Python/C2/Multiple-plots/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:00 | ஹலோ, நண்பர்களே, "Multiple plots" குறித்த spoken tutorial க்கு நல்வரவு! |
00:05 | இந்த டுடோரியலில் கற்பது..,
|
00:25 | ஆகவே, இந்த tutorial லை துவக்கும் முன் கீழ் கண்ட tutorial களை முடிக்கவும். "Using plot interactively", "Embellishing a plot" மற்றும் "Saving plots". |
00:35 | ipython ஐ pylab உடன் துவக்குவோம். இதற்கு முனையத்தில் ipython space hyphen pylab என டைப் செய்வோம். |
00:51 | நமது plot க்கு முதலில் ஒரு தொகுதி புள்ளிகளை உருவாக்குவோம். |
00:54 | இதற்கு நாம் பயன்படுத்தும் கட்டளை linspace |
00:56 | x is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் 0,50,10 என type செய்வோம். |
01:07 | Linspace கட்டளை 0 மற்றும் 50 வரை உள்ளிட்ட இடைவெளியில் 10 புள்ளிகளை உருவாக்குகிறது. இவற்றை x எனும் வேரியபிலுக்கு மதிப்பாக்குவோம். |
01:17 | இந்த புள்ளிகளைக்கொண்டு ஒரு எளிய sine plot ஐ உருவாக்குவோம். |
01:20 | ஆகவே, plot அடைப்பு குறிகளுக்குள் x comma sin of x என type செய்து Enter செய்வோம். |
01:33 | இது நல்ல sine plot ஆ? |
01:37 | sine plot உண்மையில் இப்படியா இருக்கும்? |
01:40 | sine plot ஒரு சீரான வளைவு இல்லையா? |
01:44 | பின்னே ஏன் இது இப்படி ஆயிற்று? |
01:47 | linspace ஐ ஆராய நாம் மிகப்பெரிய இடை வெளியான 0 மற்றும் 50 க்கு இடையே மிகக்குறைந்த புள்ளிகளையே அமைத்தோம். அதனால்தான் வளைவு சீராக இல்லாமல் போயிற்று. |
01:59 | plot கட்டளை உண்மையில் x மற்றும் sin(x) கொடுக்கும் புள்ளிகள் தொகுதியில் ப்லாட்டை அமைக்கிறதே ஒழிய analytical function களையே அமைப்பதில்லை; மாறாக Analytical function கள் தரும் புள்ளிகளை கொண்டே ப்லாட் ஐ அமைக்கிறது. |
02:14 | ஆகவே நாம் இப்போது linspace ஐ மீண்டும் பயன்படுத்தி 0 மற்றும் 100 இடையே 500 புள்ளிகளை பெற்று sine plot ஐ மீண்டும் வரையலாம். |
02:26 | ஆகவே type செய்யலாம்: y is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் 0,50,500. பின் plot அடைப்பு குறிகளுக்குள் y,sin(y) என type செய்யலாம். |
02:48 | கவனமாக பார்த்தால் இரண்டு ப்லாட்கள் ஒன்றின் மீது ஒன்றாக வரையப்பட்டன. |
02:55 | pylab இல் முன்னிருப்பாக எல்லா plot களும் ஒன்றன் மீது ஒன்றாக அமைக்கப்படும். |
02:58 | நாம் இரண்டு plot களையும் ஒன்றன் மீது ஒன்றாக அமைத்துவிட்டதால் அவற்றில் எது எதை குறிக்கிறது என்று சரியாக அடையாளம் காண ஒரு வழி காண வேண்டும். |
03:06 | இது legends ஐ பயன்படுத்தி செய்யப்படுகிறது. |
03:11 | அதாவது legend கட்டளை இதை நமக்கு செய்து தரும். |
03:18 | legend கட்டளை ஒரு பட்டியல் அளப்புருக்களைக் கொண்டு வேலை செய்கிறது.இங்கு அளப்புரு ஒவ்வொன்றும் plot களை அவற்றின் வரிசை எண்ணால் சுட்டிக்காட்டும். |
03:25 | ஆகவே முனையத்தில் type செய்யலாம். legend அடைப்பு குறிகளுக்குள் மற்றும் சதுர அடைப்புகளுக்குள் ஒற்றை மேற்கோள்களுக்குள் sin of x comma ஒற்றை மேற்கோள்களில் sin of y. |
03:44 | இப்போது plot இடத்தில் அந்தந்த sine மற்றும் cosine plot களுக்கு பக்கத்தில் அவற்றுக்கான விளக்கம் தெரிகிறது. |
03:52 | இப்போது நாம் நிறைய விஷயங்களை கற்றூக்கொண்டு விட்டோம். ஆகவே நாம் பயிற்சிகளை செய்யலாம். |
03:56 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். |
04:02 | ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு plot களை வரையவும். முதல் plot y is equal to 4 into x squared என்பதன் பரவளைவு - parabola - ஆக இருக்கட்டும். இரண்டாவது -5 to 5 என்ற இடைவெளியில் y is equal to 2x plus 3 என்ற நேர்கோடாக இருக்கட்டும். |
04:19 | plot களை நிறங்கள் மற்றும் legends ஐ பயன்படுத்தி ஒவ்வொரு plot உம் என்ன செய்கிறது என்று குறிக்கவும். |
04:26 | தீர்வுக்கு முனையத்துக்கு மாறலாம். பின் வரும் கட்டளை மூலம் வெவ்வேறு நிறங்களில் இரண்டு plot களை வரையலாம். |
04:33 | type செய்வோம்: x is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் -5 comma 5 comma 100. |
04:42 | பின் - type plot அடைப்பு குறிகளுக்குள் x, 4 star அடைப்பு குறிகளுக்குள் x star x, 'b'. |
04:53 | பின் - மீண்டும், plot அடைப்பு குறிகளுக்குள் x, 2 star x plus 3, 'g'. |
05:05 | இப்போது நாம் legend கட்டளையை பயன்படுத்தலாம் - legend அடைப்பு குறிகளுக்குள் மற்றும் சதுர அடைப்பு குறிகளுக்குள் 'Parabola', 'Straight Line'. |
05:31 | அல்லது நாம் சமன்பாட்டையே கூட plot கட்டளையில் கொடுக்கலாம். type செய்யலாம்: legend அடைப்பு குறிகளுக்குள் மற்றும் சதுர அடைப்பு குறிகள் y = 4 into x squared ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் comma ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் y is equal to 2x plus 3. |
05:49 | இப்போது நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட plotகளை வரையவும் மற்றும் எந்த plot எந்த function ஐ குறிக்கிறது என குறிப்பு எழுதவும் தெரியும்; ஆனால் நமக்கு இன்னும் ஆளுமை வேண்டும். |
05:59 | அவற்றுள் மாறுவது, அவற்றுக்கு தனி லேபிள் கொடுப்பது போன்று.... |
06:06 | இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். |
06:09 | திரையை சுத்தம் செய்யலாம். அதற்கு type செய்யலாம்: clf பின் - closing brackets. |
06:16 | தனி ப்லாட்கள் மீது இன்னும் கட்டுப்பாட்டை பெற figure கட்டளையை பயன்படுத்த வேண்டும். type செய்யலாம். |
06:23 | x is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் 0 comma 50,500. |
06:29 | பின் - type செய்க: figure அடைப்பு குறிகளுக்குள் 1. |
06:34 | பின் - type செய்க : plot அடைப்பு குறிகளுக்குள் x, sin(x) comma b பின் - figure(2) |
06:59 | பின் - type செய்க plot within brackets x comma cos(x) comma ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் g |
07:33 | இப்போது நம்மிடம் இரண்டு வெவ்வேறு படங்களில், ஒரு sine plot மற்றும் ஒரு cosine plot உள்ளன. |
07:39 | figure கட்டளை தரு மதிப்பாக ஒரு முழு எண்ணை ஏற்கிறது. அது இங்கே plot இன் வரிசை எண்ணாகும். |
07:43 | இது அதற்கு இசைந்த plot ஐ எடுத்துக்கொள்கிறது. |
07:45 | இனி தரும் எல்லா plot கட்டளைகளும் தேர்ந்தெடுத்த plot க்குத்தான் செயல்படுத்தப்படும். |
07:51 | படம் 1 sine plot ஆகும்; படம் 2 cosine plot ஆகும். |
08:00 | உதாரணமாக, நாம் ஒவ்வொரு plot ஐயும் தனியாக சேமிக்கலாம். |
08:07 | நம் முதல் plot க்கு 'sin(y)' என தலைப்பு கொடுத்தோம். ஆனால் இரண்டாம் plot க்கு தலைப்பு ஏதும் இன்னும் தரவில்லை. |
08:14 | ஆகவே நாம் முனையத்தில் type செய்வோம்: savefig அடைப்பு குறிகளுக்குள் மற்றும் ஒற்றை மேற்கோள்களில் slash home slash fossee slash cosine dot png. |
08:35 | பின் - figure(1). |
08:42 | பின் - title அடைப்பு குறிகளுக்குள் மற்றும் ஒற்றை மேற்கோள்களில் sin(y). |
08:55 | பின் - savefig அடைப்பு குறிகளுக்குள் .. ஒற்றை மேற்கோள்களில் slash home slash fossee slash sine dot png |
09:10 | cosine கட்டளையிலும் நாம் பயனராக fossee ஐ பயன்படுத்தலாம். |
09:17 | இன்னொரு கணக்கை பயிற்சியாக செய்யலாம். |
09:22 | விடியோவை இங்கே நிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்த பின் தொடரவும். |
09:26 | ஒரு படமாக ஒரு கோட்டை y is equal to x என வரைக; இன்னொரு கோட்டை y is equal to 2x plus 3 என வரைக. |
09:34 | முதல் படத்துக்கு மாறி, x மற்றும் y சந்திக்கும் இடங்களுக்கு குறிப்பு எழுதுக. |
09:39 | இதே போல இரண்டாம் படத்துக்கும் செய்க. |
09:43 | அவற்றை சேமிக்கவும். |
09:46 | இப்போது, தீர்வுக்கு முனையத்துக்கு மாறலாம். |
09:49 | இதை தீர்க்க முதல் படத்தை figure கட்டளையால் வரைய வேண்டும். |
09:53 | அதற்கு முன் clf கட்டளையால் முந்தைய plot களை நீக்கி சுத்தம் செய்யலாம். |
10:00 | அதற்கு type செய்க: clf(). |
10:03 | பின் - type செய்க: figure 1. |
10:06 | பின் - type செய்க: x is equal to linspace அடைப்புக்குறிகளில் -5 comma 5 comma 100. |
10:14 | பின் - plot x comma x. |
10:22 | figure கட்டளையால் இரண்டாம் ப்லாட் இடத்தை உருவாக்கலாம். படத்தை plot செய்யலாம். |
10:27 | type செய்க: figure 2. |
10:29 | பின் - type செய்க: plot அடைப்பு குறிகளுக்குள் x comma அடைப்பு குறிகளுக்குள் 2 star x plus 3. |
10:52 | படங்களினிடையே மாற figure கட்டளையை பயன்படுத்தலாம். |
10:56 | படம் 1 க்கு மாறுவோம். |
11:00 | படம் 1 இன் x மற்றும் y சந்திக்கும் இடத்தை பெயரிட சொல்கிறார்கள், ஆனால் படம் 1 துவக்கப்புள்ளியின் ஊடே செல்வதால் நாம் இந்த துவக்கப்புள்ளியைத்தான் பெயரிட வேண்டும். |
11:10 | இரண்டாம் படத்தின் சந்திப்பு இடங்களை பின்வருமாறு பெயரிட்டு சேமிப்போம். |
11:14 | type செய்க: figure 1. |
11:21 | பின் - type செய்க: annotate அடைப்பு குறிகளுக்குள் origin comma xy is equal to 0 point 0 comma 0 point 0. |
11:30 | பின் - figure 2. |
11:38 | ஆகவே figure 2 . பின் - annotate அடைப்பு குறிகளுக்குள் மற்றும் ஒற்றை மேற்கோள்களில் x hyphen intercept comma xy is equal to அடைப்பு குறிகளுக்குள் 0 comma 3. |
12:05 | பின் - annotate y hyphen intercept comma xy is equal to அடைப்பு குறிகளுக்குள் 0 comma -1.5. |
12:18 | சேமிக்கலாம்: savefig அடைப்பு குறிகளுக்குள் மற்றும் ஒற்றை மேற்கோள்களில் slash home slash fossee slash plot2 dot png. |
12:28 | பின் - figure 1 -பின் இதை சேமிக்க type செய்க: savefig அடைப்பு குறிகளுக்குள் மற்றும் ஒற்றை மேற்கோள்களில் slash home slash fossee slash plot1 dot png. |
12:52 | சில நேரங்களில் நாம் இரண்டு ப்லாட்களை ஒப்புநோக்க விரும்புகிறோம். அச்சமயங்களில் இரண்டையும் ஒரே இடத்தில் வரைய விரும்புகிறோம். |
13:00 | ஆனால் இரண்டு ப்லாட்களின் அச்சுக்களும் வெவ்வேறானவை. ஆகவே ஒன்றன் மீதொன்றாக ப்லாட்களை வரையவும் இயலாது. |
13:07 | அந்த மாதிரி சமயங்களில் subplot களை வரையலாம். |
13:11 | கட்டளை subplot |
13:12 | ஆகவே type செய்க: subplot அடைப்பு குறிகளுக்குள் 2 comma 1 comma 1. |
13:26 | நாம் காண்பது போல subplot கட்டளை மூன்று தரு மதிப்புகளை ஏற்கிறது; முதலாவது தரு மதிப்பு துணை ப்லாட்கள் வரையப்பட வேண்டிய வரிகளின் எண்ணிக்கை, இங்கே அது 2, ஆகவே அது வரைபட இடத்தை கிடைமட்டமாக இரண்டாக பிரிக்கிறது. |
13:44 | இரண்டாம் தரு மதிப்பு subplotகளில் எத்தனை பத்திகள் வர வேண்டும் என்பது. |
13:49 | அதற்கு தரு மதிப்பு 1 என கொடுத்தோம். ஆகவே வரைபட இடம் செங்குத்தாக பிரிக்கப்பட மாட்டாது. கடைசி தரு மதிப்பு இப்போது எந்த subplot உருவாக்கப்பட வேண்டும் என்பதை வரிசை எண்ணாக கேட்கிறது. |
14:02 | இதற்கு நாம் கொடுத்த தரு மதிப்பு 1, ஆகவே முதல் subplot அதாவது மேல் பாதி உருவாக்கப் படும். |
14:08 | subplot கட்டளையை முனையத்தில் type செய்வோம். subplot 2 comma 1 comma 2. |
14:19 | கீழ் subplot உருவாக்கப் படுகிறது. |
14:23 | ஒவ்வொரு subplot இடத்திலும் plot களை plot கட்டளை மூலம் உருவாக்கலாம். |
14:26 | type செய்யலாம். x=linspace அடைப்பு குறிகளுக்குள் 0 comma 50 comma 500. |
14:36 | -பின் - plot அடைப்பு குறிகளுக்குள் x comma cos(x). |
14:46 | -பின் - subplot 2 comma 1 comma 1. |
14:54 | -பின் - y is equal to linspace 0 comma 5 comma 100. |
15:01 | -பின் - plot y comma y star star 2. |
15:10 | இரண்டு plot களை subplot இடங்களில் இடத்திற்கு ஒன்றாக வரைந்தது. |
15:15 | subplot இல் மேலே parabola வும், கீழே cosine வளைவும் உள்ளன. |
15:22 | subplot கட்டளையை subplot களுக்கு இடையில் மாற பயன்படுத்தலாம். ஆனால் சப்ப்லாட் உருவாக்க கொடுத்த அதே தருமதிப்புகளையே தர வேண்டும். இல்லையானால் அதே இடத்து முந்தைய subplot தானியங்கியாக அழியும். |
15:34 | இரண்டு subplot களையும் கவனித்தால் வெவ்வேறான அச்சுக்களை கொண்டு இருப்பதை காணலாம். |
15:40 | cosine plot இன் x-axis 0 இலிருந்து 100 வரையும், y-axis 0 இலிருந்து 1 வரையும் அமைந்துள்ளது. parabolic plot க்கு x-axis 0 இலிருந்து 10 வரையும், y-axis 0 இலிருந்து 100 வரையும் அமைந்துள்ளது. |
15:54 | இன்னொரு பயிற்சி செய்யலாம். |
15:56 | விடியோவை இடைநிறுத்தி, பயிற்சியை செய்து பின் தொடரவும். |
16:01 | அழுத்தம், கொள்ளளவு, வெப்ப அளவு ஆகியன PV = nRT என்ற சமன்பாட்டால் குறிக்கப்படும். இங்கே nR மாறிலி. |
16:10 | nR =0.01 Joules/Kelvin மற்றும் T = 200K எனக்கொள்வோம். |
16:19 | V 21cc முதல் 100cc வரை இருக்கலாம். |
16:27 | இரண்டு plot களை subplot களாக வரைக; ஒன்று Pressure க்கு எதிராக Volume எனும் plot, மற்றது Pressure க்கு எதிராக Temperature எனும் plot. |
16:37 | தீர்வுக்கு முனையத்துக்கு செல்வோம் |
16:41 | துவக்கத்தில், Volume இன் வீச்சு கொடுக்கப்பட்டுவிட்டது. அதைக்கொண்டு நாம் மாறி V ஐ காணலாம். |
16:48 | V is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் 21 comma 100 comma 500. |
16:58 | முதல் subplot ஐ உருவாக்கலாம். Pressure க்கு எதிராக Volume எனும் வரைபடத்தை V ஐக்கொண்டு வரையலாம். |
17:05 | nRT மாறிலி என்று தெரியும். அது இங்கே 2.0. ஏனெனில் nR = 0.01 Joules per Kelvin மற்றும் T = 200 Kelvin |
17:15 | ஆகவே முனையத்தில் டைப் செய்க: subplot 2 comma 1 comma 1. |
17:23 | பின் - plot அடைப்பு குறிகளுக்குள் V comma 2 point 0 slash V. |
7:33 | இப்போது இரண்டாம் subplot ஐ உருவாக்கலாம். Pressure க்கு எதிராக Temperature plot ஐ வரையலாம். |
17:39 | subplot 2 comma 1 comma 2 |
17:44 | பின் - டைப் செய்க: plot அடைப்பு குறிகளுக்குள் 200 comma 2.0 slash V. |
18:04 | துரதிருஷ்டவசமாக இப்போது ஒரு பிழை காணப்படுகிறது. x மற்றும் y பரிமாணங்கள் பொருந்தவில்லை. |
18:10 | ஏன்? நம் V இன் மதிப்பு linspace திருப்பிய ஒரு செட் மதிப்புகளை கொண்டுள்ளது. 2.0 slash V என்பது pressure. இதுவும் ஒரு செட் மதிப்புகளை கொண்டுள்ளது. |
18:20 | ஆனால் plot கட்டளைக்கு முதல் தரு மதிப்பு ஒற்றை எண். |
18:23 | ஆகவே இந்த தரவை plot செய்ய Pressure அல்லது Volume தரவில் எத்தனை புள்ளிகள் உள்ளனவோ அத்தனை அதே மதிப்பு கொண்ட தரவை Temperature க்கு உருவாக்க வேண்டும். |
18:34 | ஆகவே இதை செய்ய நாம் முனையத்தில் டைப் செய்யலாம்: T is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் 200 comma 200 comma 500. |
18:48 | இப்போது T இல் 500 மதிப்புகள் உள்ளன. ஒவ்வொன்றின் மதிப்பும் 200 Kelvin. |
18:54 | தரவை Plot செய்ய தேவையான plot கிடைக்கிறது. |
18:56 | type செய்க: plot அடைப்பு குறிகளுக்குள் T comma 2 point 0 slash V. |
19:07 | இத்துடன் இந்த tutorial நிறைவடைகிறது. |
19:11 | இந்த tutorial லில் நாம் கற்றது: ஒன்றன் மீது ஒன்றான ஒன்றுக்கு மேற்பட்ட plotகளை வரைதல். |
19:15 | figure, legend கட்டளையை பயன்படுத்துதல். |
19:18 | plot கள் இடையில் மாறுதல், மற்றும் plot களை சேமித்தல் போன்ற சில வேலைகளை அவற்றில் செய்தல். |
19:24 | subplot களை உருவாக்குதல், அவற்றின் இடையே மாறுதல். |
19:28 | சில சுய பரிசோதனை கேள்விகள் |
19:33 | 1.ஒவ்வொரு plot ஐயும் தனியாக பெற எந்த கட்டளை பயன்படுகிறது? |
19:38 | 2. பின் வருவனவற்றில் எது சரி? subplot(numRows, numCols, plotNum) , subplot(numRows, numCols), subplot(numCols, numRows) |
19:59 | இப்போது விடைகள்: |
20:02 | 1. ஒவ்வொரு plot ஐயும் தனியாக பெற கட்டளை "figure()" பயன்படுகிறது. |
20:09 | 2. subplot கட்டளையில் மூன்று தரு மதிப்புகள் இருக்க வேண்டும். அவை வரிசைகளின் எண், பத்திகளின் எண், plot இன் எண். |
20:17 | ஆகவே முதல் தேர்வே சரியானது. |
20:19 | அதாவது, subplot(numrows,numCols,plotNum) |
20:25 | இந்த tutorial பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம். |