Difference between revisions of "Git/C3/Working-with-Remote-Repositories/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 316: Line 316:
  
 
|-
 
|-
|07: 17
+
|07:17
 
| ''' User1'''ன்  passwordஐ டைப் செய்யவும்.
 
| ''' User1'''ன்  passwordஐ டைப் செய்யவும்.
  

Latest revision as of 12:10, 28 February 2017

Time
Narration
00:01 Remote repositoryகளுடன் வேலை செய்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Remote repository என்றால் என்ன, மற்றும்
00:12 Remote repositoryக்கு dataவை எப்படி ஒருங்கிணைப்பது.
00:16 இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04
00:22 Git 2.3.2,
00:25 gedit Text Editor, மற்றும்
00:28 Firefox web browser
00:30 உங்களுக்கு விருப்பமான editor மற்றும் web browserரை பயன்படுத்தலாம்.
00:36 இந்த டுடோரியலுக்கு, உங்களுக்கு internet இணைப்பு வேண்டும்.
00:41 மேலும், அடிப்படை Git commandகள் பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும்.
00:46 இல்லையெனில், அதற்கான Git டுடோரியல்களுக்கு எங்கள் வலைதளத்தை பார்க்கவும்.
00:52 முதலில், Remote repositoryஐ புரிந்து கொள்வோம்.
00:56 internet அல்லது ஏதேனும் network ல் host செய்யப்படும் ஒரு repository, Remote repository எனப்படும்.
01:04 இந்த மையப்படுத்தப்பட்ட repositoryஐ பயன்படுத்தி, மக்கள் எந்நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும், ஒரு projectல் வேலை செய்யலாம்.
01:13 உதாரணத்திற்கு, 3 userகள், ஒரே repositoryயில் கூட்டாக பணி புரிய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
01:21 தங்கள் கணிணியில், Remote repositoryயின் ஒரு பிரதியை வைத்துக் கொள்ள, Git அனுமதிக்கிறது.
01:28 Clone commandஐ பயன்படுத்தி, இதைச் செய்யலாம்.
01:31 பிறகு, local repositoryயுடன், அவர்கள் offlineல் வேலை செய்யலாம்.
01:36 வேலை திருப்திகரமாக முடிந்தவுடன், அதை, main repositoryயுடன், திரும்ப ஒருங்கிணைக்க வேண்டும்.
01:43 Push மற்றும் pull commandகளை பயன்படுத்தி, இதைச் செய்யலாம்.
01:48 இந்த டுடோரியலின் முடிவில், முழு செயல்முறையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
01:53 நாம் முன்னதாக உருவாக்கிய GitHub repositoryஐ முதலில், திறப்போம்.
01:59 வலது பக்கத்தில், இந்த repositoryயின், URLஐ காணலாம்.
02:05 இந்த, URLஐ, copy செய்வோம்.
02:08 ஒரு local repositoryஐ உருவாக்க, URLஐ பயன்படுத்தி, இந்த repositoryயின் ஒரு பிரதி எடுக்க போகிறோம்.
02:16 Terminalஐ திறக்கவும்.
02:18 ஒரே Remote repositoryயில், எப்படி இரண்டு userகள் வேலை செய்யலாம் என்பதை இப்போது புரிந்து கொள்வோம்.
02:24 இதற்கு, User1 மற்றும் User2 என்று இரண்டு directoryகளை, எனது Desktopல், நான் முன்பே உருவாக்கிவிட்டேன்.
02:33 உங்கள் Desktopலும் அவ்வாறே செய்யவும்.
02:36 அதே terminalலில், directoryகளை, இரண்டு வேறுபட்ட tabகளில் திறக்கிறேன்.
02:43 முதல் tabல், டைப் செய்க: cd space User1
02:49 இரண்டாவது tabஐ திறக்க, File menuஐ க்ளிக் செய்து, Open Tabஐ தேர்ந்தெடுக்கவும்.
02:55 இரண்டாவது tabல், டைப் செய்க: cd User2
03:00 Tab User1க்கு செல்வோம்.
03:03 இப்போது, Remote repositoryன் ஒரு பிரதியை எடுப்போம்.
03:08 டைப் செய்க: git space clone, பிறகு, copy செய்யப்பட்டURL ஐ paste செய்வோம், space இந்த commandன் முடிவில் ஒரு dot ஐ வைக்கவும்.
03:17 அதே directoryயினுள், அதாவது, User1ல், repositoryஐ copy செய்யப் போகிறோம் என்பதனை Dot குறிக்கும்.
03:25 இல்லையெனில், stories என்ற repository பெயரைக் கொண்ட ஒரு புது directoryஐ அது உருவாக்கிவிடும்.
03:31 இப்போது, Enterஐ அழுத்தவும்.
03:33 Clone command, முழு central folderஐ copy செய்து, அதை, ஒரு local repository ஆக்கிவிடும்.
03:40 டைப் செய்க: ls. Remote repositoryயின் content, இங்கு copy செய்யப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
03:48 அடுத்து, நன்றாகப் புரிவதற்கு, இந்த repositoryயின், user name மற்றும் email idஐ நான் மாற்றுகிறேன்.
03:55 செயல்விளக்க நோக்கத்திற்கு, priya-spoken1 மற்றும் kaushik-spoken என்று மேலும் இரு GitHub userகளை நான் முன்பே உருவாக்கிவிட்டேன்.
04:04 அவற்றை நான் இங்கு பயன்படுத்துகிறேன்.
04:14 Git logஐ சரி பார்க்கவும்.
04:16 Remote repositoryயின் அதே commitகளை நீங்கள் காணலாம்.
04:21 அதே போல், இரண்டாம் tabல் இருக்கும் directory User2க்கு repositoryclone செய்கிறேன்.
04:28 இங்கேயும், முன்பு User1க்கு செய்தது போல், user name மற்றும் email idஐ மாற்றுகிறேன்.
04:35 அடுத்து, இந்த userகள், Remote repositoryயில் எப்படி வேலை செய்வார்கள் என புரிந்து கொள்வோம்.
04:41 lion-and-mouse.html என்ற fileலில், User1 வேலை செய்வார் என்று வைத்துக் கொள்வோம்.
04:48 அந்த fileஐ உருவாக்க, டைப் செய்க: gedit lion-and-mouse.html.
04:54 முன்னர் சேமித்து வைத்திருந்த, Writer documentலிருந்து, சில வரிகளை, இந்த fileலினுள், copy மற்றும் paste செய்கிறேன்.
05:02 இவ்வாறே, உங்கள் fileலினுள், சில வரிகளை, நீங்கள் சேர்க்கலாம்.
05:06 Staging areaவிற்கு fileஐ சேர்ப்போம்.
05:11 டைப் செய்க: git add lion-and-mouse.html
05:17 அடுத்து, புதிதாக சேர்க்கப்பட்ட fileஐ commit செய்வோம்.
05:21 டைப் செய்க: git commit hyphen m மேற்கோள்களுக்குள் Added lion-and-mouse.html.
05:29 அடுத்து, local repositoryஐ, main Remote repositoryஉடன் ஒருங்கிணைக்க வேண்டும்.
05:35 Repositoryஐ ஒருங்கிணைப்பதற்கு முன், remoteகள் பற்றி கற்போம்
05:40 Remote repositoryயின் URL, Remote எனப்படும்.
05:45 நாம் URLக்கு ஒரு nickname அதாவது புனைப்பெயரை கொடுக்கலாம்.
05:49 நாம் பல Remote repositoryகளில் வேலை செய்யும் போது, இது பயனுள்ளதாக இருக்கும்.
05:54 Repositoryஐ ஒருங்கிணைக்கும் போது, முழு URLஐ டைப் செய்வதற்கு பதிலாக, nicknameஐ பயன்படுத்தலாம்.
06:01 ஒரு Remoteன் முன்னிருப்பான nickname, எப்போதும் origin ஆகும்.
06:06 இப்போது, ஒரு Remote ஐ சேர்க்கக் கற்போம்.
06:10 Terminalலுக்கு திரும்பவும்.
06:13 டைப் செய்க: git remote. முன்னிருப்பாக, Remoteன் பெயர், origin என்பதை நீங்கள் காணலாம்.
06:20 அடுத்து, ஒரு Remoteக்கு nicknameஐ எவ்வாறு சேர்ப்பது எனக் காண்போம்.
06:25 டைப் செய்க: git remote add stories, பின் Remote repositoryயின் URLஐ டைப் செய்க.
06:32 இங்கு, Remote repositoryயின் பெயராகிய storiesஐ, Remoteன் பெயராக வைக்கிறேன்.
06:38 இப்போது, Enter keyஐ அழுத்தவும்.
06:41 மீண்டும், Remote பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git remote.
06:46 பட்டியலில், Remote சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
06:50 இப்போது, local repositoryஐ, main Remote repositoryஉடன் ஒருங்கிணைக்கலாம்.
06:55 அவ்வாறு செய்ய, டைப் செய்க: git push stories master
07:00 இங்கு, stories என்பது Remoteன் பெயர், மற்றும், master என்பது நாம் மாற்றங்களை update செய்யும் branch ஆகும்.
07:07 இப்போது, Enterஐ அழுத்தவும்.
07:09 User1ன், usernameஐ, priya-spoken1 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்துகிறேன்.
07:17 User1ன் passwordஐ டைப் செய்யவும்.
07:21 செயல்விளக்க நோக்கத்திற்காக, இந்த usernameஐ நான் முன்பே உருவாக்கியதை நினைவு கூறவும்.
07:27 உங்கள் username மற்றும் passwordஐ இங்கு பயன்படுத்தவும்.
07:31 Unable to access என்ற errorஐ அது காட்டும்.
07:35 ஏன் இந்த error ஏற்பட்டது? ஏனெனில், நமக்கு, Remote repositoryஐ அணுக அனுமதி கிடையாது.
07:42 அதனால், இப்போது, contributorகளுக்கு அணுகல் அனுமதி வழங்கக் கற்போம்.
07:48 GitHub repositoryக்கு திரும்பவும்.
07:51 மேல் panelலில் இருக்கும் கடைசி tabஆன Settingsஐ க்ளிக் செய்யவும்.
07:55 இடது பக்க பெட்டியில் இருக்கும், Collaborators இணைப்பை க்ளிக் செய்யவும்.
08:00 உறுதிப்படுத்துவதற்கு, GitHub account passwordஐ டைப் செய்யவும்.
08:04 இங்கு text boxல், collaboratorகளின் பெயர்களை சேர்க்கலாம்.
08:10 இந்த GitHub repositoryஐ யார் வேண்டுமானாலும், clone செய்யலாம்
08:15 ஆனால், நாம், collaboratorகளாக சேர்ப்பவர்கள் மட்டும்தான் repositoryக்கு push செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்க.
08:21 இப்போது, priya-spoken1 மற்றும் kaushik-spoken என்ற இரு userகளை நான் இங்கு சேர்க்கிறேன்.
08:27 நான் text boxல் டைப் செய்யும் போது, user name பட்டியலிடப்படுவதை காணலாம்.
08:33 Userஐ, colloboratorஆக சேர்க்க, Add Collaborator பட்டனை க்ளிக் செய்யவும்.
08:38 kaushik-spoken userஐயும் நான் சேர்க்கிறேன்.
08:43 சேர்க்கப்பட்ட பெயர்கள் பட்டியலிடப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம்.
08:47 இப்போது, Remote repositoryக்கு push செய்ய முயலுவோம்.
08:51 Terminalக்கு திரும்பவும்.
08:54 டைப் செய்க: git push stories master
08:58 Repositoryஐ அணுகக்கூடிய userன் username மற்றும் passwordஐ கொடுக்கவும்.
09:04 நாம் அதை வெற்றிகரமாக push செய்திருப்பதை நீங்கள் காணலாம்.
09:08 அடுத்து, நமது மாற்றங்கள் update ஆகிவிட்டனவா என்பதை அறிய, GitHub repositoryஐ சரி பார்க்கவும்.
09:14 GitHub repositoryக்கு திரும்பவும்.
09:17 Code tabஐ க்ளிக் செய்யவும்.
09:20 Commit list'ஐ சரி பார்க்கவும்.
09:23 Collaboratorன் commit, இங்கு பட்டியலிடப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம்.
09:28 அடுத்து, User2, எவ்வாறு Remote repositoryஉடன் colloborate செய்வார் என காண்போம்.
09:34 Terminalக்கு திரும்பவும்.
09:37 Friends.html fileலில், User2 வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம்.
09:43 அந்த fileஐ உருவாக்க, டைப் செய்க: gedit friends.html.
09:49 என் writer documentலிருந்து, சில வரிகளை, இந்த fileலினுள் copy மற்றும் paste செய்கிறேன்.
09:54 இவ்வாறே, உங்கள் fileலினுள்ளும், சில வரிகளை, நீங்கள் சேர்க்கலாம்.
09:59 Staging areaவிற்கு fileஐ சேர்ப்போம்.
10:03 அடுத்து, புதிதாக சேர்க்கப்பட்ட fileஐ, commit செய்வோம்.
10:07 டைப் செய்க: git commit hyphen m மேற்கோள்களுக்குள் Added friends.html.
10:15 அடுத்து, local repositoryஉடன், main Remote repositoryஐ ஒருங்கிணைக்க வேண்டும்.
10:21 டைப் செய்க: git push origin master
10:25 இந்தlocal repositoryக்கு, Remoteஐ நாம் சேர்க்கவில்லை என்பதை நினைவில் கொள்க.
10:30 அதனால், இங்கு, முன்னிருப்பான Remote பெயராகிய, originஐ பயன்படுத்துகிறோம்.
10:34 இப்போது, Enterஐ அழுத்தவும்.
10:37 User2ன், GitHub username மற்றும் passwordஐ டைப் செய்யவும்.
10:42 Failed to push என்ற errorஐ அது காட்டும்.
10:46 மேலும், errorற்கான காரணத்தையும் அது காட்டும்: the remote contains work that you do not have locally.
10:53 User1, முன்பே ஒரு commitஐ push செய்துள்ளார் என்பதை நினைவில் கொள்க.
10:58 ஆனால், User2ன் local repositoryல், User1ன் வேலை இல்லை.
11:04 Errorஐ திருத்த, git pull commandஐ run செய்யுமாறு அது ஆலோசனையும் தருகிறது.
11:10 அதனால், முதலில், User1ன் வேலையை pull செய்து, அதை, User2ன், local repositoryனுள் இணைக்க வேண்டும். அதை இப்போது செய்வோம்.
11:21 டைப் செய்க: git pull origin master
11:25 முதலில், அது dataஐ Remote repositoryயிலிருந்து எடுத்து, பின், அதை, local repositoryஉடன் merge செய்துவிடும்.
11:32 அதனால், mergingக்கு, message கொடுக்க, அது ஒரு editorஐ திறக்கும்.
11:36 Ctrl + Xஐ அழுத்தி, அதே messageஐ தக்க வைத்து, editorஐ மூடுவோம்.
11:42 இப்போது, மீண்டும் dataஐ push செய்ய முயலுவோம். டைப் செய்க: git push origin master.
11:50 User2ன், username மற்றும் passwordஐ கொடுக்கவும்.
11:54 நாம் dataஐ வெற்றிகரமாக push செய்திருப்பதை நீங்கள் காணலாம்.
11:59 அடுத்து, நமது மாற்றங்கள் update ஆகிவிட்டனவா என்பதை அறிய, GitHub repositoryஐ சரி பார்க்கவும்.
12:05 GitHub repositoryக்கு திரும்பவும்.
12:08 Stories என்ற repositoryஐ க்ளிக் செய்யவும்.
12:12 Friends.html file, repositoryக்கு சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
12:18 இப்போது, commit list ஐ சரி பார்க்கவும்.
12:21 User2ன், commitம், இங்கு பட்டியலிடப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம்.
12:26 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம்.
12:30 சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது-
12:35 Remote repository மற்றும்
12:38 Remote repositoryக்கு dataவை எப்படி ஒருங்கிணைப்பது.
12:42 பயிற்சியாக, User3 என்ற வேறொரு userஐ உருவாக்கவும்.
12:47 User3க்கு dataஐ clone செய்யவும்.
12:50 User3ன், local repository ல் வேலை செய்ய தொடங்கவும், மேலும்,
12:54 User3ல் இருந்து dataஐ push செய்ய முயலவும்.
12:58 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
13:03 அதை தரவிறக்கி காணவும்.
13:05 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
13:12 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
13:16 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் அளிக்கிறது.
13:22 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
13:27 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst