STEMI-2017/C2/Introduction-to-Maestros-Device/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Maestros STEMI Kit குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:

Maestros STEMI Kitன் componentகள், மற்றும் அதன் நோக்கங்கள்.

00:16 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு-

1. Maestros STEMI Kit தேவை.

00:22 இந்த kitன் Hospital Model, பின்வருவனவற்றை கொண்டிருக்கும்

ஒரு உலோக உறையினுள் ஒரு Android Tab ஒரே கருவியினுள், Maestros Deviceஉடன், NIBP, ECG மற்றும் SPO2 monitor Wi-Fi Printer தள்ளுவண்டி மற்றும் Power Strip

00:46 இந்த kitன் Ambulance Model, பின்வருவனவற்றை கொண்டிருக்கும்

ஒரு உலோக உறையினுள் ஒரு Android Tab, ஒரே கருவியினுள் NIBP உடன்ECG மற்றும் SPO2 monitor , மற்றும் ஒரு Power Strip

01:05 Ambulance Modelக்கு Wi-Fi Printer கிடையாது, மேலும் அது தள்ளுவண்டியின் மேல் ஏற்றப்பட்டிருக்காது.
01:13 Ambulance Modelலில், Tabன் உலோக உறை, ஒரு clampஉடன் ஏற்றப்படுகிறது.
01:20 HP Tablet தான் data entry கருவி. அதனுள் உள்ளவை-

Tabன் மேல் ஒரு power button கீழே, 2 micro USB portகள் மற்றும் ஒரு HDMI port

01:36 2 USB portகளில், வலது கடைசியில் இருக்கும் port, Tabஐ charge செய்ய பயன்படுத்தப்படுகிறது.
01:44 Android Tabஐ பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றில் charge செய்யலாம்

standard Micro USB charger அல்லது Maestros Deviceல் இருந்து தொங்கும் USB cable.

01:58 இந்த cableஐ பயன்படுத்துவதினால், தன்னை charge செய்து கொள்ள, Tab, Maestros Deviceல் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும்.
02:06 Tabஐ power pointல் plug செய்து charge செய்வதை தவிர்க்கவே இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
02:15 மாறாக, Tab, charge செய்யப்படும் போது, கருவியை எடுத்துக் கொண்டு செல்லலாம்.
02:21 Tab, ஒரு உலோக உறையினால், Maestros Deviceஉடன் இணைக்கப்படுகிறது.
02:27 Tabஉம், Maestros Deviceஉம் தனித்தனி கருவிகள் ஆகும்.
02:32 ஆனால், அவற்றை உலோக உறை சுற்றியுள்ளதால், அவை ஒரு unitஆக இயங்குகின்றன.
02:39 Maestros Device 5 Portகளை பெற்றுள்ளது

Charge செய்யும் port,ECG port, BP port, SPO2 port மற்றும், Temp

02:51 இது இடது பக்கத்தில் charge செய்யும் portஉடன் ஒரு power பட்டனையும்
02:57 வலது பக்கத்தில், ECG, BP மற்றும் SPO2ஐயும் பெற்றிருக்கும்
03:04 இடது பக்கத்தில், இரண்டு பச்சை கலந்த மஞ்சள் நிறம் காட்டும் LEDகளையும், Maestros Device பெற்றிருக்கும்.

Maestros Device இயக்கப்பட்டவுடன் ஒரு LED எரியும், மற்றும், கருவி charging modeல் இருக்கும் போது மற்றொன்று எரியும்

03:23 இப்போது, Non Invasive Blood Pressure unit, அதாவது, NBIP unitஐ காண்போம்.
03:32 B.P cuff இரண்டு பகுதிகளைப் பெற்றுள்ளது, B.P cuff cable மற்றும் extension cable.
03:39 முதலில், B.P cuff cable ஐ, extension cableஉடன் இணைக்கவும்.
03:46 பின், extension cableன் மற்றொரு முனையை, B.P portஉடன் இணைக்கவும்.
03:52 முன்பு கூறியது போல், இது Maestros Deviceன் கீழ் இடது மூலையில் உள்ளது.
04:00 இப்போது, B.P எடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்.
04:05 அடுத்து, நாம் SPO2 unitஐ காண்போம்.

SPO2 cable இரண்டு பகுதிகளைப் பெற்றுள்ளது- extension cable, மற்றும் SPO2 probe

04:18 காட்டப்பட்டுள்ளபடி, extension cableஐ, SPO2 probeஉடன் இணைக்கவும்.
04:24 இணைக்கப்படுகின்ற cableகளை பாதுகாக்க, ஒளி புகக்கூடிய மூடியினால் அதை மூடவும்.
04:31 extension cableன் மற்றொரு முனை, Maestros Deviceஉடன் இணைக்கப்பட வேண்டும்.
04:38 Maestros Deviceன் மேல் இடது பக்கத்தில் இருக்கும் portஉடன் அதை இணைக்கவும்.
04:45 இப்போது, SPO2ஐ அளவிட நாம் தயாராக உள்ளோம்.
04:50 அடுத்து, நாம் ECG unitஐ காண்போம். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Maestros Deviceன் மேல் இடது பக்கத்தில் இருக்கும் ECG portஐ, ECG cable உடன் இணைக்கவும்.
05:04 Connector headன் இரு பக்கங்களிலும் உள்ள screwக்களை இறுக்கி இணைப்பை பாதுகாக்கவும்.
05:11 இப்போது, ஒரு ECGஐ எடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்.
05:15 சுருங்கசொல்ல.
05:16 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Maestros STEMI Kitஉடன் வரும் பல்வேறு unitகள்

மற்றும் அவற்றை Maestros Deviceஉடன் எப்படி இணைப்பது.

05:29 STEMI INDIA

'லாப நோக்கில்லா' ஒரு அமைப்பாக நிறுவப்பட்டது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், அதற்கான சிகிச்சையை, அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும் மேலும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது

05:44 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.

http://spoken-tutorial.org

06:00 இந்த டுடோரியல்

STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, IIT Bombay ஆல் பங்களிக்கப்பட்டது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya