Difference between revisions of "Geogebra/C3/Radian-Measure/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
 
||'''Time'''
 
||'''Time'''
||'''NARRATION'''
+
||'''Narration'''
  
  

Latest revision as of 14:29, 11 July 2014

Time Narration


00:01 வணக்கம். இந்த டுடோரியலில் நாம் Geogebra வை பயன்படுத்தி கற்பது radians மற்றும் sectors .
00:07 இதன் நோக்கம் Geogebra Input Bar ஐ அறிமுகப்படுத்துதல்; மற்றும் அதில் commandகளை இடுதல். இதற்கு ஆரகங்களைக் குறித்த ஒரு பாடத்தை பார்க்கலாம்
00:15 Geogebra துவக்கப்பயனாளர்கள் Introduction to Geogebra , Angles மற்றும் Triangles Basics டுடோரியல்களை spoken-tutorial.org தளத்தில் காணவும்.
00:25 இந்த டுடோரியலில் நாம் பயன்படுத்துவது Ubuntu version 10.04 LTS மற்றும் Geogebra version 3.2.40.
00:35 ஆரகம் என்றால் என்ன, அதை வரைவதெப்படி?
00:39 ஒரு வில்லின் நீளம் மற்றும் அது தாங்கும் கோணம் இவற்றின் தொடர்பை காணலாம்
00:44 மற்றும் ஒரு வட்டத்துண்டின் பரப்பளவை கண்டுபிடிக்கலாம்
00:49 பின் வரும் tool களை Geogebra வில் பயன்படுத்துவோம்- circle with center and radius, circular arc with centre between two points மற்றும் segment between two points
01:00 drawing command களை பயன்படுத்த இன்னொரு வழி command களை input bar இல் டைப் செய்வது
01:11 இந்த geogebra window வில் இப்போது circle with center and radius கருவியால் ஆரம் 5 units உள்ள ஒரு வட்டத்தை வரைவோம்.
01:18 circle with center and radius மீது சொடுக்கவும்; நாம் மையத்தை origin ஆகவும், ஆரம் 5 units எனவும் தேர்கிறோம்.
01:28 இப்போது இரு புள்ளிகள் 'B' மற்றும் 'C' ஐ வட்டத்தில் குறிப்போம்
01:36 இப்போது இந்த இரு புள்ளிகள் இடையே ஒரு வில்லை வரைவோம். இதற்கு circular arc with centre between two points கருவி மீது சொடுக்கவும்.
01:47 மையத்தில் 'A' மீதும் மற்றும் 'B' 'C' மீதும் சொடுக்குகிறேன், இது வில்லை பூர்த்தி செய்கிறது. வில்லின் நீளம் d=5.83 units என்பதை காண்க
02:00 இப்போது இந்த வில்லை நீக்கிவிட்டு வேறு வழியில் கட்டுமானம் செய்வோம். ஒரு கட்டளையை input bar இல் இடுவதன் மூலம்....
02:10 இந்த செவ்வகப்பெட்டிதான் input bar. இதை அடுத்து 3 drop down box கள் உள்ளன. இங்கு சில functionகளை நுழைக்கலாம், சில parameter களை define செய்யலாம்; மற்றும் geogebra window வில் வரைபடங்களை பூர்த்தி செய்ய இதுவே command key.
02:30 இப்போது நான் arc என டைப் செய்ய துவங்குகிறேன். command தானாக பூர்த்தி செய்யப்பட்டது. இந்த command ஐ இந்த drop down box இலிருந்தும் தேர்வு செய்யலாம்
