LibreOffice-Suite-Math/C2/Using-Greek-characters-Brackets-Steps-to-Solve-Quadratic-Equation/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 09:52, 25 October 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 LibreOffice Math குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:04 இந்த tutorial லில், பின் வருவனவற்றை கற்கலாம்:
00:08 கிரேக்க வரியுருக்கள் - alpha, beta, theta மற்றும் pi- போன்றவற்றை பயன்படுத்துதல்.
00:15 அடைப்புகுறிகள். Quadratic சமன்பாட்டைத் தீர்க படிகளை எழுதுதல்.
00:21 Math ஐ பயன்படுத்தி எப்படி கிரேக்க வரியுருக்களை எழுதுவது.
00:26 இதற்கு , நாம் முதலில் போன டுடோரியலில் உருவாக்கிய ஒரு உதாரண Writer ஆவணத்தை திறக்கலாம் - . Math example1.odt.
00:41 நாம் எழுதிய சூத்திரங்கள் உள்ள சாம்பல் பட்டியை இரட்டை சொடுக்கு சொடுக்கலாம்.
00:47 இது Math... சூத்திர திருத்தியையும் Elements சாளரத்தையும் கொண்டு வருகிறது.
00:54 சூத்திர திருத்தி விளிம்பை சொடுக்கி அதை வலது பக்கம் இழுத்துவிட அது மிதக்கும்.
01:02 இது Writer சாளரத்தை இன்னும் நன்றாக பார்க்க உதவுகிறது.
01:07 இப்போது கிரேக்க வரியுருக்கள், உதாரணமாக , alpha, beta, theta மற்றும் pi ஆகியன கணித சூத்திரங்களில் பிரபலம்.
01:16 ஆனால் இந்த வரியுருக்களை நாம் Elements சாளரத்தில் பார்க்க முடியாது.
01:21 சதவிகித குறியை எழுதி ஆங்கிலத்தில் இந்த வரியுருக்களின் பெயரை எழுதுவதன் மூலம் அவற்றை நேரடியாக எழுதலாம்.
01:30 உதாரணமாக , pi என எழுத  %pi என சூத்திர திருத்தியில் type செய்யலாம்.
01:41 கீழ் நிலை வரியுருவை எழுத, வரியுரு பெயரை கீழ் நிலை எழுத்துக்களில் எழுத வேண்டும்.
01:47 உதாரணமாக , alpha போல கீழ் நிலை எழுத்துக்களில் எழுத, %alpha அல்லது %beta போல type செய்க.
01:59 மேல் நிலை வரியுருவை எழுத, வரியுரு பெயரை மேல் நிலை எழுத்துக்களில் எழுத வேண்டும்.
02:06 உதாரணமாக gamma போல மேல் நிலை எழுத்துக்களில் எழுத, %GAMMA அல்லது %THETAபோல type செய்க.
02:17 கிரேக்க வரியுருக்களை உள்ளிட இன்னொரு வழி Tools menuவில் உள்ள Catalog ஐ பயன்படுத்துதல்.
02:26 Symbol set இன் கீழ், Greek என தேர்வு செய்க.
02:31 பட்டியலில் இருந்து ஒரு கிரேக்க எழுத்தை சொடுக்கவும்.
02:35 பட்டியலின் கீழ் கிரேக்க எழுத்துக்கான குறியீடு alpha என காட்டப்படுகிறது.
02:43 இப்படியாகத்தான் சூத்திரங்களில் கிரேக்க வரியுருக்களை நுழைக்க வேண்டும்.
02:49 ஏனைய கிரேக்க வரியுருக்களுக்கான குறிகளுக்கு குறிகள் Catalog ஐ நன்கு படிக்கவும்.
02:56 இப்போது நம் சூத்திரங்களில் Bracket களை பயன்படுத்துவதை காணலாம்.
03:01 Math க்கு ஒரு சூத்திரத்தை எந்த வரிசையில் படிக்க வேண்டும் என்று தெரியாது.
03:07 ஆகவே நாம் இந்த வரிசையை உணர்த்த Bracket களை பயன்படுத்த வேண்டும்.
03:13 உதாரணமாக ,இதை எப்படி எழுதுவது? ‘முதலில் x மற்றும் y ஐ கூட்டுக, பின் அந்த விடையால் 5 ஐ வகு’
03:22 நாம்‘ 5 over x + y ‘ என type செய்யலாம்.
03:28 இப்போது இதுதானா உண்மையில் நாம் எழுத நினைத்தது?
03:32 இல்லை, நாம் முதலில் x மற்றும் y ஐ கூட்ட நினைக்கிறோம். இதை x மற்றும் y ஐ சுற்றி முள் அடைப்புக்குறி இட்டு சாதிக்கலாம்.
03:44 அப்படியானால் குறியீடு இப்படி இருக்க வேண்டும்: ‘5 over முள் அடைப்புக்குறிகளில் x+y ’
03:52 ஆகவே அடைப்புக்குறிகளை பயன்படுத்த சூத்திரத்தின் செயல் வரிசை நிர்ணயிக்கபப்டும்.
03:58 நம் வேலையை மேலே உள்ள File menu ஐ பயன்படுத்தி பின் Save மூலம் சேமிக்கலாம்.
04:08 இப்போது Quadratic சமன்பாட்டை தீர்க்க படிகளை எழுதலாம்.
04:13 Control + Enter ஐ அழுத்தி Writer ஆவணத்தில் ஒரு புதிய பக்கத்துக்கு போகலாம்.
04:21 type செய்வோம்: ‘Solving a Quadratic equation ’
04:25 Math ஐ Insert>Object>Formula menu வழியாக அழைப்போம்.
04:33 நான் ஏற்கெனெவே quadratic சமன்பாடுகளை எழுதிவிட்டேன். நேரத்தை மிச்சப்படுத்த அவற்றை வெட்டி ஒட்டுகிறேன்.
04:42 ஆகவே இங்கே தீர்க்கப்போகும் quadratic சமன்பாடு உள்ளது, x squared - 7 x + 3 = 0
04:53 அதை தீர்க்க திரையில் காணும் quadratic சூத்திரத்தை பயன்படுத்தலாம்.
04:59 ‘Where ‘a’ is the coefficient of the x squared term, b is the coefficient of the x term, c is the constant
05:11 We can solve the equation by substituting 1 for a, -7 for b, 3 for c.
05:23 ஆகவே நாம் தீர்க்க்க வேண்டிய quadratic சமன்பாட்டுக்கு முதலில் குறியீடு எழுதலாம்.
05:30 முதலில் Math ஐ Insert>Object>Formula menu வழியாக அழைப்போம்.
05:39 Format திருத்தி சாளரத்தில் குறியீட்டை பின் வருமாறு type செய்யலாம்:
05:46 x squared minus 7 x plus 3 = 0
05:53 படிக்க எளிதாக இருக்க இரண்டு முறை newline என எழுதலாம். இது இரண்டு வெற்று வரிகளை நுழைக்கும்.
06:01 Enter செய்க, மேலும் typeசெய்க ‘Quadratic Formula ‘ Enter செய்க
06:07 சிக்கலான ஒரு சூத்திரத்தை மையத்தில் உள்ள கூறுகளுடன் முதலில் துவக்கி உடைப்பது எப்போதும் நல்லது.
06:16 அதன் பின் இந்த மூல கூறுகளை சுற்றி வேலையை கொண்டு போகலாம்.
06:21 ஆகவே நாம் மையத்தில் உள்ள square root function ஐ முதலில் எழுதுவோம்.
06:27 அதற்கு குறியீடு முள் அடைப்புக்குறிகளில் ‘square root of b squared - 4ac’ .
06:37 அடுத்து, ‘minus b plus or minus’ ஐ மேலே சொன்ன கூற்று க்கு சேர்ப்போம். அவற்றையும் முள் அடைப்புக்குறிகளில் இடுவோம்.
06:48 இன்னொரு தொகுதி முள் அடைப்புக்குறிகளை இட்டு இந்த கூற்றை விகுதி ஆக்குவோம்.
06:57 ‘over 2a’ ஐ கூற்று உடன் சேர்ப்போம்.
07:02 கடைசியாக ‘x equals’ ஐ ஆரம்பத்துக்கு சேர்ப்போம்,
07:08 ‘equal to’ குறியை சுற்றி இரண்டு நீண்ட இடைவெளியுடன்.
07:13 இதோ உங்கள் quadratic சூத்திரம்.
07:16 இப்படித்தான் சிக்கலான சூத்திரங்களை உடைத்து பகுதி பகுதியாக மீண்டும் கட்டுமானம் செய்ய வேண்டும்.
07:22 அடுத்து சூத்திர திருத்தி சாளரத்தில் மீதி உரையை பின்வருமாறு type செய்யலாம்:
07:29 ‘Where ‘a’ is the coefficient of the x squared term, b is the coefficient of the x term, c is the constant.’ இதை தொடர்ந்து newline ஒரு புதிய வரி.
07:43 மேலும் type செய்க: ‘We can solve the equation by substituting 1 for a, -7 for b, 3 for c’ இதை தொடர்ந்து இரு புதிய வரிகள். newlines.
07:59 ஆகவே இட மாற்றம் செய்த பின் குறியீடு திரையில் காண்பது போல உள்ளது.
08:05 ஆகவே சமன்பாட்டில் நாம் எண்களை வட்ட அடைப்புக்குறிகளை பயன்படுத்தி இட மாற்றம் செய்துவிட்டோம்.
08:12 இப்போது பயிற்சி:
08:15 மேற்காணும் quadratic சமன்பாட்டை தீர்க்க மீதி படிகளை பூர்த்தி செய்க.
08:20 இரண்டு விடைகளையும் தனித்தனியாக காட்டவும்.
08:23 பக்க ஒழுங்குகள் மற்றும் இடைவெளிகளை மாற்றி படிகளை ஒழுங்கு செய்யவும்.
08:28 நீண்ட இடைவெளிகளையும் புதிய வரிகளையும் தேவையான இடங்களில் பயன்படுத்துக.
08:33 பின்வரும் சூத்திரத்தை எழுதுக: pi is similar or equal to 3.14159’
08:42 இத்துடன் LibreOffice Math இல் கிரேக்க வரியுருக்கள், அடைப்புக்குறிகள் மற்றும் சமன்பாடுகள் குறித்த இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது.
08:52 சுருங்கச் சொல்ல நாம் கற்றது:
08:56 alpha, beta, theta மற்றும் pi போன்ற கிரேக்க வரியுருக்களை பயன்படுத்துதல்
09:01 Brackets. Quadratic சமன்பாட்டை தீர்க்க படிகளை எழுதுதல்.
09:07 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:12 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:20 இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது
09:24 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
09:29 தமிழாக்கம் கடலூர் திவா.
09:38 நன்றி.

Contributors and Content Editors

Priyacst