GIMP/C2/Comics/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:01, 17 April 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.18 GIMP tutorial க்கு நல்வரவு.
00.21 வடக்கு ஜெர்மனி Bremenல் இருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00.27 நான் எப்போதும் குறிப்பிட மறக்கும் சிலவற்றை ஆரம்பத்தில் செய்கிறேன்.
00.34 எதையாவது படத்தில் செய்வதற்கு முன் அதை சேமிக்க எப்போதும் மறக்கிறேன்.
00.45 எனவே File, Save as சென்று அதை
01.05 comic.xcf என சேமிக்கிறேன்
01.12 ‘xcf’ என்பது Gimp க்கான file format. அது layerகளின் அனைத்து தகவல்களையும் அந்த file ல் வைக்கிறது.
01.22 படத்தில் மேலும் வேலை செய்ய விரும்புகிறீர்கள் எனில் அதை Gimp ல் JPEG அல்லது tif அல்லது அதுபோல ஏதும் சேமிக்காதீர்.
01.30 நீங்கள் விரும்பும் ஒவ்வொரு format க்கும் அங்கிருந்து நீங்கள் export செய்துகொள்ளலாம். ஆனால் மேலும் வேலையை அதனுடன் செய்ய விரும்பினால் XCF ஐ பயன்படுத்துக.
01.45 எனவே என்ன செய்வது? முதலாவதாக இந்த படத்தை சற்று தெளிவாக்க வேண்டும்.
01.59 இங்கே இரு பிரச்சனைகள் உள்ளன, அந்த மனிதர் பின்னால் உள்ளார்.
02.15 இரண்டாவதாக சில பொருட்கள் கீழே இங்கே உள்ளன.
02.21 இங்கே இந்த சிலை சிறப்பாக அமைந்துள்ளது. இது படத்தின் ஒரு corner point என நினைக்கிறேன்.
02.31 எனவே முதலில் இங்கே இவற்றை நீக்குகிறேன்.
02.36 எனவே படத்தை பெரிதாக்கி... Pen Tool ஐ தேர்ந்தெடுக்கவும்.
02.50 Cloning Tool மூலம் செய்வது மிக சிறந்தது. இங்கே மிக துல்லியமாக வேலை செய்ய விரும்பவில்லை. ஏனெனில் முடிவு படத்தில் இந்த சிறிய விஷயங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.
03.05 எனவே clone tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். pen ன் அளவை மாற்றுகிறேன்.
03.13 இப்போது ஆரம்ப புள்ளியை பெற Ctrl மற்றும் click ஐ அழுத்துக. இப்போது வரைய ஆரம்பிக்கிறேன்.
03.24 ஆனால் அதை ஆரம்பிக்கும் முன் Overlay mode ஐ Normal mode ஆக மாற்றுகிறேன், opacity ஐ 100 ஆகவும் மாற்றுகிறேன். இப்போது வரைய ஆரம்பிக்கலாம்.


03.42 படம் சற்று மங்கலாக மேகம்போலாகிறது. எனவே வரைய மற்றொரு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03.57 இப்போது இங்கே விளிம்பிற்கு சென்று வரைகிறேன்.
04.37 எனவே அவர் மறைந்துவிட்டார்
04.41 இங்கே சில பொருட்கள் உள்ளன.


04.44 இங்கே இந்த பூத்தொட்டி எனக்கு வேண்டும். ஆனால் மற்றவை அனைத்தும் வேண்டாம்.
05.03 ஒரு சமயத்தில் இந்த பூத்தொட்டியின் விளிம்புகளை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்.
05.24 இந்த படத்தை இவ்வாறே விடுகிறேன் எனில் clone செய்ததன் தடங்களை நீங்கள் காணலாம். ஆனால் comic mode ஐ செயல்படுத்தும் போது அவை மறைந்துவிடும்.
05.43 எனவே இப்போது இங்கே பூத்தொட்டியில் சற்று வேலை செய்யலாம்.
06.06 இந்த புள்ளியிலிருந்து நான் clone செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
06.26 இது இந்த பெரிதாக்கிய படியில் பார்க்க ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஆனால் இது வேலை செய்யும் என நான் நினைக்கிறேன்.
06.34 அடிப்படையில் comic படம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
06.39 முதலில் நிறங்கள் ஏதும் இல்லாமல் கருப்பு திட்டுக்கள் அல்லது அடர்ந்த திட்டுக்கள் உள்ளன். அது படத்திற்கு அமைப்பைக் கொடுக்கிறது.
06.50 பிறகு படத்தில் வடிவமைப்புகள் மற்றும் பொருட்களை வரையறுக்கும் கோடுகள் உள்ளன.
06.57 அதன் பின் நிறம் உள்ளது. இந்த திட்டுகளுடன் tutorial லில் உள்ளது போல ஆரம்பிப்போம்
07.04 அதற்கு
07.15 இந்த Layer ஐ இரண்டாக்கி அதை ink என்கிறேன்.
07.25 Threshold tool ஐ தேர்ந்தெடுத்து படத்தினுள் சொடுக்குகிறேன். படத்தினுள் info window இழுக்கிறேன்.
07.37 இங்கே படம் கருப்பு வெள்ளையாக இருப்பதைக் காண்க.
07.43 இந்த tool படத்தை கருப்பு வெள்ளையாக பிரிக்கிறது.
07.48 82 ல் உள்ளதை விட pixel... குறைவானதாக இருந்தால்... சிவப்பு பச்சை மற்றும் நீலத்தின் சராசரி கலவை வெள்ளையாக இருக்கும்.
08.02 Level... 82 ஐ விட குறைவானதாக இருந்தால் இது கருப்பாகும்.
08.14 இப்போது இங்கே முதல் பிரச்சனையை சந்திப்போம்.
08.19 விளைவு கிட்டத்தட்ட மிக கருப்பாகும் வரை இந்த slider ஐ இழுக்கும்போது...
08.26 இந்த மதிப்பு 129 ல் என் முகத்தின் இடப்பக்க பகுதி, தோள்பகுதி மற்றும் இந்த சிலை நன்றாக உள்ளது.
08.40 இங்கே இப்போது கண்கள் நன்றாக உள்ளன
08.48 இதில் மற்றொரு கண் நன்றாக உள்ளது.
08.53 இப்போது இந்த படத்திற்கு வேறு ink layer ஐ பயன்படுத்த வேண்டும்.
09.01 எனவே இங்கே இதுபோன்ற குறைவான பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம். மீண்டும் படத்தின் 100% க்கு செல்வோம்.
09.14 இங்கே இதை இரண்டாக்குகிறேன். threshold tool ஐ தேர்ந்தெடுத்து... இந்த slider ஐ கீழே இழுக்கவும்.
09.29 ஆனால் அதற்கு முன் மேல் layer ஐ மறைக்க வேண்டும்.
09.46 முகத்தின் இந்த பகுதிக்கு இந்த மதிப்பு நன்று என நினைக்கிறேன்.
09.56 இந்த layer ஐ ஒரு பிரதி எடுக்கிறேன். இதை செயல்படுத்திகிறேன். இப்போது இந்த layer ல் நான் வேலைசெய்கிறேன்.
10.08 இங்கே மத்தியில் இருப்பதை நான் பார்க்கவேண்டும்.
10.13 முகத்தின் இந்த பகுதி, இது மிக நன்றாக வேலை செய்கிறது என நினைக்கிறேன். எனவே படத்தை சுற்றி பார்க்கிறேன்.
10.23 சிலையும் நன்றாக உள்ளது.
10.26 இங்கே இந்த படம் நல்ல ஒளித்திறனைக் கொண்டுள்ளது. என் கைக்கு பக்கத்தில் கோடுகள் மறைந்துள்ளன. இது optical illusion எனப்படும்.
10.41 இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன். இது படத்தில் இருக்க வேண்டும்.
10.49 இப்போது Threshold tool ஐ தேர்ந்தெடுத்து இங்கே கோடு தெரியும்படி செய்கிறேன். மேலும் சற்று ஒளித்திறனைப் பெற பிரகாசமான பகுதிகளைக் காணவும். எனவே இதை அதிகமாக்குகிறேன்.
11.08 இது பரவாயில்லை.
11.12 இப்போது என் ink layer ன் மூன்று பிரதிகளைக் கொண்டுள்ளேன்.
11.17 முதலாவது ink light.
11.28 மேல் layer... ink dark.
11.34 நடு layerஐ ink என பெயரிடுவோம்.
11.40 இப்போது 3 layerகளையும் பார்த்து எதை அதிகமாக பயன்படுத்துவது என முடிவுசெய்வோம்.
11.49 ink layer ஒரு நல்ல மூலம் என நினைக்கிறேன், ஏனெனில் இது மிக லேசாக உள்ளது. இது மிக அடர்ந்து உள்ளது.
12.01 எனவே இந்த layer ஐ அடியில் வைக்கிறேன். Dark layer மற்றும் light layer க்கு ஒரு layer mask ஐ சேர்க்கிறேன்.
12.12 black layer mask ஐ full transparency உடன் சேர்க்கிறேன்.
12.18 எனவே இங்கிருக்கும் அனைத்தும் மறைகிறது
12.26 Light layer ன் இந்த layer mask ல் வெள்ளையில் வரையும் போது, படம் அதில் வெளிக்காட்டப்படுகிறது.
12.45 எனவே இங்கே brush tool ஐ தேர்கிறேன். normal mode மற்றும் opacity 100% ஐ பயன்படுத்துகிறேன்.
12.55 ஒரு கடினமான brush ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன். Pressure sensitivity... Size ஆக இருக்க வேண்டும், எனவே மேற்பரப்பில் pen ஐ அழுத்தும்போது புள்ளி பெரிதாகும்.
13.20 என் foreground நிறம் வெள்ளை.
13.24 எனவே ஆரம்பிக்கலாம்
13.28 முகத்தின் இடப்பகுதி பிரகாசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
13.34 படத்தை பெரிதாக்க 1 ஐ அழுத்துகிறேன்.
13.39 இந்த brush மிக சிறியது என நினைக்கிறேன், எனவே இதை சற்று பெரிதாக்குகிறேன்.
13.53 இது பரவாயில்லை.
14.00 ஆனால் அநேகமாய் இது மிக பிரகாசமாய் உள்ளது.
14.05 இது கருப்பு அல்லது வெள்ளையாக இருக்க வேண்டும்.
14.47 எனவே இந்த நிறங்களை ‘X’ key ஐ அழுத்தி இடமாற்றுகிறேன். இதன் மீது மீண்டும் மீண்டும் வரைகிறேன்.
14.57 ஆனால் இதை இங்கே நீக்கிவிட்டு அடுத்த layer ஐ அதன்மீது வைக்கலாம் என நினைக்கிறேன்.
15.14 இப்போது அந்த பகுதிகள் மீதும் வடிவமைப்பு மீதும் அக்கறை செலுத்துவோம், எனவே கோடுகள் பற்றி மறக்க வேண்டும். இங்கே சற்று வடிவமைப்பைக் காண்போம்.
15.30 இருப்பதை அவ்வாறே விட்டுவிடுவோம்.
15.34 எளிமையாக மற்றொரு layer ஐ சேர்க்க முடியும். இப்போது வெள்ளை நிறத்துடன் கருப்பு பகுதிகளை வரைகிறேன்.
15.44 இங்கே சற்று வெளிக்காட்ட முடியுமா என பார்ப்போம்.
15.51 இது மிக அதிகம் என நினைக்கிறேன்.
15.56 முகத்தை சற்று கருமையாக்க விரும்புகிறேன்.
16.08 மேலும் இங்கேயும்.
16.19 இதுவும் மிக கருமையாக உள்ளது என நினைக்கிறேன்.
16.31 இங்கே செய்யவேண்டிய வேலை இன்னும் சில உள்ளன. ஆனால் இதை இங்கு இதற்கு விடுகிறேன். அடுத்த படியில் கோடுகளுடன் அதை நான் முடித்தபின் காண்போம். பின் இங்கே சரிசெய்ய முடியும்.
16.46 இதை மேலும் பிரகாசமாக்க வேண்டும்.
16.49 எனவே அங்கே edit ஐ காண்போம்.
16.53 இந்த படியில் சில கோடுகளை நான் சேர்க்க வேண்டும். Background layer ஐ இரண்டாக்கி.... அதை மேலே வைத்து.... அதற்கு lines என பெயரிடுவதன் மூலம் இது செய்யப்படும்.
17.08 வெவ்வேறு நிறங்களுக்கு இடையே கோடுகள் விளிம்புகளாக உள்ளன.
17.15 எனவே Filters ல், edge-detect செல்க, இங்கே Gaussians edge detect ன் வித்தியாசம் உள்ளது.


17.33 இது தொடர்பான slider... Radius ஆகும். இந்த எண்ணிக்கையை குறைக்கிறீர்கள் எனில் கோடுகள் லேசானதாகும்.
17.45 எண்ணிக்கையை அதிகரிக்கிறீர்கள் எனில் கோடுகள் அகலமாகும். படத்தில் மேலும் தகவல்களைப் பெறுவோம்.
17.56 கிட்டத்தட்ட 10 ஐ தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். ஆனால் 30 க்கு செல்லமுடியும். பின் எங்கே சரியாக நிறுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.
18.10 30 க்கு செல்லும்போது விளிம்புகள் இல்லை... ஆனால் பகுதிகள். 12 இதை இங்கே கொடுக்கும்.
18.27 10 ல் நிறுத்தலாம் என நினைக்கிறேன்.
18.37 இந்த layer ன் layer mode ஐ Multiply க்கு அமைக்கிறேன். நிறத்தை அதிகரிப்பதற்கு படத்தில் பின்னர் வெள்ளையை குறைப்பேன்.
18.50 இப்போது இதுவரை நாம் சரியாக பெற்றுள்ளோமா என சற்று சோதிப்போம்.
18.56 எனவே இந்த lines layer ஐ செயல்படுத்தி செயல்நீக்குகிறேன். இங்கே lines layer ஐ செயல்படுத்தும் போது சற்று ஒளித்திறன் இருப்பதைக் காணலாம்.
19.08 இப்போது dark ink layer ஐ செயல்நீக்குகிறேன். Light ink layer ஐ அப்படியே வைக்கிறேன்.
19.20 என் dark ink layer உடன்... உள்ளே நான் வைத்திருக்க விரும்பிய வடிவமைப்பு lines layer ல் தெரிகிறது.
19.30 எனவே இந்த dark ink layer ஐ செயல்நீக்குகிறேன்.
19.42 இங்கே இந்த layerகளை ஒன்றுசேர்க்கவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.
19.50 அதை இருந்தவாறே விட்டுவிடுகிறேன். அதனால் சிலவற்றை என்னால் மாற்ற முடியும். இது முடிவு படத்தில் இருக்கும்.
20.09 நான் சொன்னவாறே அடுத்த படி... இங்கே white channel ஐ குறைக்க வேண்டும், levels tool மூலம் இது செய்யப்படும். 240 வரை level ஐ குறைக்கிறேன்.
20.28 இந்த layer ஐ செயல்நீக்கும்போது.... சாம்பல்நிற background ஐ கொண்டிருப்பதையும் சற்று நிறத் தகவல்கள் அங்கு இருப்பதையும் காணலாம்.
20.40 படத்தில் நிறத்தைக் கொண்டுவர background layer ஐ பிரதி எடுத்து.... அதற்கு Colour என பெயரிடுகிறேன். இதை மேலே வைப்போம். Layer mode ஐ Colour க்கு அமைப்போம்.
21.00 ஆனால் இது பார்க்க நன்றாக இல்லை. எனவே mode ஐ மாற்ற வேண்டும்.
21.07 இங்கே படத்தில் சற்று நிறம் வந்துவிட்டது.
21.12 ஆனால் எனக்கு மேலும் saturation வேண்டும். எனவே மீண்டும் background layer ஐ பிரதி எடுத்து... அதற்கு Saturation என பெயரிடுகிறேன்.
21.24 Layer mode ஐ Saturation க்கு அமைக்கிறேன் .
21.29 இந்த saturation mode ஏற்கனவே வேலை செய்கிறது என நினைக்கிறேன். விளைவுகளும் மிக நன்றாக உள்ளது.
21.38 நிறத்தில் மேலும் எளிமை இருந்திருக்க வேண்டும். கை comic போல இல்லை.
21.47 இது எங்கிருந்து வருகிறது என பார்ப்பேன்.
21.51 எனவே இப்போது இந்த slider களுடன் நான் விளையாட ஆரம்பிக்கலாம்.
21.58 saturation ஐ குறைக்கும்போது, சற்று எளிமையைப் பெறுகிறோம், மிகவும் தண்ணீர் போன்ற நிறத்துடன் காணப்படுகிறது. எனவே இது ஒரு வித்தியசமான விளைவு.
22.19 இப்போது இங்கே layer களுடன் விளையாட ஆரம்பிக்கலாம்.
22.26 எனவே இங்கே lines layer ஐ செயல் நீக்குகிறேன். இந்த விளைவு Lines layer யிடமிருந்து வரவில்லை என்பதையும் ஆனால் colour மற்றும் saturation layer களிடமிருந்து வருகிறது என்பதையும் காணலாம்.
22.39 இப்போது சில சீரமைப்பு வேலைகளை செய்யலாம். ஏனெனில் இன்னும் இங்கே layerகள் உள்ளன.
22.47 முகத்தை லேசாக்க விரும்புகிறேன். எனவே என் ink light layer ஐ தேர்ந்தெடுக்கிறேன், வெள்ளை foreground நிறத்துடன் ஒரு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
23.12 படத்தை பெரிதாக்குகிறேன்.
23.18 Brush ன் அளவைக் குறைக்கிறேன். சற்று அதிகமாக்குறேன். இப்போது இங்கே கண்ணை வரைகிறேன்.
23.34 இது மிக அதிகம்.
23.50 இது நன்றாக உள்ளது.
23.54 இப்போது இந்த பகுதியில் வரைகிறேன்.
24.00 இது மிக அதிகம்.
24.03 இங்கே இந்த பகுதிகளை மாற்றுவதன் மூலம்... படத்தில் உங்களால் செய்யக்கூடிய பல மாற்றங்கள் இருக்கக்கூடும் என்பதை கற்பனை செய்யலாம்.
24.47 இது சரியாக உள்ளது.
24.51 இங்கே நீங்கள் பல மாற்றங்களை செய்யலாம். நான் சரியான பாதையில்தான் இருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை.
25.01 ஆனால் இதுவரை எனக்கு பிடித்துள்ளது.
25.06 வேறு எதுவெல்லாம் செய்ய முடியும் என காணலாம்.
25.10 முதலாவதாக lines ஐ விட வேறு layer ஐ பயன்படுத்தலாம்.


25.18 எனவே lines ஐ செயல்நீக்குக. மிகவும் வித்தியாசமான நிறங்களைப் பெறுகிறேன். ஏனெனில் இப்போது மீண்டும் வெள்ளை background உள்ளது
25.31 எனவே மற்றொரு layer ஐ இங்கே சேர்க்கிறேன். வெள்ளைக்கு இதை அமைக்கிறேன். multiply mode ஐ பயன்படுத்துகிறேன். 240 grey என நிரப்புகிறேன்.


25.52 இப்போது கிட்டத்தட்ட இங்கே lines ல் பெற்றதுபோன்ற அதே படத்தை பெற்றுள்ளேன்.
25.59 அவற்றை செயல்படுத்துகிறேன்.
26.03 கோடுகளின் தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் இந்த comic விளைவு இன்னும் அங்குள்ளது. எது நன்றாக உள்ளது என நான் காண முடியும்.
26.21 சில வித்தியாசமான நுணுக்கங்களை முயற்சிக்கலாம்.
26.30 colour மற்றும் saturation layer ஐ இரண்டாக்கி அவற்றுடன் சிலவற்றை செய்யலாம்.
26.39 இங்கே படத்தில் சில விவரங்களை வெளிகொண்டுவர முயற்சிப்போம்.
26.45 எனவே செல்க Filters, Blur பின் Gaussian blur.
26.53 இங்கே எனக்கு நல்ல விளைவைக் கொடுக்கும் ஒரு மதிப்பை தேர்ந்தெடுக்கிறேன்.
27.08 நிறங்கள் சற்று மிருதுவானதைக் காணலாம்.
27.18 எனவே இதை saturation copy க்கும் செய்யலாம்.
27.24 செல்க Filters, பின் Repeat Guassian Blur.
27.29 இப்போது உண்மையில் எளிமையான படத்தை எளிமையான நிறங்களுடன் பெற்றுள்ளேன்.
27.36 எனவே மூல colour ஐ செயல்படுத்துகிறேன். இங்கே ஒரு வித்தியாசமான விளைவைப் பெறுகிறேன்.
27.44 saturation blurred... மற்றும் colour blurred என இந்த Layerகளை மறுபெயரிடலாம்.


28.04 Blurred saturation ஐ blur செய்யப்படாத colour உடன் இணைக்கிறேன் எனில், சற்று முற்றிலும் வித்தியாசமான சில நிறங்களை இங்கே பெறுகிறேன்.
28.16 இது குறிப்பாக இங்கே மூக்கின் மீது இல்லாமல் இருந்தால் எனக்கு பிடித்திருக்கும்.
28.22 எனவே மீண்டும் இதை செயல்படுத்துவோம். இங்கே இந்த விளைவு உள்ளது.
28.29 Blur ஐ குறைக்கிறோம் எனில் கூர்மையான தகவல்களை பெறுகிறோம் என்பதை கற்பனை செய்யலாம்.
28.37 இது ஒரு உண்மை விளையாட்டு திடல்.
28.40 இதை எவ்வாறு செய்வது, என்ன செய்வது, மற்றும் எதை செம்மைப்படுத்துவது என்பது போல பல சாத்தியங்கள் உள்ளன
28.50 உண்மையில் இது செய்ய மிக வேடிக்கையானது.
29.09 இந்த மூல tutorial ஐ உருவாக்கியவர் ஒரு மகத்தான வேலையை செய்துள்ளார்.
29.24 இந்த படத்தின் இரண்டு பதிப்புகளும் எனக்கு பிடிக்கவில்லை.
29.31 இந்த வடிவமைப்பு... மலர்... இந்த சிலை... மற்றும் இந்த பானை இங்கே எனக்கு பிடித்துள்ளது
29.40 கை அருகிலும் முகத்திலும் உள்ள இந்த அனைத்து விவரங்களும் எனக்கு பிடிக்கவில்லை. இது மேலும் எளிமையாக இருக்கலாம்.
29.49 blur செய்யப்பட்டத்தில்... முகத்திலும் கைக்கு அருகிலும் இருந்த விவரங்கள் எனக்கு பிடித்துள்ளது. ஆனால் முற்றிலும் blur ஆன இந்த மலர் எனக்கு படிக்கவில்லை.
30.04 எனவே இப்போது இந்த இரு படங்களையும் இணைக்கலாம். colour blurred உடன் ஆரம்பிக்கிறேன். ஏனெனில் saturation blurred ஐ விட இதன் ஒட்டுமொத்த தோன்றமும் எனக்கு பிடித்துள்ளது.
30.20 ஆனால் அனைத்து layer களையும் செயல்படுத்தி... saturation blurred மற்றும் colour blurred க்கு layer mask ஐ சேர்க்கிறேன். black layer mask ஐ full transparency உடன் சேர்க்கிறேன்.
30.37 இப்போது saturation layer mask உடன் வேலைசெய்ய ஆரம்பிக்கிறேன். எனவே வெள்ளையை என் foreground நிறமாக தேர்ந்தெடுக்கிறேன். இங்கே paint brush ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
30.51 இப்போது வரைய ஆரம்பிக்கிறேன்.
30.55 படத்தில் எங்கு சற்று மேலும் எளிமை இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேனோ அந்த பகுதிகளின் மீது வரைகிறேன்.
31.04 இது சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் இப்போது colour layer செயலில் உள்ளது.
31.46 எனவே இப்போது Shift+ctrl+A ஐ அழுத்துவதன் மூலம் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறேன். Ctrl + C மூலம் பிரதிஎடுத்து, படத்தினுள் சென்று... Ctrl + V ஐ அழுத்துக. இந்த Floating Selection மீது சொடுக்குக. Ctrl + H அல்லது anchor layer உடன் இங்கே என் பிரதி உள்ளது.
32.20 எனவே இந்த layer mask ஐ கூட பிரதி எடுக்கலாம். இந்த படத்தை இங்கேயே விடுவேன் என நினைக்கிறேன்.
32.32 இது முற்றிலும் நல்ல உதாரணம். கடைசியில் இந்த slider உடன் சற்று விளையாடலாம்.
32.54 இதை திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
32.57 முதலில் பட layer ஐ பிரதி எடுத்து ஒரு inked படத்தை threshold tool ஐ பயன்படுத்தி உருவாக்குக.
33.05 எந்த பகுதிகளில் கருப்பாக அல்லது அடர்த்தியாக இருக்க வேண்டும் என காண்க.
33.10 மீண்டும் மூல படத்தை பிரதி எடுக்கவும். ஒரு line layer ஐ edge detect filter ஐ பயன்படுத்தி உருவாக்குக. பின் layer mode ஐ multiply என அமைக்கவும்.
33.29 levels tool ஐ பயன்படுத்தி இந்த layer ல் கிட்டத்தட்ட 240 சாம்பல் நிறத்திற்கு வெள்ளையை குறைக்கவும்.
33.42 பின் மூலம் மூல படத்தை பிரதி எடுத்து ஒரு colour layer ஐ உருவாக்கவும்.
33.49 colour mode ஐ colour என அமைக்கவும்.
33.56 இறுதியாக மூல layer ஐ கடைசிமுறையாக பிரதிஎடுத்து ஒரு saturation layer ஐ உருவாக்கவும். இங்கே layer mode ஐ saturation என அமைக்கவும். இப்போது வெவ்வேறு layerகளின் அல்லது சில layerகளில் opacity உடன் விளையாடவும்.
34.20 சுற்றி முற்றிலும் விளையாடவும். முடிவுகள் நன்கு கலந்தவையாக இருக்கும். ஆனால் சில அதிரடியாக இருக்கும்.
34.32 மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்புனால் info@meetthegimp.org க்கு அனுப்பவும்.
34.49 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana