Ruby/C2/Logical-and-other-Operators/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | Logical மற்றும் மற்ற Operatorகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:09 | Logical Operatorகள் |
00:11 | Parallel assignment மற்றும் |
00:13 | Range Operatorகள் |
00:15 | இங்கே நாம் பயன்படுத்துவது |
00:17 | உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04 |
00:20 | Ruby 1.9.3 |
00:23 | இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு லினக்ஸில் டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:29 | irb குறித்தும் தெரிந்திருக்க வேண்டும் |
00:33 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
00:38 | Logical Operatorகள் Boolean Operatorகள் எனவும் அழைக்கப்படுகின்றன |
00:42 | ஏனெனில் ஒரு expression ன் பகுதிகளை மதிப்பிட்டு ஒரு true அல்லது false மதிப்பை திருப்புகிறது. |
00:48 | Logical Operator களாவன, |
00:51 | இரு ampersand (&&) அதாவது (and) |
00:54 | இரு pipe அதாவது (or) |
00:56 | ஆச்சரிய குறி (!) அதாவது (not) |
01:00 | &&(இரு ampersand) மற்றும் and இரு expressionகளும் உண்மை என்றால் மட்டுமே true என மதிப்பிடுகிறது |
01:07 | முதலாவது expression உண்மையென்றால் மட்டுமே இரண்டாவது மதிப்பிடப்படுகிறது |
01:12 | இந்த இரு வடிவங்களின் வித்தியாசம், முன்னுரிமை ஆகும் |
01:15 | குறிவடிவ and அதாவது &&(இரு ampersand) அதிக முன்னுரிமை கொண்டுள்ளது. |
01:20 | இப்போது சில உதாரணங்களைக் காண்போம். |
01:22 | இதற்கு irb ஐ பயன்படுத்துவோம். |
01:25 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
01:31 | interactive Ruby ஐ துவக்க irb என டைப் செய்து எண்டரை அழுத்துக |
01:36 | டைப் செய்க 3 greater than 2 space இரு ampersand space 4 less than 5 |
01:47 | எண்டரை அழுத்துக |
01:49 | true என வெளியீட்டை பெறுகிறோம் |
01:53 | இங்கே expression1 அதாவது 3>2 என்பது உண்மை. |
01:59 | Expression 2 அதாவது 4<5 அதுவும் உண்மை |
02:03 | இரு expressionகளும் உண்மை என்பதால், வெளியீடு true என பெறுகிறோம் |
02:08 | இப்போது முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்துக. |
02:12 | இரு ampersand குறிக்கு பதிலாக and என்ற வார்த்தையை சேர்க்கவும் |
02:17 | எண்டரை அழுத்துக |
02:19 | அதே வெளியீட்டை பெறுகிறோம். |
02:22 | இப்போது முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை மீண்டும் அழுத்துக. |
02:27 | expression 1 ல் greater than குறிக்கு பதிலாக less than ஐ சேர்க்கவும் |
02:32 | எண்டரை அழுத்துக |
02:35 | false என்ற வெளியீடை பெறுகிறோம் |
02:38 | ஏனெனில் 3<2 என்பது பொய் |
02:43 | முதல் expression பொய் என்பதால், இரண்டாம் expression மதிப்பிடப்படுவதில்லை. |
02:49 | எனவே false என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
02:53 | இரு pipe மற்றும் or ஏதேனும் ஒரு expression உண்மையென்றாலும் true என மதிப்பிடுகிறது |
02:59 | முதல் expression பொய் என்றால் மட்டுமே இரண்டாவது மதிப்பிடப்படுகிறது |
03:04 | இந்த இரு வடிவங்களின் வித்தியாசம், முன்னுரிமை ஆகும் |
03:07 | குறிவடிவ or அதாவது இரு pipe அதிக முன்னுரிமை கொண்டுள்ளது |
03:11 | இப்போது சில உதாரணங்களை முயற்சிப்போம். |
03:15 | 10 greater than 6 space இரு pipe space 12 less than 7 |
03:23 | எண்டரை அழுத்துக |
03:26 | true என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
03:29 | இங்கே expression 1 அதாவது 10>6 என்பது உண்மை. |
03:35 | முதல் expression உண்மை என்பதால், இரண்டாம் expression மதிப்பிடப்படாது. |
03:40 | எனவே true என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
03:42 | இப்போது முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்துக. |
03:46 | expression 1 ல் greater than குறிக்கு பதிலாக less than ஐ சேர்க்கவும் |
03:52 | pipe குறிக்கு பதிலாக or என்ற வார்த்தையை சேர்க்கவும் |
03:57 | எண்டரை அழுத்துக |
04:00 | இங்கே, expression1 அதாவது 10<6 என்பது பொய் |
04:05 | Expression 2 அதாவது 12<7 அதுவும் பொய் |
04:10 | இரு expressionகளும் பொய் என்பதால், false என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
04:15 | ! (ஆச்சரிய குறி ) மற்றும் not operatorகள் expression க்கு எதிரான மதிப்பை திருப்புகிறது |
04:20 | expression உண்மையெனில், ஆச்சரிய குறி ஒரு false மதிப்பை திருப்பும். |
04:27 | expression பொய் எனில் இது true ஐ திருப்பும். |
04:30 | இந்த இரு வடிவங்களின் வித்தியாசம், முன்னுரிமை ஆகும் |
04:33 | குறிவடிவ not அதாவது (!) அதிக முன்னுரிமை கொண்டுள்ளது |
04:37 | not operator ஐ முயற்சிப்போம். |
04:40 | முதலில் டைப் செய்க 10 இரு சமக்குறி 10 |
04:45 | எண்டரை அழுத்துக |
04:47 | true என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
04:50 | மேலுள்ள expression ன் மதிப்பை நேர்மாறாக்க, |
04:53 | அந்த expression க்கு முன் not operator ஐ சேர்க்கவும். |
04:57 | டைப் செய்க ஆச்சரிய குறி அடைப்புகளில் 10 இரு சமக்குறி 10 |
05:04 | எண்டரை அழுத்துக |
05:06 | false என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
05:10 | irb console ஐ துடைக்க Ctrl+L ஐ ஒருசேர அழுத்துக. |
05:15 | அடுத்து parallel assignment பற்றி கற்போம் |
05:20 | parallel assignment மூலமாக ஒற்றை வரி Ruby code ல் பல variableகளை initialize செய்ய முடியும். |
05:26 | டெர்மினலுக்கு வருவோம் |
05:29 | parallel assignment ஐ பயன்படுத்தி மூன்று variableகள் a, b, c ஐ declare செய்வோம் |
05:36 | டைப் செய்க a comma b comma c equal to 10 comma 20 comma 30 |
05:45 | எண்டரை அழுத்துக |
05:47 | இங்கே, variable a க்கு 10 assign செய்யப்படும் |
05:52 | variable b க்கு 20 assign செய்யப்படும் |
05:54 | variable c க்கு 30 assign செய்யப்படும் |
05:56 | வலப்பக்கம் ஒரு array ஆக செயல்படுகிறது. |
06:01 | இடப்பக்கம் பல variableகளை நாம் பட்டியலிட்டால், பின் அந்த array கட்டவிழ்க்கப்பட்டு அதற்கான variableகளுக்கு assign செய்யப்படுகிறது. |
06:10 | மேல்வரும் டுடோரியல்களில் arrayகள் பற்றி விரிவாக கற்போம். |
06:14 | இப்போதைக்கு, சரியாக assign செய்யப்பட்டுள்ளதா என சோதிப்போம். |
06:20 | a என டைப் செய்து எண்டரை அழுத்துக |
06:23 | variable a ல் சேமிக்கப்பட்ட மதிப்பு 10 காட்டப்படுகிறது. |
06:28 | b என டைப் செய்து எண்டரை அழுத்துக |
06:31 | 20 ஐ பெறுகிறோம் |
06:33 | c என டைப் செய்து எண்டரை அழுத்துக |
06:37 | 30 காட்டப்படுகிறது. |
06:40 | Parallel assignment இரு variableகளில் சேமிக்கப்பட்ட மதிப்புகளை இடமாற்றுவதற்கும் பயன்படுகிறது . |
06:45 | variableகள் a மற்றும் b ன் மதிப்புகளை இடமாற்றுவோம். |
06:50 | டைப் செய்க puts space இரட்டை மேற்கோள்களில் a equal to hash curly bracketகளினுள் a comma இரட்டை மேற்கோள்களில் b equal to hash curly bracketகளினுள் b |
07:11 | எண்டரை அழுத்துக |
07:13 | பெறும் வெளியீடு a=10 |
07:16 | b=20 |
07:20 | இப்போது a மற்றும் b ஐ இடமாற்றுவோம். |
07:23 | அதற்கு டைப் செய்க |
07:25 | a comma b equal to b comma a |
07:31 | எண்டரை அழுத்துக |
07:33 | puts command ஐ பெற மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக பின் எண்டரை அழுத்துக |
07:39 | நாம் பெறும் வெளியீடு |
07:41 | a=20 |
07:44 | b=10 |
07:47 | இப்போது Ruby ல் range பற்றி கற்போம் |
07:50 | ஒரு range ல் மதிப்புகள் எண்கள், எழுத்துக்கள், stringகள் அல்லது objectகளாக இருக்கலாம். |
07:58 | ஒரு sequence ஐ வெளிப்படுத்த Rangeகள் பயன்படுகின்றன |
08:02 | தொடர்ச்சியான மதிப்புகளின் ஒரு range ஐ உருவாக்க Sequence range பயன்படுகிறது. |
08:06 | ஒரு ஆரம்ப மதிப்பு, மதிப்புகளின் range மற்றும் ஒரு முடிவு மதிப்பை இது கொண்டுள்ளது. |
08:13 | inclusive range ஐ (..) இரு dot operator உருவாக்குகிறது |
08:16 | ஒரு exclusive range ஐ (...) மூன்று dot operator உருவாக்குகிறது |
08:20 | ஒரு மதிப்பு ஒரு குறிப்பிட்ட range னுள் அடங்குகிறதா என கண்டறிய Rangeகள் பயன்படுகின்றன. |
08:26 | (===) equality operator ஐ பயன்படுத்தி இதை நாம் செய்கிறோம். |
08:30 | rangeகளுக்கான சில உதாரணங்களை முயற்சிப்போம் |
08:33 | டெர்மினலுக்கு வருவோம் |
08:36 | டைப் செய்வோம் அடைப்புகளில் 1 இரு dotகள் 10 dot to underscore a |
08:46 | inclusive range ஐ இரு dot operator உருவாக்குகிறது |
08:50 | ஒரு range ல் ஆரம்ப மற்றும் முடிவு மதிப்புகள் இரண்டையும் Inclusive operator கொண்டுள்ளது. |
08:57 | இங்கே ஒரு range ஐ ஒரு list க்கு மாற்ற to_a method பயன்படுகிறது. |
09:03 | எண்டரை அழுத்துக |
09:05 | இங்கே மதிப்புகள் 1 முதல் 10 வரை இந்த range ல் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். |
09:11 | இப்போது ஒரு exclusive range operator ஐ காண்போம். |
09:16 | டைப் செய்வோம் அடைப்புகளில் 1 மூன்று dotகள் 10 பின் dot to underscore a |
09:27 | மூன்று dot operator ஒரு exclusive range ஐ உருவாக்குகிறது |
09:31 | Exclusive range operator அந்த வரிசையிலிருந்து முடிவு மதிப்பை நீக்குகிறது . |
09:37 | எண்டரை அழுத்துக |
09:39 | இங்கே முடிவு மதிப்பு 10 இந்த range ல் இல்லை. |
09:45 | இப்போது 1 முதல் 10 வரையிலான range ல் 5 உள்ளதா என சோதிப்போம். |
09:50 | டைப் செய்க அடைப்புகளில் 1 இரு dotகள் 10 மூன்று சமக்குறி பின் 5 |
10:00 | எண்டரை அழுத்துக |
10:02 | range ல் ஒரு மதிப்பு உள்ளதா என சோதிக்க Equality operator பயன்படுகிறது. |
10:07 | 1 முதல் 10 வரையான range ல் 5 உள்ளதால் true என்ற வெளியீட்டை பெறுகிறோம். |
10:14 | இத்துடன் இந்த ஸ்போகன் டுடோரியல் முடிகிறது. |
10:17 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
10:20 | Logical operator அதாவது இரு ampersand, இரு pipe மற்றும் ஆச்சரிய குறி operatorகள் |
10:27 | Parallel assignment உதா: a,b,c=10,20,30 |
10:34 | Range Operator Inclusive operator (..) மற்றும் Exclusive operator(...) |
10:39 | பயிற்சியாக |
10:41 | parallel assignment ஐ பயன்படுத்தி இரு variable களை declare செய்யவும் |
10:45 | 20 முதல் 50 க்கு இடையே அதன் கூடுதல் வருகிறதா என சோதிக்கவும் |
10:49 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:52 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:56 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
11:00 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:05 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:09 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:15 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:19 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:25 | மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:34 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |