
00:24 இங்கு நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04 Operating system மற்றும் ngspice பதிப்பு 23
00:33 இந்த டுடோரியலுக்கு முன் நிபந்தனையாக, அடிப்படைelectronic circuits பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:38 அடிப்படை Ubuntu Linux மற்றும் shell commandகள் பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும்.
00:43 காட்டப்பட்டுள்ள உதாரண circuitஐ பயன்படுத்துவோம்.
00:47 Circuit மூன்று முக்கிய nodeகளை பெற்றுள்ளது-
00:52 a, b
00:55 மற்றும் c.
00:57 கூடுதலாக, reference அல்லது datum node எனப்படும் நான்காவது node, node “0” என குறிக்கப்பட வேண்டும்.
01:06 இது எந்த circuitக்கும் கட்டாயமாகும்.
01:09 Text editorல், முன்பு காட்டப்பட்டcircuit schematicக்கு தொடர்புடைய ngspice netlistஆகிய, "example1.cir" fileஐ திறப்போம்.
01:19 இதை நான் முன்பே, gedit text editorல் திறந்து விட்டேன்.
01:27 Netlist file, ".cir" extention உடன file சேமிக்கப்படுவதை கவனிக்கவும்.
01:32 Voltage source, resistor மற்றும் current source போன்ற எல்லா componentகளையும் காணலாம்.
01:41 மேலும், இவைகளை ஒன்றாக இணைக்கும் nodeகளி்ன் தகவலையும் காணலாம்.
01:46 Netlist fileலில் சேர்க்கப்பட்டிருக்கும், ".op" command, operating point analysisஐ செய்ய பயன்படுத்தப்படுகிறது.
01:54 இப்போது, interactive mode-command-line interfaceஐ பயன்படுத்தி, இந்த circuitஐ simulate செய்து, மற்றும் Kirchoff's voltage lawஐ சரி பார்ப்போம்.
02:02 Terminal வழியாக ngspiceஐ திறப்போம்.
02:06 Ubuntu desktop screenன் , மேல் இடது மூலைக்கு செல்லவும்.
02:10 Dash homeஐ க்ளிக் செய்யவும்.
02:13 Search barல், எழுதுக : terminal, பின் Enterஐ அழுத்தவும்.
02:22 இது, Terminal windowஐ திறக்கும்.
02:26 இந்த Windowஐ resize செய்கிறேன்.
02:30 இப்போது, netlist file "example1.cir", சேமிக்கப்பட்டுள்ள folderக்கு செல்கிறேன்.
02:38 பின்வருமாறு இதைச் செய்கிறேன்:
02:40 Terminalலில், டைப் செய்க: cd space Desktop slash op hyphen analysis , பின் Enterஐ அழுத்தவும்.
02:55 இப்போது, ngspice file ஐ simulate செய்வோம்.
02:59 இதை எப்படி செய்வதெனக் காண்போம்.
03:01 Terminalலில், டைப் செய்க: ngspice space example1.cir , பின் Enterஐ அழுத்தவும்.
03:17 இங்கு, நாம், ngspice command line interfaceக்குள் நுழைந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
03:23 டைப் செய்க: run, பின் Enterஐ அழுத்தவும்.
03:28 இது circuitஐ simulate செய்து, முடிவுகளை சேமிக்கும்.
03:33 மேலுள்ள simulation முடிவுகளை பயன்படுத்தி, Kirchoff's voltage lawஐ சரி பார்ப்போம்.
03:39 Kirchoff's voltage lawன் படி, வெளிப்புற loopஐ சுற்றியிருக்கும் voltage, dc voltage source V1ன் மதிப்புக்கு சமமாக இருக்க வேண்டும்.
03:51 வெளிப்புற loopஐ சுற்றியிருக்கும் voltageஐ கணக்கிடவும்.
03:54 இதற்கு, பின்வருவனவற்றை செய்வோம்:
03:59 Terminalலில், ngspice command line interfaceல்,
04:03 டைப் செய்க: print space v of a comma b plus v of b comma c plus v of c, பின் Enterஐ அழுத்தவும்.
04:21 இங்கு, v of a comma b , nodeகள் 'a' மற்றும் 'b'க்கு இடையே உள்ள, voltage dropஐ குறிக்கிறது.
04:29 Print command, அதன் வலது பக்கத்தில் குறிப்பிடபட்டுள்ள, கணக்கீடுகளின் முடிவுகளை காட்டுகிறது.
04:36 Terminalலில் கணக்கீடுகளின் முடிவுகளை கவனிக்கவும்.
04:39 காட்டப்பட்டுள்ள படி, அது, 30 volt ஆகும்.
04:42 இப்போது, DC voltage source V1, அதாவது v(a)ன் மதிப்பை கணக்கிடவும்.
04:50 டைப் செய்க: print space v of a , பின் Enterஐ அழுத்தவும்.
05:00 Terminalலில் கணக்கீடுகளின் முடிவுகளை கவனிக்கவும்.
05:04 இரண்டு முடிவுகளும் சமமாக இருந்தால், Kirchoff's voltage law சரி பார்க்கப்பட்டு விட்டது.
05:10 இரண்டு voltageன் மதிப்புகளும் சமமாக இருப்பதனால், வெளிப்புற loopகளாகிய- a, b, c மற்றும் 0க்கு Kirchhoff's Voltage law சரி பார்க்கப்படுகிறது.
05:21 இப்போது, Netlist fileலில் சேர்க்கப்பட்டிருக்கும், command scriptஐ பயன்படுத்தி, இந்த circuitஐ simulate செய்து, Kirchoff's voltage lawஐ சரி பார்ப்போம்.
05:31 மாற்றியமைக்கப்பட்ட netlist file example hyphen modified dot cir, இங்கு காட்டப்பட்டுள்ளது.
05:40 நீங்கள் காண்பது போல், command-line interfaceல் நாம் இயக்கிய எல்லா commandகளும், control statements.களாக, இந்த netlistல் சேர்க்கப்பட்டுள்ளன.
05:50 அதாவது, dot control மற்றும் dot endc statementகளுக்கு இடையே உள்ள statementகள்.
05:57 Echo command, terminal windowவில், அதன் வலது பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் textஐ echo செய்யும்.
06:04 Netlistலில், print statementகளை, நாம் சேர்த்திருப்பதை நீங்கள் காணலாம்.
06:10 இப்போது, மாற்றியமைக்கப்பட்ட netlist file, நாம் இயக்குவோம்.
06:14 Ngspice simulator environmentன் உள்ளிருந்து, netlistsimulate செய்ய, source command பயன்படுத்தப்படுகிறது.
06:22 Terminalலில் டைப் செய்க: source space example hyphen modified dot cir, பின் Enterஐ அழுத்தவும்.
06:37 இது simulationrun செய்து, KVLஐ சரி பார்ப்பதற்கு, முடிவுகளை நேரடியாக காட்டும்.
06:43 முடிவுகள், முன்பு பார்த்ததற்கு ஒப்பாக இருப்பதைக் காணலாம்.
06:48 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
06:52 Ngspice simulatorல் இருந்து வெளிவர, டைப் செய்க: quit, பின் Enterஐ அழுத்தவும்.
07:00 இப்போது, இந்த டுடோரியலில் கற்றதை சுருங்க சொல்வோம்.
07:03 இந்த டுடோரியலில் நாம் கற்றது-
07:05 கொடுக்கப்பட்டுள்ள ஒரு circuitன் operating point analysisஐ செய்வது
07:09 Netlist fileலில் சேர்க்கப்பட்டிருக்கும், command script', interactive mode-command line interface வழியாக, ngspiceஐ பயன்படுத்தி, Kirchoff's voltage lawஐ சரி பார்ப்பது.
07:20 இந்த இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
07:24 அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
07:28 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும்.
07:32 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:
07:34 ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:38 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
07:41 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்: contact at spoken hyphen tutorial dot org.
07:47 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
07:52 இதற்து ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது.
07:59 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:
08:02 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
08:09 கலந்து கொண்டமைக்கு நன்றி.
08:11 இந்த டுடோரியல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.
08:13 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது காஞ்சனா.
08:19 நன்றி.

Contributors and Content Editors

Priyacst