02:41 arc மீது சொடுக்க, இந்த command இங்கே square brackets இல் தோன்றுகிறது. square brackets இன் மத்தியில் சொடுக்கி enter செய்தால், command க்கான syntax இங்கே தெரியும்.
02:57 வில்லுக்கு இப்போது பயன்படுத்தும் syntax ... வட்டம் மற்றும் இரண்டு புள்ளிகளை அறுதியிட.
03:04 எந்த வட்டம் மற்றும் புள்ளிகளின் இடையில் வில் தேவையோ அவற்றின் பெயரை define செய்யவேண்டும்.
03:10 algebra view வில் வட்டம் lower case "c" ஆல் குறிக்கப்படுவதை காணலாம்; வில் வரைய வேண்டிய புள்ளிகள் (B,C) இரண்டும் upper case இல் உள்ளன.
03:24 ஆக்வே command ஐ இங்கே type செய்யலாம்: Arc[c,B,c], ... enter செய்யலாம். Geogebra case sensitive ஆகும்.
03:37 இப்போது சேர்த்த வில் இன் நிறம் மற்றும் தடிமனை object properties இல் மாற்றலாம்.
03:46 color சென்று, அதை red எனலாம். style இல் தடிமனை அதிகமாக்கலாம்.
04:05 வில் இப்போது தடிமனாகவும் சிவப்பாகவும் இருக்கிறது
04:11 இப்போது இரண்டு கோட்டு வட்டப் பகுதிகள் AB மற்றும் AC ஐ வரையலாம். இதையும் இரண்டு வழிகளில் செய்யலாம்.
04:17 'Segments between two points tool' மீது சொடுக்கலாம்; 'A' மற்றும் 'B' மீதும் சொடுக்கவும். இது வட்டப் பகுதி AB ஐ பூர்த்தி செய்கிறது
04:28 ஒரு command ஐ வட்டப் பகுதிக்கு input bar இலிருந்தும் கொடுக்கலாம். segment [A,C] என உள்ளிட வட்டப் பகுதி AC பூர்த்தியாகிறது.
04:40 இப்போது வில் BC, வட்டப் பகுதிகள் AB மற்றும் AC, மற்றும் வட்டக்கோணப்பகுதி BAC ஆகியவற்றை வரைந்து விட்டோம்.
04:47 இப்போது, வில் BC.. .. A வில் தாங்கும் கோணத்தை define செய்வோம். இதை 'α' கோணம் எனலாம். இதை இந்த drop down box இலிருந்து தேர்வோம்.
04:58 கோணத்துக்கு கட்டளை .. angle[B,A,C].
05:10 கோணத்துக்கு பெயரிடும் கணித செந்தர மரபை ஒட்டி கோணத்தில் geogebra வில் define செய்வோம்.
05:18 'α' மையத்தில் தாங்கும் கோணத்தின் மதிப்பு இங்கே 66.78 பாகைகள்
05:30 இப்போது ஒரு ஆரகம் என்பது வில்லின் நீளம்... வட்டத்தின் ஆரத்துக்கு சமமாகும் போது... மையத்தில் அந்த வில் தாங்கும் கோணம் ஆகும்.
05:40 நாம் கோண அலகை ஆரகத்தில் சொல்ல நினைத்தால், இங்கே options க்குப்போய் மாற்றவும்.
05:49 இப்போது α இன் மதிப்பு 1.17 rad. இப்போது வில்லின் நீளத்தை மாற்றி 1 rad. க்கு அருகில் கொண்டுவந்தால்...
06:04 வில்லின் நீளம் d=5 units, மற்றும் மையத்தின் தாங்கும் கோணம் α வின் மதிப்பு 1 rad.
06:17 நாம் 1 rad என்ன என அறுதியிட்டோம். இது வில்லின் நீளம் வட்டத்தின் ஆரத்துக்கு சமமாகும் போது மையத்தின் அந்த வில் தாங்கும் கோணம் என்றும் கண்டோம்.
06:29 1 rad இன் மதிப்பு பாகைகளில் என்ன? நான் கொஞ்சம் விலகிப்பார்க்கிறேன்.
06:41 இப்போது இந்த வில்லின் நீளத்தை அரை வட்டமாக்க மாற்றலாம். வட்டத்தின் ஆரம் 'a' எனும்போது வில்லின் நீளம் [π a] ஆக இருக்கட்டும்.
06:53 அதற்கு முன் 1 rad இன் மதிப்பை பாகைகளில் காண, கோணத்தின் அலகை degrees என மாற்றுகிறேன்.
07:03 வில்லின் நீளம் [π a] ஆக இருந்தால், அதாவது அரை வட்டம் இருந்தால், α இன் மதிப்பு 180.21 degrees.
07:13 மற்றும் இந்த வட்டத்தை முழுமையாக்கினால் α வின் கோணம் ஏறத்தாழ 360 degrees.
07:27 இந்த இரண்டில் இருந்து நாம் கணக்கிடுவது rad என்பது 57.32 degrees.
07:35 இப்போது வில்லின் நீளம், ஆரம் மற்றும் தாங்கு கோணம் ஆகியவற்றின் தொடர்பு புரிந்திருக்கும். அதற்கு இன்னொரு கோண மதிப்பு “θ” வை ஆரகத்தில் சொல்வோம். இது α/57.32.
08:03 “θ” இன் மதிப்பு உண்மையில் கோணத்தின் ஆரகத்தில் கோணத்தின் மதிப்பு. இருந்தாலும் ஒரு ஒழுங்கு செய்யும் பிரச்சினையால் இங்கே அது degree symbol உடன் உள்ளது.
08:15 நாம் “θ” வை இப்படியே பயன்படுத்துவோம். கோண அலகை radians என மாற்ற வேண்டாம். ஏனெனில் வில் நீளம் மற்றும் தாங்கும் கோணம் கொண்டு ஒரு சூத்திரத்தை சொல்ல நினைக்கிறோம்.
08:29 ஒரு ஒழுங்கு செய்யும் பிரச்சினையால் அதை இப்படித்தான் சொல்ல முடியும்.
08:36 இப்போது geogebra window வில் உரையை உள்ளிடுவோம். வில் நீளம் - தாங்கும் கோணத்துக்கு தொடர்பை காட்டும் சூத்திரத்தை உள்ளிடலாம்.
08:52 உரையை உள்ளிடத் தெரியவில்லையானால் angles and triangles basics டுடோரியலை காண்க.
09:34 இப்போது வில்லின் நீளத்தை நான் மாற்றும்போது “θ” இன் மதிப்பு மாறுவதை காணுங்கள். மேலும் வில்லின் நீளம் மற்றும் தாங்கும் கோணத்தின் இடையே உள்ள தொடர்பு d=r.θ ஆக இருக்கிறது. இங்கே d வில்லின் நீளம், r வட்டத்தின் ஆரம் மற்றும் “θ” radian இல் மையத்தில் தாங்கும் கோணம்.
09:58 இப்போது கற்றதை உறுதி படுத்திக்கொள்ள ஒரு assignment ஐ பார்க்கலாம்.
10:10 கற்றதை வைத்து வட்டக்கோணப்பகுதியின் பரப்பளவு = ½ “a^2” “θ” என்பதை நிரூபிக்கவும்.
10:18 இங்கே "a" ஆரம் ,"θ" radian இல் மையத்தில் தாங்கும் கோணம். மற்றும் சூத்திரம்: பரப்பளவு = ½ “a^2” “θ”.
10:30 சிறு உதவிக்குறிப்பு: வட்டக்கோணப்பகுதியின் பரப்பளவை கால்வட்டத்தின் பரப்பளவுக்கு ஒப்பிடுக.
10:40 assignment வரையப்பட்ட பின் இப்படி இருக்கும். வட்டக்கோணப்பகுதியின் பரப்பளவை கால்வட்டத்தின் பரப்பளவுக்கு ஒப்பிட்டு கணக்கிடுகிறோம்.
10:55 National Mission on Education through ICT, MHRD, Government of India ஆல் ஆதரிக்கப்படும் talk to a teacher project இன் ஒரு அங்கம் spoken tutorial project ஆகும்
11:06 மேலும் தகவல்கள் இங்குள்ளன. தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst