Java-Business-Application/C2/Creating-and-viewing-inventories/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:52, 17 April 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 கையிருப்பு பட்டியலை(inventory) உருவாக்குதலும் காணுதலும் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:09 admin பக்கத்திற்கு redirect செய்ய login பக்கத்தை மாற்றுதல்
00:14 அனைத்து புத்தக தகவல்களையும் கொண்டுவருதல்
00:17 கடன்வாங்கப்பட்ட புத்தக தகவல்களை கொண்டுவருதல்
00:20 login செய்யப்பட்ட பயனரால் கடன்வாங்கப்பட்ட புத்தகங்களை காட்டுதல்.
00:25 இங்கே நாம் பயன்படுத்துவது
00:27 Ubuntu பதிப்பு 12.04
00:29 Netbeans IDE 7.3
00:32 JDK 1.7
00:34 Firefox web-browser 21.0.
00:38 உங்களுக்கு விருப்பமான எந்த web-browser ஐயும் பயன்படுத்தலாம்.
00:42 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டியவை
00:45 Java Servletகள் மற்றும் JSPகளுக்கான அடிப்படை
00:50 Database... மற்றும் fieldகளை மதிப்பிடுதல்.
00:53 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
00:57 இப்போது Netbeans IDEக்கு வருவோம்
01:01 Books table ஐ உருவாக்கியுள்ளேன்
01:04 table ல் வெவ்வேறு field களை காணலாம்
01:08 இந்த tableல் 10 புத்தகங்களை உள்ளிட்டுள்ளேன்
01:12 கடன் வாங்கப்பட்ட புத்தகங்களை சேமிக்க Checkout ஐ உருவாக்கியுள்ளேன்.
01:18 Checkout table னுள் 5 உள்ளீடுகளை சேர்த்துள்ளேன்.
01:24 Book மற்றும் Checkoutக்கு ஒரு model ஐயும் உருவாக்கியுள்ளேன்
01:29 Book.java என்பது ஒரு book model.
01:32 Checkout.java என்பது ஒரு checkout model.
01:37 இப்போது browserக்கு வருவோம்.
01:40 admin ஆக login செய்வோம்
01:43 எனவே admin ஆக username ஐயும் password ஐயும் டைப் செய்து Sign In மீது க்ளிக் செய்கிறேன்
01:51 Admin Section Pageக்கு வருகிறோம் என்பதை காணலாம்
01:55 இந்த பக்கத்திற்கு திரும்ப வருவோம். இப்போது Netbeans IDEக்கு போவோம்
02:02 Admin Pageக்கு செல்ல GreetingServlet ஐ எவ்வாறு மாற்றினோம் என்பதை காண்போம்
02:08 GreetingServlet.java ஐ காண்போம்
02:13 இங்கே username மற்றும் password ஆனது adminக்கு சமமா என சோதிக்கிறோம்
02:19 ஆம் எனில், adminsection.jspக்கு செல்கிறோம்
02:25 நாம் ஏற்கனவே RequestDispatcher ஐ பயன்படுத்தி மற்றொரு பக்கத்திற்கு எவ்வாறு forward செய்வது என்பதை பார்த்தோம்
02:32 இப்போது browserக்கு திரும்ப வருவோம்
02:35 இங்கே இரு தேர்வுகள் உள்ளன.
02:37 List Books க்கான radio button மீது க்ளிக் செய்வோம்
02:41 பின் Submit பட்டன் மீது க்ளிக் செய்வோம்
02:44 இங்கே அனைத்து புத்தகங்களின் பட்டியலையும் நாம் கொண்டுள்ளதை காணலாம்
02:49 Book Id, BookName,Author Name, ISBN, Publisher, Total Copies மற்றும் Available copies போன்ற அனைத்து தகவல்களையும் இது கொண்டுள்ளது
02:59 இப்போது இது எவ்வாறு செய்யப்பட்டது என காட்டுகிறேன்.
03:03 IDE க்கு வருவோம்
03:05 இப்போது adminsection dot jspக்கு வருவோம்
03:10 இங்கே இரு radio பட்டன்களை கொண்டுள்ளோம்
03:14 முதலாவது அனைத்து புத்தகங்களையும் பட்டியலிட
03:19 அதை adminsection dot jsp ல் காணலாம் form action equal to AdminSection என உள்ளது.
03:28 இப்போது AdminSection dot java ஐ திறப்போம்
03:32 இங்கே இது நாம் க்ளிக் செய்த தேர்வை சோதிக்கிறது.
03:36 List Books மீது நாம் க்ளிக் செய்தோம்.
03:39 எனவே query ன் இந்த பகுதி இயக்கப்படும்.
03:44 Books table ல் இருந்து புத்தகங்களை கொண்டுவர இந்த query இயக்கப்படுகிறது
03:49 அடுத்து புத்தகங்களின் தகவல்களை சேமிக்க ArrayList ஐ உருவாக்குகிறோம்
03:55 பின் result set மூலம் iterate செய்கிறோம்
03:59 Book object ஐ உருவாக்குகிறோம்
04:03 Book object னுள் BookId ஐ அமைக்கிறோம்
04:08 அதேபோல Book Object னுள் புத்தகத்தின் மற்ற attributeகளையும் அமைப்போம்
04:16 பின் books list னுள் book object ஐ சேர்ப்போம்.
04:21 பின் request னுள் ArrayList books ஐ அமைப்போம்
04:26 RequestDispatcher ஐ பயன்படுத்தி listBooks.jsp க்கு request ஐ forward செய்வோம்
04:33 இப்போது listBooks.jsp க்கு வருவோம்
04:38 இந்த பக்கத்தில் புத்தகங்களின் பட்டியலை admin காணலாம்.
04:43 இங்கே, booksrequest ல் இருந்து பெறுகிறோம்.
04:48 இந்த HTML table புத்தகங்களின் தகவல்களைக் காட்டும்.
04:54 எனவே book list ன் மூலம் iterate செய்வோம்.
04:58 இங்கே புத்தகத்தின் BookId ஐ காட்டுகிறோம்.
05:02 அதேபோல புத்தகத்தின் மற்ற attributeகளையும் காட்டுகிறோம்.
05:07 இவ்வாறுதான் புத்தகங்களின் பட்டியலை காட்டுகிறோம்.
05:11 இப்போது browser க்கு வருவோம்.
05:14 List Borrowed Books மீது க்ளிக் செய்க
05:17 Submit மீது க்ளிக் செய்க
05:20 கொடுக்கப்பட்ட அனைத்து புத்தகங்களின் பட்டியலை பார்க்கிறோம்.
05:24 Transaction Id, Book Id மற்றும் Username போன்ற தகவல்களை இது கொண்டுள்ளது
05:29 இப்போது IDE க்கு திரும்ப வந்து
05:32 அதற்கான code ஐ காட்டுகிறேன்.
05:35 AdminSection.java க்கு செல்க
05:38 List Borrowed Books மீது க்ளிக் செய்துள்ளோம்
05:42 எனவே menuSelection is equal to List Borrowed books.
05:47 படிகள் List Booksக்கு நாம் பார்த்தது போன்றதே
05:53 கடன் வாங்கப்பட்ட புத்தகங்களின் தகவல்களை Checkout table ல் இருந்து கொண்டுவர இந்த query ஐ இயக்குகிறோம்
05:59 பின் கடன்வாங்கப்பட்ட புத்தகங்களின் மூலம் iterate செய்து.
06:02 பின் அதை checkout attribute ஆக request னுள் அமைக்கிறோம்.
06:07 இப்போது listBorrowedBooks.jspக்கு வருவோம்
06:12 இங்கே request ல் இருந்து checkout ஐ பெறுகிறோம்.
06:17 Checkout list வழியே iterate செய்து
06:20 இங்கே Checkout ன் attribute களை காட்டுகிறோம்
06:25 இவ்வாறுதான் கடன் வாங்கப்பட்ட புத்தகங்களை காட்டுகிறோம்
06:28 இப்போது browserக்கு வருவோம்
06:30 borrowed books பக்கத்தில் மேலும் ஒரு list உள்ளது
06:36 திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய தேதியை கடந்த புத்தகங்களின் பட்டியல்
06:43 code ஐ காண IDE க்கு திரும்ப வருவோம்.
06:46 இது Borrowed Booksக்கு நாம் செய்தது போன்றதே
06:50 SQL query ல் மட்டுமே வேறுபாடு உள்ளது
06:56 query ல் நாம் கொடுக்கும் நிபந்தனை, return_date less than now() order by transaction_Id.
07:05 இப்போது சாதாரண பயனருக்கான interface(இடைமுகம்) ஐ காட்டுகிறேன்.
07:10 எனவே browser க்கு வருவோம்
07:12 login பக்கத்திற்கு வருவோம்
07:15 mdhusein என login செய்கிறேன்
07:20 password ஆக welcome
07:22 Sign In மீது க்ளிக் செய்க
07:25 Success Greeting Page ஐ பெறுகிறோம்
07:28 இது பயனரால் தற்சமயம் வாங்கப்பட்ட புததகங்களை கொண்டுள்ளது
07:32 Transaction Id, User Name, Book Id மற்றும் Return Date போன்ற தகவல்களை கொண்டுள்ளது
07:39 இப்போது IDE க்கு திரும்ப வருவோம்
07:43 இப்போது GreetingServlet.java க்கு செல்வோம்
07:47 கொடுக்கப்பட்ட புத்தகங்களை admin க்கு நாம் செய்தது போன்றே காட்டுவோம்.
07:53 வித்தியாசம் என்னவென்றால் இங்கே login செய்யப்பட்ட பயனருக்கான புத்தகங்களை காட்டவேண்டும்.
08:02 எனவே இந்த வரியில் இருந்து username ஐ பெறுகிறேன்.
08:05 பின் username is equal to loginசெய்யப்பட்ட பயனர் என்ற நிபந்தனையுடன் கடன்வாங்கப்பட்ட புத்தகங்களின் தகவல்களை கொண்டுவருகிறோம்.
08:14 எனவே அந்த பயனருக்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலைப் பெறுகிறோம்.
08:20 பின் successGreeting dot jsp ல் அந்த பட்டியலைக் காட்டுவோம்.
08:27 இவ்வாறுதான் உங்கள் successGreeting dot jsp காணப்படும்.
08:32 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
08:35 admin பக்கத்திற்கு redirect செய்ய Login பக்கத்தை மாற்றுதல்
08:39 புத்தக தகவல்களை கொண்டுவருதல்
08:42 கடன் வாங்கப்பட்ட புத்தகங்களின் தகவல்களை கொண்டுவருதல்
08:45 login செய்யப்பட்ட பயனரால் கடன்வாங்கப்பட்ட புத்தகங்களை காட்டுதல்.
08:50 ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் .
08:56 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:59 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:04 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:09 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:13 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:20 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:24 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:30 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
09:40 இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது .
09:49 இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது
09:53 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst