C-and-C++/C2/Functions/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:06, 11 February 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' Narration


00.01 C மற்றும் C++ ல் Functions குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00.06 இந்த tutorial-லில், நாம் கற்க போவது
00.09 function என்றால் என்ன
00.11 function ன் Syntax
00.13 return statement ன் முக்கியத்துவம்
00.16 இதை உதாரணங்களின் வழியே செய்யலாம்.
00.18 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00.22 இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
00.25 Ubuntu இயங்குதளம் version 11.10
00.29 gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00.35 functionகான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00.39 function என்பது குறிப்பிட்ட பணியை செய்து முடிப்பதற்கான ஒரு தன்னிறைவு program ஆகும்
00.45 ஒவ்வொரு program உம் ஒன்று அல்லது மேற்பட்ட functionகளை கொண்டிருக்கும்
00.49 இயக்கப்பட்ட பின் அது எங்கிருந்து அணுகப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பும்
00.55 function க்கான syntax ஐ பார்ப்போம்
00.59 function' திருப்பும் data வகையை ret-type வரையறுக்கிறது
01.05 fun_name... function ன் பெயரை வரையறுக்கிறது
01.09 parameters என்பது variable ன் பெயர்கள் மற்றும் அவற்றின் வகைகள் உள்ள பட்டியல்
01.14 காலி parameter list ஐயும் குறிப்பிடலாம்
01.18 இது arguments இல்லாத functions எனப்படும்
01.21 இது arguments உள்ள functions எனப்படும்
01.26 void பயன்படுத்தி ஒரு program ஐ பார்க்கலாம்
01.29 ஏற்கனவே editor ல் program ஐ எழுதியுள்ளேன்
01.32 அதை திறப்போம்
01.35 நம் filename function என்பதை கவனிக்கவும்.
01.38 file ஐ .c extenstion உடன் சேமித்துள்ளேன்.
01.43 code ஐ விளக்குகிறேன்.


01.45 இது நம் header file
01.47 எந்த function உம் பயன்படுத்தும் முன் define செய்யப்பட வேண்டும்
01.51 இங்கே add என்ற function ஐ define செய்துள்ளோம்
01.54 add functionக்கு arguments இல்லை என்பதை கவனிக்கவும்
01.58 return type... void ஆகும்
02.01 இரண்டு வகை functions உள்ளன
02.03 User-defined அது நம் add function
02.06 Pr-defined அது printf மற்றும் main function
02.12 இங்கே a மற்றும் b க்கு 2 மற்றும் 3 என்ற மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம்
02.19 இங்கே ஒரு variable c ஐ declare செய்துள்ளோம்
02.21 பின் a மற்றும் b மதிப்புகளை கூட்டுகிறோம்
02.24 தீர்வு c ல் சேமிக்கப்படுகிறது
02.27 பின் தீர்வை அச்சிடுகிறோம்
02.29 இது நம் main function
02.32 இங்கே add function ஐ call செய்கிறோம்
02.34 இந்த கூட்டல் செயல்பாடு செயற்படுத்தப்பட்டு தீர்வு அச்சடிக்கப்படும்
02.39 Save ஐ சொடுக்கவும்
02.42 program ஐ இயக்குவோம்
02.45 Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
02.53 compile செய்ய எழுதுக

'gcc function.c -o fun

03.00 இயக்க எழுதுக

./fun

03.05 நாம் காணும் வெளியீடு Sum of a and b is 5
03.10 program க்கு திரும்புவோம்
03.13 Functions... parameters அல்லது arguments என அழைக்கப்படும் சிறப்பு identifiers ஐ கொண்டிருக்கும்
03.20 அதே உதாரணத்தை arguments உடன் பார்க்கலாம்
03.23 இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.
03.27 எழுதுக int add(int a, int b)
03.32 இங்கே ஒரு function add ஐ declare செய்துள்ளோம்
03.36 int a மற்றும் int b ஆகியவை function add ன் arguments
03.41 இதை நீக்குவோம்
03.42 இங்கே a மற்றும் b ஐ initialize செய்ய தேவையில்லை
03.46 printf statement ஐ நீக்குவோம்
03.49 எழுதுக int main()
03.52 variable sumஐ இங்கே declare செய்யலாம்.
03.54 எழுதுக int sum;


03.57 பின் எழுதுக sum = add(5,4);


04.03 இங்கே add functionஐ call செய்கிறோம்.
04.05 5 மற்றும் 4 என parameterகளை அனுப்புகிறோம்.
04.10 5 a ல் சேமிக்கப்படும். 4 b ல் சேமிக்கப்படும்.
04.14 பின் கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்படும்.
04.18 இப்போது தீர்வை அச்சடிப்போம்.
04.20 அதற்கு இங்கே எழுதுக
04.21 printf(“Sum is %d\n”,sum);
04.27 மேலே function ஐ ஏற்கனவே call செய்திருப்பதால் இதை நீக்குக.
04.32 எழுதுக return 0;
04.36 ஒரு non-void function... ஒரு மதிப்பை திருப்பும் return statement ஐ பயன்படுத்த வேண்டும்.


04.41 Save ல் சொடுக்குக
04.43 program ஐ இயக்கலாம்.
04.45 நம் terminalக்கு வருவோம்.
04.48 முன்புபோல program ஐ compile செய்வோம்.
04.50 இயக்குவோம்.
04.52 Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது
04.57 இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம்.
05.02 நம் programக்கு வருவோம்.
05.04 இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.


05.07 முதலில் Shift, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக.
05.12 இப்போது .cpp extensionஉடன் file ஐ சேமிக்கவும்.
05.18 Saveல் சொடுக்குக.
05.19 முதலில் header file ஐ <iostream> என மாற்றுவோம்


05.24 இங்கே using statement ஐ சேர்ப்போம்.
05.28 function declaration C++லும் அதேதான்.
05.32 எனவே இங்கே ஏதும் மாற்றவேண்டியதில்லை.
05.37 C++ ல் ஒரு வரியை அச்சடிக்க cout<< function ஐ பயன்படுத்துவதால் இப்போது printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம்.
05.48 இங்கே format specifier மற்றும் \n தேவையில்லை.


05.52 comma ஐ நீக்குக.
05.54 இப்போது , இரு opening angle brackets ஐ இடவும்
05.58 sum க்கு பின் மீண்டும், இரு opening angle brackets ஐ இடவும்.
06.03 இரட்டை மேற்கோள்களுக்குள் backslash n ஐ இடுக.
06.07 closing bracketஐ நீக்குக.
06.09 Save ல் சொடுக்குக.
06.11 program ஐ compile செய்வோம்.
06.14 terminalக்கு திரும்புவோம்.
06.16 எழுதுக g++ function dot cpp hyphen o fun1


06.23 இங்கே fun1 என்கிறோம், இது ஏனெனில் வெளியீட்டு file... fun ஐ நாம் Overwrite செய்ய விரும்பவில்லை.


06.31 Enter ஐ அழுத்துக.
06.34 எழுதுக ./fun1


06.38 Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது
06.42 இப்போது எழக்கூடிய பொதுவான பிழைகளைக் காணலாம்.
06.47 4 இடத்தில் x ஐ இடுகிறோம் எனில்.
06.51 மீதி code அவ்வாறே இருக்கட்டும்.
06.55 Save ல் சொடுக்குக.
06.58 program ஐ compile செய்வோம்.
07.02 வரி 10 ல் பிழை இருப்பதைக் காணலாம்.
07.06 x was not declared in this scope.
07.09 ஏனெனில் x ஒரு character variable.
07.13 இது எங்கும் declare செய்யப்படவில்லை.
07.15 நம் add function ஒரு argument ஆக ஒரு integer variable ஐ கொண்டுள்ளது.
07.21 எனவே, இது return type லும் return value லும் பொருந்தவில்லை.
07.25 இப்போது நம் programக்கு வருவோம்.
07.27 பிழையை சரிசெய்வோம்.
07.30 வரி 10 ல் 4 ஐ இடுவோம்.
07.32 Save ல் சொடுக்குக.
07.35 மீண்டும் இயக்கலாம்.
07.37 promptஐ துடைப்போம்.
07.40 முன்புபோல program ஐ Compile செய்வோம்.
07.42 ஆம் இது வேலைசெய்கிறது.
07.45 இப்போது எழக்கூடிய மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம்.
07.50 இங்கே ஒரு ஒரு parameterஐ அனுப்புகிறோம் எனில்.
07.55 4 ஐ நீக்குக.
07.56 Saveல் சொடுக்குக
07.58 terminalக்கு வருவோம்.
08.00 compile செய்வோம்.
08.01 வரி 10 ல் ஒரு பிழையைக் காண்கிறோம்.
08.06 too few arguments to function 'int add (int, int)'
08.11 நம் programக்கு வருவோம்.


08.14 இங்கே இரு parameterகள் இருப்பதைக் காண்கிறோம்
08.19 int a மற்றும் int b.
08.22 இங்கே ஒரு parameterஐ மட்டும் அனுப்புகிறோம்.
08.25 அதனால் அது பிழையைத் தருகிறது.
08.27 பிழையை சரிசெய்வோம்.
08.29 4 ஐ இடுவோம்.
08.31 Save ல் சொடுக்குக.
08.34 terminalக்கு வருவோம்.
08.36 மீண்டும் இயக்குவோம்.
08.39 ஆம் இது வேலைசெய்கிறது!
08.42 நம் slidesக்கு வருவோம்.


08.44 சுருங்கசொல்ல, இந்த tutorial லில் நாம் கற்றது-
08.49 Function
08.50 functionன் Syntax
08.51 arguments இல்லாமல் Function
08.53 எ.கா- void add()
08.55 arguments உடன் Function
08.57 எ.கா- int add(int a, int b)
09.02 பயிற்சியாக-
09.03 ஒரு எண்ணின் இருபடியைக் கண்டறிய ஒரு program எழுதுக.
09.07 இந்த இணைப்பில் உள்ள video ஐ காண்க
09.11 Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
09.14 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09.18 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09.24 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09.28 மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org
09.35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

09.47 மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன
09.52 இதை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst