Difference between revisions of "GIMP/C2/Adjusting-Colours-Using-Layers/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 4: Line 4:
  
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
  
 
|-  
 
|-  

Revision as of 15:18, 25 July 2014

Time Narration
00:22 Gimp tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.


00:29 முன் tutorial லில் editing க்கு பிறகு இங்கே இந்த படத்தை பெற்றேன்.
00:33 இன்று நிறங்களை அமைக்க சிலவற்றை செய்வேன் என நினைக்கிறேன்.
00:39 ஏனெனில் இந்த படம் மிகவும் பச்சையாக உள்ளது


00:41 நிறத்தை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று Curve Tool.
00:47 tool box ல் curves tool ஐ சொடுக்குகிறேன். பின் green channel ஐ தேர்ந்து curve ஐ கீழே இழுக்கிறேன்
00:55 இப்போது colour channels ஐயும் படத்தில் பனிமூட்டம் உண்மை பனிமூட்டம் போன்று இருப்பதையும் காணலாம்.
01:02 இப்போது பச்சை அல்லது magenta இல்லாமல் gray ல் படத்தை பெறுகிறவாறு curve ஐ சரிசெய்ய வேண்டும்.
01:13 நான் curves tool ஐ பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் இது படத்தின் தகவல்களை சேதப்படுத்திவிடும். பின் அந்த சேதத்தை என்னால் சரிசெய்ய முடியாது.
01:23 நான் undo toolஐ பயன்படுத்தலாம். ஆனால் அதற்குபின் அனைத்து படிகளையும் மீண்டும் செய்ய வேண்டும்.
01:28 எனவே படத்தை சேதப்படுத்தாதவாறு சிலதை செய்ய விரும்புகிறேன். பின்னர் அதை சரிசெய்ய முடியும்.
01:34 அவ்வாறு ஒரு வழி உள்ளது. அது layers உடன் simple filter ஐ பயன்படுத்துவது
01:39 எனவே இங்கே layer dialogஐ திறந்துள்ளேன்.
01:43 இங்கே background ஐ காணலாம். அது நம் உண்மையான படம்.
01:47 ஒரு layer ஐ சேர்க்கிறேன். Layer Fill Type ல் white ஐ தேர்ந்து color correction green என name ஐ தருகிறேன்.
01:59 இப்போது என் படம் முழுதும் வெள்ளையாக உள்ளது. ஆனால் layer mode ஐ மாற்ற முடியும்.
02:05 layer mode என்பது இரு layerகளை அதாவது original background layer மற்றும் புதிதாக உருவாக்கிய layer ஐ சேர்க்கும் ஒரு algorithm ஆகும்.
02:16 எனவே இங்கே Multiple mode ஐ தேர்கிறேன்.
02:22 எனவே முன்பு இருந்தவாறே உண்மையான படத்தை திரும்ப பெறுவோம்
02:27 Multiply mode, background ன் pixels ஐ foreground ன் pixels உடன் பெருக்கி முடிவை 255 ஆல் வகுக்கிறது.
02:37 வெள்ளை படத்தில் அனைத்து colour channelகளும் 255 ஆகும், எனவே 255 ஆல் பெருக்குவதும் 255 ஆல் வகுப்பதும்... ஆரம்ப புள்ளி அதாவது Background ஐ கொடுக்கும்


02:52 ஆனால் புது layer ல் ஒரு channel ஐ நான் குறைத்தால், அது background லும் குறைக்கப்படும். ஏனெனில் பெருக்குவது 200 ல் எனில் 255 ஆல் வகுப்பது குறைந்த அளவே கொடுக்கும்.
03:06 இப்போது குறைந்த green channelஐ கொடுக்கும் வகையில் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.
03:12 இங்கே கருப்பு... foreground நிறமாக உள்ளது, அதை background நிறமாக மாற்றுகிறேன். வெள்ளையை foreground நிறமாக மாற்றுகிறேன். colour channelகள் red, green மற்றும் blue அனைத்தும் ஒரே மதிப்பு அதாவது 255 உடன் உள்ளதை காணலாம் .


03:31 இங்கே sliderல் உள்ள நிறங்களால் குழம்ப வேண்டாம்
03:36 இது blue அல்ல, இது yellow. ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு இதை நான் குறைக்கும்போது, அனைத்து sliderகளிலும் நிறம் தானாக மாறுவதைக் காணலாம்.
03:50 சரி இங்கே green slider ஐ தேர்ந்து கிட்டத்தட்ட 211 வரை அதை நான் இழுக்கிறேன்.


03:59 என் foreground நிறமாக பெற்ற நிறத்தை என் படத்தினுள் இழுக்கிறேன். நான் பெறும் முடிவு magenta வுக்கானது.
04:10 ஆனால் opacity sliderன் உதவியுடன் என் green குறைப்பின் அடர்த்தியைச் சரிசெய்ய முடியும்.
04:19 zeroக்கு திரும்ப செல்லும்போது பழைய படத்தை பெறுகிறேன், slider ஐ அதிகரிக்கும்போது படத்தில் green channel ஐ குறைக்க முடியும். படத்தினுள் magenta வருவதையும் தவிர்க்க முடியும்.
04:35 இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்
04:38 layers toolஐ பயன்படுத்துவதன் மூலம் மாற்றங்களை எப்போது விரும்பும்போதும் செய்யலாம். பல layerகள் அதன்மீது அடுக்கப்பட்டிருக்கும்போது நன்கு சீரமைக்கவும் முடியும். படத்தில் உள்ளதை நான் மாற்றினாலும் மாற்றங்கள் அங்கேயே இருக்கும்.


04:55 இப்போது இது gray ல் தோன்றுவதால் இந்த layerல் ஏற்படுத்த சில மாற்றங்கள் இன்னும் உள்ளன. சற்று blue ஐ சேர்க்க விரும்புகிறேன்.


05:03 மீண்டும் அதே வழிமுறைகளை பின்பற்றி ஒரு புது layer ஐ உருவாக்கி அதை color correction blue என்போம்.
05:11 இப்போது சிறிது blueஐ சேர்க்க விரும்புகிறேன்.
05:15 இந்த படத்தில் blue ஐ சேர்ப்பதற்கு, Multiply mode ஐ விட சற்று கடினமாக இருக்கும் Screen modeஐ பயன்படுத்துகிறேன்.
05:24 screen mode ல் நிறங்கள் முதலில் தலைகீழாக மாற்றப்பட்டு பின் பெருக்கப்பட்டு வகுக்கப்படுகிறன. புரிந்து கொள்ள கடினமானது.
05:33 foreground நிறத்தை கருப்பாக மாற்றி நான் சேர்க்க விரும்பும் நிறத்தை நேரடியாக சேர்க்கிறேன். இப்போது சிறிது blueஐ சேர்க்க வேண்டும்
05:43 எனவே blue slider ஐ சற்று குறைக்கிறேன்.
05:47 பின் நிறத்தை படத்தினுள் இழுக்கிறேன்.
05:51 இங்கே இது blue ஆக இருக்கும் என நினைக்கலாம், இன்னும் அது கருப்பு போலவே உள்ளது. ஆனால் இது மிகவும் அடர்ந்த blue.
05:59 இங்கே படத்தை பாருங்கள். இதை நான் off செய்யும்போது, மாற்றத்தைக் காணலாம்
06:04 படம் கண்டிப்பாக blue கலந்ததாகவே உள்ளது.
06:08 இரு புது layerகளையும் நான் off செய்யலாம். அதனால் ஆரம்ப புள்ளியை பெறலாம்.
06:13 முதல் layerல் சொடுக்கும்போது greenன் குறைக்கப்பட்ட channelஐ காண்கிறோம். இரண்டாம் layerஐ சொடுக்கும்போது சற்று blue நிறத்தை சேர்க்கிறது.
06:22 blue அதிகமாக உள்ளது என நினைக்கிறேன். எனவே opacityஐ குறைக்கிறேன்.
06:27 இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.
06:30 பின்னால் எப்போதுமே இதை சரிசெய்யலாம்
06:33 layer tool மிகவும் சக்திவாய்ந்தது. ஏனெனில் layerகளுக்கு மேலே layerஐ உருவாக்க முடியும். ஒவ்வொரு layer லும் கீழ் layer லிருந்து வரும் pixels ஐ மாற்ற முடியும்
06:44 திருத்தங்களை செய்வதற்கான வாய்ப்புகள் எல்லையற்றவை, விரும்பும் போதெல்லாம் செய்யலாம்.
06:51 இங்கே அநேகமாக நல்ல நிறத்தை பெற opacity slider ஐ குறைக்கலாம். இங்கே நிறத்தை மாற்ற முழு வாய்ப்புகளையும் தரும் இந்த sliderகளுடன் விளையாடலாம்.


07:05 layer tool ஐ இன்னும் விளக்கமாக தனி டுடோரியலில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். இன்றைக்கு இது போதும்.
07:13 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana