PHP-and-MySQL/C2/XAMPP-in-Windows/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration | |
00:00 | PHP tutorial களுக்கு நல்வரவு! | |
00:04 | இந்த அடிப்படை டுடோரியலில், நாம் பயன்படுத்தப்போகும் பேக்கேஜ் மூலம், Webserver, PHP, MySQl முதலியவற்றை நிறுவும் வழிமுறைகளை கற்போம். | |
00:22 | XAMPP என்றழைக்கப்படுவதை பயன்படுத்துவோம். "ZAMP" என்றும் அழைக்கலாம். அப்படித்தான் உச்சரிக்க வேண்டும் – நான் அதை XAMPP என்றே குறிப்பிடுவேன். | |
00:34 | PHP நிறுவப்பெற்று, MYSQL டேடாபேஸுடன் உங்களுடைய சர்வர் பணிபுரியத் தொடங்க, செய்ய வேண்டியது இதுதான். | |
00:46 | "apachefriends.org" இணையதளத்தை அணுகவும் அல்லது "XAMPP" என்று கூகிளில் தேடவும். | |
00:52 | X-A-M, double P என்று இதனை எழுத வேண்டும். | |
00:58 | விண்டோஸில் இதை நிறுவுவது குறித்தும், அனைத்தையும் இயங்கச் செய்வது குறித்தும் செய்து காட்டுகிறேன். | |
01:06 | லினக்ஸ் உள்ளிட்ட இயக்குதளங்களில் வேறு வகையான உதவிகள் தேவைப்பட்டால், தெரியப்படுத்துங்கள். அதற்கென டுடோரியல் செய்யவும் ஆர்வமாய் உள்ளோம் | |
01:15 | இணையதளத்தில் Installer ஐ இப்போது தேர்வு செய்ய வேண்டும். | |
01:19 | அது இப்பக்கத்தை திறக்கும். முடிவாக வெர்ஷன் நம்பரோடு கூடிய இது போன்ற ஒரு file ஐ இறக்கிக் கொள்வீர்கள். | |
01:29 | முதலில் அதற்குரிய Installer ஐ தேர்வு செய்யவும் | |
01:32 | நிறுவ டபுள் கிளிக் செய்து மொழியைத் தேர்வு செய்க. | |
01:37 | இத்தகைய செய்தி ஒன்றை பெறலாம் - விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துவதால் "Windows Vista Account is deactivated on your system" என்று சொல்லியது. | |
01:46 | இது நமக்கு தேவையில்லை. எனவே புறக்கணிக்கவும் | |
01:52 | நிறுவலைத் தொடந்து மேற்கொள்ளலாம். . | |
01:56 | எளிமையாக லோகல் டிரைவிலேயே ஒரு போல்டரை தேர்வு செய்க. Program Files இல் அதை போடவும் தேவையில்லை. | |
02:04 | இவை உங்களுடைய விருப்பம் சார்ந்தவை. "Create a XAMPP desktop option" என்பதை குறி இடுகிறேன். ஆயினும் இதனை தேர்வு செய்யவில்லை. | |
02:16 | "Install Apache as a service" மற்றும் "Install MySQL as a service" ஐ தேர்வு செய்ய வேண்டும். | |
02:24 | இதன் மூலம் அவை சிஸ்டம் சர்வீசாக சேர்க்கப்பட்டு ஒவ்வொரு முறை கணினியை இயக்கும் போதும் அவை தொடங்கப்பெறும். | |
02:31 | அவற்றை தேர்வு செய்யாமல் விட்டுவிடலாம். எளிமைக் கருதி தேர்வு செய்கிறேன். | |
02:36 | இப்போது இது நிறுவப்படப் போகிறது. இந்நிலையிலயே வீடியோவை இடைநிறுத்தி, நிறுவிய பின் தொடர்வோம் | |
02:47 | தொடர்ந்து PHP installation ன் மீதி set up ஐ பார்க்கலாம் | |
02:53 | அதனைச் செய்வதற்கு முன், வெறும் பிரவுசரில் localhost ஐ அணுக முயற்சி செய்வோம் | |
03:00 | இது லோக்கல் வெப்சர்வரின் ஹோஸ்ட் எனப்படும். | |
03:05 | பொதுவாக "google dot com" போன்ற web address ஐ பார்த்திருப்பீர்கள். ஆனால் இதை "localhost" என்கிறோம் | |
03:12 | "Failed to connect" என்ற error message ஐ காணலாம். | |
03:17 | Xampp நிறுவப்பட்ட பின்னர் இதே localhost ஐ மீண்டும் தேர்வு செய்தால், நம் சர்வரோடு நேரடியாக இணையப்பெறுவோம். | |
03:26 | http webserver ஆன அபாச்சி நிறுவப்படுவதை எளிமைப்படுத்தி அதன் மீது PHP யையும் நிறுவி, கூடவே mysql database ஐயும் சர்வரில் நிறுவுவதை Xampp சுலபப்படுத்துகிறது. | |
03:40 | நிறுவி முடித்த பின் திரும்பி வந்து பார்த்தால், localhost வேலை செய்யும். | |
03:46 | localhost folderக்குள் fileகளை எப்படி போடுவது என பார்க்கலாம் | |
03:52 | இது localhost என அழைக்கப்படவில்லை. மாறாக நம் வெப் சர்வரில் இருக்கக்கூடிய ரூட் போல்டரையே இவ்வாறு அழைக்கிறோம். | |
04:01 | பின் மீண்டும் வீடியோவிற்கு வருவோம். மற்றவற்றை தொடரலாம். | |
04:06 | நல்லது, நிறுவி முடித்து விட்டோம். சில செய்திகள் வந்துள்ளன. | |
04:11 | "Finish" ஐ சொடுக்கவும். | |
04:14 | தேவைப்படும் ports இப்போது சரிபார்க்கப்படுவதை காணலாம். | |
04:23 | இதன் பொருள் port 80 சரிபார்க்கப்படுவதாகும். mysql என்று நினைக்கிறேன்.... | |
04:27 | பிழை எதுவும் ஏற்படாத வரை, எல்லாம் நல்லதே! | |
04:32 | Apache 2.2 இங்கே அமைக்கப்படுவதை காணலாம். | |
04:36 | சர்வீஸ் தொடங்கப்படுகிறதென்று தெரிகிறது. mysql சர்வீஸ் கூட தொடங்குகிறது. | |
04:42 | நம் நிறுவல் முடிந்து விட்டதாக தெரிவிக்கும் செய்தி கிடைக்கிறது. | |
04:46 | இப்போது XAMP கன்ட்ரோல் பேனலைத் தொடங்கலாம். "Yes" ஐ சொடுக்கி அதை இங்கே கொண்டு வரலாம். | |
04:52 | நம் Apache சர்வரும் MySQl சர்வரும் இயங்குவதை நீங்கள் பார்க்கலாம். | |
04:58 | இங்கே PHP நம்முடைய Webserver இன் பாகமாக இருப்பதால் அபாச்சியின் பாகமாக உள்ளது. எனவேதான் இங்கே அதனைப் பார்க்க முடியவில்லை. அது நம் வெப் சர்வருக்கான புதிய பாகம் போன்றது. | |
05:14 | ஆக, திரும்பப் போய் நம் பக்கத்தை மறுபடியும் தொடங்கலாம். | |
05:17 | எதிர்பார்ப்பதவாறே "localhost" இல் Enter மூலம், "XAMPP" உடன் இணைக்கப்பெற்றதைக் காணலாம். | |
05:25 | எப்போதும் போல், webserver ன் குறிப்பிட்ட ஒரு folder ஐ ஆழமாகப் பார்க்கலாம். | |
05:30 | தற்போதைக்கு English ஐ சொடுக்கவும். | |
05:33 | "XAMPP" அங்கே அமைக்கப்பட்டிருப்பதைக் நீங்கள் காணலாம். | |
05:37 | இப்போது என் 'C' டிரைவை திறக்கப் போகிறேன். அதை இதற்குள் காணலாம். | |
05:42 | நிறுவப்பட்ட folderஆன "XAMPP" மீது இப்போது டபுள் கிளிக் செய்கிறேன், | |
05:49 | இங்கே பல fileகள் இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியது "htdocs". இங்குதான் , வெப்சர்வரால் இயக்கப்பட்டு PHP யால் ஆக்கப்பெறும் உங்களது fileகளை இடுவீர்கள். | |
06:02 | ஆக, இதை டபுள் கிளிக் செய்யும் போது, பலவகையான fileகளைப் பெற்றிருப்பதை காணலாம். | |
06:07 | "index.html" file தான் இங்கே பார்ப்பது. இப்போதைக்கு இது "index.php". அதுவும் இங்கிருக்கிறது. | |
06:15 | index புள்ளி எதுவும், என்றிருக்கும் எந்த file உம் தானாகவே தொடங்கப் பெறும். | |
06:20 | இதை மாற்றலாம் ஆனாலும் இப்போதைக்கு அப்படியே விடவும். | |
06:25 | கூடவே "phpacademy" என்று ஒரு folderஐயும் நான் பெற்றிருக்கிறேன். | |
06:29 | ஒரு புது text document ஐ உருவாக்குவோம். எளிமைக்காக இதை என் கன்டெக்ஸ்ட் எடிட்டரில் செய்கிறேன். | |
06:38 | சரி இதை நகர்த்துவோம். புதிய file ஐ உருவாக்குவோம் | |
06:44 | அதை நான் "htdocs" folderக்குள் சேமிக்கப் போகிறேன். "phpinfo" dot php என அதை சேமிக்கிறேன் | |
06:53 | இதனுள் சில PHP code களை எழுதுகிறேன் | |
06:59 | "php underscore info" என்பதே அது. இறுதியில் 2 brackets பின் line terminator உம் வேண்டும். | |
07:06 | இதன் அர்த்தம் புரியவில்லையென்றால் இதை கற்க வேண்டாம். அன்றாட பணிகளுக்கு தெரிய வேண்டிய விஷயமல்ல இது. | |
07:14 | இது PHP Server பற்றிய அதாவது வெப் சர்வரின் PHP நிறுவல் பற்றிய தகவல்களை நமக்குத் தரும். | |
07:20 | இதற்கு திரும்பிவருவதற்கு முன் இதை அழைக்க நமக்கு "localhost" தேவை. | |
07:26 | "htdocs" என்றோ அதைப்போல வேறெதுவுமோ, கொடுக்க வேண்டாம். | |
07:29 | தேவையெல்லாம் "localhost" உடன் நம் fileன் பெயரான phpinfo.php சேர்த்து Enter தட்ட வேண்டியதுதான். | |
07:42 | கீழ்கோடு தேவையில்லை. எனவே அதை நீக்கி ரெப்ரஷ் செய்யவும். | |
07:50 | பல data களுடன் இங்கே PHP information file கிடைக்கப்பெறுவதை காணலாம். | |
07:55 | இங்கு என்ன நடக்கிறது என்றால் நம் htdocs fileனுள் php code ஐ இயக்குகிறோம். | |
08:01 | முகவரியோடு "favicon dot ico" என்று கொடுத்தால் என்ன கிடைக்கிறது என்பதை காண்கிறீர்கள். | |
08:10 | "htdocs" க்குள் நீங்கள் போடும் எதுவும் Webserver ஆல் PHP மூலம் ஆக்கம்பெறப்படும். | |
08:18 | இங்கே இந்த டுடோரியல் படி நீங்கள் எழுதும் எந்த file ஐயும் "c : \ xampp மற்றும் htdocs" இல் உள்ள "htdocs" folderல் போடவும். அங்கிருக்கும் எதுவும் process ஆகும்.. | |
08:34 | அதை localhost அல்லது 127.0.0.1 மூலம் அழைக்கலாம். என்டர் தட்டுவதால் எந்த மாற்றத்தையும் காணவில்லை. இதுவும் ஒன்றுதான். இதுவே உங்களது லோக்கல் வெப் சர்வர். | |
08:50 | நாம் "XAMPP" ஐ நிறுவினோம். "Apache" சர்வீஸ் ஐ நிறுவி, பின்னர் பயன்படுத்தப் போகும் டேடாபேஸ் சர்வீஸான "MySQL" சர்வீஸ் ஐ நிறுவி, php fileகளை ஆக்கப்பயன்படும் "Apache" க்கான "php module" உம் நிறுவிட பயன்படும் எளிமையான வழி இது. | |
09:10 | நாம் "XAMPP" ஐ தரவிறக்கி நிறுவியுள்ளோம். ஒரு file ஐ உருவாக்கி வெப் சர்வர் மூலம் இயக்குவதை செய்து காட்டினேன். | |
09:16 | டுடோரியல்களைத் தொடங்க இது பயன்படும். சிக்கல்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். | |
09:23 | இத்துடன் இந்த tutorial முடிகிறது | |
09:26 | தமிழாக்கம் ம. ஸ்ரீ ராமதாஸ். நன்றி |