Difference between revisions of "Inkscape/C2/Basics-of-Bezier-Tool/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 15: Line 15:
 
|வளைந்த கோடுகளை வரைதல்
 
|வளைந்த கோடுகளை வரைதல்
 
|-
 
|-
| 0013
+
| 00:13
 
| nodeகளை சேர்த்தல், மாற்றுதல் மற்றும் நீக்குதல்.
 
| nodeகளை சேர்த்தல், மாற்றுதல் மற்றும் நீக்குதல்.
 
|-
 
|-

Latest revision as of 15:03, 6 April 2017

Time Narration
00:01 Inkscapeல் “Bezier toolன் அடிப்படைகள்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் கற்க போவது
00:08 நேர்க்கோடுகள் மற்றும் மூடிய வடிவங்களை வரைதல்
00:11 வளைந்த கோடுகளை வரைதல்
00:13 nodeகளை சேர்த்தல், மாற்றுதல் மற்றும் நீக்குதல்.
00:15 இந்த டுடோரியலுக்கு பயன்படுத்துவது
00:18 Ubuntu Linux 12.04
00:21 Inkscape 0.48.4
00:24 அனைத்து toolகளையும் விளக்க ஏதுவாக அதிக resolution modeல் இந்த டுடோரியலை பதிவு செய்கிறேன்.
00:32 Inkscapeஐ திறப்போம்
00:35 முதலில் Bezier tool ஐ பயன்படுத்தி ஒரு நேர்க்கோட்டை உருவாக்க கற்போம்
00:39 Pencil toolக்கு கீழே Bezier tool உள்ளது
00:42 அதை க்ளிக் செய்வோம்.
00:44 மேல் இடப்பக்கம் Tool controls bar ல் உள்ள 4 தேர்வுகளைக் காணவும்.
00:48 bezier curveஐ வரைவதில் 4 முறைகள் உள்ளன.
00:51 முன்னிருப்பாக, Create regular bezier path தேர்வு செயலில் உள்ளது.
00:57 canvas ல் க்ளிக் செய்து cursorஐ மற்றொரு பக்கமாக நகர்த்தவும்.
01:01 மீண்டும் க்ளிக் செய்க. வரையப்பட்ட கோடு பச்சை நிறத்தில் இருப்பதைக் காண்க.
01:07 கோட்டை முடிக்க இப்போது right-click செய்க.
01:11 கோட்டின் இரு முடிவு புள்ளிகளும் nodeகள் எனப்படும் அவை பற்றி பின்னர் காண்போம்.
00:17 அடுத்து, ஒரு முக்கோணத்தை வரைவோம்.
01:21 முதலில் ஒரு சாய்க்கோட்டை வரைவோம். மீண்டும் க்ளிக் செய்து அந்த கோணத்தில் மற்றொரு கோட்டை வரைவோம்.
01:27 இப்போது முக்கோணத்தை முடிக்க மீண்டும் க்ளிக் செய்து மூன்றாம் கோட்டை வரைந்து ஆரம்ப node ல் அதை இணைக்கவும்.
01:34 அடுத்து, bezier toolஐ பயன்படுத்தி ஒரு வளைந்த கோட்டை வரைவோம்
01:38 ஒரு நேர்க்கோட்டை வரைய canvasல் க்ளிக் செய்க. மீண்டும் க்ளிக் செய்து அப்படியே நிறுத்தி cursorஐ இழுத்து ஒரு வளைவை வரையவும்.
01:46 வளைவை முடிக்க ரைட் க்ளிக் செய்க.
01:48 இதேபோல, canvasல் மேலும் பல வளைவுகளை வரையவும்.
01:55 இந்த படிகளை நினைவுகொள்க- க்ளிக் செய்து நேர்க்கோட்டை வரையவும்.
01:59 மீண்டும் க்ளிக் செய்து, நிறுத்தி வளைவை உருவாக்க இழுக்கவும்.
02:03 பின் வளைவை முடிக்க ரைட் க்ளிக் செய்யவும்.
02:06 மேலும் செல்வதற்கு முன் Ctrl + Aஐ அழுத்தி பின் canvas ஐ துடைக்கவும்.
02:11 அடுத்து ஒரு மூடிய வளைவுப் பாதையை உருவாக்க கற்போம்.
02:15 முதலில் canvasல் ஒரு வளைவுக் கோட்டை வரைவோம்.
02:18 பின் mouseஐ விடுவித்து வளைவு கோட்டின் முடிவு nodeல் இருந்து cursor ஐ சற்று விலக்கவும்.
02:23 சிவப்பு நிற வளைவு பாதையைக் காண்கிறோம்.
02:27 மீண்டும் க்ளிக் செய்து cursorஐ நகர்த்தினால், சிவப்பு நிற நேர் பாதையைக் காணலாம். இதை வளைக்க க்ளிக் செய்து இழுக்கவும்.
02:36 மீண்டும் கடைசி nodeல் நாம் நகர்த்துகையில் கோடு வளைகிறது.
02:41 மீண்டும் க்ளிக் செய்து ஒரு சிவப்பு நிற நேர் பாதையைக் காண்கிறோம். நேர் கோட்டை வளைக்க க்ளிக் செய்து இழுக்கவும்
02:50 மீண்டும் முடிவு nodeல் நாம் நகர்த்துகையில் கோடு வளைகிறது. cursorஐ நகர்த்தி ஆரம்ப nodeக்கு சென்று பாதையை மூடவும்.
02:59 Tool controls barக்கு செல்க modeன் இரண்டாம் icon ஐ க்ளிக் செய்க. இது சுழல் பாதைகள் மற்றும் ஒழுங்கற்ற வடிவங்களை உருவாக்க உதவுகிறது.
03:08 சில ஒழுங்கற்ற வளைவுகளை வரைந்து பாதையை மூடவும்.
03:15 அது நெருங்கிய சுழல் வடிவமாக மாறுவதைக் காண்க. இப்போது canvasஐ துடைக்கிறேன்.
03:22 மூன்றாம் icon நேர்க்கோடுகளை மட்டும் உருவாக்குகிறது. அதை க்ளிக் செய்து canvas ல் கோடுகளை வரையவும்
03:29 இந்த modeல் வளைந்த கோடுகளை வரைய முடியாது என்பதைக் காண்க.
03:32 நேரான பக்கங்களைக் கொண்ட முக்கோணங்கள் அல்லது பலகோணங்களை வரையலாம்.
03:40 கடைசி iconஐ க்ளிக் செய்து canvasல் வரைக
03:44 இந்த modeல், இணை மற்றும் செங்குத்து கோடுகளை மட்டும் வரையலாம் அதாவது செங்குத்து அல்லது கிடைமட்ட கோடுகள்.
03:52 எனவே, இந்த modeல் சதுரங்கள் மற்றும் செவ்வகங்களை வரையலாம்.
03:58 வரைந்த அனைத்து வடிவங்களையும் நீக்குகிறேன்.
04:02 ஒரு குறிப்பிட்ட வடிவில் கோடுகள் அல்லது வளைவுகளை வரைய Shape தேர்வு உதவுகிறது.
04:07 drop down buttonஐ க்ளிக் செய்க.
04:09 இங்கே 5 தேர்வுகள் உள்ளன- None, Triangle in, Triangle out, Ellipse, From clipboard.
04:18 முதல் தேர்வு None எந்த effectஉம் கொடுக்காது. எனவே Triangle in தேர்வுக்கு செல்வோம்
04:25 அதை க்ளிக் செய்து canvasல் ஒரு கோட்டை வரைக
04:28 அந்த கோடு ஒரு முக்கோண வடிவமாக உட்புறமாக மாறுகிறது.
04:34 அடுத்து Triangle out ஐ க்ளிக் செய்து canvasல் ஒரு கோட்டை வரைக.
04:39 இப்போது முக்கோண வடிவம் வெளிப்புறமாக உருவாக்கப்படுகிறது.
04:43 Ellipseஐ க்ளிக் செய்து ஒரு கோட்டை வரைக.
04:47 கோடு நீள்வட்டமாக இருப்பதைக் காண்க.
04:50 கடைசி தேர்வான From clipboard பற்றி பின்னர் அறிவோம்.
04:56 இப்போது, nodeகளை சேர்க்க, மாற்ற மற்றும் நீக்க கற்போம்.
05:00 அதை Node tool மூலம் செய்யலாம்
05:03 canvasல் கோடுகளை நீக்கவும்
05:06 Tool controls barக்கு சென்று Moderegular path எனவும் ShapeNone எனவும் மாற்றுக
05:13 canvasக்கு வந்து ஒரு கை வடிவத்தை வரைவோம்.
05:23 இப்போது Node toolஐ க்ளிக் செய்க
05:26 இந்த வடிவத்தின் அனைத்து nodeகளும் தோன்றுவதைக் காண்க.
05:30 இப்போது Tool Controls barஐ கவனிக்கவும்
05:33 இங்கே முதல் 6 iconகள், nodeகள் மற்றும் பாதைகளை சேர்க்கவும் நீக்குவும் உதவுகின்றன
05:38 சரியாக புரிந்துகொள்ள அதனதன் tool tipஐ காணவும்.
05:41 ஏதேனும் ஒரு segment ல் க்ளிக் செய்து இரு nodeகளும் நீலநிறமாவதைக் காணவும்.
05:48 பின் Add node தேர்வை க்ளிக் செய்க.
05:52 தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்ட segmentன் nodeகளுக்கு மையத்தில் ஒரு புதிய node சேர்க்கப்பட்டிருப்பதைக் காணவும்.
05:58 இப்போது சிறிய segmentஐ தேர்ந்தெடுத்து முன்புபோல செய்யவும்.
06:04 சிறிய segmentன் மையப்புள்ளியில் ஒரு புது node சேர்க்கப்படுவதைக் காணலாம்.
06:10 புது nodeஐ தேர்ந்தெடுக்கவும்.
06:13 Delete node தேர்வை க்ளிக் செய்க. அந்த node நீக்கப்படுகிறது.
06:18 கை வடிவத்தின் ஏதேனும் ஒரு node ஐ க்ளிக் செய்க.
06:21 bezier handleஐ காண Tool controls barன் கடைசி இரண்டாம் iconஐ க்ளிக் செய்க
06:27 தேர்ந்தெடுக்கப்பட்ட segmentக்கான bezier handleகள் இப்போது தெரிகின்றன.
06:32 இல்லையெனில், அந்த segmentஐ க்ளிக் செய்து mouseஐ விடுவிக்காமல், அதை சற்று நகர்த்தவும்.
06:37 segment வளைந்து bezier handleகள் இப்போது தெரியவரும்.
06:41 தேர்ந்தெடுக்கப்பட்ட nodeஐ அளவுமாற்றவும் சுழற்றவும் handleகளை க்ளிக் செய்யவும்.
06:45 இதேபோல, மற்ற nodeகளையும் மாற்றவும்.
07:04 nodeகளை இணைக்க அடுத்த icon பயன்படுகிறது
07:07 ஆட்காட்டி விரலில் ஒரு node கூடுதலாக இருப்பதைக் காண்க.
07:11 அந்த கூடுதல் nodeஐயும் மேல் node ஐயும் Shift key மூலம் தேர்ந்தெடுக்கவும்.
07:18 இப்போது join node iconஐ க்ளிக் செய்க. nodeகள் இப்போது இணைந்திருப்பதைக் காணலாம்.
07:25 அடுத்த icon தேர்ந்தெடுக்கப்பட்ட nodeகளில் பாதையை உடைக்க உதவுகிறது.
07:29 கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு இடையே இணைப்பை உடைப்போம்.
07:33 எனவே அவற்றின் இணைப்பு nodeஐ தேர்ந்தெடுத்து break path iconஐ க்ளிக் செய்க.
07:40 அந்த node ஐ தேர்வுநீக்கி மீண்டும் அதை தேர்ந்தெடுத்து சற்று நகர்த்தவும்.
07:46 பாதை உடைக்கப்பட்டு nodeகள் இரு தனித்தனி nodeகளாக இருப்பதைக் காணலாம்.
07:53 அவற்றை இணைக்க, அந்த இரு nodeகளையும் தேர்ந்தெடுத்து Tool controls barல் join selected end-nodes icon ஐ க்ளிக் செய்க
08:03 அந்த இரு nodeகளுக்கும் இடையே ஒரு பாதை உருவாக்கப்படுவதைக் காண்க
08:08 பாதை அல்லது segmentஐ நீக்க அடுத்த icon அதாவது Delete segment iconஐ க்ளிக் செய்க. பாதை நீக்கப்படுகிறது.
08:17 இந்த செயலை undo செய்ய Ctrl + Zஐ அழுத்துக
08:20 இந்த கையை ஒரு ஓரமாக வைக்கவும். Node tool ஐ மீண்டும் க்ளிக் செய்க.
08:26 Tool controls barல் உள்ள அடுத்த 4 iconகளை பயன்படுத்த கற்போம்
08:30 தேர்ந்தெடுக்கப்பட்ட nodeகளை மாற்ற இந்த iconகள் உதவுகின்றன.
08:34 Bezier tool ஐ பயன்படுத்தி ஒரு தலைகீழ் U வடிவத்தை வரைக. Node toolல் க்ளிக் செய்க இந்த மூன்று nodeகளை கவனிக்கவும்
08:49 மேல் nodeஐ தேர்ந்தெடுத்து Tool controls barல் Make selected nodes corner iconஐ க்ளிக் செய்க
08:55 இதை அது corner node ஆக்கும்.
08:58 bezier handleகளை க்ளிக் செய்து அவற்றை மேலும் கீழும் நகர்த்தி மாற்றத்தைக் காணவும்.
09:03 nodeஐ மிருதுவாக்க அடுத்த iconஐ க்ளிக் செய்க. வடிவத்தில் மாற்றத்தைக் கவனிக்கவும்.
09:11 node ஐ சமச்சீராக்கும் அடுத்த iconஐ க்ளிக் செய்க.
09:16 nodeஐ தானாக மிருதுவாக்கும் அடுத்த iconஐ க்ளிக் செய்க.
09:20 அடுத்த இரு iconகள் segmentகளில் மட்டும் வேலை செய்யும். எனவே, U வடிவத்தின் இடப்பக்க segmentஐ தேர்ந்தெடுத்து முதல் iconஐ க்ளிக் செய்க.
09:30 tool tip சொல்வது போல, segment இப்போது நேர் கோடாகிறது.
09:35 bezier handleஐ க்ளிக் செய்து அதை நகர்த்த முயற்சிக்கவும். அதை வளைக்க முடியாது என்பதைக் காணலாம்.
09:44 அதை மீண்டும் வளைவு கோடாக்க அடுத்த iconஐ க்ளிக் செய்க.
09:49 இப்போது bezier handleகளை நகர்த்தி அதை வளைக்கலாம்.
09:54 தேர்ந்தெடுக்கப்பட்ட objectஐ path ஆக மாற்ற அடுத்த iconஐ க்ளிக் செய்க
09:58 strokeஐ path ஆக மாற்ற அடுத்த iconஐ க்ளிக் செய்க.
10:02 stroke களை காண nodeகளை க்ளிக் செய்து இழுக்கவும்.
10:08 தேர்ந்தெடுக்கப்பட்ட nodeகளை முறையே X மற்றும் Y திசைகளில் நகர்த்த அடுத்த இரு iconகள் உதவுகின்றன.
10:15 மேல் கீழ் அம்புகளை க்ளிக் செய்து மாற்றத்தை கவனிக்கவும்.
10:24 அடுத்த இரு iconகள் clipping மற்றும் masking effectகளை கொண்ட pathகளில் மட்டும்தான் வேலை செய்யும்.
10:29 அவற்றை நீங்களே செய்து பார்க்கலாம்.
10:34 சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது
10:37 நேர்க்கோடுகள் மற்றும் மூடிய வடிவங்களை வரைதல்
10:39 வளைந்த கோடுகளை வரைதல்
10:41 nodeகளை சேர்த்தல் மாற்றுதல் மற்றும் நீக்குதல்.
10:43 இங்கே உங்களுக்கான பயிற்சி
10:46 bezier tool மூலம் 5 இதழ்கள், 1 தண்டு மற்றும் இரு இலைகளைக் கொண்ட ஒரு பூ வரையவும்.
10:52 இதழ்களுக்கு ஊதா நிறம் கொடுக்கவும்.
10:54 தண்டு மற்றும் இலைகளுக்கு பச்சை நிறம் கொடுக்கவும்.
10:57 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
11:00 இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்.
11:05 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது
11:12 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
11:14 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
11:20 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
11:26 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst