LibreOffice-Suite-Draw/C3/Flow-Charts-Connectors-Glue-Points/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:51, 6 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 LibreOffice Draw ல் Flowchartகள், Glue Pointகள் மற்றும் Bezier curveகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், Bezier curveகள் மற்றும் Flowchartகளை வரையக் கற்போம்.
00:14 Connectorகள் மற்றும் Glue pointகளை பயன்படுத்தி Flowchartகளை இணைக்கவும் கற்போம்
00:20 இங்கே நாம் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4.
00:29 Bezier Curveகள் பற்றி கற்போம்.
00:33 Bezier Curveகள் முக்கியமாக curveகளை மிருதுவாக உருவாக்க computer graphics ல் பயன்படுகிறது.
00:40 curveகளின் வடிவம் மற்றும் அளவுகளுடன் இந்த curveகளை சோதனை செய்து பார்க்கலாம்.
00:45 அனைத்து curveகளுக்கும் Start point மற்றும் End point இருக்கும்.
00:50 curve மீதான இந்த pointகள் Nodeகள் எனப்படும்.
00:54 நம் Routemap file க்கு செல்வோம்.
00:58 Home ல் இருந்து Commercial Complex க்கு செல்வோம்
01:03 அதற்கு, Parking Lotல் இருந்து செல்ல வேண்டும்
01:08 முன்னர் படத்தை group செய்தோம் என்பதை நினைவுகொள்க. எனவே அதை ungroup செய்வோம்.
01:14 இப்போது Drawing toolbar ல் Curve ல் க்ளிக் செய்து Curveஐ தேர்ந்தெடுப்போம்
01:20 Draw page ல், route ன் start point அதாவது Homeல் க்ளிக் செய்வோம்
01:27 left mouse button ஐ அழுத்திக்கொண்டு Play Ground ல் இழுப்போம்
01:32 ஒரு நேர்க்கோட்டைக் காணலாம்.
01:36 mouse button ஐ விடுவிக்கவும்.
01:39 இப்போது pointer ஐ Commercial Complexக்கு நகர்த்தவும்
01:43 mouse நகருகையில் கோடு வளையும்.
01:47 end point அதாவது Commercial Complex ல் டபுள் க்ளிக் செய்க
01:52 ஒரு curve ஐ வரைந்துள்ளோம்!
01:55 curve ன் மாற்றம் மிருதுவாக இருப்பதைக் காணலாம்.
01:59 இப்போது Edit Pointstoolbar ஐ பயன்படுத்தி இந்த curveன் pointஐ edit செய்வோம்.
02:05 curve ஐ க்ளிக் செய்க
02:07 Edit Points toolbarஐ செயல்படுத்த, curve ல் ரைட் க்ளிக் செய்து Edit Pointsஐ தேர்வு செய்க.
02:14 Curve ன் end-pointகளில் நீலநிற பெட்டிகள் தோன்றும்போது curve ஐ edit செய்யலாம்.
02:21 curveன் start point ல் க்ளிக் செய்க.
02:24 ஒரு control point உடன் dotted line ஐ காணலாம்.
02:29 இப்போது தேவைக்கேற்க curve ஐ குறைக்கவோ அதிகரிக்கவோ இந்த dotted line ஐ இழுக்கலாம்.
02:35 மாற்றத்தை செய்த பின் Draw page ல் எங்கேனும் டபுள் க்ளிக் செய்க.
02:41 ஒரு மிருதுவான curve ஐ உருவாக்குவதற்கு pointகளை சேர்க்க, நகர்த்த அல்லது நீக்க இந்த Edit Points toolbar ஐ பயன்படுத்தலாம்.
02:50 இங்கே உங்களுக்கான பயிற்சி.
02:54 Bezier curve ஐ வரைந்து Edit Points toolbar ஐ பயன்படுத்தி அனைத்து தேர்வுகளுடனும் வேலைசெய்க
03:02 இப்போது, Flowchartகளை உருவாக்க கற்போம்.
03:05 file RouteMapக்கு இரு புது பக்கங்களை சேர்ப்போம்
03:10 Drawing toolbar ல் Flowchartகளுக்கு Draw ஒரு தனி தேர்வைத் தருகிறது.
03:17 Spoken Tutorial செயல்பாட்டின் அனைத்து நிலைகளையும் இந்த flowchart காட்டுகிறது.
03:22 இந்த flowchart ஐ உருவாக்குவோம்.
03:26 Drawing toolbar ல் Flowchartsஐ க்ளிக் செய்க.
03:30 சிறிய கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்து Flowchart: Processஐ தேர்ந்தெடுப்போம்
03:37 cursor ஐ Draw page வைத்து, left mouse buttonஐ பிடித்துகொண்டு அதை கீழே இழுக்கவும்.
03:44 ஒரு Process box ஐ உருவாக்கியுள்ளோம்.
03:47 Process box ஆனது முழு செயல்பாட்டின் ஒரு படி அல்லது நிகழ்ச்சியைக் குறிக்கிறது.
03:54 flowchart objectகளில் text ஐயும் சேர்க்கலாம்.
03:59 Process box மீது டபுள் க்ளிக் செய்து அதனுள் Create the Tutorial Outline to chunk content into 10-minute scripts என டைப் செய்வோம்.
04:13 Flowcharts ன் formatting தேர்வுகள் மற்ற objectகளில் செய்வது போன்றதே.
04:20 இப்போது, Process boxனுள் text ஐ ஒழுங்கமைப்போம்.
04:24 textஐ தேர்ந்தெடுப்போம்.
04:27 Context menuஐ காண ரைட்-க்ளிக் செய்து பின் Text ஐ க்ளிக் செய்க
04:32 Text dialog box தோன்றுகிறது.
04:35 Text dialog box ல், Resize shape to fit text தேர்வை குறியிட்டு பின் OKல் க்ளிக் செய்க
04:43 textன் நீளத்திற்கேற்ப Process box ன் வடிவம் மாறியிருப்பதைக் காணலாம் !
04:49 இப்போது CTRL+Z keyகளை ஒருசேர அழுத்தி இதை undo செய்வோம்.
04:55 மீண்டும், text ஐ தேர்ந்தெடுப்போம்.
04:59 Main menu க்கு சென்று Format ஐ தேர்ந்தெடுத்து Textல் க்ளிக் செய்க
05:05 Text dialog box தோன்றுகிறது.
05:08 Word wrap text in shape தேர்வை தேர்ந்தெடுத்து பின் OKல் க்ளிக் செய்க
05:15 Process box ன் வடிவத்திற்கேற்ப text மாறியிருப்பதைக் காணலாம்.
05:21 இதேபோல, முதல் Process box க்கு கீழே மற்றொன்றை வரைவோம்.
05:28 அதனுள் text Create Scripts ஐ சேர்ப்போம்.
05:33 இப்போது, ஒரு Decision box ஐ வரைந்து அதனுள் Review Okay? என்ற text ஐ சேர்ப்போம்.
05:42 மேற்கொள்ளவேண்டிய தீர்மானத்தை Decision box குறிக்கிறது.
05:46 தீர்மானத்தின் முடிவைப் பொருத்து நம் அடுத்த செயல்பாட்டுக்கு இது வழிவகுக்கிறது.
05:52 இப்போது Decision box க்கு கீழே மற்றொரு Process box ஐ வரைவோம்.
05:58 அதனுள் Record Video என்ற text ஐ சேர்ப்போம்.
06:04 அடுத்து, இங்கே Review Okay? என்ற text உடன் மற்றொரு Decision box தேவை
06:12 ஏற்கனவே உருவாக்கிய Decision box ஐ பிரதி எடுத்து இங்கே ஒட்டுவோம்.
06:18 எனவே Decision box ஐ தேர்ந்தெடுத்து CTRL+C keyகளை ஒருசேர அழுத்துவோம்.
06:25 இப்போது CTRL+V keyகளை ஒருசேர அழுத்துவோம்.
06:29 இந்த box ஐ முன் Process box க்கு கீழே நகர்த்துவோம்.
06:35 இப்போது அதனுள் Review Okay text ஐ சேர்ப்போம்.
06:40 கடைசியாக ஒரு flowchart-connector ஐ வரைந்து அதனுள் A ஐ டைப் செய்வோம்.
06:48 ஒரு flowchart ன் இரு பகுதிகளை flowchart-connector இணைக்கிறது.
06:53 flowchart ன் ஒரு பகுதி ஒரு பக்கத்திலும்.... மற்றொரு பகுதி அடுத்த பக்கத்திலும் இருப்பதாக கொள்வோம்.
07:02 முதல் பக்கத்தில் flowchart ன் கடைசியில் ஒரு flowchart-connector ஐ வரைவோம்.
07:08 பின் அதே connector ஐ இரண்டாம் பக்கத்தின் ஆரம்பத்தில் வரைவோம்.
07:13 objectகளை இணைப்பதற்கு முன், Draw ல் Connector Lineகள் மற்றும் Glue Pointகள் பற்றி அறிவோம்.
07:21 Connectorகள் என்பவை Lineகள் அல்லது arrowகளாகும், அவற்றின் முடிவுகள் ஒரு objectக்கு இணைப்பை ஏற்படுத்தும்.
07:28 Glue pointகள் என்பவை அதன் பெயர் குறிப்பது போன்றே connectorகளை objectகளுடன் ஒட்டும் pointகள்.
07:35 அனைத்து objectகளும் glue pointகளை கொண்டுள்ளன.
07:39 அவை கண்ணுக்கு தெரியாது;
07:41 Drawing toolbar ல் இருந்து connector தேர்ந்தெடுக்கப்பட்டாலோ அல்லது ஒரு objectன் மீது mouse pointer ஐ நகர்த்தும்போதோ தான் அவை தெரியவரும்.
07:51 Glue pointகள் handleகள் போன்றவை அல்ல.
07:54 object ஐ மறுஅளவாக்க handleகளை பயன்படுத்துகிறோம்.
07:58 ஒரு objectக்கு connector ஐ ஒட்ட Glue pointகளை பயன்படுத்துகிறோம்
08:02 இப்போது, flowchart ல் connectorகளை பயன்படுத்தி objectகளை இணைப்போம்.
08:07 Drawing toolbar க்கு சென்று Connectorஐ தேர்ந்தெடுப்போம்
08:12 பல வகை Connectorகளை காண சிறிய கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்க
08:18 Straight Connector ends with Arrow தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
08:23 Connectorஐ தேர்ந்தெடுக்கும்போது, Draw page ல் அனைத்து objectகளின் மீதும் ஒரு கூட்டல் குறியைக் காணலாம்.
08:31 அவை glue pointகள்.
08:34 இப்போது முதல் process box ன் glue point ல் இருந்து அடுத்த process box ன் glue pointக்கு ஒரு கோட்டை வரைவோம்.
08:44 connectorகளை பயன்படுத்தி மேலிருந்து கீழாக flowchart ன் அனைத்து object களையும் இணைப்போம்.
08:52 cursor ஐ எங்குவைத்தாலும் ஒவ்வொரு கோடும் அதன் அருகில் உள்ள glue pointஉடன் தானாக சேர்ந்துகொள்வதை காணலாம்.
09:03 இப்போது Process மற்றும் Decision boxகளை இணைப்போம்.
09:08 Drawing toolbarல், Connector ends with Arrow தேர்வை தேர்ந்தெடுப்போம்.
09:14 Process box ல் இருந்து Decision box ஐ இணைப்போம்.
09:19 அதேபோல, Decision box ஐ, அடுத்த Process box உடன் இணைப்போம்.
09:25 connectorக்கு textஐயும் சேர்க்கலாம்
09:29 Decision box ல் இருந்து Process boxக்கு connector மீது No என டைப் செய்வோம்.
09:35 connector ஐ தேர்ந்தெடுக்க, அதன் மீது டபுள் க்ளிக் செய்க.
09:39 end control points செயலில் வந்துள்ளது.
09:43 text cursor தோன்றுகிறது.
09:46 text No என டைப் செய்வோம்
09:49 மறுபடியும் இதை மற்றொரு connectorக்கும் செய்வோம்.
09:54 ஒரு எளிய flowchartஐ உருவாக்கியுள்ளோம்!
09:57 Ctrl+S keyகளை அழுத்தி நம் flowchartஐ சேமிப்போம்.
10:03 Lineகள் மற்றும் arrowகளை பயன்படுத்தியும் objectகளை இணைக்கலாம்.
10:08 அப்படி செய்தால், objectகளை group செய்யவேண்டும்.
10:11 ஏனெனில் arrowகள் objectகளுடன் ஒட்டிக்கொள்வது இல்லை.
10:16 எப்படி Lineகள் மற்றும் Arrowகளில் இருந்து connectorகள் வித்தியாசமானவை?
10:21 ஒரு object ன்glue pointகளுடன் end pointகள் தானாகவே ஒட்டிக்கொள்ளும்படியான lineகள் அல்லது arrowகள் Connectorகள் ஆகும்
10:31 ஆனால் சாதரண Lineகள் மற்றும் Arrowகள் தானாக ஒட்டிக்கொள்ளாது.
10:36 டுடோரியலை இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்யவும்.
10:40 Spoken Tutorial flow chart ன் இரண்டாம் பகுதியை உருவாக்கவும்
10:45 process boxகளுக்கு நிறம் கொடுக்கவும்.
10:48 A என்ற ஒரு connector ஐயும் வரையவும்
10:51 அது flowchartன் முதல் object ஆக இருக்கவேண்டும்.
10:55 அது பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும் .
10:59 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
11:02 இந்த டுடோரியலில் நாம் கற்றது,: 'Flowchartகள்' Connectorகள் மற்றும் Glue pointகள்
11:09 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
11:13 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
11:17 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
11:22 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
11:28 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
11:32 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:40 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:45 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:53 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken hyphen tutorial dot org slash NMEICT hyp hen Intro
12:05 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst