GIMP/C2/Setting-Up-GIMP/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:43, 24 February 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.21 Gimp ஐ set up செய்வதற்கான tutorialக்கு நல்வரவு.
00.25 முதன் முறையாக gimp ஐ பயன்படுத்தும் போது அதை set up செய்வதைக் காட்டுகிறேன்
00.30 மற்ற... Windows மற்றும் Macintosh programs போல ஒரு பெரிய windowக்கு பதில் பல சிறு windowகளை GIMP பயன்படுத்துகிறது.
00.39 இது ஒரு Unix உலகின் வரலாறு. Unix மக்கள்... windowகள் திரையின் முழுதும் பரவியிருப்பதையும் ஒரே நேரத்தில் பல programகள் இயங்குவதையும் விரும்புகின்றனர்.


00.49 இந்த பல windowகளில் உங்களால் வேலைசெய்ய முடியவில்லை எனில், GIMPshop ஐ பார்க்கலாம்.
00.57 இது புது user interface ஐ கொண்டு Photoshop போன்றே இருக்கும் GIMP ஐ பயன்படுத்தும் ஒரு program ஆகும்.


01.05 அனைத்து புதிய நல்ல toolகள் GIMP ல் இருப்பதால் நான் GIMP ஐ பயன்படுத்த விரும்புகிறேன்.
01.12 பயனுள்ள தகவலையும் குறிப்புகளையும் தரும் இது tip of the day.
01.17 இப்போதைக்கு , Undo optionஐ பற்றிய குறிப்பு உள்ளது, சில படிகளை செய்து மீண்டும் Undo மூலம் அதை மாற்றலாம்.
01.26 பல சமயங்களில் இது வேலைசெய்கிறது.
01.28 வித்தியாசமாக சிலதை செய்யும் முன் உங்கள் வேலையை சேமிப்பது நன்று.
01.33 இப்போது மற்ற toolகளை பார்க்கலாம்.
01.36 இங்கே GIMPன் main window உள்ளது, Command Central.
01.41 இங்கே மேலே Toolbox உள்ளது.
01.45 நிறங்களைத் தேர்ந்தெடுக்க Color box உள்ளது. கீழே Toolboxன் toolகளுக்கு பல optionகள் உள்ளன.
01.53 இதை சற்று அகலமாக்கலாம்.
01.56 இங்கே Layers, Channels, Color Channels, Path மற்றும் Undo Historyக்கு dialog boxகள் உள்ளன.
02.09 கீழே இது Colour Selection dialog. இங்கே பல நிறங்களை தேர்ந்தெடுக்கலாம்.
02.15 Brushes, Patterns, Gradient போல மேலும் dialogs உள்ளன.
02.21 இந்த dialogs ல் சிலதை Toolboxக்கு சேர்க்க விரும்புகிறேன். அதை செய்வது மிக சுலபம்.
02.28 Layers என உள்ள dialog தலைப்பை சொடுக்கி இங்கே toolboxன் கீழே Color Picker க்கு இழுக்கவும்.
02.39 இதுபோன்ற ஒரு tabbed dialog ஐ பெறுகிறேன்
02.43 இதை Channels உடன் செய்கிறேன்.
02.46 இதை Paths உடன் செய்கிறேன்.


02.52 பின் இதை Undo History உடன் செய்கிறேன்.
02.54 Brushes tool வேண்டுமென்று நினைக்கவில்லை. ஏனெனில் ஒரு tool... brush ஐ வைத்திருந்தால் பின் அது இங்கு தோன்றும். நான் அதை தேர்ந்தெடுக்கலாம்.
03.09 ஆனால் எனக்கு Colours வேண்டும். எனவே அதை சொடுக்கி Undo History க்கு பக்கத்தில் இழுக்கிறேன்.
03.16 பின் இங்கே இந்த window ஐ மூடலாம்.
03.23 அனைத்து dialog boxகளையும் File >> Dialogs மூலம் அணுகலாம்.
03.30 இங்கே நம் Toolbox ல் இல்லாத சில dialogs ஐ காணலாம். அவற்றில் ஒன்று தேவை. அது Tools.


03.38 நான் பயன்படுத்தாத சில toolகளை என் tool box கொண்டுள்ளது. நான் பயன்படுத்த விரும்பும் toolகளுடன் அதை மாற்ற விரும்புகிறேன்.
03.48 நான் வைத்திருக்க விரும்பும் toolகளுடன் ஆரம்பிக்கலாம்
03.51 நான் வைத்திருக்க விரும்புவது Curves, Levels, Threshold..... Brightness & Contrast ஐ தேர்ந்தெடுக்க விரும்பவில்லை.
03.58 Perspective Clone தேவையில்லை. Ink அல்லது Airbrush உம் தேவையில்லை.
04.05 மற்ற அனைத்து toolகளும் தேவை.
04.08 எவ்வளவு இடம் மீதி உள்ளது என பார்த்து பின் இதை பார்க்கிறேன்.
04.16 இப்போது File பின் Preferencesக்கு செல்கிறேன்.
04.26 Environment ஐயும் Interface ஐயும் இருப்பது போலவே விட்டுவிடுகிறேன்.
04.32 Theme ல் Smallஐ தேர்கிறேன்.
04.35 இந்த window ஐ பக்கமாக இழுக்கும் போது அனைத்து iconகளும் சுருங்கி tools தகவலுக்கு நிறைய இடம் இருப்பதைக் காணலாம்.
04.45 Tool options சென்று Default Interpolation ஐ SINC என மாற்றுக. இது மறுஅளவாக்குதல் அல்லது சுழற்றுதலின் போது Pixels கணக்கிடுதலுக்கு சிறந்த interpolation ஆகும்
05.00 மற்ற optionகளை இருப்பது போலவே விட்டுவிடுக
05.03 Toolbox சென்று இந்த optionகள் வேண்டுமென்றால் தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீக்கலாம்.
05.12 Foreground மற்றும் Background colourகளை... உடனே மாற்றும் Colorகளை வைத்துக்கொள்ளலாம்.
05.19 Brush மற்றும் Gradient toolகளையும் பெறலாம், இங்கே நடப்பு படத்தின் சிறிய படம் அல்லது thumbnail ஐ பெறலாம்.
05.29 எனக்கு இது வேண்டாம்; எனவே நீக்குகிறேன். உங்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்பது உங்கள் விருப்பம்.
05.36 Default image, Default grid மற்றும் Default image window ஐ இருப்பது போலவே விட்டுவிடலாம்.
05.42 அனைத்து Preferenceகளையும் முடித்துவிட்டேன்.
05.47 Path ஐ மாற்றவில்லை. எனவே இதை இங்கே பயன்படுத்தலாம்.
05.52 இப்போது மேலும் இடத்தைப் பெற ஒரே ஒரு tool ஐ நீக்க வேண்டும். ஆனால் முதலில் இதை சற்று அகலமாக்குகிறேன்.
06.01 Toolbox dialog மிகவும் குறுகலாக இருப்பதைக் காணலாம்.
06.06 இதை இங்கே இழுக்கிறேன்
06.08 புதிய வரிக்கு போகாமல் மேலும் 3 toolகளை சேர்க்கலாம் என நினைக்கிறேன்.
06.19 எனவே Brightness, Hue-Saturation மற்றும் Color Balance ஐ சேர்க்கிறேன்
06.24 இங்கே காட்டப்படாத அனைத்து toolகளையும் File பின் Dialogs சென்று காணலாம்.
06.39 இப்போது நாம் வேலை செய்ய தயாராக உள்ளோம்
06.42 GIMP ஐ மூடும்போது, அனைத்து optionகளும் தானாகவே சேமிக்கப்படுகிறது. அதை நீங்கள் மூடியவாறே அது திறக்கும்.


06.52 GIMP 2.3.18 ன் unstable, development version ஐ நான் பயன்படுத்துகிறேன்.
07.02 2.3.19 இன்று வெளியிடப்பட்டது... இப்போதுதான் கண்டேன்.
07.07 இது 'unstable' எனப்படும். ஆனால் GIMP... horizon ல் அடுத்த stable version 2.4 ஐ அடைகிறது. market ல் மற்ற softwareகளை போல இந்த வருடம் இது stable ஆகிறது.
07.22 GIMP ஐ set up செய்வது பற்றி அவ்வளவுதான்.
07.25 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayலிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana