Python/C2/Getting-started-with-ipython/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:00 | ஹலோ நண்பர்களே, "getting started with ipython" குறித்த tutorial க்கு நல்வரவு! |
00:06 | இந்த tutorial இல் கற்பது
|
00:26 | IPython என்பது மேம்படுத்திய Python interpreter; tab-விசை பூர்த்தி, மற்றும் உதவி செயல்பாடுகளுக்கு எளிய அணுகல் ஆகியவற்றை கொண்டது. |
00:36 | ipython interpreter ஐ துவக்குவதை பார்க்கலாம். |
00:40 | முனையத்தை திறந்து ipython என type செய்து enter செய்வோம். |
00:50 | Python பதிப்பு பற்றிய விவரங்கள் வருகிறன. பின் சில உதவிக் கட்டளைகள்; கடைசியில் ஒரு தூண்டியை காண்கிறோம். ஐஎன்[1]: |
00:59 | 'ipython is not installed' என பிழை செய்தி வருமாயின் எப்படி பொதிகளை நிறுவுவது என்ற tutorial ஐ படிக்கவும். |
01:07 | ipython interpreter ஐ விட்டு வெளியேற, Ctrl-D விசைகளை அழுத்தவும். |
01:17 | வெளியேறுதலை நிச்சயப்படுத்த எச்சரிக்கை வருகிறது, ஆம் என்று சொல்ல y ஐயும் வேண்டாம் என்று சொல்ல n ஐயும் டைப் செய்க. |
01:27 | y ஐ அழுத்தலாம். |
01:31 | interpreter ஐ மூடிவிட்டதால் இப்போது மீண்டும் அதை ipython என டைப் செய்து துவக்குவோம். |
01:41 | இப்போது interpreter ஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். |
01:45 | மிக எளிதான கூட்டலுடன் துவக்குவோம். |
01:48 | தூண்டியில் 1+2 என type செய்வோம். |
01:54 | IPython உடனடியாக விடையை 3 என தருகிறது. |
01:58 | வெளியீடு ஒரு Out[1] எனும் குறிப்புடன் உள்ளதை கவனிக்கவும். |
02:05 | இப்போது இன்னும் சில எளிய செயல்களை செய்யலாம்., 5 minus 3, 7 minus 4, 6 into 5. |
02:22 | இப்போது ipython எப்படி கட்டளைகளின் வரலாற்றை நினைவில் வைக்கிறது என்று பார்க்கலாம். |
02:28 | உதாரணமாக print 1+2. |
02:32 | எல்லாவற்றையும் இப்போது டைப் அடிக்காமல் மேல் நோக்கு விசையை அழுத்தி கட்டளை 1+2 க்கு செல்வோம்.இதை முன்பே செய்தோம். இப்போது இடது அம்புக்குறியை அழுத்தி வரியின் ஆரம்பத்துக்கு சென்று ``print ``space என டைப் செய்து என்டர் செய்யலாம். |
02:54 | வரியை இப்போது print 1+2 என மாற்றிவிட்டோம். enter செய்யலாம். |
03:01 | interpreter விடையை 3 என அச்சடிக்கிறது. |
03:04 | சதுர அடைப்புக்களில் அவுட் என்பதை இப்போது காணவில்லை என்பதை கவனிக்கவும். |
03:10 | இப்போது நாம் print 10 into 2 என டைப் அடிக்கப்போகிறோம். |
03:14 | மேல் நோக்கு விசையை அழுத்தி கட்டளை 1+2 க்கு செல்வோம். |
03:21 | இப்போது 1 plus 2 ஐ 10 into 2 என மாற்றி enter செய்வோம். |
03:33 | இது வரை ipython interpreter ஐ துவக்குவது, அதைவிட்டு வெளியேறுவது, முந்தைய கட்டளைகளை கொண்டு வருவதை பார்த்தோம். |
03:41 | இப்போது tab- விசையால் பூர்த்தி செய்தலை பார்க்கலாம். |
03:45 | உதாரணமாக நாம் round என்ற செயலை பயன்படுத்த எழுத நினைக்கிறோம். |
03:50 | இதற்கு நாம் ro என type செய்து tab விசையை அழுத்தினால் போதும். |
03:59 | முனையத்தை பார்த்தோமானால் IPython கட்டளை ro ஐ round என பூர்த்தி செய்தது. இந்த ipython இன் அம்சம் tab-completion எனப்படும். |
04:08 | tab completion இன் இன்னும் பல சாத்தியங்களை காணலாம்.r என type செய்து tab ஐ அழுத்தலாம். |
04:18 | IPython கட்டளையை பூர்த்தி செய்யவில்லை. ஏனெனில் r இன் பூர்த்தி சாத்தியங்கள் நிறைய உள்ளன. ஆகவே எல்லா சாத்தியக்கூறுகளையும் பட்டியலிடுகிறது. |
04:30 | இப்போது ஒன்று செய்வோம். |
04:32 | video வை கொஞ்சம் இடை நிறுத்திவிட்டு கணக்கை போட்டு அப்புறம் தொடரலாம். |
04:38 | 1. "ab" என துவங்கும் கட்டளைகள் யாவை? |
04:43 | 2. "a" உடன் துவங்கும் கட்டளைகளை பட்டியலிடுக. |
04:53 | ab எழுதி tab ஐ தட்ட அது abs என முடிகிறது. a<tab> என எழுதி tab ஐ தட்ட a இல் துவங்கும் கட்டளைகளை பட்டியலிடுகிறது. |
05:06 | இப்போது abs இன் செயல் என்ன என்று பார்க்கலாம். |
05:11 | ipython இன் உதவி அம்சத்தால் இதை கண்டுபிடிக்கலாம். |
05:15 | ஒரு function இன் ஆவணத்தை காண நாம் function இன் பெயரை எழுதி ஒரு question mark ஐ இட வேண்டும். |
05:23 | Ipython interpreter அந்த function க்கான ஆவணத்தை காட்டும். |
05:27 | இப்போது function abs இன் விவரத்தை காண abs? என type செய்து enter செய்வோம். |
05:37 | abs ஒரு எண்ணை உள்ளீடாக ஏற்றுக்கொண்டு அதன் absolute மதிப்பை திருப்புகிறது என்று அதன் ஆவணம் சொல்லுகிறது. |
05:45 | உதாரணங்களை காணலாம் |
05:48 | abs(-19) மற்றும் abs(19) என interpreter இல் Type செய்வோம். |
06:03 | எதிர்பார்த்தபடி 19 என இரண்டு சமயமும் வருகிறது. |
06:07 | ஒரு தசாம்ச எண்னை உள்ளிடலாம். abs(-10.5), விடை 10.5 |
06:23 | video வை நிறுத்தி கணக்கை போட்டு பார்த்து தொடரலாம். |
06:30 | round க்கான ஆவணத்தை பார்த்து அதை எப்படி பயன்படுத்துவது என்று காணவும். |
06:38 | function round இன் ஆவணத்தை காண round question mark ஐ ipython interpreter இல் எழுதவும். |
06:47 | ndigits ஐ சுற்றி கூடுதல் சதுர அடைப்பு உள்ளதை காணலாம். |
06:52 | இதன் பொருள் ndigits என்பது தேர்வுக்குறியது; 0 என்பது முன்னிருப்பு மதிப்பு. |
06:57 | Python ஆவணங்களில் தேர்வு அளவுருக்கள் சதுர அடைப்புக்குள் காட்டப்படும். |
07:02 | round என்னும் செயல் கொடுத்த எண்ணை, கொடுத்த துல்லியத்துக்கு முழுமையாக்குகிறது. |
07:08 | விடியோவை இங்கே நிறுத்தி, பயிற்சியை செய்தபின் தொடரவும். |
07:15 | function round க்கு சில உதாரணங்களை பார்க்கலாம். |
07:19 | round(2.48) round(2.48, 1) round(2.48, 2) round(2.484) round(2.484, 1) round(2.484, 2) இன் வெளியீட்டை காண்க. |
07:42 | 2.0, 2.5 மற்றும் 2.48 ஆகியன எதிர்பார்த்தது போலவே கிடைக்கின்றன. |
07:54 | முனையத்தில் டைப் செய்யும் போது ஏற்படும் பிழைகளை சரி செய்வதை என்று பார்க்கலாம். |
07:59 | முன்பே பார்த்தது போல enter விசையை தட்டாமல் இருந்தால் நாம் அம்புகுறி விசைகள் மூலம் உலாவி, delete அல்லது backspace விசைகளால் பிழைகளை சரி செய்யலாம். |
08:11 | வேண்டுமென்று ஒரு பிழையை செய்வோம். round(2.484 எழுதி enter செய்வோம், அடைப்பை மூடாமல்... |
08:24 | புள்ளிகளுடன் ஒரு தூண்டி கிடைக்கிறது. |
08:27 | இந்த தூண்டி ipython இன் தொடர்வதற்கான தூண்டி. |
08:31 | முந்தைய வரி நிறைவடையாத போது இது காட்டப்படும். |
08:35 | இப்போது கட்டளையை சரியாக பூர்த்தி செய்து enter செய்யலாம். |
08:48 | எதிர்பார்த்த வெளியீடு 2.0 கிடைக்கிறது. |
08:51 | வேறு சமயங்களில், ஒரு வேளை நாம் நீண்ட சிக்கலான expression ஐ எழுதியபின், இந்த தூண்டி கிடைத்தால் நாம் வெளியேற விரும்பலாம். அப்போது Ctrl-C டைப் செய்ய கட்டளை முறிந்து, நாம் ipython உள்ளீட்டுத்தூண்டிக்கு போய் விடுவோம். |
09:15 | விடியோவை இங்கே நிறுத்தி, பயிற்சியை செய்தபின் தொடரவும். |
09:22 | 1. round(2.484 என type செய்க; enter செய்க; கட்டளையை Ctrl-C மூலம் இரத்து செய்க. |
09:45 | 2. round(2.484, 2) என கட்டளை type செய்க. |
10:08 | இப்போது சுருக்கமாக மீள்பார்வை செய்யலாம். இந்த டுடோரியலில் நாம் கற்றது |
10:15 | 1. ipython interpreter ஐ ipython என டைப் செய்து துவக்குவது. |
10:18 | 2. ipython interpreter இலிருந்து <ctrl>d. மூலம் வெளியேறுவது. |
10:22 | 3. அம்புக்குறி விசைகள் மூலம் ipython வரலாற்றில் உலாவுவது. |
10:28 | 4. tab-completion என்றால் என்ன? |
10:29 | 5. function களின் ஆவணங்களை காண்பது |
10:32 | 6. ஒரு பிழை நேரும்போது <ctrl>c பயன் படுத்தி இடை நிறுத்துவது. |
10:37 | சில சுய பரிசோதனை கேள்விகள் |
10:42 | ipython Python போலவே ஒரு கணினி நிரலாக்க மொழி |
10:50 | உண்மை அல்லது பொய் |
10:52 | இரண்டாவது: ipython இலிருந்து வெளியேற விசை தொகுப்பு எது? Ctrl + C; Ctrl + D; Alt + C; Alt + D |
11:02 | கடைசியாக. Ipython இல் ஆவணத்தை காட்ட பயன்படுத்தப்படும் குறி எது? under score (_) question mark (?) exclamation mark (!) ampersand (&) |
11:15 | விடைகள்: |
11:18 | Ipython நிரலாக்க மொழி அல்ல. அது அத்தகைய உயர் மொழி உணர் செயலி - interpreter. |
11:22 | Ipython interpreter இலிருந்து வெளியேற Ctrl D விசைகளை பயன்படுத்த வேண்டும் |
11:27 | ஆவணத்தை காண ? ஐ function பெயருக்கு பின் பயன்படுத்துகிறோம். |
11:35 | இந்த டுடோரியலை சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நினைக்கிறோம். |
11:39 | நன்றி! |