GIMP/C2/Colours-And-Dialogs/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:38, 10 March 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.23 GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.


00.32 இங்கே foreground and background colour dialog உள்ளது, 6 விதமான வழிகளில் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
00.47 முதல் வழியில், H, S, V, R, G, B என சில sliderகளைக் காணலாம். அவை முறையே hue, saturation,value,red, green,blue ஆகும்.


01.04 இங்கே கருப்பை என் foreground நிறமாக தேர்கிறேன். Hue,Saturation,Value,red,green,blue ஆகியவற்றின் மதிப்புகள் zero என காணலாம்.
01.20 Hue ன் மதிப்பை அதிகரிக்கும்போது ஏதும் மாற்றம் இல்லை.
01.28 கருப்பு கருப்பாகவே உள்ளது. ஏனெனில் மதிப்பு zero ஆகும். value slider ஐ அதிகரிக்கும்போது, ஒருவிதமான சாம்பல் நிறத்தைப் பெறுகிறோம்.
01.41 மதிப்பு 0 ஆக இருக்கும்போது saturation ஐ அதிகரிக்கலாம். ஏதும் மாற்றம் இல்லை.
01.50 ஆனால் saturation ஐ அதிகரிக்கும் போது, மற்ற sliderகளில் நிறம் சற்று மாறுகிறது என்பதைக் காணலாம்.
01.59 Hue ஐ இழுத்தால் ஏதும் நடக்கவில்லை, ஆனால் saturationஐ இழுக்கும்போது, value ன் நிறம் ஒருவகையான நீலமாகிறது.


02.12 HSV system மூலம் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால், பின் Saturation மற்றும் Value slider ஐ அதிகமாக்கவும். Hue slider ல் பலவித நிறங்களின் வானவில்லை பெறலாம். இந்த நிறங்களிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும்.
02.48 இங்கே red,green மற்றும் blue sliderகளில் நிறங்கள் HSV sliderகளுக்கு ஏற்றவாறு மாறுவதை காணலாம். இது ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க சுலபமாகிறது.
03.03 லேசான நிறம் வேண்டுமானால் saturation sliderஐ சரிசெய்க. திடமான நிறத்தின் நல்ல கலவை வேண்டுமானால் பின் அதற்கேற்றவாறு value slider ஐ மாற்றி ஒரு மதிப்பை red, green அல்லது blue slider ல் தேர்ந்தெடுக்கவும்.
03.23 எனவே Hue, Saturation மற்றும் Value ஆகியவை புரிந்துகொள்ள எளிமையானவை அல்ல. ஆனால் நிறங்களை தேர்ந்தெடுக்க ஒரு நல்ல வழி.
03.44 ஒரு குறிப்பிட்ட நிறத்தை அமைக்க மட்டுமே இந்த dialog ஐ நான் பயன்படுத்துகிறேன்.
03.51 உதாரணமாக எனக்கு துல்லியமான நடுத்தரமான சாம்பல் நிறம் வேண்டுமானல் பின் Value slider ஐ 50 வரை இழுக்கிறேன், எனவே value 0% மற்றும் 100%க்கு இடையில் வகுக்கப்படுகிறது. RGB sliderல் 127க்கு எண்களை அமைக்கிறேன். துல்லியமான நடுத்தரமான சாம்பல் நிறத்தைப் பெறுகிறோம்.
04.28 இப்போது மற்ற dialogகளை காணலாம்.
04.33 இந்த dialog... HSV colour model ஐ அடிப்படையாக கொண்டது. முதலில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை இந்த வட்டத்தில் தேர்ந்தெடுக்கவும்.
04.50 பின் Value மற்றும் Saturation ஐ முக்கோணத்தில் தேர்க.
05.02 எனவே Hue தேர்ந்தெடுக்கப்படும்போது, அதே Hue க்கு முக்கோணத்தில் value மற்றும் Saturationன் மாறுபட்ட மதிப்புகளை இங்கே பெறலாம்.
05.22 அடுத்த dialog இங்கே இருக்கும் இது போன்றதே.
05.27 இந்த dialogல் Hue ஐ தேர்ந்தெடுக்க ஒரு பகுதி உள்ளது, இந்த சதுரத்தில் முக்கோணத்தில் பெறும் அதே நிறத்தை பெறலாம். இப்போது இங்கே இந்த பகுதியில் இருந்து உங்கள் நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். அல்லது இங்கே hue ஐ மாற்றி உங்கள் புது நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்.
05.58 இங்கே saturationக்கும் மாறலாம்.
06.02 இவ்வாறு இழுப்பதன் மூலம் மதிப்பின் சேர்க்கையை தேர்ந்தெடுக்கலாம். Hue ஐயும் இவ்வாறு மாற்றலாம்.
06.12 இங்கே திடமான நிறத்தைப் பெற value ஐ அமைக்க முடியும். அதற்கேற்றவாறு saturation மற்றும் Hue ஐ மாற்றுக.
06.33 இதே வழியில் red,green மற்றும் blueக்கும் இது வேலை செய்கிறது.
06.40 நிறங்களில் எனக்கு வேண்டிய blue ன் அளவை மாற்றலாம். பின் red மற்றும் greenன் அளவுகளுக்கும் அவ்வாறே செய்யலாம்.


06.55 இந்த dialog முந்தையதைவிட நவீனமானது அல்ல.
07.01 அடுத்த dialog... water colour mixup ஆகும்.
07.10 நிறக்குடுவையில் தூரிகையை தோய்ப்பதன் தீவிரத்தை இந்த slider சரிசெய்கிறது.
07.18 இந்த பெட்டியில் இருந்து ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்.
07.32 இது இங்கே முடிவு நிறமாக இருக்கும்.
07.37 ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த மஞ்சள். இப்போது இதற்கு சற்று நீலம் மற்றும் சற்று சிவப்பை சேர்க்கலாம். முடிவாக பெறுவது சேறு போன்ற நிறம்.
07.56 அடிக்கடி இந்த dialog ஐ நான் பயன்படுத்துவதில்லை.
08.02 இந்த dialog நடப்பு நிறக்கலவையைக் காட்டுகிறது, நிறக்கலவையை வேறு எங்காவது அமைக்க முடியும்.
08.10 graphic designing மற்றும் web designingக்கு மட்டுமே இது பயன்படுகிறது. இந்த dialog உடன் நான் பெரிதாக ஏதும் செய்யவில்லை.
08.20 இன்னும் சொல்ல மற்றொன்று உள்ளது. அது இங்கே printer colours.
08.31 இந்த dialog தொழில்முறை printers மற்றும் red,green மற்றும் blue ஆகியவற்றிற்கு பதிலாக Cyan, magenta மற்றும் Yellow ஐ பயன்படுத்தும் printers க்கு மட்டுமே பயனுள்ளது. ஏனெனில் அவை நிறங்களை கழிக்கின்றன.
08.54 சிவப்பு பச்சை மற்றும் நீலம் ஒன்றுகலந்து வெள்ளையாகிறது. அச்சடிக்கையில் Cyan, magenta மற்றும் Yellow ஐ zero க்கு அமைக்க, வெள்ளைத்தாள் அச்சடிக்கப்படுகிறது.
09.11 கருப்பு நிறத்தை அச்சடிக்க விரும்பினால் Cyan, magenta மற்றும் Yellow ஐ 100 க்கு அமைக்கலாம். பின் முழுதும் கருப்பு தாளை பெறலாம்.
09.37 இந்த நிறங்கள், இந்த நிறங்கள் ஒளியிலிருந்து கழிக்கப்பட்டு cyan ஐ மட்டும் பிரதிபலிக்கிறது.
09.46 அவற்றை கலப்பதன் மூலம், ஒளியிலிருந்து மேலும் மேலும் கழிக்கலாம். அனைத்து நிறங்களையும் பெற்று அச்சடிக்கலாம்.
09.58 அச்சடிக்கமுடியாத பார்க்ககூடிய சில நிறங்கள் உள்ளன. அதனால் உங்கள் முடிவு மாறுபடுகிறது.
10.35 நான்காவது slider k. அது குறிப்பது black.
10.41 blue உடன் குழப்பாமல் இருக்க black க்கு K என குறிக்கப்படுகிறது.


10.51 என் background நிறமான வெள்ளையை சொடுக்கும்போது, ஏதும் மாறவில்லை என்பதைக் காணலாம்.
11.08 நிறங்கள் ஒத்தவையே. ஆனால் Cyan slider குறைந்துவிட்டது மற்றும் K slider அதிகரித்துவிட்டது.
11.18 அதை மீண்டும் செய்வோம்.
11.20 Y slider ஐ 40க்கும் , M ஐ 80 க்கும் C ஐ 20க்கும் இழுக்கவும்.
11.29 இப்போது நிறத்தை தேர்ந்தெடுக்கும்போது M slider 75 எனவும், Y 26 எனவும் K 20 எனவும் பெறுகிறோம்.
11.41 ஆனால் நிறம் மாறவில்லை என்பதைக் காணலாம். ஆனால் படத்தில் முன்னர் இருந்த cyan, magenta மற்றும் yellow ன் கலவை... magenta, yellow மற்றும் black என மாறியுள்ளது.
11.59 கருப்பு மை சற்று மலிவானது. எனவே இங்கே மாறா புள்ளிக்கு cyan, magenta மற்றும் yellowன் macky கலவைக்கு பதிலாக Magenta, Yellow மற்றும் Black ன் கலவை பயன்படுகிறது.
12.22 இப்போது நிறத் தேர்வின் 6 dialog களையும் பார்த்துவிட்டோம்.
12.28 ஆனால் இந்த இரு colour swaps மீதி உள்ளன.
12.32 முன் உள்ள நிறம் என் foreground மற்றும் மற்றொன்று என் background நிறம். அதன் மீது சொடுக்கும்போது இங்கே நிறங்களை அமைக்க முடியும்.
12.46 இந்த நிறங்களை உங்கள் படத்தில் அல்லது உங்கள் தேர்வில் தேவையானால் பின் அந்த பகுதியின் மேலே இந்த நிறங்களை இழுக்கவும். அந்த நிறத்துடன் அப்பகுதி நிரப்பப்படும்.


13.02 இந்த colour swapsஐ tool boxல் வைக்கலாம்.
13.14 File சென்று, Preferences பின் tool box. இங்கே foreground background colour ஐ காணலாம். brush மற்றும் நடப்பு படத்தையும் காணலாம்.
13.37 பின்னர் இதை நீக்கிவிடுவேன். ஏனெனில் இது என் tool box ல் அதிக இடத்தை எடுக்கும்.
13.46 colour swaps ன் மேல் வலது மூலையில் உள்ள இந்த சிறிய icon... foreground மற்றும் background நிறத்தை மாற்றுவதற்காக உள்ளது.
13.56 அதை X key ஐ அழுத்தியும் செய்யலாம்.
14.03 கீழ் இடது மூலையில் உள்ள இந்த icon... foreground மற்றும் background நிறத்தை கருப்பு வெள்ளையாக மாற்றியமைப்பதற்காக உள்ளது.
14.14 இது ஒரு நல்ல சிறப்பம்சம். இது ஒரு colour picker. நீங்கள் விரும்பும் நிறத்தை திரையில் இருந்தோ அல்லது ஒரு இணையத்தளத்திலிருந்தோ தேர்ந்தெடுக்கலாம்.
14.31 கடைசியாக நிறங்களை வரையறுக்க hex code இருக்கும் புலத்தைக் காணலாம்
14.45 நான் நிறத்தை மாற்றும்போது அந்த code எவ்வாறு மாறுகிறது என்பதைக் காணலாம். Hex code ல் தட்டச்சு செய்து நிறத்தையும் பெறலாம். அல்லது நிறத்தின் பெயரையும் தட்டச்சு செய்யலாம்.
15.06 உதாரணமாக 'L' ஐ தட்டச்சு செய்க. அனைத்து நிறங்களையும் பெறலாம். lawn green, இது lawn green. எனவே இது விவரமான colour dialog.
15.19 அதிகமாக சொல்லி விட்டேன் என நினைக்கிறேன். இத்துடன் இந்த tutorial முடிகிறது.
15.23 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana