GIMP/C2/Adjusting-Colours-Using-Layers/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:21, 25 February 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.22 Gimp tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.


00.29 முன் tutorial லில் editing க்கு பிறகு இங்கே இந்த படத்தை பெற்றேன்.
00.33 இன்று நிறங்களை அமைக்க சிலவற்றை செய்வேன் என நினைக்கிறேன்.
00.39 ஏனெனில் இந்த படம் மிகவும் பச்சையாக உள்ளது


00.41 நிறத்தை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று Curve Tool.
00.47 tool box ல் curves tool ஐ சொடுக்குகிறேன். பின் green channel ஐ தேர்ந்து curve ஐ கீழே இழுக்கிறேன்
00.55 இப்போது colour channels ஐயும் படத்தில் பனிமூட்டம் உண்மை பனிமூட்டம் போன்று இருப்பதையும் காணலாம்.
01.02 இப்போது பச்சை அல்லது magenta இல்லாமல் gray ல் படத்தை பெறுகிறவாறு curve ஐ சரிசெய்ய வேண்டும்.
01.13 நான் curves tool ஐ பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் இது படத்தின் தகவல்களை சேதப்படுத்திவிடும். பின் அந்த சேதத்தை என்னால் சரிசெய்ய முடியாது.
01.23 நான் undo toolஐ பயன்படுத்தலாம். ஆனால் அதற்குபின் அனைத்து படிகளையும் மீண்டும் செய்ய வேண்டும்.
01.28 எனவே படத்தை சேதப்படுத்தாதவாறு சிலதை செய்ய விரும்புகிறேன். பின்னர் அதை சரிசெய்ய முடியும்.
01.34 அவ்வாறு ஒரு வழி உள்ளது. அது layers உடன் simple filter ஐ பயன்படுத்துவது
01.39 எனவே இங்கே layer dialogஐ திறந்துள்ளேன்.
01.43 இங்கே background ஐ காணலாம். அது நம் உண்மையான படம்.
01.47 ஒரு layer ஐ சேர்க்கிறேன். Layer Fill Type ல் white ஐ தேர்ந்து color correction green என name ஐ தருகிறேன்.
01.59 இப்போது என் படம் முழுதும் வெள்ளையாக உள்ளது. ஆனால் layer mode ஐ மாற்ற முடியும்.
02.05 layer mode என்பது இரு layerகளை அதாவது original background layer மற்றும் புதிதாக உருவாக்கிய layer ஐ சேர்க்கும் ஒரு algorithm ஆகும்.
02.16 எனவே இங்கே Multiple mode ஐ தேர்கிறேன்.
02.22 எனவே முன்பு இருந்தவாறே உண்மையான படத்தை திரும்ப பெறுவோம்
02.27 Multiply mode, background ன் pixels ஐ foreground ன் pixels உடன் பெருக்கி முடிவை 255 ஆல் வகுக்கிறது.
02.37 வெள்ளை படத்தில் அனைத்து colour channelகளும் 255 ஆகும், எனவே 255 ஆல் பெருக்குவதும் 255 ஆல் வகுப்பதும்... ஆரம்ப புள்ளி அதாவது Background ஐ கொடுக்கும்


02.52 ஆனால் புது layer ல் ஒரு channel ஐ நான் குறைத்தால், அது background லும் குறைக்கப்படும். ஏனெனில் பெருக்குவது 200 ல் எனில் 255 ஆல் வகுப்பது குறைந்த அளவே கொடுக்கும்.
03.06 இப்போது குறைந்த green channelஐ கொடுக்கும் வகையில் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.
03.12 இங்கே கருப்பு... foreground நிறமாக உள்ளது, அதை background நிறமாக மாற்றுகிறேன். வெள்ளையை foreground நிறமாக மாற்றுகிறேன். colour channelகள் red, green மற்றும் blue அனைத்தும் ஒரே மதிப்பு அதாவது 255 உடன் உள்ளதை காணலாம் .


03.31 இங்கே sliderல் உள்ள நிறங்களால் குழம்ப வேண்டாம்
03.36 இது blue அல்ல, இது yellow. ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு இதை நான் குறைக்கும்போது, அனைத்து sliderகளிலும் நிறம் தானாக மாறுவதைக் காணலாம்.
03.50 சரி இங்கே green slider ஐ தேர்ந்து கிட்டத்தட்ட 211 வரை அதை நான் இழுக்கிறேன்.


03.59 என் foreground நிறமாக பெற்ற நிறத்தை என் படத்தினுள் இழுக்கிறேன். நான் பெறும் முடிவு magenta வுக்கானது.
04.10 ஆனால் opacity sliderன் உதவியுடன் என் green குறைப்பின் அடர்த்தியைச் சரிசெய்ய முடியும்.
04.19 zeroக்கு திரும்ப செல்லும்போது பழைய படத்தை பெறுகிறேன், slider ஐ அதிகரிக்கும்போது படத்தில் green channel ஐ குறைக்க முடியும். படத்தினுள் magenta வருவதையும் தவிர்க்க முடியும்.
04.35 இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்
04.38 layers toolஐ பயன்படுத்துவதன் மூலம் மாற்றங்களை எப்போது விரும்பும்போதும் செய்யலாம். பல layerகள் அதன்மீது அடுக்கப்பட்டிருக்கும்போது நன்கு சீரமைக்கவும் முடியும். படத்தில் உள்ளதை நான் மாற்றினாலும் மாற்றங்கள் அங்கேயே இருக்கும்.


04.55 இப்போது இது gray ல் தோன்றுவதால் இந்த layerல் ஏற்படுத்த சில மாற்றங்கள் இன்னும் உள்ளன. சற்று blue ஐ சேர்க்க விரும்புகிறேன்.


05.03 மீண்டும் அதே வழிமுறைகளை பின்பற்றி ஒரு புது layer ஐ உருவாக்கி அதை color correction blue என்போம்.
05.11 இப்போது சிறிது blueஐ சேர்க்க விரும்புகிறேன்.
05.15 இந்த படத்தில் blue ஐ சேர்ப்பதற்கு, Multiply mode ஐ விட சற்று கடினமாக இருக்கும் Screen modeஐ பயன்படுத்துகிறேன்.
05.24 screen mode ல் நிறங்கள் முதலில் தலைகீழாக மாற்றப்பட்டு பின் பெருக்கப்பட்டு வகுக்கப்படுகிறன. புரிந்து கொள்ள கடினமானது.
05.33 foreground நிறத்தை கருப்பாக மாற்றி நான் சேர்க்க விரும்பும் நிறத்தை நேரடியாக சேர்க்கிறேன். இப்போது சிறிது blueஐ சேர்க்க வேண்டும்
05.43 எனவே blue slider ஐ சற்று குறைக்கிறேன்.
05.47 பின் நிறத்தை படத்தினுள் இழுக்கிறேன்.
05.51 இங்கே இது blue ஆக இருக்கும் என நினைக்கலாம், இன்னும் அது கருப்பு போலவே உள்ளது. ஆனால் இது மிகவும் அடர்ந்த blue.
05.59 இங்கே படத்தை பாருங்கள். இதை நான் off செய்யும்போது, மாற்றத்தைக் காணலாம்
06.04 படம் கண்டிப்பாக blue கலந்ததாகவே உள்ளது.
06.08 இரு புது layerகளையும் நான் off செய்யலாம். அதனால் ஆரம்ப புள்ளியை பெறலாம்.
06.13 முதல் layerல் சொடுக்கும்போது greenன் குறைக்கப்பட்ட channelஐ காண்கிறோம். இரண்டாம் layerஐ சொடுக்கும்போது சற்று blue நிறத்தை சேர்க்கிறது.
06.22 blue அதிகமாக உள்ளது என நினைக்கிறேன். எனவே opacityஐ குறைக்கிறேன்.
06.27 இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.
06.30 பின்னால் எப்போதுமே இதை சரிசெய்யலாம்
06.33 layer tool மிகவும் சக்திவாய்ந்தது. ஏனெனில் layerகளுக்கு மேலே layerஐ உருவாக்க முடியும். ஒவ்வொரு layer லும் கீழ் layer லிருந்து வரும் pixels ஐ மாற்ற முடியும்
06.44 திருத்தங்களை செய்வதற்கான வாய்ப்புகள் எல்லையற்றவை, விரும்பும் போதெல்லாம் செய்யலாம்.
06.51 இங்கே அநேகமாக நல்ல நிறத்தை பெற opacity slider ஐ குறைக்கலாம். இங்கே நிறத்தை மாற்ற முழு வாய்ப்புகளையும் தரும் இந்த sliderகளுடன் விளையாடலாம்.


07.05 layer tool ஐ இன்னும் விளக்கமாக தனி டுடோரியலில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். இன்றைக்கு இது போதும்.
07.13 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana