Java/C3/Calling-methods-of-the-superclass/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:01, 11 December 2017 by Aishwarya raman (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 வணக்கம். Calling methods of the super class குறித்த spoken-tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த tutorialஇல் நாம் கற்றபோவது
00:11 super keywordஐ எப்போது பயன்படுத்துவது
00:14 super classஇன் methodகளை எவ்வாறு அழைப்பது
00:17 super classஇன் constructor ஐ எவ்வாறு செயலாக்கம் செய்வது
00:22 இதற்கு நாம் பயன்படுத்துவது: Ubuntu பதிப்பு 12.04, JDK 1.7 மற்றும் Eclipse 4.3.1
00:32 இந்த tutorialஐ தொடர Java மற்றும் Eclipse IDE தெரிந்திருக்க வேண்டும்
00:39 மேலும் நீங்கள் Java வில் subclassing மற்றும் method overriding குறித்தும் தெரிந்துருத்தல் அவசியம்
00:45 தெரியாவிட்டால், அதற்கான tutorials ஐ, எங்கள் வலைதளத்தில் காணவும்
00:51 ஒரு subclass , superclassஇன் data அல்லது method ஐ, super keyword மூலம் பயன்படுத்தலாம்


00:58 super keyword என்பது parent classஇன் instance variableஐக் குறிக்கிறது. parent class constructor மற்றும் parent class method ஆகியவற்றை செயலாக்கம் செய்ய பயன்படுகிறது
01:13 இப்போது நாம் IDE இனுள் சென்று, முன்பு உருவாக்கிய project ஐ பார்ப்போம் .
01:19 Manager classக்கு வருவோம்
01:22 getDetails() methodஐக் காணுங்கள்.
01:26 return statement இல், Name மற்றும் Email ஐ நீக்குவோம்.
01:32 இப்போது Employee class க்கு வருவோம்.
01:36 இதுவே parent class அல்லது super class எனப்படுகிறது.
01:41 இங்கு ஏற்கனவே getDetails() method உள்ளது.
01:46 இந்த method, name மற்றும் email ஐ பெற்றுத் தரும்
01:51 எனவே இந்த getDetails() methodஐ Manager class இல் பயன்படுத்தலாம்
01:57 இப்போது Manager class உள்ளிருந்து, Employee classஇன் getDetails() method ஐ அழைக்கலாம்
02:04 எனவே manager class இன் getDetails() method க்கு வரவும்
02:10 return statement இனுள் type செய்க: super dot getDetails() plus slash n Manager of getDepartment().
02:22 இப்போது program ஐ run செய்கிறேன்.
02:25 Manager குறித்த விவரங்கள், நமக்கு கிடைத்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வாறு superclassஇன் methodஐ subclassஇன் உள்ளிருந்து அழைக்கலாம் .
02:36 இப்போது Employee classக்கு வருவோம்
02:41 இங்கே ஒரு constructor ஐ புகுத்தலாம்
02:44 எனவே Employee classஇனுள் type செய்க: “public space Employee அடைப்புக்குறிகளுக்குள் String name, String email_address .
02:59 this dot name is equal to name semicolon

this dot email_address is equal to email_address

03:17 இப்போது setter மற்றும் getter methodகளை comment செய்து, செயலிழப்பு செய்வோம் .
03:23 getDetails() method இனுள்

getName க்கு பதிலாக, name என type செய்க

getEmail க்கு பதிலாக, email_address என type செய்க

03:37 ஒருsubclass , parent classஇன் அனைத்து methodகள் மற்றும் variableகளையும் எடுத்துக் கொள்ளும்
03:44 அது constructors இலிருந்து எதனையும் பெறாது என்பதை கவனிக்கவும்
03:49 ஆனால், constructors அதனுடைய superclassஇலிருந்து non-private constructors ஐ அழைக்கலாம்.
03:55 இவ்வாறு செய்வதற்கு super எனும் keywordஐ, child class constructorஇலிருந்து பயன்படுத்த வேண்டும்
04:01 அதனை இப்போது பார்க்கலாம்
04:04 அதற்கு Manager class க்கு வரவும். நாம் இங்கு ஒரு constructor ஐ புகுத்தலாம்.
04:10 எனவே type செய்க :: public space Manager அடைப்புக்குறிகளுக்குள் String space name comma String space email underscore address comma String space dept .
04:30 பின்னர் பெரிய அடைப்புக்குறிகளுக்குள், type செய்க: super அடைப்புக்குறிகளுக்குள் name, email underscore address semicolon.
04:44 பின்னர் type செய்க : department is equal to dept semicolon.
04:51 இப்போது setter மற்றும் getter methodகளை comment செய்வோம்,
04:56 அடுத்து,getDetails() method இல், getDepartment க்கு பதிலாக department எனtype செய்யவும்
05:05 இப்போது TestEmployee class க்கு வரவும்.
05:09 setter methods ஐ அழைக்கும் முறையை comment செய்து செயலிழப்பு செய்யவும்
05:15 இப்போது Manager constructor இன் அழைப்பிற்குள் type செய்க, மேற்கோள் குறியீட்டினுள் Nikkita Dinesh, abc@gmail.com, Accounts
05:32 Program ஐ run செய்யவும்.
05:35 இங்கு காண்பது போல் Manager குறித்த தகவல்களை outputஆகப் பெற்றுள்ளோம்
05:40 இவ்வாறு நாம் super classஇன் constructorஐ அழைக்கலாம்
05:45 இந்த spoken tutorialஇல் நாம் கற்றது :

super keyword super class இன் methodகளை அழைப்பது super class இன் constructorஐ செயலாக்கம் செய்வது

05:56 ஒரு Assignment ஆக - முன்பு செய்த assignment ஐ திறந்து, Bike class இலிருந்து, Vehicle class run method ஐ அழைக்கவும்
06:04 The Vehicle is running.

The Bike is running safely என்பது outputஆக இருத்தல் வேண்டும்

06:10 Spoken tutorial திட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள, இந்த தொடுப்பில் உள்ள வீடியோவைக் காணலாம்
06:17 இது spoken tutorial திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணுங்கள்.
06:26 Spoken Tutorial திட்டக்குழு, spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
06:42 Spoken Tutorial பாடங்கள் Talk to a Teacher திட்டத்தின் முனைப்பாகும்.
06:46 இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், இதற்கு ஆதரவு தருகிறது
06:54 இந்த கல்வித் திட்டம் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு:

http://spoken-tutorial.org/NMEICT- Intro

07:05 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா

நன்றி.

Contributors and Content Editors

Aishwarya raman, Priyacst