Scilab/C2/Scripts-and-Functions/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Scriptகள் மற்றும் Functionகளுடன் Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | Scilab இல் file formatகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம். |
00:12 | பல command களை இயக்க வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும். |
00:21 | இவை SCRIPT fileகள் எனப்படும். |
00:24 | அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை இயக்க exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம். |
00:34 | இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது .sci |
00:42 | .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function and/or..... user defined functionகள் |
00:51 | இந்த பைல்களை இயக்குவது functionகளை Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை. |
01:00 | மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined functionகள் ஆகியன இருக்கலாம் |
01:08 | extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது விதி இல்லை; இது scilab community கொண்டுள்ள பாரம்பரியம். |
01:21 | Scilab Console window ஐ கணினியில் திறப்போம். |
01:27 | command prompt இல் pwd command ஐ டைப் செய்து நடப்பு directory ஐ அடையாளம் காண்போம். |
01:35 | scilab console window வின் Task bar க்குச் சென்று editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும். |
01:49 | ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன். |
02:03 | helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன். |
02:10 | புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம். |
02:20 | scilab editor menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க. |
02:29 | இது file ஐscilab console இல் ஏற்றும். |
02:34 | console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல வெளியீட்டைத் தருகிறது: |
02:43 | அதில் commandகள் மற்றும் அவற்றுக்கான வெளியீட்டைக் காணலாம் |
02:49 | இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம். |
02:55 | editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும் |
03:02 | மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் இயக்கலாம்: |
03:12 | exec அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் helloworld.sce அதுவே file பெயர் ... Enter ஐ அழுத்தவும் |
03:31 | exec function மூலம் கிடைத்த வெளியீட்டைப் போலவே script file மூலமும் கிடைக்கிறது. |
03:37 | இப்போது Functionகள் குறித்து பார்க்கலாம்: |
03.39 | function definition துவங்குவது keyword ஆன function உடன்; முடிவது keyword ஆன endfunction உடன். |
03:46 | scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன். |
03:57 | அதை திறக்கிறேன் |
04:03 | பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது. |
04:08 | இவற்றில் degrees வெளியீட்டு parameter மற்றும் radians ... உள்ளீட்டு parameter |
04:21 | function இன் பெயர் radians2degrees. |
04:26 | இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன் |
04:40 | function இப்போது scilab console இல் load ஆகியுள்ளது |
04:44 | இதை exec command மூலமும் load செய்யலாம் |
04:47 | function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல குறிப்பிட்ட argumentகளை function க்கு பாஸ் செய்து அழைக்கலாம். |
04:56 | percent குறியை கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள். |
05:02 | இப்போது %pi/2 ன் radians2degrees மற்றும் (%pi/4) ன் radians2degrees க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம். |
05:17 | radians2degrees percent pi/2 .... மற்றும் radians2degrees percent pi by 4 (%pi/4) |
05:28 | இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டு... argumentகளுடன் கூடிய ஒரு function. |
05:33 | இந்த function polar coordinateகளை உள்ளீட்டு argument ஆக பெற்று rectangular coordinateகளை வெளியீட்டு argumentகளாக தருகிறது |
05:44 | நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன் |
05:51 | function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன வெளியீட்டு parameterகள்; மற்றும் r உம் theta உம் உள்ளீட்டு parameterகள் |
06:06 | இந்த function ஐ scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம். |
06:21 | function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு உள்ளீட்டு argumentகள் மற்றும் இரண்டு வெளியீட்டு argumentகள் தேவை |
06:31 | ஆகவே r = 2; |
06:37 | theta = 45 |
06:44 | இப்போது நாம் சொல்வது x1 comma y1 வெளியீட்டு parameterகள்... equal to function பெயர் polar2rect அடைப்புகளில் r comma theta. Enter ஐ அழுத்தவும் |
07:25 | x1 மற்றும் y1 இன் மதிப்புகளைக் காணலாம். |
07:29 | Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம். |
07:38 | நாம் நினைவில் இருத்த வேண்டியது முன்னிருப்பாக function இல் define செய்த variableகள் அனைத்தும் local லே, இந்த குறிப்பிட்ட function இல் உள்ள variable களின் செல்லுபடி endfunction என்னும் function definition keyword உடன் முடிந்துவிடும். |
07:55 | இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable பெயரை வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம். |
08:05 | global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variableகள் குழப்பத்தை விளைவிக்க மாட்டா. |
08:10 | global variableகள் குறித்து மேலும் அறிய help global என type செய்க. |
08:18 | எந்த ஒரு variable ஐயும் function இனுள் கண்காணிக்க disp தேவையாகும். |
08:26 | ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐ statement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம். |
08:34 | மேலும் இதை disp statementகளுக்கு சோதிக்கலாம் |
08:38 | Inline Functionகள்: |
08:39 | Functionகள் என்பன code ன் பகுதிகள்; அவற்றுக்கு நன்கு define செய்த உள்ளீடு மற்றும் வெளியீடு மற்றும் local variableகள் உண்டு. |
08:46 | ஒரு function ஐ define செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது |
08:53 | Scilab , in-line functionகளை உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும் |
09:02 | இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம் |
09:07 | இது இரண்டு string parameterகளை எடுத்துக்கொள்ளும். |
09:10 | முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statementகள். |
09:19 | deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது. |
09:26 | ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை. |
09:34 | இந்த கருதுகோளை விளக்க ஒரு உதாரணம்: |
09:41 | inline function ஐ நான் எழுதியிருக்கும் inline.sci file ஐ திறக்கிறேன் |
09:51 | editor window வை மறு அளவாக்குகிறேன். |
09:57 | முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் statementகளை define செய்கிறது |
10:13 | இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians அடைப்புகளில் 90 மற்றும் degrees2radians அடைப்புகளில் 45 இன் மதிப்புகளைக் காண இதை பயன்படுத்துவோம். |
10:54 | function அழைக்க வேண்டியது மற்ற functionகளை மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்! |
11:00 | இதுவே ஒரு function இன் "recursive" calling. |
11:03 | உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function ஐ எழுதும் போது இது தேவைப்படும். |
11:10 | Scilab இல் file formatகள் குறித்து மேலும் விளக்குவோம்: |
11:14 | முன் சொன்னது போல SCILAB இரண்டு file formatகளை பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format. |
11:23 | .sce file extension உள்ள file கள் script fileகள் ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன |
11:35 | அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment வரிகளும் உண்டு. மேலும் script ஐ இயக்க command EXEC ஐயும் பயன்படுத்தும். |
11:52 | .sci file extension உடன் உள்ளவை function fileகள், அவை function statementஉடன் துவங்கும். |
12:00 | ஒரு sci file இல் பல function definitionகள் இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function argumentகள் அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட வெளியீட்டு variableகள் மீது செயலாகும் SCILAB statementகள் இருக்கலாம். |
12:20 | இத்துடன் Scilab ல் Scriptகள் மற்றும் Functionகள் குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
12:25 | Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். |
12:31 | ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள். |
12:33 | இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
12:40 | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in |
12:50 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:56 | மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro |
13:06 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |