Ruby/C2/Arithmetic-and-Relational-Operators/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Ruby ல் Arithmetic மற்றும் Relational Operatorகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:08 Arithmetic Operatorகள்
00:10 Operator முன்னுரிமை
00:12 Relational Operatorகள்.
00:14 இங்கே நாம் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04 Ruby 1.9.3
00:23 இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு லினக்ஸில் டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:28 irb பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்
00:31 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்
00:34 இப்போது arithmetic operatorகள் பற்றி கற்போம்.
00:38 Ruby பின்வரும் arithmetic operatorகளை கொண்டுள்ளது.
00:42 +கூட்டல்: எகா. a+b.
00:45 - கழித்தல்: எகா. a-b.
00:48 / வகுத்தல்: எகா. a/b.
00:51 * பெருக்கல்: எகா. a*b.
00:55  % Modulus: எகா. a%b.
00:59 ** Exponent : எகா a**b
01:04 irb ஐ பயன்படுத்தி இந்த arithmetic operatorகளை முயற்சிப்போம்
01:08 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறக்கவும்.
01:14 திரையில் டெர்மினல் விண்டோ தோன்றுகிறது.
01:17 interactive Ruby ஐ துவக்க irb என டைப் செய்து எண்டரை அழுத்துக
01:21 டைப் செய்க 10 plus 20 பின் எண்டரை அழுத்துக
01:25 கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்பட்டு விடை 30 காட்டப்படுகிறது.
01:31 அதேபோல கழித்தல் மற்றும் பெருக்கல் செயல்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன.
01:35 வகுத்தல் operator ஐ முயற்சிப்போம்.
01:38 டைப் செய்க 10 slash 4
01:40 எண்டரை அழுத்துக
01:42 இங்கே அருகில் உள்ள முழு எண் அதாவது 2 என விடை மட்டுப்படுத்தப்படுகிறது.
01:47 மிக துல்லியமான விடையை பெற, ஒரு எண்ணை float ஆக கொடுக்க வேண்டும்
01:52 டைப் செய்க 10.0 slash 4
01:56 எண்டரை அழுத்துக
01:58 இப்போது பெறும் விடை 2.5
02:01 இப்போது modulus operator ஐ முயற்சிப்போம்.
02:05 modulus operator மீதியை வெளியீடாக திருப்புகிறது.
02:09 டைப் செய்க 12 சதவீத குறி 5 பின் எண்டரை அழுத்துக
02:15 இங்கே 12... 5 ஆல் வகுக்கப்பட்டு மீதி 2 திரும்பப்பெறபடுகிறது.
02:21 இப்போது exponent operator ஐ முயற்சிப்போம்.
02.24 டைப் செய்க 2 இரு நட்சத்திர குறி 5 பின் எண்டரை அழுத்துக
02:32 இதன் பொருள் 2 ன் அடுக்கு 5.
02:36 எனவே 32 என வெளியீட்டை பெறுகிறோம்.
02:39 அடுத்து, operator முன்னுரிமை பற்றி கற்போம்.
02:44 ஒரு கணித கூற்றில் பல செயல்பாடுகள் வரும்போது, operator முன்னுரிமை என்ற முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரிசையில் ஒவ்வொரு பகுதியும் மதிப்பிடப்பட்டு தீர்க்கப்படுகிறது.
02:56 அதாவது அதிக முன்னுரிமை கொண்ட operator முதலில் இயக்கப்படுகிறது.
03:01 அதன் பின் முன்னரிமை வரிசையில் அடுத்தடுத்து உள்ள operatorகள் இயக்கப்படுகின்றன.
03:07 இந்த slide அதிகம் மற்றும் குறைந்த முன்னுரிமை கொண்ட operatorகளின் வரிசையை பட்டியலிடுகிறது.
03:13 உதாரணமாக 3 + 4 * 5 ... 23 ஐ கொடுக்கிறது 35 ஐ அல்ல
03:23 கூட்டல் operator (+) ஐ விட பெருக்கல் operator (*) அதிக முன்னுரிமைக் கொண்டுள்ளது
03:29 எனவே அது முதலில் மதிப்பிடப்படுகிறது.
03:32 எனவே நான்கு பெருக்கல் ஐந்து இருபது பின் மூன்று இருபதுடன் சேர்க்கப்பட்டு வெளியீடு 23 ஆக கொடுக்கிறது
03:42 operator முன்னுரிமை பற்றிய மேலும் சில உதாரணங்களை காண்போம்.
03:47 டெர்மினலுக்கு வருவோம்.
03:50 irb console ஐ துடைக்க Crtl மற்றும் L விசைகளை ஒருசேர அழுத்துக.
03:56 இப்போது டைப் செய்க 7 minus 2 into 3
04:03 எண்டரை அழுத்துக
04:05 1 என விடையை பெறுகிறோம்.
04:08 இங்கே கழித்தல் குறியை விட நட்சத்திர குறி அதிக முன்னுரிமை கொண்டுள்ளது.
04:13 எனவே பெருக்கல் செயல்பாடு முதலில் செயல்படுத்தப்பட்டு பின் கழித்தல் செயல்படுத்தப்படுகிறது.
04:20 மற்றொரு உதாரணத்தைக் காண்போம்.
04:22 டைப் செய்க அடைப்புகளில் 10 plus 2..... slash 4
04:29 பின் எண்டரை அழுத்துக. 3 என விடையை பெறுகிறோம்.
04:33 இங்கே வகுத்தலை (slash) விட அடைப்புகுறி அதிக முன்னுரிமை கொண்டுள்ளது
04:39 எனவே அடைப்புளில் உள்ள செயல்பாடு அதாவது கூட்டல் முதலில் செயல்படுத்தப்படுகிறது.
04:44 பின் வகுத்தல் செயல்படுத்தப்படுகிறது.
04:47 இப்போது Relational Operatorகள் பற்றி கற்போம்.
04:51 slideகளுக்கு வருவோம்.
04:54 Relational operatorகள் comparison operatorகள் எனவும் அழைக்கப்படுகிறது.
04:59 relational operatorகளை பயன்படுத்தும் expressions... boolean மதிப்புகளை திருப்புகின்றன.
05:04 Ruby ல் உள்ள Relation Operatorகளாவன
05:07 == Equals to உதா. a==b
05:14 dot eql கேள்வி குறி உதா. a.eql?b
05:21 != Not equals to உதா. a ஆச்சரியகுறி equal b
05:28 Less than உதா. a < b
05:32 Greater than உதா. a > b
05:37 <= Lesser than or equal to உதா.a less than arrow equal b
05:44 >= Greater than or equal to உதா.a greater than arrow equal b
05:49 <=> Combined comparison உதா.a less than arrow equal greater than arrow b
05:56 இப்போது இந்த operatorகள் சிலவற்றை முயற்சிப்போம்.
06:00 டெர்மினலுக்கு வருவோம்.
06:02 irb console ஐ துடைக்க ctrl, L விசைகளை ஒருசேர அழுத்துக.
06:09 equals to operator ஐ முயற்சிப்போம்.
06:11 எனவே டைப் செய்க 10 equals equals 10 எண்டரை அழுத்துக
06:17 true என்ற வெளியீட்டை பெறுகிறோம்
06:20 equals to operator போன்றதே .eql? opeartor.
06:25 அதை முயற்சிப்போம். டைப் செய்க 10 .eql?10 எண்டரை அழுத்துக
06:33 true என்ற வெளியீட்டை பெறுகிறோம்
06:35 இப்போது not equal to operator ஐ முயற்சிப்போம்.
06:39 டைப் செய்க 10 not equal 10
06:44 எண்டரை அழுத்துக
06:46 false என்ற வெளியீட்டை பெறுகிறோம்
06:48 ஏனெனில் இரு எண்களும் சமம்.
06:51 Ctrl, L ஐ ஒருசேர அழுத்தி irb console ஐ துடைப்போம்.
06:56 இப்போது less than operator ஐ முயற்சிப்போம்.
07:00 டைப் செய்க 10 less than 5 எண்டரை அழுத்துக
07:05 இங்கே முதல் operand இரண்டாவதை விட சிறியது எனில் இது true ஐ திருப்பும்
07:10 இல்லையெனில் false ஐ திருப்பும்
07:14 false என வெளியீட்டை பெறுகிறோம் ஏனெனில் 5 ஐ விட 10 சிறியது அல்ல
07:19 greater than operator ஐ இப்போது முயற்சிப்போம்
07:22 டைப் செய்க 5 greater than 2
07:26 இங்கே முதல் operand இரண்டாவதை விட பெரியது எனில் இது true என திருப்பும்
07:31 இல்லையெனில் false ஐ திருப்பும்
07:34 எண்டரை அழுத்துக
07:36 இங்கே, True என வெளியீடை பெறுகிறோம் ஏனெனில் 2 ஐ விட 5 பெரியது
07:42 Ctrl, L ஐ ஒருசேர அழுத்துவதன் மூலம் irb console ஐ துடைப்போம்
07:47 இப்பொது less than equal to operator ஐ முயற்சிப்போம்
07:51 டைப் செய்க 12 less than equal 12
07:56 எண்டரை அழுத்துக
07:59 இங்கே முதல் operand இரண்டாவதை விட குறைவாகவோ அதற்கு சமமாகவோ இருந்தால் இது true ஐ திருப்புகிறது
08:04 இல்லையெனில் false ஐ திருப்புகிறது
08:07 True என்ற வெளியீட்டை பெறுகிறோம் ஏனெனில் 12 12க்கு சமம்
08:11 அதேபோல greater than or equal to operator ஐ முயற்சிக்கவும்.
08:15 இப்போது combined comparision operator ஐ முயற்சிப்போம்.
08:19 combined comparision operator
08:21 முதல் operand இரண்டாவதற்கு சமம் எனில் 0 ஐ திருப்புகிறது
08:24 முதல் operand இரண்டாவதை விட பெரியது எனில் 1 ஐ திருப்புகிறது
08:29 முதல் operand இரண்டாவதை விட சிறியது எனில் -1 ஐ திருப்புகிறது
08:34 ஒரு உதாரணத்துடன் இதை காண்போம்
08:36 டைப் செய்க 3 less than equals greater than 3
08:41 எண்டரை அழுத்துக
08:43 0 என்ற வெளியீட்டை பெறுகிறோம்
08:45 ஏனெனில் இரு operandகளும் சமம் அதாவது இரண்டும் மூன்று
08:50 இப்போது அதில் ஒரு operandஐ 4 ஆக மாற்றுவோம்
08:53 டைப் செய்க 4 less than equals greater than 3 எண்டரை அழுத்துக
08:59 3 ஐ விட 4 பெரியது என்பதால் 1 என்ற வெளியீட்டை பெறுகிறோம்
09:04 இப்போது இந்த உதாரணத்தை மீண்டும் மாற்றுவோம்
09:07 டைப் செய்க 4 less than equals greater than 7
09:11 எண்டரை அழுத்துக
09:13 7 ஐ விட 4 சிறியது என்தால் -1 என்ற வெளியீட்டை பெறுகிறோம்
09:17 பயிற்சியாக
09:19 irb ஐ பயன்படுத்தி பின்வரும் உதாரணங்களை தீர்த்து வெளியீட்டை சோதிக்கவும்
09:24 10 + அடைப்புகளில் 2 into 5 அடைப்புகளில் 8 slash 2
09:32 4 into 5 slash 2 plus 7
09:37 methods ஐ பயன்படுத்தி arithmetic operatorகளையும் முயற்சிக்கவும்
09:42 இத்துடன் இந்த ஸ்போகன் டுடோரியல் முடிகிறது.
09:45 சுருங்க சொல்ல
09:47 இந்த டுடோரியலில் நாம் கற்றது
09:49 Arithmetic Operator களான plus கூட்டல், minus கழித்தல், asterisk பெருக்கல், slash வகுத்தல்.
09:59 Operator முன்னுரிமை
10:01 Relational Operatorகள்
10:04 அதற்கான பல உதாரணங்கள்.
10:06 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:10 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:14 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:23 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:26 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:32 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:36 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:43 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:51 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst