Spoken-Tutorial-Technology/C2/Creation-of-a-spoken-tutorial-using-Camstudio/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:14 | நண்பர்களே, CDEEP, IIT Bombay சார்பில் தங்களை இந்த செய்முறை விளக்கப் பயிற்சிக்கு வரவேற்கிறோம் |
00:20 | கற்றல் animation உதவியுடன் விளக்கப்படும்போது மிக எளிமையாகிறது |
00:25 | இந்த audio video வாயிலான செய்முறை விளக்கம் மூலமாக camstudio என்ற software ன் சிறப்பம்சங்களை அறிவோம் |
00:32 | Camstudio, computer screen recording க்கான ஒரு மென்பொருள் |
00:37 | இது தங்கள் கணினி வழியே பார்க்கக்கூடிய மற்றும் செய்யக்கூடிய எல்லா விதமான வேலைகளையும் பதிவு செய்து கொள்ளவும், பின்னர் விருப்பம் போல் மீண்டும் பார்த்து தெளிவுப்படுத்திக்கொள்ளவும் பயன்படுகிறது |
00:47 | இதை பயன்படுத்தி ஒரு புதிய மென்பொருளின் பண்புகளை செய்முறை விளக்கத்தோடு எடுத்துரைக்கவும் பள்ளிக் கல்லூரிகளுக்கான பாடங்களை audio video ஆக பதிவு செய்யவும் பயிற்சி வகுப்புகளுக்கான video விளக்கப்படங்கள் தயாரிக்கவும் avi file களை flash file களாக மாற்றவும் இயலும் |
01:04 | மேலும் விவரிக்க இதன் பயன்கள் எண்ணிலடங்கா |
01:07 | Camstudio ஐ microsoft windows 95, 98, Me, NT 4.0, 2000 or XP உள்ள கணினிகளில் உபயோகிக்கலாம் |
01:18 | தாங்கள் கவனித்தில் கொள்ள வேண்டியது தங்களது கணினி 400 MHz processor, 64 MB of RAM and 4 MB of Hard disk space save திறன் கொண்டதாக இருக்க வேண்டும் |
01:30 | Camstudio ஒரு open source software. இதை தாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இணையத்தளத்திலிருந்து இலவசமாக download செய்ய இயலும். |
01:37 | இதற்கான இணையத்தள முகவரி www.camstudio.org. இந்த இணையதளத்தில் கீழாக scroll செய்து கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இதை தாங்கள் கணினியில் download செய்து முடித்திருப்பீர்கள் |
01:49 | Installation முடிந்தபிறகு இதை தங்கள் கணினியில் run செய்ய camstudio icon ஐ double-click செய்யவும். தற்போது camstudio dialog box ஐ திரையில் காண்பீர்கள் |
01:58 | Main menu இந்த window வின் முதல் வரிசையில் உள்ளதை காணலாம். இதில் file ன் கீழ் தங்களால் Record, Stop, Pause and Exit ஐ விருப்பத்தேர்வு செய்ய இயலும் |
02:07 | இதற்கு இணையான button உள்ள dialog box லும் காணலாம் |
02:11 | சிவப்பு recordஐயும் சாம்பல் நிற button pause செய்யவும் நீல நிற button பதிவை முற்றிலுமாக நிறுத்துவதற்கும் பயன்படுகிறது |
02:19 | பதிவை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பதிவு செய்யவேண்டிய area ஐ வரையறை செய்துகொள்ள பரிந்துரைக்கப்படுகிறது |
02:25 | இதற்காக மூன்று விதமான capture options ஐ பயன்படுத்த இயலும் |
02:29 | தாங்கள் ஒரு பகுதியைத் தெரிவு செய்த பின் record ஐ click செய்து cursor மூலமாக ஒரு rectangle வரைய அந்த பகுதி பதிவு செய்யப்படும் |
02:37 | வரையறுக்கப்பட்ட பகுதியை பதிவு செய்ய தங்கள் விருப்பம் போல capture region ஐ pixelகள் மூலமாகவும் விவரிக்கலாம். மாறாக full screen ஐ select செய்ய முழுத்திரையும் பதிவுசெய்யப்படும் |
02:51 | Autopan feature camstudi ன் தனித்தன்மையான பண்புகளில் ஒன்று |
02:56 | இது தெரிவு செய்யப்பட்டால் cursor ஐ பின்பற்றி எந்த பகுதியை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் |
03:01 | செயற்பாடுகள் அதிகம் நிறைந்த பகுதி செய்ய உதவுவது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும் |
03:08 | மேலும் தங்களால் தங்களுக்குத் தேவையான panning வேகத்தை நிர்ணயிக்கவும் இயலும் |
03:15 | Video file size ஐ தெரிவு செய்ய Option க்கு கீழாக video option உள்ளது |
03:21 | இங்கு தங்களுக்கு தேவையான compressor ஐ விருப்பத்தேர்வு செய்ய இயலும் |
03:26 | இயல்பாக compressor Microsoft Video 1 ஆக இருக்கும் |
03:30 | ஆனால் drop down box ல் உள்ள எந்த ஒரு compressor அல்லது codecs ஐ தெரிவு செய்யும் சுதந்திரம் தங்களுக்கு உள்ளது |
03:37 | அது மட்டுமல்லாமல் தாங்களே தேவைக்கேற்ற codecs ஐ இணையத்தளத்திலிருந்து download செய்து பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது |
03:47 | Video settings ஐ தங்கள் தேவைக்கேற்ப பெறுவது file size, quality மற்றும் frame rate ஐ நிர்ணயிப்பதன் மூலம் முடியும் |
03:53 | Key Frames, Capture Frames மற்றும் Playback Rate கான value ஐ நிர்ணயிக்க முதலில் Auto Adjust button ஐ செயலிழக்கச் செய்யவும் |
04:00 | பின்னர் தங்கள் தேவைக்கேற்றபடி இந்த value களை தெரிவு செய்து கொள்ளலாம் |
04:04 | இந்த செயல்முறை பயிற்சியைப் பதிவு செய்ய நாங்கள் Microsoft Video 1 compressor ஐ பயன்படுத்துகிறோம் மற்றும் Key Frames 5 ஆகவும், Capture Frames 200 ஆகவும் Playback Rate 5 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. Quality உம் 50 ஆக குறைக்கப்பட்டது |
04:17 | பலமுறை trial and error மற்றும் பலவகை permutations and combinations ல் செய்து பார்த்ததன் மூலம் இந்த அளவீடுகள் தரமான output மற்றும் file size க்கு optimize செய்யப்பட்டது |
04:29 | Cursor option ஐ நிர்ணயிப்பதன் மூலம் அதிகமான செயல்பாடுகள் நிறைந்த பகுதியில் கவனம் செலுத்த இயலும் |
04:34 | இதற்கு option ற்கு கீழாக curson option ஐ click செய்யவும் |
04:39 | இதில் உங்களால் இரண்டு விதமான செயல்பாட்டை தெரிவு செய்ய இயலும் |
04:42 | ஒன்று cursor ஐ காண்பிப்பது மற்றொன்று cursor ஐ மறையச் செய்வது |
04:47 | இவற்றுள் cursor ஐ காண்பிப்பது இயல்பானது அதிலும் தங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளது |
04:53 | முதலாவது the actual cursor இரண்டாவது the custom cursor இதை drop down box ல் இருந்து தெரிவு செய்யலாம் |
05:01 | அல்லது தங்கள் கணினியில் உள்ள folder ல் இருந்தும் ஒன்றை தெரிவு செய்து உபயோகிக்கலாம் |
05:06 | மூன்றாவது cursor அமைந்துள்ள இடத்தை hightlight செய்ய உதவுவது |
05:10 | இதற்கு இந்த box ஐ செயல்பட செய்வதன் மூலம் cursor கான size, color மற்றும் shape ஐ தங்களால் தெரிவுசெய்ய இயலும் |
05:20 | பின்னர் OK ஐ click செய்யவும் |
05:22 | இப்பொழுது தங்கள் தெரிவு செய்த பண்புகள் கொண்ட cursor ஐ recorded video ல் காணலாம் |
05:28 | தங்கள் தங்கள் cursor ல் எந்த மாற்றமும் இருக்காது |
05:32 | இதற்கான செயல்முறை விளக்கத்தை காணவும் |
05:40 | இயல்பில் camstudio ல் audio ஐ பதிவு செய்ய இயலாது. Audio ஐ தங்கள் microphone வழியே பதிவு செய்ய இயலும் |
05:49 | இதற்கு sound card உடன் கூடிய microphone தேவை |
05:53 | கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள speakerகள் வாயிலாகவும் audio ஐ பதிவு செய்ய இயலும் |
06:00 | மேலும் மற்றொரு Option ஆன program option ன் கீழ் உள்ள sub-option ல் கொடுக்கப்பட்டுள்ள பண்புகளை தெரிவு செய்வதன் மூலம் camstudio ன் இயக்கத்தை தேவைக்கேற்றபடி customize செய்து கொள்ள இயலும் |
06:14 | இதில் உள்ள Minimize program on Start Recording ஐ தெரிவு செய்யவும் |
06:21 | இது camstudio ஐ system tray ல் minimize செய்யும் |
06:27 | தங்கள் கணினி திரையில் கீழாக வலது மூலையில் இரண்டு camstudio icon களை காணலாம் |
06:33 | காரணம் இந்த செயல்முறை விளக்கத்திற்கு நாங்கள் camstudio ஐ பயன்படுத்துகின்றோம் |
06:38 | மேலும் இதில் உள்ள Record to Flash Option மூன்று sub-optionகளை கொண்டுள்ளது |
06:43 | Keyboard shortcuts வழியே தங்களால் record, pause, stop and rest ஐ HOT KEYS ஐ நிர்ணயிக்க முடியும். |
06:52 | Camstudio பற்றி தங்களுக்கு தேவையான தகவல்களை அளித்துள்ளோம் என நம்புகிறோம் |
06:57 | இந்த open source software ஐ தாங்கள் இணையதள வழி கல்விமுறைகளுக்கு பயன்படுத்தவும் |
07:02 | இதை நன்றாக புரிந்து கொண்ட பிறகு இதை விட சிறந்த edition ஐ பயன்படுத்தும் ஆர்வம் தங்களுக்கு வரலாம் |
07:08 | அதுவரை இந்த செயல்முறை விளக்கத்தை கண்டுகளித்தமைக்கு CDEEP, IIT Bombay சார்பில் நன்றி கூறி விடைபெறுவது அன்புமதி பழனிசாமி |