C-and-C++/C4/File-Handling-In-C/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:15, 30 April 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.01 C ல் files குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00.05 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, எவ்வாறு
00.08 ஒரு file ஐ திறப்பது.


00.10 ஒரு file லிருந்து data ஐ read செய்வது.


00.12 ஒரு file ல் data ஐ write செய்வது.


00.15 சில உதாரணங்கள்.
00.17 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
00.20 உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10,


00.24 gcc Compiler பதிப்பு 4.6.1.
00.28 files க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00.31 File என்பது dataகளின் ஒரு தொகுப்பு.
00.34 அது ஒரு database ஆகவோ, program ஆகவோ, ஒரு கடிதமாகவோ அல்லது எதுவாகவும் இருக்கலாம்.
00.39 C ஐ பயன்படுத்தி ஒரு file ஐ உருவாக்கி அதை அணுகலாம்.
00.44 இப்போது C ல் file handling க்கான ஒரு உதாரணத்தைக் காணலாம்.
00.48 எழுதிவைத்துள்ள ஒரு program உள்ளது.
00.50 அதைக் காண்போம்.
00.51 நம் file பெயர் file.c என காண்க
00.55 இந்த program ல் ஒரு file ஐ உருவாக்கி data ஐ அதில் எழுதுவோம்.
01.01 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01.03 இது நம் header file.
01.05 இது நம் main function.
01.07 ஒரு file variable ஐ define செய்ய type FILE ஐ பயன்படுத்துகிறோம்
01.12 header stdio.h ல் FILE variable define செய்யப்படுகிறது


01.19 *fp என்பது FILE variable க்கு ஒரு pointer.


01.22 இது file பற்றிய அனைத்து தகவல்களையும் சேமிக்கும்


01.26 அதன் பெயர், நிலை மற்றும் நடப்பு தகவல் போல.


01.31 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
01.33 இப்போது ஒரு file ஐ திறப்பதற்கு syntax ஐ பார்ப்போம்.
01.37 இங்கே, fopen function ஒரு stream ஐ திறக்கிறது.
01.42 பின் இது file ஐ stream உடன் இணைக்கிறது.
01.44 filename என்பது நாம் திறக்க அல்லது உருவாக்க விரும்பும் file ன் பெயர்.
01.49 filename உடன் நாம் path ஐயும் கொடுக்கலாம்
01.53 extension ஐயும் தரலாம்.
01.56 இங்கே file ன் mode ஐயும் தரலாம்.
01.59 modeகளின் வகைகளைக் காணலாம்:
02.02 w - read மற்றும் write க்கு file ஐ உருவாக்குகிறது.
02.06 r – read க்கு file ஐ திறக்கிறது.
02.09 a – file ன் கடைசியில் write செய்கிறது
02.12 இப்போது நம் program க்கு வருவோம்.
02.15 இங்கே Sample.txt filewrite mode ல் உருவாக்குவோம்.
02.20 path கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
02.23 நம் file desktop ல் உருவாக்கப்படும்
02.27 பின் file னுள் statementகளை எழுதுவோம்
02.30 "Welcome to the spoken-tutorial"
02.32 "This is an test example"
02.34 fprintf வெளியீட்டை கொடுக்கப்பட்ட வெளியீட்டு stream ல் எழுதுகிறது.
02.39 fclose ... stream உடன் தொடர்புடைய file ஐ மூடுகிறது.
02.43 இது நம் return statement.
02.46 இப்போது Save ல் சொடுக்குக
02.48 program ஐ இயக்குவோம்.
02.50 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்
02.59 கம்பைல் செய்ய டைப் செய்க
03.00 gcc space file dot c space hyphen o space file
03.06 எண்டரை அழுத்துக
03.07 இயக்க டைப் செய்க dot slash'file (./file)
03.11 எண்டரை அழுத்துக
03.13 file இயக்கப்படுவதைக் காண்க.
03.15 இப்போது இதை சோதிப்போம்.
03.17 home folder ஐ திறப்போம்
03.20 home folder option ஐ சொடுக்குக.
03.22 Desktop option ஐ சொடுக்குக.
03.25 இங்கே நம் sample.txt file உள்ளது.
03.29 இது நம் file வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதைக் காட்டுகிறது.
03.32 இப்போது திறப்போம்.
03.34 file மீது Double click செய்க.
03.36 இங்கே அந்த செய்திகளைக் காணலாம்.
03.39 Welcome to the Spoken Tutorial.
03.41 This is an test example.
03.44 இவ்வாறுதான் ஒரு file ஐ உருவாக்கி அதில் data ஐ எழுதுவது.
03.48 இப்போது ஒரு file லிருந்து எவ்வாறு data ஐ read செய்வது என காணலாம்
03.52 நான் ஏற்கனவே program ஐ உருவாக்கி வைத்துள்ளேன்.
03.54 அதை திறக்கிறேன்.
03.56 இந்த program ல் sample.txt file லிருந்து data ஐ read செய்து அந்த data ஐ console ல் அச்சடிப்போம்.
04.03 இப்போது code ஐ விளக்குகிறேன்.
04.05 இது நம் header file.
04.08 இது நம் main function.
04.10 இங்கே file variable உம் அந்த file variableக்கு ஒரு pointer உம் define செய்யப்படுகிறது.
04.15 பின் ஒரு character variable c ஐ declare செய்துள்ளோம்
04.19 இங்கே file Sample.txtread mode ல் திறக்கிறோம்.
04.24 வெளியீடு fp ல் சேமிக்கப்படுகிறது
04.27 பின் condition ஐ சோதிக்கிறோம்.
04.29 fp NULL க்கு சமம் எனில்
04.32 condition true எனில் பின் இந்த செய்தியை அச்சடிக்கிறோம்:
04.36 "File doesn't exist."
04.38 இல்லையெனில் இது மற்றொரு condition ஐ சோதிக்கும்.
04.41 While c is not equal to EOF.
04.46 இங்கே, EOF என்பது end of file.
04.49 இது உள்ளீட்டின் கடைசியை குறிக்கிறது.
04.52 ஒரு data source லிருந்து மேலும் data ஐ read செய்யமுடியாது என்பதற்கான condition இது.
04.57 condition உண்மை எனில், பின் இது Sample.txt file லிருந்து எழுத்துக்களை console ல் காட்டும்.
05.06 இங்கே, getc ஒரு குறிப்பிட்ட file அல்லது stream லிருநது ஒரு character ஐ திருப்புகிறது.
05.12 இப்போது, இது ஒரு character ஐ நம் Sample.txt file லிருந்து திருப்பும்.
05.17 putchar... console ல் ஒரு character ஐ காட்ட பயன்படுகிறது
05.22 பின் இது variable c ல் characterகளை சேமிக்கும்.
05.25 இங்கே file ஐ மூடுகிறோம்.
05.28 இது நம் return statement.
05.30 இப்போது Save ல் சொடுக்குக
05.32 program ஐ இயக்குவோம்.
05.35 டெர்மினலுக்கு வருவோம்
05.37 கம்பைல் செய்ய டைப் செய்க
05.38 gcc space readfile dot c space hyphen o space read
05.45 இப்போது எண்டரை அழுத்துக
05.47 இயக்க டைப் செய்க ./read
05.52 காட்டப்படும் வெளியீடு:
05.54 Welcome to the Spoken-Tutorial.
05.56 This is an test example.
05.59 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06.01 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
06.03 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
06.06 File handling.
06.08 ஒரு file னுள் data ஐ write செய்வது.
06.10 eg. fp = fopen(“Sample.txt”, “w”);
06.17 ஒரு file இருந்து data ஐ read செய்வது.
06.18 eg. fp = fopen(“Sample.txt”, “r”);
06.25 பயிற்சியாக,
06.26 ஒரு file TEST ஐ உருவாக்க ஒரு program எழுதுக
06.30 file TEST ல் உங்கள் பெயர் மற்றும் முகவரியை எழுதுக
06.33 பின் C Program ஐ பயன்படுத்தி console ல் அதை காட்டுக
06.37 கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06.40 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
06.43 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
06.47 ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06.53 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06.57 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07.03 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07.07 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07.14 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07.18 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst