GIMP/C2/Two-Minutes-Edit/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:37, 14 March 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration


00.23 GIMP tutorial க்கு நல்வரவு.
00.25 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது
00.31 இங்கே இந்த படத்தில் உள்ள பிரச்சனை என்ன.
00.35 பலகையில் என்ன உள்ளது என்பது எதுவும் சரியாக தெரியவில்லை.
00.39 எனவே இங்கு எழுதியுள்ளதை நான் வெளிக்காட்ட விரும்புகிறேன்.
00.44 வானத்தை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன். எனவே இந்த layer ஐ இரண்டாக்கி.... பின் curves tool ஐ தேர்கிறேன்.
00.56 படத்தின் இந்த பகுதியை பார்ப்போம்.
01.02 இதை பிரகாசமாக்க வளைவை மேல் இழுக்கிறேன்.
01.10 இது நன்றாக உள்ளது. இப்போது மேலும் இங்கு சற்று கருப்பாக இந்த கருப்பு புள்ளியை மேலே இழுக்கிறேன்.
01.19 இது வேலை செய்யவேண்டும் என நினைக்கிறேன்.
01.25 இப்போது பலகையில் உள்ள எழுத்துக்கள் கீழுள்ள படத்தினுள் எனக்கு வேண்டும்.
01.32 எனவே layer mask ஐ தேர்கிறேன். layer mask ஐ கருப்பில் நிரப்புகிறேன்.


01.43 இப்போது என் பழைய படத்திற்கு வந்துவிட்டேன். வெள்ளை border உள்ள layer mask ல் வேலை செய்வோம்.
01.54 இப்போது இங்கே paint tool ஐ தேர்க.
02.00 foreground நிறமாக வெள்ளையைத் தேர்க.
02.05 brush ஐ தேர்ந்து அதை பெரிதாக்குக.


02.12 இப்போது layer mask மீது நான் வரைகிறேன்.
02.18 அநேகமாக படத்தை பெரிதாக்க வேண்டும்.
02.25 இது சரியாக உள்ளது.
02.27 இது நன்றாக உள்ளது.
02.31 என் key indicator ல் அழுத்தப்படும் key களை காணலாம்.
02.37 இது நன்றாக உள்ளது.
02.40 இப்போது மீண்டும் layer ஐ இரண்டாக்குகிறேன். overlay mode ஐ தேர்ந்து, background சற்று மேலும் வெளிக்காட்டப்பட opacity ஐ சற்று குறைக்கவும்.
03.03 இப்போது இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.


03.07 இப்போது இந்த படத்தை சேமிக்க தயார்.
03.12 இங்கே பிரதிகளில் நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். எனவே save மீது சொடுக்கலாம். அல்லது Ctrl + S ஐ அழுத்தலாம். ஆம் இங்கே இந்த அனைத்து layerகளையும் சேமிக்க விரும்பவில்லை. இதை Jpeg படமாக சேமிக்கிறேன்.
03.32 இணையத்தில் இந்த படத்தை upload செய்ய இதை அளவு மாற்ற வேண்டும். எனவே Image சென்று, Scale Image செல்க. இதை width ல் 600 ஆக குறைக்கிறேன்.


03.58 இப்போது இதை சற்று கூர்மையாக்க வேண்டும். எனவே Filters, Enhance, Sharpen செல்கிறேன்.
04.20 படத்தில் art effectsக்காக சோதிக்கிறேன். இங்கே சற்று வெளிச்சத்தைக் காணலாம்.
04.38 இப்போது இதை ஒரு copy ஆக சேமிக்கிறேன்.


04.44 இதை small என பெயரிட்டு சேமிக்கிறேன்.
04.50 இந்த படத்தை முடித்துவிட்டேன்.
04.53 எப்போதும் edit செய்யும் போது இரு விஷயங்களை நினைவு கொள்ள வேண்டும்.
04.58 முதலாவது படத்தின் ஒரு பகுதியை மாற்றி மற்றதை அப்படியே வைக்க விரும்பினால், பின் அந்த layer ஐ ஒரு பிரதி எடுத்து உங்கள் மாற்றங்களை செய்து பின் layer mask ஐ இடவும்.


05.15 கருப்பு... படத்தை மறைக்கிறது. வெள்ளை... அங்கே இருப்பதை வெளிப்படுத்துகிறது.
05.22 இரண்டாவது, இரண்டாவது Layer ஐ overlay mode ல் வைக்கிறீர்கள் எனில், படம் நல்ல contrast மற்றும் நிறங்களை கொண்டிருக்கும்.
05.33 மிக வேகமாக edit செய்ய இவையே இரு நுணுக்கங்கள்.


05.41 இந்த படத்தில் குறைந்தது இரு பிரச்சனைகளாவது பார்க்கலாம்.
05.46 முதலாவது இந்த மக்களின் கால்களை நீக்கியுள்ளேன். இது இங்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
05.55 இரண்டாவது பிரச்சனை இந்த கட்டிடங்கள் படத்தினுள் விழுகின்றன. ஏனெனில் camera ஐ மேல்நோக்கி பிடித்தேன்.


06.08 perspective tool ஐ தேர்கிறேன்.
06.15 directions dialog ல் corrective backward ஐ தேர்கிறேன். preview ல் grid ஐ தேர்கிறேன்.
06.23 outline அல்லது image ஐயும் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் grid ஐ தேர்கிறேன்.
06.30 படத்தினுள் சொடுக்கும் போது , மிக பயனுள்ள தகவல்கள் இல்லாத இந்த info window ஐ இங்கே பெறுகிறோம்.
06.38 எனவே இங்கிருந்து வெளியே இழுக்கிறேன். இப்போது இந்த grid இங்குள்ளது. நான் செய்ய வேண்டியவையெல்லாம் படத்தில் இந்த grid வரிகளை இந்த செங்குத்து கோடுகளுடன் ஒழுங்குசெய்ய வேண்டும்.


06.52 இந்த grid வரிகள் செங்குத்து அல்லது கிடைமட்டமாக வெளியீட்டு படத்தில் இருக்கும். இந்த உயர்மட்ட வரி படத்தின் உயர்மட்டத்தில் இருக்கும்.
07.02 எனவே இதை இங்கு இழுக்கிறேன்.
07.07 படத்தில் சுற்றி பார்க்கிறேன். இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.
07.41 இப்போது transform ஐ சொடுக்குகிறேன்.
07.45 அது மாறும் வரை காத்திருக்க வேண்டும்.
07.51 இங்கே இது உள்ளது.
07.55 இப்போது இங்கே இரண்டாவது பிரச்சனையைக் காணலாம்.
08.00 இந்த புல்வெளி நன்றாக இல்லை.
08.03 எனவே இந்த படத்தை crop செய்ய வேண்டும்.


08.16 என் crop toolக்கு செல்கிறேன்.
08.19 பக்கவாட்டில் உள்ள கட்டிடங்களை விட்டு இதை மட்டும் crop செய்ய விரும்புகிறேன்.
08.28 இது பார்க்க சதுரம் போல் உள்ளது. எனவே fixed aspect ratio ல் சொடுக்கி 1 by 1 என இடுகிறேன்.
08.40 இப்போது சதுர crop உள்ளது.
08.45 படத்தினுள் மக்களை வைத்திருக்க
08.51 இந்த crop வேலை செய்யும் என நினைக்கிறேன்.
08.56 அதன் மீது சொடுக்குக, இங்கே இது உள்ளது.
09.00 இப்போது Curves Tool ஐ தேர்கிறேன்.


09.04 இதனுள் மேலும் contrast ஐ கொண்டுவர கோட்டை சற்று மேலே இழுக்கவும்.
09.19 இப்போது இந்த படமும் முடிந்தது.
09.24 இது அடுத்த படம்.


09.27 எனவே இந்த படத்தில் என்ன செய்வது.


09.37 rotate tool ஐ தேர்ந்து 1 ஐ அழுத்துவதன் மூலம் படத்தை பெரிதாக்கலாம்.
09.49 இங்கே படத்தின் மத்தியில் ஒரு நல்ல செங்குத்தான பகுதியை எதிர்பார்க்கிறேன். direction ல் corrective backwards rotation ஐ தேர்கிறேன்.
10.04 cubic interpolation ஐ தேர்கிறேன். preview ஆக grid ஐ தேர்கிறேன்.


10.12 இப்போது grid வரிகளைப் பெற படத்தினுள் சொடுக்குகிறேன். இப்போது வீட்டின் செங்குத்து அமைப்புடன் இந்த வரிகளை ஒழுங்கு செய்கிறேன்.
10.24 அவ்வளவுதான் என நினைக்கிறேன்.
10.28 இங்கே 2.90 degrees என காட்டும் ஒரு சிறிய window திறந்துள்ளது. rotate ல் சொடுக்கி கடைசி முடிவுக்காக காத்திருக்கவும் .


10.40 இங்கே இது உள்ளது.
10.44 நன்று; பார்க்க நன்றாக உள்ளது.
10.48 இங்கே அதிகமான சிதறல்கள் இருப்பதைக் காணலாம். அதை நான் சரிசெய்ய வேண்டும். ஆனால் இப்போது இந்த படத்தை crop செய்கிறேன்.
11.07 இது சரியாக உள்ளதென நினைக்கிறேன்.
11.13 படத்தை சரியாக நான் rotate செய்யவில்லை என நினைக்கிறேன்.
11.23 ஆம் போதுமான அளவிற்கு நான் rotate செய்யவில்லை. சரியான இடத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை.
11.34 எனவே இதை மீண்டும் செய்வோம்.
11.39 Ctrl + Z ஐ அழுத்தி படிகளை undo செய்கிறேன்.
12.00 மீண்டும் rotate tool ஐ தேர்கிறேன்.
12.10 முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட settingsஐ மாற்றவில்லை. இப்போது இந்த TV tower னுள் படத்தின் மையத்தை அமைக்கிறேன்.


12.34 இப்போது இதை TV towerக்கு ஒழுங்கமைக்கிறேன்.
12.41 TV tower படத்தின் மேலாதிக்க பகுதி ஆகும். ஆகவே அது நேராக இல்லையெனில் படமும் நேராக இருக்காது.
12.59 இது நன்றாக உள்ளது.
13.01 இப்போது crop tool ஐ எடுக்கிறேன். அதிக அளவு எதிர்மறை இடைவெளி இல்லாமல் crop ஐ தேர்கிறேன்.
13.26 இப்போது கடைசியாக... அநேகமாக படத்தினுள் சற்று contrast ஐ சேர்க்க சிறிது curves.
13.44 இது சரியாக உள்ளது. இப்போது இந்த படத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
13.50 இந்த படம் portrait modeல் இருக்க வேண்டும். எனவே இதை இங்கே மாற்ற வேண்டும்.
13.59 Image, Transform சென்று, rotate 90 degree anticlockwise.


14.08 இப்போது என் படம் சுழற்றப்பட்டுள்ளது.


14.11 படத்தை 90 degree சுழற்றும்போது, இது தரத்தில் இழப்பு இல்லாமல் உள்ளது. அது சிறப்பாக jpeg படங்களில் முக்கிய மானது.


14.28 இப்போது படத்தில் மேலும் contrast ஐ பெறலாம். அதை செய்ய curves tool ஐ பயன்படுத்துகிறேன்.
14.37 levels tool அல்லது மற்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் எனக்கு curves tool சிறந்தது என தோன்றுகிறது.
14.44 அதில் ‘S’ curve ஐ இடவும். முடிந்தது என நினைக்கிறேன், எனவே படத்தை சேமிக்கிறேன்.
14.59 இப்போது அடுத்த படம்.
15.01 இவை அனைத்தையும் ஒன்றாக்க, உங்கள் படத்தை சீக்கிரம் edit செய்ய சில அடிப்படை toolகள் தேவை.
15.10 முதலாவது rotate tool.
15.13 corrective mode ஐ பயன்படுத்துக. preview ல் grid. grid ஐ செங்குத்து அல்லது கிடைமட்டமாக ஒழுங்குசெய்க.
15.24 பின் சாய்ந்த கோடுகளுக்கு perspective tool தேவை.
15.31 மீண்டும் corrective modeஐ பயன்படுத்துக. பிறகு grid. அதன்பின் grid ஐ இந்த கிடைமட்டம் அல்லது செங்குத்துகளுடன் ஒழுங்குசெய்க.
15.48 படத்தின் contrast மற்றும் பிரகாசத்தன்மையை சரிசெய்ய, curves tool ஐ பயன்படுத்துக. ‘S’ curve ஐ பொருத்துக, பல சமயங்களில் இது பயனுள்ளது, அல்லது சில சமயங்களில் மென்மையான படம் வேண்டுமெனில் தலைகீழ் ‘S’ curve ஐ பயன்படுத்துக. இங்கே உண்மையான பனிமூட்டத்தை வெளியில் காணலாம்.


16.23 Image, Transform menu செல்க. படத்தை சுழற்ற... வெளியீட்டு அளவை அளவிட முடியும்.
16.37 கடைசியாக filters ... சீக்கிரமாக edit செய்ய முக்கியமானது.
16.43 Enhance பின் Sharpen க்கு செல்க.
16.47 பல toolகளை பயன்படுத்திய பின், உதாரணமாக rotating அல்லது transformation tool, perspective tool அல்லது resizing, படம் மென்மையாகிவிடும்.
17.02 sharpening ல் மீண்டும் அதை செய்யலாம்.
17.08 layers பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள்.
17.15 முதலில் layer ஐ இரண்டாக்கி... உதாரணமாக overlay mode அல்லது modeகளில் என்ன நடக்கிறது என்பதை சோதிக்கவும்.
17.26 ஆராய பல உள்ளன. இவற்றை ஒரு சமயத்தில் விளக்குகிறேன்.
17.33 ஒவ்வொரு முறையும் layer mode ஐ மாற்றும்போது முற்றிலும் வித்தியாசமான படத்தைப் பெறுவதைக் காணலாம்.
17.41 படத்தின் ஒரே ஒரு பகுதியை மட்டும் மாற்ற நினைத்தால் ஒரு layer mask ஐ சேர்த்து படத்தில் நீங்கள் பார்க்க விரும்புவதை வெள்ளையாலும் நீங்கள் பார்க்க விரும்பாதவற்றை கருப்பாலும் நிரப்பவும்.
18.05 Gray... ஓரளவு தெரியும் மற்றும் transparent ஆக இருக்கும்..
18.12 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
18.17 அடுத்த tutorial ஐ பார்ப்பீர்கள் என நம்புகிறேன்
18.25 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana