Blender/C2/Types-of-Windows-Properties-Part-5/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:41, 22 November 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
'Visual Cue Narration
00.04 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00.08 இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
00.15 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00.28 இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
00.33 Properties window ல் Texture panel என்றால் என்ன;
00.38 Properties window ன் Texture panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை
00.45 உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
00.50 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.
00.58 Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது
01.04 Properties window ன் முதல் சில panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.


01.11 Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம்
01.14 முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
01.21 Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
01.29 இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
01.34 Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும்
01.45 Properties window ன் மேல் வரிசைக்கு செல்க.
Properties window ன் மேல் வரிசையில் உள்ள checkered square icon ஐ சொடுக்கவும்.
01.55 இதுதான் Texture panel. இங்கே செயலில் உள்ள object ன் செயலில் உள்ள material க்கு ஒரு texture ஐ சேர்க்க முடியும்.
02.04 Texture icon க்கு கீழே, தோன்றும் links ஐ பார்க்கலாம். Cube to White to Tex.
02.14 அதாவது... cube என்பது செயலில் உள்ள object. White என்பது cube ன் செயலில் உள்ள material.
02.23 Tex என்பது White material ன் செயலில் உள்ள texture. மூன்று வகை textures உள்ளன-
02.32 Material Textures. World Textures. மற்றும் Brush Textures.
02.38 இந்த tutorial லில் Material textures ஐ பார்க்கலாம்.
02.42 பின்வரும் tutorial களில் World textures மற்றும் brush textures விவரிக்கப்படும்
02.49 இதுதான் texture slot box. முன்னிருப்பாக, செயலில் உள்ள material க்காக ஒரு texture... enable செய்யப்படுகிறது. அது நீல நிறத்தில் காட்டப்படுகிறது
03.00 highlight செய்யப்பட்ட Texture ன் வலப்பக்க check box ஐ சொடுக்கவும். இப்போது texture... disable ஆகிறது
03.11 மீண்டும் check box ஐ சொடுக்கவும். மீண்டும் enable ஆகிறது. check box க்கு அருகில் செங்குத்து scroll bar உள்ளது
03.25 செங்குத்து scroll ஐ சொடுக்கி பிடித்து mouse ஐ கீழ்பக்கமாக இழுக்கவும்
03.32 இப்போது நடப்பு material க்கான அனைத்து texture slot களையும் பார்க்கலாம்.
03.38 ஒவ்வொரு slot ம் checkered square ஆல் குறிக்கப்படுகின்றன.
03.44 செயலில் உள்ள texture க்கு... திரும்ப scroll செய்க.
03.48 மேல் கீழ் அம்புக்குறிகள்... texture slot box ல் textures ஐ மேலும் கீழும் நகர்த்த பயன்படுகின்றன.
03.56 கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture இரண்டாம் texture slot க்கு நகர்கிறது
04.06 மேல் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture மீண்டும் முதல் slot க்கு திரும்புகிறது.
04.15 மேல் கீழ் அம்புகளுக்கு கீழே மற்றொரு கருப்பு கீழ் அம்பு உள்ளது
04.20 கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும். ஒரு menu தோன்றுகிறது
04.26 Copy Texture slot settings ஐ சொடுக்கவும்
04.31 box ல் இரண்டாம் texture slot ஐ சொடுக்கவும் . அது நீல நிறத்தில் highlight ஆகிறது
04.40 மீண்டும் கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும்
04.45 Paste Texture slot settings ஐ சொடுக்கவும்.
04.49 முதல் texture settings போலவே, புது texture... இரண்டாம் texture slot ல்தோன்றியுள்ளது.
04.57 slot box க்கு கீழே Texture name bar ன் வலப்பக்கம் பெருக்கல் குறியை சொடுக்கவும்
05.07 இரண்டாம் texture நீக்கப்படுகிறது. அதன் settings ம் போகிறது
05.15 கூட்டல் குறியுடன் ஒரு New button தோன்றியுள்ளது
05.20 அந்த New button ஐ சொடுக்கவும். இரண்டாம் texture slot ல் ஒரு புது texture தோன்றியுள்ளது
05.29 இதுதான் புது texture ஐ சேர்ப்பதற்கான மற்றொரு வழி
05.34 இரண்டாம் texture ன் இடப்பக்கத்தில் checkered square எவ்வாறு மாறுபட்ட image ஆக மாறியது என்பதை கவனிக்கவும்.
05.42 கீழே ஒரு preview window தோன்றியுள்ளது. இது செயலில் உள்ள texture ன் preview ஐ காட்டுகிறது.
05.49 இந்த texture க்கு பெயர்மாற்றுவோம்.
05.53 slot box க்கு கீழே texture name bar ஐ சொடுக்கவும்
05.57 Bump என எழுதி enter key ஐ தட்டுக.
06.05 name bar க்கு இடது checkered square ஐ சொடுக்கவும். இதுதான் Texture menu.
06.12 காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து texture களும் இங்கு பட்டியலிடப்படுகிறது
06.18 name bar க்கு கீழே type bar உள்ளது. முன்னிருப்பாக, ஒவ்வொரு புது texture ம் clouds texture ஐ காட்டுகிறது.
06.28 Clouds ஐ சொடுக்கவும். இதுதான் Type menu.
06.35 இங்கே Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து வகை texture களும் பட்டியலிடப்படுகிறது. Wood, Voxel data, voronoi, மற்றும் மேலும் பல
06.48 ஏதேனும் texture ஐ தேர்ந்தெடுக்க அதன் மீது சொடுக்கவும். இப்போதைக்கு நான் Clouds texture ஐ வைத்திருக்கிறேன்.
06.58 இதுதான் texture preview window. இங்கே மூன்று display optionகள் உள்ளன.
07.05 Texture. முன்னிருப்பாக, இந்த display எப்போதும் தேர்வில் இருக்கிறது.
07.10 Material ஐ சொடுக்கவும். material க்கு மேலே texture ன் preview ஐ இது காட்டுகிறது.
07.19 Both ஐ சொடுக்கவும். அதன் பெயர் சொல்வது போலவே... இப்போது texture ம் material ம் அருகருகில் காட்டப்படுகின்றன
07.30 Show Alpha ஐ சொடுக்கவும். இப்போது texture... transparent ஆக மாறியுள்ளது.
07.38 glass, water போன்ற material களுக்கு இது பயன்படுகிறது. இப்போதைக்கு இதை switch off செய்வோம்.
07.44 மீண்டும் Show Alpha ஐ சொடுக்கவும்
07.51 அடுத்த setting... Influence..
07.53 நான்கு முக்கிய இடங்களில் material ஐ பாதிக்க texture க்கு உதவும் பல்வேறு option கள் இங்கே உள்ளன
08.01 Diffuse, Shading, Specular மற்றும் Geometry. முன்னிருப்பாக, Diffuse க்கு கீழே colour... enable ஆகியுள்ளது.
08.22 colour bar ன் இடப்பக்க checkbox ஐ சொடுக்கவும். Colour இப்போது disable ஆகிறது.
08.30 இப்போது texture colour... Material Diffuse colour ஐ பாதிப்பதில்லை.
08.38 Geometry க்கு செல்க. Normal க்கு அடுத்த check box ஐ சொடுக்கவும்.
08.45 இப்போது texture ன் Normal, Material ன் Geometry ஐ பாதிக்கிறது.
08.50 விளைவை preview window ல் பார்க்கலாம்.
08.57 preview sphere முழுதும் சிறிய புடைப்புகள் போன்று மேகங்கள் பரவியுள்ளன
09.06 Blend... material உடன் texture கலப்பதைக் கட்டுப்படுத்துகிறது. முன்னிருப்பாக, இது MIX என அமைக்கப்படுகிறது.
09.15 Mix ஐ சொடுக்கவும். இந்த menu... Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து texture Blend வகைகளையும் பட்டியலிடுகிறது.
09.25 RGB to intensity க்கு கீழ் இந்த pink நிற பட்டையை பார்க்கிறீர்களா? இதுதான் முன்னிருப்பு texture நிறம்.
09.33 இப்போதைக்கு இது material நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் Influence ன் கீழ் நாம் நிற option ஐ நாம் disable செய்துள்ளோம்.
09.44 pink நிறத்தை சொடுக்கவும். ஒரு color menu தோன்றுகிறது.
09.48 இங்கே நம் texture க்கு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்
09.53 நாம் texture நிறத்தை பயன்படுத்துவதில்லை என்பதால் இப்போதைக்கு, இது pink லேயே இருக்கட்டும்.
10.00 Bump mapping... texture ன் இயல்பு, material ன் Geometry ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது.
10.09 bump mapping ன் நடப்பு method ஏ Default ஆகும்.
10.12 Default ஐ சொடுக்கவும். இந்த menu... bump mapping ன் பல்வேறு method களை பட்டியலிடுகிறது.
10.19 Best quality, default, compatible மற்றும் original.
10.34 compatible ஐ சொடுக்கவும். bump influence அதிகரிக்கப்படுகிறது.
10.46 அடுத்த setting.. Clouds. இங்கே clouds texture க்கு பல optionகள் உள்ளன.
10.54 Greyscale... textures ஐ greyscale mode ல் காட்டுகிறது.
10.59 color ஐ சொடுக்கவும்.
11.09 இப்போது preview window ல் texture... நிறங்களின் கலவையில் காட்டப்படுகிறது
11.12 ஆனால் color, material ன் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
11.16 Noise... clouds texture ன் திரிபை தீர்மானிக்கிறது.
11.21 Soft noise தான் முன்னிருப்பு திரிபு.
11.25 Hard ஐ சொடுக்கவும். இப்போது preview window... clouds texture ல் கடின கருப்பு வெளிகோடுகளை காட்டுகிறது
11.36 அதேசமயம், material ன் மீது புடைப்புகள் ஆழமாகவும் மாறியுள்ளன. இதுதான் hard noise.
11.47 Basis என்பது clouds texture ல் noise ன் அடிப்படை அல்லது மூலம் ஆகும்.
11.53 Blender original ஐ சொடுக்கவும். இங்கே Noise basis menu உள்ளது.
12.00 இது Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து noise base களின் பட்டியலைக் காட்டுகிறது.
12.05 Voronoi crackle ஐ சொடுக்கவும். மாற்றத்தை preview window ல் பார்க்கலாம்.
12.14 இப்படிதான் Noise basis... clouds texture ஐ பாதிக்கிறது.
12.21 Size, Nabla மற்றும் depth.... clouds texture ல் noise ன் தன்மைகளைக் கட்டுப்படுத்துகின்றன.
12.33 Properties panel ன் மேல் வரிசையில் உள்ள கடைசி இரண்டு icon கள்... Particles மற்றும் Physics.
12.42 இவை advanced tutorial களில் animation ல் Particles மற்றும் Physics ஐ பயன்படுத்தும் போது விவரிக்கப்படும்
12.50 3D view க்கு செல்க
12.53 Lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க.
12.59 Properties panel ன் மேல் வரிசை icon கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கவனிக்கவும்
13.05 சில icon கள் நீக்கப்பட்ட அதேவேளையில் மற்றவை மாற்றப்பட்டுள்ளன
13.10 3D view ல் Camera ஐ right click செய்க.
13.13 மீண்டும், Properties panel ன் மேல் வரிசையில் மாறியுள்ள icon களை காணலாம்
13.19 Properties window ல் tools... dynamic ஆகவும் 3D view ல் செயலில் உள்ள object ன் வகையை சார்ந்தும் உள்ளன.
13.29 இத்துடன் Properties window மீதான இந்த tutorial முடிகிறது.
13.34 இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்;
13.39 cube க்கு ஒரு clouds texture ஐ சேர்த்து Clouds Noise ன் Size, Nabla மற்றும் Depth உடன் விளையாடவும்.
13.49 இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
13.58 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
14.19 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
14.31 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
14.36 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana