LibreOffice-Suite-Base/C4/Database-Design-Primary-Key-and-Relationships/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:32, 6 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு
00:04 நம் முந்தைய tutorial, Database Design ன் தொடர்ச்சியே இந்த tutorial.
00:10 இங்கே பின்வருவனவற்றைக் கற்போம்
00:13 4. தகவல் itemகளை columnகளுக்கு மாற்றுதல்
00:17 5. primary keys ஐ குறிப்பிடுதல்
00:20 6. table relationship களை அமைத்தல்
00:23 கடைசி tutorial லில், எளிய Library application க்கு database design செயல்முறையை ஆரம்பித்தோம்
00:30 முதலில் Library database ஐ கட்டமைப்பதற்கான நோக்கத்தை தீர்மானித்தோம்.
00:36 பின் library பற்றிய தகவல்களை கண்டுபிடித்தல் மற்றும் ஒழுங்கமைக்கும் செயல்முறையைத் தொடர்ந்தோம் பின்
00:44 இந்த தகவல்களை Table களாக பிரித்தோம்
00:49 அவ்வாறு Library database ல் Books, Authors, Publications மற்றும் Members ஆகிய நான்கு table களைக் கண்டுபிடித்திருந்தோம்
01:00 இப்போது தகவல் item களை column களாக மாற்றும் அடுத்த படிக்கு போகலாம்
01:07 ஒவ்வொரு table லிலும் சேமிக்க விரும்பும் தகவல் item ஐ முடிவு செய்வோம்
01:13 நாம் முன்னரே கண்டுபிடித்த ஒவ்வொரு தகவல் item மும்... ஒரு field ஆக மாறி table லில் column ஆக காண்கிறது
01:23 திரையில் காட்டப்பட்ட image போல Books table... 5 columnகளை கொண்டுள்ளது. அவையும் fields எனப்படும்
01:31 ஒரு row அல்லது record அதனுடைய column த்தில் ஒரு புத்தகத்தின் தகவலை மட்டுமே கொண்டுள்ளது
01:40 அதேபோல் Authors table ல் உள்ள ஒவ்வொரு record உம் ஒரு ஆசிரியர் பற்றிய தகவலை மட்டுமே கொண்டுள்ளது
01:49 மேலும் Publishers table ல் உள்ள ஒவ்வொரு record உம் ஒரு வெளியீட்டாளர் பற்றிய தகவலை மட்டுமே கொண்டுள்ளது
01:58 இப்போது இந்த column களை நம் தேவைகளுக்கு ஏற்ப மேலும் துல்லியப்படுத்தலாம்
02:04 உதாரணமாக, Author name ஐ First Name மற்றும் Last Name என பிரிக்கமுடியும், இதனால் இந்த column கள் மூலம் தேடலாம் அல்லது அடுக்கலாம்
02:17 tableகளில் தனி column களாக கணக்கீடுகளின் தீர்வை சேமிக்க வேண்டியதில்லை
02:24 ஏனெனில் எப்போது தீர்வை நாம் காண நினைத்தாலும் Base ஆல் கணக்கீடுகளை செயல்படுத்த முடியும்
02:31 இப்போது நமக்கு tables மற்றும் columns பற்றி நன்கு தெரியும், அடுத்து primary keys ஐ குறிப்பிடுவதைக் கற்போம்
02:41 primary key என்றால் என்ன?
02:44 table ல் சேமித்த ஒவ்வொரு row ஐயும் தனிப்பட்டமுறையில் அடையாளம் காணும் ஒரு column அல்லது பல column களைக் ஒவ்வொரு table உம் கொண்டிருக்கும்
02:54 இது போன்ற ஒரு column அல்லது பல columnகள் table ன் primary key எனப்படும்
03:00 இது Book Id அல்லது Author Id போல பெரும்பாலும் தனிப்பட்ட அடையாள எண் ஆகும்
03:08 பல tableகளில் இருந்து logical related data ஐ விரைவாக தொடர்புபடுத்தி ஒன்றுசேர்த்து கொண்டுவர primary key fieldகளைப் பயன்படுத்தலாம்
03:21 மேலும் primary key ல் போலி மதிப்புகளும் கிடையாது
03:26 உதாரணமாக, நபர்களின் பெயர்களுக்கு primary key ஐ பயன்படுத்த முடியாது, ஏனெனில் பெயர்கள் தனித்துவமானவை அல்ல
03:34 இரண்டு நபர்கள் ஒரே பெயருடன் ஒரே table ல் இருக்கலாம்
03:40 அடுத்து primary key க்கு எப்போதும் ஒரு மதிப்பு இருக்க வேண்டும்
03:45 அது empty அல்லது Null எனில், அதை primary key ஆக எடுத்துக்கொள்ள முடியாது
03:52 Base தானாக உருவாக்கும் ‘AutoNumber’ ஐ column ன் data type ஆக அமைப்பதன் மூலம் எப்போதும் ஒரு மதிப்பை வைத்திருக்க primary key column ஐ அமைக்கமுடியும்
04:09 திரையில் காணும் image போல, பின்வருமாறு primary key ஐ நம் tableகளுக்கு அமைக்க முடியும்
04:20 Books table க்கு BookId,
04:24 Authors table க்கு AuthorId,
04:28 Publishers table க்கு PublishersId
04:33 அதேபோல், MemberId, Members table க்கு primary key ஆக இருக்கும்
04:42 கடைசியாக primary keys ஐ tableகளுக்கு அமைப்பதன் மூலம், Entity Integrity ஐ செயல்படுத்துகிறோம்
04:52 Entity Integrity, table க்குள் duplicate records இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது
05:00 ஒவ்வொரு record உம் table க்குள் unique ஆகவும் null ஆக இல்லை எனவும் அடையாளம்காணும் field ஐயும் இது உறுதிப்படுத்துகிறது
05:10 இப்போது நம்மிடம் இந்த 3 table களுக்கும் primary keys உள்ளன. relationships ஐ அமைப்பதன் மூலம் அவற்றை ஒன்றாக கொண்டுவரலாம்
05:20 இந்த கோட்பாட்டை Base ஆதரிப்பதால், Base ஒரு Relational Database Management System என அழைக்கப்படுகிறது, சுருக்கமாக RDBMS
05:32 relationships ல் சில வகைகள் உள்ளன. இப்போது அவற்றைக் காண்போம்
05:37 முதலில் One-to-Many relationship ஐ காணலாம்
05:43 இப்போது image ல் காணும் Books மற்றும் Authors tableகளை கருத்தில் கொள்வோம்
05:49 ஒரு புத்தகம் ஒரே ஒரு ஆசிரியரால் எழுதப்படுகிறது
05:55 இரண்டு அல்லது பலபேர் ஒரே புத்தகத்திற்கு இணைஆசிரியராக இருக்க முடியும்
06:02 ஆனால் நம் உதாரணத்திற்கு ஒரு புத்தகத்திற்கு ஒரு ஆசிரியர் என்றே நிறுத்திக்கொள்வோம்.
06:10 நம் உதாரணத்துடன் தொடர்ந்து, ஒரு ஆசிரியர் பல புத்தகங்களையும் எழுதலாம்
06:17 எனவே Authors table ல் இருக்கும் ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட பல புத்தகங்கள் Books table ல் இருக்கலாம்
06:28 அதனால் இது ஒரு one-to-many relationship.
06:32 இதை நம் Library database ல் குறிக்கலாம்
06:36 Authors table க்கு primary key ஆக இருக்கும் Author Id ஐ எடுத்து Books table க்கு சேர்க்க வேண்டும். அவ்வளவுதான்
06:46 Books table ல் இருக்கும் Author Id, Foreign key எனப்படும்
06:53 அதேபோல் Publishers table க்கு primary key ஆக இருக்கும் Publisher Id ஐ Books table க்கு சேர்ப்பதன் மூலம் foreign key ஆக மாறும்
07:06 ஒரு column அல்லது columnகளின் தொகுப்பை பகிர்வதன் மூலம் database ல் one-to-many relationships ஐ குறிக்கலாம்
07:17 Foreign keys ஐ பயன்படுத்தி table relationships அமைக்கப்படும்
07:23 எனவே relationship ஐ உருவாக்க ஒரு table ன் primary key மற்றொரு table ன் foreign key ஆக குறிப்பிடப்படும்
07:34 அதன் மூலம் Referential integrity ஐ செயல்படுத்துகிறோம்
07:39 அதாவது table ல் ஒவ்வொரு foreign key மதிப்பும், தொடர்புடைய tableகளில் பொருந்தும் ஒரு primary key மதிப்பைக் கொண்டிருக்கும்
07:50 அடுத்து Many-to-Many relationship ஐ காணலாம்
07:56 இப்போது table design க்கு போகலாம்
07:59 ஒரு புத்தகம் library ன் பல உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படலாம் (பல பிரதிகள் உள்ளன எனக் கொள்க).
08:09 அதேபோல் ஒரு உறுப்பினர் பல புத்தகங்களை வாங்கலாம் (ஆம், பல புத்தகங்கள் உள்ளன எனக் கொள்க).
08:17 இங்கே பல உறுப்பினர்களுக்கு பல புத்தகங்களைக் கொடுக்கும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்
08:25 இது ஒரு Many-to-many relationship ஐ குறிக்கும்
08:35 எனவே Junction table என அழைக்கப்படும் மூன்றாவது table ஆன BooksIssued table ஐ உருவாக்குவதன் மூலம் இந்த many-to-many relationship ஐ நம் database ல் குறிப்பிடலாம்
08:45 மேலும் இங்கே , Books மற்றும் Members என்ற இரண்டு tableகளில் இருந்தும் primary keyகளை BooksIssued table னுள் நுழைக்கலாம்
08:57 அதனால், BooksIssued table ஒவ்வொரு புத்தகமும் உறுப்பினருக்குக் கொடுப்பதை பதிவுசெய்கிறது
09:05 மூன்றாவது junction table ஐ உருவாக்குவதன் மூலம், many-to-many relationships ஐ குறிப்பிடலாம்
09:13 கடைசியாக One-to-one relationship.
09:18 சிலசமயம் மிக அரிதாக data நிரப்பபடும் சில data க்கு குறிப்பிட்ட attributes அல்லது columns உள்ளன
09:30 ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் website address ஐ வைத்திருப்பதாக கொள்வோம்.
09:38 Authors table ல் புது website column பெரும்பாலும் காலியாகவே விட்டு disk space ஐ குறைக்கலாம்
09:47 எனவே இந்த column ஐ supplemental table க்கு நகர்த்தலாம். அதன் primary key... Author Id போலவே இருக்கும்
09:58 supplemental table ன் ஒவ்வொரு record உம் main table ன் சரியாக ஒரு record உடன் ஒத்திருக்கும்
10:06 இதுவே One-to-one relationship.
10:10 நம் database ல் relationships ஐ அமைக்க கற்றோம்
10:15 LibreOffice Base ல் Database Design மீதான tutorials ன் இரண்டாம் பாகம் இத்துடன் முடிகிறது
10:23 இந்த tutorial லில் நாம் கற்றது
10:28 4. தகவல் itemகளை columnகளுக்கு மாற்றுதல்
10:32 5. primary keys ஐ குறிப்பிடுதல்
10:34 6. table relationshipகளை அமைத்தல்
10:38 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:58 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst